இயேசு இறை மகனா ? - தொடர் 2


இக்கட்டுரையின் முதல் முதல்  பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்.
 "இயேசு என் குமாரன்' எனக் கர்த்தர் கூறுவதால் கடவுளின் மகனா?
:
* இயேசுவைத் தமது குமாரன் என்று கர்த்தரே குறிப்பிட்டுள்ளதாக பைபிள் கூறுகிறது.
* இயேசுவும், கர்த்தரும் ஒன்றுக்குள் ஒன்று என பைபிள் கூறுகிறது.
* பைபிள் இயேசுவை ஆண்டவர் என்கிறது.
* இயேசு தந்தையின்றிப் பிறந்தார்.
* இயேசு ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்.
* இறந்த பின் இயேசு உயிர்த்தெழுந்தார்.
* இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்.

என்பன போன்ற காரணங்களால் இயேசுவைக் கடவுள் என்றோ, கடவுளின் குமாரர் என்றோ கிறித்தவ மக்கள் நம்புகின்றனர். மேற்கண்ட காரணங்களில் முதல் காரணம் இயேசுவை தனது குமாரர் என்று கர்த்தர் கூறியுள்ளார்; அதனால் அவர் கடவுளின் குமாரர் தான் என்பதாகும். இந்தக் காரணம் சரியானது தானா? இயேசுவை இறைவனின் குமாரர் என்று நம்பி, அதைப் பிரச்சாரமும் செய்யக் கூடிய கிறித்தவர்கள் இயேசுவைத் தம் குமாரர் எனக் கர்த்தர் கூறுகிறார் என்று பைபிள் கூறுவதை முதலாவது ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

"அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: "இவர் என்னுடைய நேச குமாரன்; இவரில் பிரியமாயிருக்கிறேன்'' என்று உரைத்தது. " -(மத்தேயு 3:17)

"என்னுடைய நேச குமாரன்'' என்று இயேசுவைப் பற்றி கர்த்தர் கூறியதாக பைபிளின் இந்த வசனம் கூறுகிறது. இயேசுவைத் தனது குமாரன் என்று கர்த்தரே சொல்லியிருக்கும் போது அவரை இறை மகன் என்று தானே கருத முடியும்? என்று கிறித்தவ நண்பர்கள் நினைக்கின்றனர்.கர்த்தர் தனது நேச குமாரன் என்று குறிப்பிட்டது தான் இயேசு இறை மகன் என்ற நம்பிக்கைக்கு அடிப்படை என்றால் இவ்வாறு நம்புவதில் கிறித்தவர்கள் உண்மையாளர்களாகவும், நேரான பார்வையுடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

பைபிளை நாம் ஆய்வு செய்தால் இயேசுவை மட்டுமின்றி இன்னும் பலரைத் தனது குமாரன் என்று கர்த்தர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.பைபிளில் யாரெல்லாம் கர்த்தரின் குமாரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்களோ அவர்கள் அனைவரையும் இறை மகன்கள் என்று கிறித்தவர்கள் நம்புவது தான் நேர்மையான அணுகுமுறையாக இருக்கும்.இயேசுவை தவிர இன்னும் யாரெல்லாம் "இறை மகன்' என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளனர் பற்றிய விபரத்தைக் காண்போம்.

இஸ்ரவேல் இறை மகன்:
"அப்போது நீ பார்வோனோடே சொல்ல வேண்டியது என்னவென்றால் "இஸ்ரவேல் என்னுடைய குமாரன்; என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பி விடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விட மாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல்'' என்றார்." (யாத்திராகமம் 4:22,23)

"இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்ட புத்திரனாயிருக்கிறான்." - (எரேமியா 31:9)

இயேசுவை இறைவனின் குமாரர் எனக் கூறும் முந்தைய வசனத்தை விட இது தெளிவான வசனம் ஆகும். இயேசுவைப் பற்றிக் கூறும் வசனத்தில் கர்த்தர் இவ்வாறு கூறியதாகக் காணப்படவில்லை. அசரீரியான சப்தம் தான் அவ்வாறு கூறியதாகக் காணப்படுகிறது. அது கடவுளின் சப்தமாகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பிசாசு கூட இவ்வாறு விளையாடி இருக்க முடியும். முன்பொரு முறை பிசாசு இயேசுவைச் சோதித்ததாக மத்தேயு 4:9,10வசனங்கள் கூறுகின்றன.

ஆனால் இஸ்ரவேலை இறைவனின குமாரர் எனக் கூறும் இவ்வசனத்தில் கர்த்தரே இவ்வாறு கூறியதாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இயேசுவை விட இஸ்ரவேலர் தாம் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடப்பட அதிகம் தகுதி பெறுகிறார். இயேசுவை கர்த்தரின் மகன் என்று நம்பும் கிறித்தவ நண்பர்கள் இஸ்ரவேலையும் கடவுளின் மகன் என்று ஏன் நம்புவதில்லை? பைபிளில் கூறப்படுவதை அவர்கள் நிராகரிக்கலாமா? என்பதைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இறை மகன்கள் பட்டியல் இன்னமும் நீளும்.

                                                                         இன்ஷா அல்லாஹ் தொடரும்...
நன்றி - jesusinvites 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger