Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label ஆய்வுகள். Show all posts
Showing posts with label ஆய்வுகள். Show all posts

இயேசு இறை மகனா - தொடர் 17

கடவுளின் இலக்கணம்
கடவுளுக்கும், மனிதனுக்கும் தனித்தனி இலக்கணங்களை பைபிள் கூறுகிறது. கடவுளுக்குக் கூறப்பட்ட எந்த இலக்கணமும் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. மனிதனுக்குக் கூறப்படுகின்ற எல்லா இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதை பைபிளின் துணையுடன் இப்பகுதியில் காண்போம்.

காணப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
"நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள(காணமுடியாமை) ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்." - (முதலாம் தீமோத்தேயு 1:17)

கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே! (பைபிள் போதனைப் படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?
"தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை." - (யோவான் 1:18)
"கடவுள் என்பவர் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும் காணப்படக் கூடாது'' என்று பைபிளின் மேற்கண்ட வசனம் கூறுகிறது. இயேசுவைப் பல்லாயிரம் மக்கள் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்பும் கூட அவரைச் சிலர் கண்டுள்ளனர். மரணிப்பதற்கு முன்னரும், மரணித்து உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு பலரால் காணப்பட்டுள்ளதால் இயேசு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க முடியாது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.

இரத்தமும் சதையும் கடவுளுக்கு இல்லை:
"கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும்'' எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
"தேவன் ஆவியாக இருக்கிறார்." - (யோவான் 4:24)

இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு இருந்தாரா? இல்லை என்று பைபிள் அடித்துச் சொல்கிறது. இயேசுவின் முழு வாழ்க்கையிலும் அவர் ஆவியாக இராமல் மாம்சம், சதை, எலும்பு ஆகியவற்றுடனே இருந்தார். அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர் இவ்வாறே இருந்தார். ஒரு ஆவியைச் சிலுவையில் அறைய முடியாது. இயேசுவைச் சுட்டிக் காட்டும் ஓவியங்களில் அவர் சிலுவையிலறையப்பட்டு இரத்தம் சிந்தும் நிலையிலேயே தீட்டப்படுகிறார்.
அது மட்டுமின்றி அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் இதே நிலையிலேயே இருந்திருக்கிறார்.

"அவர், அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள்! நீங்கள் காண்கிற படி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்." - (லூக்கா 24:38-40)

உயிர்த்தெழுந்த பின்னரும் கூட இயேசு ஆவியாக இல்லை; இரத்தமும், சதையும், எலும்பும் உள்ளவராகவே இருந்தார். இதன் பிறகும் அவரைக் கடவுள் என்றோ கடவுள் தன்மை பெற்றவர் என்றோ நம்பினால் அது பைபிளை மறுத்ததாக ஆகாதா?

மரணித்தல் கடவுளின் தன்மை அல்ல:கடவுள் என்றென்றும் நிலையாக இருக்க வேண்டும். அவருக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது.
"கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார்." - (சங்கீதம் 9:7)
இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பினால் கூட அவர் பிறப்பதற்கு முன் இருந்திருக்கவில்லை. மரணத்திற்கும் உயிர்த்தெழுவதற்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர் இருக்கவில்லை. என்றென்றைக்கும் இராததால் இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று அறியலாம்.

கொல்லப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
கடவுளை ஒருவரும் ஒருக்காலும் கொலை செய்ய முடியாது. கொல்லப்பட்ட யாரும் கடவுளாயிருக்க முடியாது என்றும் பைபிள் கூறுகிறது.
"உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே!" - (எசக்கியேல் 28:9)
குத்திப் போடப்பட்டவன் மனுஷனாகத் தான் இருக்க முடியுமே தவிர கடவுளாக இருக்கவே முடியாது என்ற இந்த இலக்கணத்துக்குப் பொருந்தும் வகையில் இயேசு கொல்லப்பட்டிருக்கிறார்.

"நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி...." - (அப்போஸ்தலர் 5:30)
கொலை செய்யப்பட்ட காரணத்தால் இயேசு கடவுள் இல்லை என்று பைபிள் தெளிவாகக் கூறிய பிறகும் அவரைக் கடவுள் என்று கூறலாமா?
                                                                                         இன்ஷா அல்லாஹ் தொடரும்....
0 comments

இயேசு இறை மகனா ? - தொடர் 16

பரிசுத்த ஆவி பெற்ற பலர்
இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!
"பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்." - (மத்தேயு 10:20)
இயேசு தன் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார். இயேசு எப்படி பரிசுத்த ஆவியால் பேசினாரோ அது போல் அவரது சீடர்களும் பரிசுத்த ஆவியின் மூலமே பேசியுள்ளனர். 

பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயேசுவின் சீடர்களும் கடவுளர்களா?
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

"அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்." - (லூக்கா 2:25)

"இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்." - 
(அப்போஸ்தலர் 5:32)

"அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்." -
 (அப்போஸ்தலர் 11:24)

"இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு..." - 
(அப்போஸ்தலர் 6:5)

"உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்" - (இரண்டாம் தீமோத்தேயு 1:14)
"தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்." - 
(இரண்டாம் பேதுரு 1:21)

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை. தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள். மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.
"சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக." - (யாக்கோபு 1:13)
கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது. ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்! தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், "இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்; கடவுளின் தூதர்'' என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.
                                                                               இன்ஷா அல்லாஹ்  தொடரும்....
0 comments

மது குடிப்பதால் தூக்கம் கெடும்... நிபுணர்கள் எச்சரிக்கை!!

தூக்கம் உடலின் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று. அதனால் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. எதுவுமே அளவாக இருந்தால் தான் நமக்கு நன்மை. அதே போல் தான் தூக்கமும். 

தூக்கமின்மையும் சரி, அதிகமான தூக்கமும் சரி, இரண்டுமே நமக்கு பெரிய பிரச்சனை தான். தொடர்ச்சியாக பல இரவுகள் போதிய தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலரை போலவே, அதிகமாக தூக்கம் வரும் பிரச்சனை உள்ளவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்களா? 

அப்படியானால் அதிகமாக தூக்கம் வருவதற்கான காரணங்களையும் அதனை குணப்படுத்தும் வழிகளையும் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். 

இன்சோம்னியா எனப்படும் போதிய தூக்கமின்மை, இது ஒரு பொதுவான பிரச்சனையே. இது உங்கள் ஆக்கத்திறன், மனது, உடல்நிலை மற்றும் வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். இதுவே கரனிக் இன்சோம்னியா என்றால் பல உடல்நல கோளாறுகள் கூட வரும். வாழ்வு முறை மற்றும் தினசரி பழக்க வழக்கத்தில் எளிய மாற்றங்களை கொண்டு வந்தால் தூக்கமில்லாமைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம்.

வேலை நேரம் 


இரவு நேரங்களில் வேலையில் ஈடுபட்டிருப்பதால் பகலில் தூங்குகிறீர்களா? அப்படியானால் இயல்பான தூக்க சுழற்சியில் மற்றம் ஏற்பட்டும் . தூக்க சுழற்சி மாறியிருப்பதால், உடம்புக்கு கிடைக்க வேண்டிய சீரான, தேவையான அளவு தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் போதிய தூக்கம் கிடைக்காமல் முழித்திருக்கும் நேரத்தில் கூட தலை குடைச்சல் ஏற்படும்.

உடற்பயிற்சி 

நம் உடல் போதிய அளவு உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் மெட்டபாலிசத்தின் செயல்பாடு குறைந்து விடும். இதனால் சோம்பல் ஏற்பட்டு எப்போதும் தூக்க கலக்கத்தோடு இருப்பீர்கள்.

அதிகமான எடை 

அதிக எடை அல்லது கொழுத்த உடலை கொண்டவர்களுக்கு ஹைபர்சோம்னியா என்ற தூக்கமிகைப்பு இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிக எடை இருந்தால் உடலில் உள்ள மெட்டபாலிச வீதம் குறைத்து விடும். இதனால் ஆக்கத்திறனும் குறைந்து விடும். இதன் விளைவு அதிகப்படியான பகல்நேர தூக்கம் ஏற்படும்.

செல்லப்பிராணிகள் 

பல பேர் படுக்கையில் செல்லப்பிராணிகளை படுக்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் பிராணிகள் நம்முடன் படுக்கையில் படுக்கும் போது நமக்கு தூக்கம் வருவது கடினமாக இருக்கும் என்று சான்றுகள் கூறுகின்றன. அதேபோல் மயோ கிளினிக் ஸ்லீப் டிஸ்ஆர்டர் மையம் நடத்திய சர்வேயின் படி, மிருகங்கள் தூக்கத்தை கெடுக்கின்றன என்று மிருகங்களுடன் படுக்கும் 53% மக்கள் தெரிவுத்துள்ளனர்.

மதுபானங்கள் 

மதுபானம் பருகுவது தூக்கம் இழப்புக்கு காரணம் என்று சொல்வது நம்மை வியப்புக்குள் ஆழ்த்தலாம். மது நம் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும். முதலில் போதையை தந்தாலும், சில மணி நேரங்கள் பிறகு இரத்தத்தில் உள்ள அல்கஹால் அளவு குறைந்தவுடன், தூக்கம் களைந்து விடும்.ஒரு கோப்பை வைன்தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்றால், படுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் குடிப்பதை நிறுத்துங்கள்.

ஜி.இ.ஆர்.டி 

ஜி.இ.ஆர்.டி(gastro esophageal reflux disorder) உள்ளவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். அவர்கள் படுக்கையில் படுக்கும் போது, உடம்பில் உள்ள அமிலம் ஈசோஃபேகஸ் நுழையும். இதனால் இதயத்தில் எரிச்சல் ஏற்பட்டு வலியும் எடுக்கும். சில பேர் தலையனைகளுக்கு நடுவில் படுத்து உறங்க முயற்சிப்பர்.

மருந்துகள் 

உங்கள் தூக்கம் கெடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உங்கள் மருந்துப் பெட்டியிலேயே உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் சந்தேகப்படுவதில்லை. ஆஸ்துமாவிற்காக பயன்படுத்தும் ஊக்க மருந்து மற்றும் அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களுக்காக பயன்படுத்தும் பீட்டா-ப்ளாக்கர்ஸ்(beta-blockers) போன்ற மருந்துகள் இரவில் விழித்திருக்கச் செய்யும்.

வலி 

உடம்பில் எந்த ஒரு வலி இருந்தாலும் அது தூக்கத்தை கெடுக்கும். தலைவலி, முதுகு வலி, கீல்வாதம், தசை வலி மற்றும் மாதவிடாயினால் ஏற்படும் வலி போன்றவைகள் எல்லாம் இதற்கு உதாரணங்களாகும். வலி அதிகமாக இருந்தால் தான் தூக்கம் கெடும் என்பதில்லை.

தூக்க பிரச்சனை 

உங்கள் வாழ்க்கை துணைக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருந்தாலோ அல்லது உங்களை மிதிக்கும் பழக்கம் இருந்தாலோ, உங்கள் இருவரின் தூக்கமும் கெட்டுப்போகும்.

படுக்கையறையின் அமைப்பு 

உங்கள் படுக்கையறை அதிக வெப்பமாக அல்லது அதிக குளிராக இருக்கிறதா? அல்லது சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வர்ணம், வெளிச்சம் வராமல் தடுக்கிறதா? இதனை போன்ற பல அமைப்பின் காரணமாக உங்கள் தூக்கம் கெடும்.

பதற்றம் மற்றும் மன அழுத்தம் 

பல பேருக்குபதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் தூங்குவதில் பிரச்சனை ஏற்படும். தூக்கம் கெட்டுப் போவதால் இந்த பதற்றமும் அழுத்தமும் அதிகமாகும். இந்த இரண்டு காரணங்களால் தூக்கம் கெடுகிறது என்றால் இந்த மன ரீதியான பிரச்னைக்கு முதலில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

குட்டித் தூக்கம் 

பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போட்டால் இரவு நேரத்தில் தூங்குவதில் சிரமம் ஏற்படும். குட்டித் தூக்கம் போட வேண்டுமென்றால் மதியம் 3 மணிக்கு முன் அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்கு மேல் தூங்காதீர்கள்.
0 comments

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !

இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை 
மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவும்
 
 1898ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. 

தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.

மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.
 
சிந்தனையில் மோரிஸ் புகைல்!
 
திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது.

தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா?என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்?
பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.
 
 ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில்பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)
 
இவ்வுடல் பாதுகாக்கப்படும்  என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.
 
ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்துகடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார். அவ்வசனம்
 
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்(அல்-குர்ஆன் 10: 92)
 
இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!
 
கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக் கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது!
 
திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக்கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர்.

திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவுஉண்மை!
 
"நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்ப ற்றி அலட்சியமாக இருக்கின்றார்கல் " (அல்-குர்ஆன் 10:92)
0 comments

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-12

நான் ஆவியல்ல-ஏசு
ஏசு மரணிக்கவில்லை                       ஆதாரம்: 12
 ஆவியல்ல! மனிதர் தான்!
தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூறிய பின்னர் பின்வருமாறுகூறுகின்றார்:
"நீங்கள்ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறுஉங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக்காண்கிறீர்களே; இவை ஆவிக்குக்கிடையாதே'' என்று அவர்களிடம்கூறினார்; இப்படிச்சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
                                                                                  லூக்கா 24:38-40
 ஏசு இதன் மூலம் தெரிவிப்பது இது தான். அட அடிமுட்டாள்களா! ஆவிக்குஏது சதை? ஆவிக்கு ஏது எலும்பு? ஆவிக்கு ஏது இரத்தம் என்று சிந்தியுங்கள்; நான் சாகவில்லை; அதே ஏசு தான் அப்படியே வந்திருக்கிறேன் என்றுதெளிவாகத் தெரிவிக்கின்றார்.
 ஆவிக்கு சதையோ, எலும்போகிடையாது என்பது எல்லோரும் ஏகோபித்து ஒத்துக் கொண்ட உண்மை. ஏசு அதைத் தான் தனது சீடர்களிடம்உணர்த்துகின்றார். எனவே இறந்தவர் மீண்டும் எழுந்து வந்தால் அவர் ஆவியாகத் தான் வருவார்.அதே ஆளாக வர மாட்டார்.
 அஹ்மத் தீதாத் அவர்கள் இவ்வாறு ஒரு கருத்தரங்கில் கூறிய போதுஒரு கிறித்தவ அழைப்பாளர் எழுந்து, "இறந்தவர்மீண்டும் உயிர் பெற்றால் அவர் ஆவியாகத் தான் வருவார் என்று யார் சொன்னது?'' என்று கேட்டார். அதற்கு அஹ்மத் தீதாத், "ஏசு தான்'' என்று பதில் கூறினார். "இது எங்கு இடம் பெறுகின்றது?'' என்று கேட்டார். "இது பைபிளில் லூக்காவில்இடம் பெறுகின்றது. ஆவிக்கு சதையோ, எலும்போகிடையாது என்று பைபிள் கூறுகின்றது'' எனக் கூறிப்பின்வரும் விளக்கத்தை அளித்தார் அஹ்மத் தீதாத்!
 ஒரு யூதப் பெண்ணுக்கு 7 கணவர்கள்.யூதக் கலாச்சாரப்படி ஒருவர் குழந்தையில்லாமல் இறந்து விட்டால் அவரது சகோதரர் அந்த மனைவியைத்திருமணம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு சகோதரரும் இறந்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்துஉள்ள சகோதரர்கள் திருமணம் முடிக்க வேண்டும்.
 ஏழு பேரையும் இந்தப் பெண் திருமணம் முடிக்கிறாள். அந்தப் பெண்ணும்இறந்து விட்டாள். பரலோக வாழ்வில் அந்த ஏழு பேரும் அந்தப் பெண்ணும் எழுப்பப்படுவார்கள்.அப்போது ஏழு பேருமே அந்தப் பெண் தனக்கு என்று கோருவார்கள். அங்கு அந்தப் பெண் யாருடன்சேர்ந்து வாழ்வாள்? இது தான் ஏசுவுக்குமுன்னால் உள்ள கேள்வி.
 அதற்கு ஏசு அளிக்கும் பதில்:
இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள்.உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
                                                                                லூக்கா 20:36
       லூக்கா                
அவர்கள் சாகாத ஆவிகளாகி விடுவார்கள். அவர்களுக்கு உணவுதேவையில்லை. உடை தேவையில்லை. பாலியல் உணர்வு தேவையில்லை. அவர்கள் வானவர்களுக்குச் சமமானவர்கள்.
 இந்தச் சம்பவம் லூக்கா 20:27-36 வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
 இந்த விளக்கத்தின்படி,தான் மீண்டும் உயிர் பெற்று வந்தவர் அல்ல! அதாவது ஆவி அல்ல! உடலும் உயிரும் சேர்ந்தஅதே ஏசு தான். பசி, தாகம் உள்ள ஒரு ஜீவன்தான் என்பதையும் இங்கே ஏசு நிரூபித்துக் காட்டுகின்றார்.
 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போதுஅவர் அவர்களிடம், "உண்பதற்குஇங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?''என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம்கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார்.
                                                                                              லூக்கா24:41-43
இவ்வளவும் எதற்காக? தான் ஓர்ஆவி என்பதை நிரூபிக்கவா? இல்லை! எலும்பும்சதையும் இணைந்த மனிதன் தான் என்பதை நிரூபிப்பதற்காக! அல்லது இவை அனைத்தும் நடிப்புஎன்று கிறித்தவ உலகம் சொல்ல வேண்டும்.
     இன்ஷா அல்லாஹ் தொடரும்.......

0 comments

தொப்பியும் தலைப்பாகையும் இஸ்லாமிய ஆடைகளா?

பி. ஜைனுல் ஆபிதீன்
தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை.
தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் தொப்பி அணிந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றால் அதுவுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாக ஒரேயொரு பலவீனமான ஹதீஸ் தான் உள்ளது. அதுவும் கூட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளால் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இது தான்.
….அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவருக்கு கியாமத் நாளில் கிடைக்கும் பதவிகளை மக்கள் தம் தலைகளை உயர்த்தி (அண்ணாந்து) பார்ப்பார்கள்” என்று கூறிய அவர்கள் தமது தலையை உயர்த்திக் காட்டினார்கள். அப்போது அவர்களின் தொப்பி கீழே விழுந்தது… அவர்களின் தொப்பி என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பியா? அல்லது உமர் (ரலி) அவர்களின் தொப்பியா? என்பது எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் ஐயத்திற்கிடமான வார்த்தைகளால் அறிவித்துள்ளார்.

திர்மிதீ 1568, அஹ்மத் 145 ஆகிய நூற்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூயஸீத் அல்கவ்லானி என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். மேலும் இப்னு லஹ்யஆ என்ற அறிவிப்பாளரும் இதில் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாகக் கூறவில்லை. மேலும் இதில் இரண்டு அறிவிப்பாளர்கள் பலவீனர்களாக உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்திருந்தனர் என்று கூறும் எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடிகளைக் கூட எண்ணிச் சொல்லும் நபித் தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்ததாகக் கூறவில்லை என்றால் அவர்கள் தமது வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது உறுதி.

அன்றைய மக்கள் சிலரிடம் தொப்பி அணியும் வழக்கம் இருந்துள்ளது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று கூற முடியுமே தவிர தொப்பி அணிவது கடமை என்றோ, சுன்னத் என்றோ கூற ஒரு ஆதாரமும் இல்லை.

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர் சட்டை, தலைப்பாகை, காற்சட்டைகள், தொப்பிகள் அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 134, 366, 1838, 1842, 5794, 5803, 5805, 5806)

இஹ்ராம் கட்டிய போது தொப்பி அணியக் கூடாது என்றால் மற்ற நேரங்களில் அணியலாம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இவ்வாறு சில நபித் தோழர்கள் தொப்பி அணிந்திருந்தது கூட தொழுகைக்காக அல்ல. சாதாரணமாக ஓர் ஆடை என்ற அடிப்படையில் தான் அணிந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(தொப்பி) கலன்ஸுவத் என்பதற்கு மொழி ஆய்வாளர் அபூஹிலால் அஸ்கரீ அவர்கள் விளக்கம் அளிக்கும் போதுஇ வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் காக்கும் உடை என்று விளக்கம் தருகின்றார். மேலும் அதன் மேல் தலைப்பாகையைச் சுற்றலாம் என்றும் கூறுகின்றார்.

வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் காக்கும் அளவுக்குக் கனமான, அடர்த்தியான கவசம் போன்ற ஆடை தான் தொப்பியைக் குறிக்கும் கலன்ஸுவத் என்ற அரபுச் சொல்லுக்கு அர்த்தமாகும். தொழுகையுடன் இதற்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஷரீக் அவர்கள் ஒரு ஜனாஸா தொழுகை நடத்தும் போது தமது தொப்பியைக் கழற்றி முன்னால் வைத்துக் கொண்டு தொழுகை நடத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. (நூல்: அபூதாவூத் 592)

தொழுகைக்கு வெளியே வெயிலுக்காக அணிந்திருந்த தொப்பியை தொழுகையின் போது கழற்றி வைத்திருக்கின்றார் என்பதிலிருந்து அன்றைக்குத் தொப்பியைச் சிலர் அணிந்தது ஏன் என்பது விளங்குகின்றது.

உமர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது, அவர்களை ஒருவன் கத்தியால் குத்தினான். குத்தி விட்டு அவன் ஓடும் போது ஒருவர் அவன் மேல் தொப்பியை வீசியெறிந்து தாக்கினார். இதனால் நிலை குலைந்து போன அவன், பிடிபடக் கூடாது என்பதற்காக தற்கொலை செய்து கொண்டான் என்ற செய்தி புகாரியில் 3700வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொப்பியை எறிந்து ஒருவரை நிலை குலையச் செய்ய முடியும் என்றால் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த தொப்பி எதுவென்று நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. ஏறக்குறைய இரும்புக் கவசம் போன்ற கடினமான தலையாடை தான் தொப்பி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இன்று தொப்பி என்ற பெயரால் அணியப்படும் ஆயிரம் கண்ணுடைய ஆடை(?)யால் மழையையும், வெயிலையும் தடுக்க முடியாது. அதன் மூலம் ஒரு ஈயைக் கூட நிலை குலையச் செய்ய முடியாது.

மீண்டும் சுருக்கமாகச் சொல்வதென்றால்
தொப்பி அணியுமாறு ஆர்வமூட்டி எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட தொப்பி அணிந்ததில்லை.
சில நபித் தோழர்கள் அணிந்துள்ளனர்.
வெயில், மழையிலிருந்து காக்கவே அதை அணிந்துள்ளனர். தொழுகைக்காக அல்ல.
அந்தத் தொப்பிக்கும் இன்று தொப்பி என்று கூறப்படுவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
தொப்பி என்பது ஒரு ஆளைத் தாக்கி நிலை குலையச் செய்யும் ஆயுதமாகக் கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொப்பியை இஸ்லாத்தின் சின்னமாக அறிவிக்க யாருக்கும் அதிகாரமில்லை.
தொழுகையின் போது தொப்பி அணிய வேண்டும் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.
தொப்பி அணியாதவர்கள் பள்ளியில் தொழ அனுமதியில்லை என்று கூறவும் யாருக்கும் அதிகாரம் இல்லை.
தலையை மறைத்துக் கொள்ள உபரியான ஆடை இருந்தும் வேண்டுமென்றே மறைக்காமல் நபித்தோழர்கள் தொழுதுள்ளனர்.

ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கீழாடையை (பிடரி வரை தூக்கிக்) கட்டிக் கொண்டு தொழுதார்கள். அவர்களது உபரியான ஆடை மரச் சட்டத்தின் மீது வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவர், ரூஙரழவ்ஒரு ஆடையுடனா தொழுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன் போன்ற அறிவிலிகள் என்னைப் பார்க்க வேண்டுமென்றே இவ்வாறு செய்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களில் எவரிடம் இரண்டு ஆடைகள் இருந்தன?” என்று விடை யளித்தார்கள். (நூல்: புகாரி 352)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி போன்ற உபரி ஆடைகள் பலரிடம் இருந்ததில்லை என்பதற்கும், ஆண்கள் தலையை மறைப்பது அவசியம் இல்லை என்பதற்கும் இது மேலதிக ஆதாரமாக அமைந்துள்ளது.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரேயொரு ஆடையை அணிந்து தொழுதார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயொரு ஆடை அணிந்து தொழுததை நான் பார்த்துள்ளேன் எனவும் கூறினார்கள். (நூல்: புகாரி 353)

இடுப்புக்கு மேல் ஒரு ஆடை, இடுப்புக் கீழ் ஒரு ஆடை என இரண்டு ஆடைகள் அணியாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரு ஆடை மட்டும் அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்கள் தலையை மறைக்காமல் தொழுதுள்ளது உறுதியாகின்றது.

நம்முடைய பழக்க வழக்கம் என்ற அடிப்படையில் விரும்பியவர் தொப்பியை அணிந்து கொண்டால் தவறில்லை. தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ அவ்வாறு அணிந்து கொண்டால் அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

அது போல் ஒருவர் தொழுகையின் போதோஇ தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணியாமல் இருந்தால் அவரைத் தொப்பி அணியுமாறு கட்டாயப்படுத்துவதற்கும்இ ஆர்வமூட்டுவதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை.

தலைப்பாகை 
தலைப்பாகையைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணியுமாறு கட்டளையிட்டதாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஏதுமில்லை. தலைப்பாகை அணியுமாறு சிறப்பித்துக் கூறியதாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஏதுமில்லை.

தலைப்பாகை அணிவதை வலியுறுத்தும் வகையில் உள்ள ஹதீஸ்கள் யாவும் இட்டுக்கட்டப் பட்டவையாக அல்லது பலவீனமானவையாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகையை வலியுறுத்தியதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அவர்கள் தலைப்பாகை அணிந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தலைப்பாகையின் மீதும், காலுறைகள் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் உமைய்யா (ரலி)
நூல்: புகாரி 205

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் (மேடை) மீது கறுப்புத் தலைப்பாகை அணிந்து நின்றதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுரைஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2421

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் கறுப்புத் தலைப்பாகை அணிந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரில் நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2418

இப்படி விரல் விட்டு எண்ணிச் சொல்லும் அளவுக்கு சில சந்தர்ப்பங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவர்கள் உளூச் செய்த போதும்இ உரை நிகழ்த்திய போதும்இ பல்வேறு வெற்றிகளைப் பெற்ற போதும் அவர்களைப் பற்றிப் பேசும் நூற்றுக் கணக்கான ஹதீஸ்களில் தலைப்பாகை அணிந்திருந்தார்கள் என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலையின் முடி அலங்காரம் பற்றி எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன. அவர்கள் எல்லா நேரத்திலும் தலைப்பாகையுடன் இருந்திருந்தால் தலை முடியின் அலங்காரம் பற்றி இவ்வளவு வர்ணனைகள் நமக்குக் கிடைத்திருக்க முடியாது.

எனவே மிகச் சில நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தலைப்பாகை அணியாமல் இருந்துள்ளனர்.

மேலும் இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாதத்துக்காக எல்லா நேரங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைப்பாகை அணிந்திருந் தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட தலைப்பாகை அணிவது சுன்னத் என்று ஆகி விடாது.

ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது, போர்வையைச் சுற்றிக் கொண்டு தொழுதது போன்ற காரியங்களை நாம் சுன்னத் என்று கூறுவதில்லை. வணக்க வழிபாடுகள் தொடர்பில்லாத காரியங்களைப் பொறுத்த வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைச் செய்வதுடன், செய்யுமாறு ஆணையிட்டால் தான் அது மார்க்கமாக ஆகும். மேற்கண்ட காரியங்களுக்கு எப்படி எந்தக் கட்டளையும் இல்லையோ அது போல் தலைப்பாகை அணிவதற்கும் கட்டளை இல்லை.

எனவே தொழுகையிலோ, தொழுகைக்கு வெளியிலோ ஒருவர் தலைப்பாகை அணிய விரும்பினால் அணியலாம். விரும்பினால் அணியாமலும் இருக்கலாம்.
நன்றி -sltj
0 comments

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-11

சீடர்களின் பயத்திர்க்கு காரணம் என்ன ?

ஏசு மரணிக்கவில்லை                        ஆதாரம்:11
பயந்து நடுங்கிய சீடர்கள்
எம்மாவுவைச் சேர்ந்த இருவரும் ஜெருஸலத்திற்கு வருகையளிக்கின்றனர்.
அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.
அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவேஉயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார்கள்.
அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
   லூக்கா 24:33-35
 இங்கே லூக்கா சொல்கின்ற 11 பேர் என்ற கணக்கு தவறான கணக்காகும். ஏனெனில், ஏசு வருகையளித்த போது அவரது சீடர்களில் ஒருவரானதாமஸ் அங்கு இல்லை. (பார்க்க யோவான் 20:24)
 மேலும் யூதாசும் அங்கு இல்லை. ஏனெனில் ஏசு திரும்ப வரும் போதுயூதாசு உயிருடன் இல்லை. தற்கொலை செய்து விட்டான். (பார்க்க மத்தேயு 27:5)
 எம்மாவுவைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேரைத் தாண்டாது. இங்கு லூக்கா 11 பேர் என்று குறிப்பிடுவது மாற்கு 16:14 வசனத்தைக் காப்பியடித்துத் தான். இந்த லட்சணத்தில்1 கொரிந்தியர் 15:5 வசனத்தில், "அவர்கள் 12 பேர்' என்று பவுல்குறிப்பிடுகின்றார். பவுலையும் சேர்த்தால் கூட 12 வராது.
 பைபிள் எழுத்தாளர்களிடம் இந்த எண்ணிக்கைகளுக்குப் பெரிய மதிப்புஇருக்காது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இவர்களுடைய அறிவிப்புக்களில் தான் எத்தனை தில்லுமுல்லுகள் என்பதைக்காட்டுவதற்காகத் தான். இப்போது விஷயத்திற்கு வருவோம்.
 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்குஅஞ்சி, சீடர்கள்தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்துஅவர்கள் நடுவில் நின்று,"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார்.
                                                                                                 யோவான் 20:19
 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள்நடுவில் நின்று, "உங்களுக்குஅமைதி உரித்தாகுக!'' என்று அவர்களைவாழ்த்தினார்.
அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.    லூக்கா 24:36-37
 பயப்படக் காரணம் என்ன?
 மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைக் காணச் செல்கின்றார். ஆனால் பத்துஆண் சீடர்கள் பயந்து நடுங்குகின்றார்கள். ஒரு மகதலா மேரி என்ற பெண் நடுங்கவில்லை. அதுமட்டுமின்றி பற்று மிகுதியால் அவரைப் பற்றிப் பிடிக்கவும் முனைகிறாள். ஆனால் பக்திமிகு இந்தப் பத்து சீடர்கள் பயந்து நடுங்கிச் சாகின்றார்களே! ஏன்?
 இதற்குப் பெரிய காரணம் ஒன்றுமில்லை. இந்தப் பத்து சீடர்களும்ஏசுவை நட்டாற்றில் விட்டு ஓடியவர்கள் என்று பைபிள் கூறுகின்றது.
 அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.     (மாற்கு 14:50)
 அந்தச் சீடர்கள் அனைவருமே ஏசு சிலுவையில் கட்டப்பட்டு இறந்துவிட்டார் என்று மட்டும் தான் கேள்விப்பட்டிருந்தார்கள். ஏசு சிலுவையில் ஏற்றப்படும்போது, அவர் சிலுவையிலிருந்துஇறக்கப்படும் போது, கல்லறையில் வைக்கப்படும்போது, அங்கிருந்து எழும்போது இவர்கள் ஏசுவுடன் இருக்கவில்லை. அதனால் அவர்கள் ஏசுவை ஆவியாகத் தான் பார்க்கிறார்கள்.
 ஆனால் மகதலா மேரியோ ஏசுவை மனிதராகப் பார்த்தாள். காரணம், அவள் இறுதி வரை ஏசுவுடன் இருந்தவள். ஏசு இறக்கவில்லை, கல்லறைக்குள் உயிருடன் தான் இருந்தார் என்பதுமகதலா மேரிக்குத் தெரியும். இது தான் சீடர்கள் பயந்ததற்கும், மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைத் தொட முயன்றதற்கும்காரணம்.
                                            இன்ஷா அல்லாஹ் தொடரும்......
0 comments

திமிங்கலங்கள் மூச்சடக்குவது எப்படி?: விடை கண்டனர் விஞ்ஞானிகள்

திமிங்கலங்கள் நீர் மட்டத்துக்கு வெளியில் வந்துதான் சுவாசிக்கின்றன.
திமிங்கலங்கள் போன்ற கடல்வாழ் பாலூட்டிகள் சுமார் ஒரு மணி நேரம் வரை மூச்சை அடக்கும் திறன் படைத்தவை.திமிங்கலம் போன்ற கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் நீருக்கடியியில் ஒரு மணி நேரம் வரை மூச்சை அடக்கிக்கொள்ள முடியும் அளவுக்கு அவை தமது உடலில் பிராணவாயுவை எவ்வாறு சேமிக்கின்றன என்று கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சுற்றாடலுக்கு ஏற்ப பிராணிகளில் உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் பரிணாம வளர்ச்சியின் சிறப்பான உதாரணமாக கடல்வாழ் பாலூட்டி விலங்குகள் சுவாசிக்காமல் ஒரு மணி நேரம் வரையில் நீருக்கடியில் இருப்பது கருதப்படுகிறது.
இவ்வகையான பிராணிகளின் உடலில் உள்ள மயோகுளோபின் என்ற புரதத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
இவ்விலங்குகளின் தசைகளில் காணப்படும் இந்த புரதம், பிராணவாயுவை சேமித்துவைக்கவல்லது.
திமிங்கலங்கள், சீல்கள் போன்ற பிராணிகளில் உள்ள மயோகுளோபின்கள் 'ஒட்டாமல் விலகிற்கும்' விசேடத் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக இந்தப் புரதம் பெருமளவான ஆக்ஸிஜனை தம்முள் சேமித்துவைக்கின்ற போதிலும் "அளவுக்கதிகமான காற்றடைத்த பந்துகளாக" அந்த விலங்குகள் திணறாமல் இருக்க இத்தன்மை உதவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் விவரங்கள் சயின்ஸ் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளன.
சாதாரணமாக மயோகுளோபின் புரதம் அதிகமாக ஒன்று சேரும்போது அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.
ஆனால் குறிப்பிட்ட இந்த கடல்வாழ் பாலூட்டி விலங்குகளிடம் இப்புரதம் அவ்வாறு ஒட்டிக்கொள்வதில்லை.

"அதனால்தான் அதிகமான காற்றை உடல் திசுக்களில் சுமந்துகொண்டிருந்தாலும், இந்த விலங்குகளால் இயங்க முடிகின்றன" என்று இந்த ஆய்வில் பங்கேற்ற லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் மைக்கேல் மெரென் பிரிங்க் பிபிசியிடம் கூறினார்.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger