Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கிருஸ்துவம். Show all posts
Showing posts with label கிருஸ்துவம். Show all posts

இயேசு இறை மகனா - தொடர் 17

கடவுளின் இலக்கணம்
கடவுளுக்கும், மனிதனுக்கும் தனித்தனி இலக்கணங்களை பைபிள் கூறுகிறது. கடவுளுக்குக் கூறப்பட்ட எந்த இலக்கணமும் இயேசுவுக்குப் பொருந்தவில்லை. மனிதனுக்குக் கூறப்படுகின்ற எல்லா இலக்கணங்களும் இயேசுவுக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன என்பதை பைபிளின் துணையுடன் இப்பகுதியில் காண்போம்.

காணப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
"நித்தியமும், அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள(காணமுடியாமை) ராஜனுமாய் தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாகியிருப்பதாக. ஆமென்." - (முதலாம் தீமோத்தேயு 1:17)

கடவுள் என்பவர் அழிவில்லாதவராகவும், காணப்படாதவராகவும் இருக்க வேண்டும் என்று புதிய ஏற்பாடு இலக்கணம் கூறுகின்றதே! (பைபிள் போதனைப் படி) மரணத்தைத் தழுவியவரும், காணப்பட்டவரும் எப்படிக் கடவுளாக முடியும்? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா?
"தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை." - (யோவான் 1:18)
"கடவுள் என்பவர் எவராலும், எச்சந்தர்ப்பத்திலும் காணப்படக் கூடாது'' என்று பைபிளின் மேற்கண்ட வசனம் கூறுகிறது. இயேசுவைப் பல்லாயிரம் மக்கள் கண்டுள்ளனர். உயிர்த்தெழுந்த பின்பும் கூட அவரைச் சிலர் கண்டுள்ளனர். மரணிப்பதற்கு முன்னரும், மரணித்து உயிர்த்தெழுந்த பின்னரும் இயேசு பலரால் காணப்பட்டுள்ளதால் இயேசு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ இருக்க முடியாது என்பது ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.

இரத்தமும் சதையும் கடவுளுக்கு இல்லை:
"கடவுளுக்கு இரத்தமோ, சதையோ, எலும்புகளோ இருக்கக் கூடாது. அவர் ஆவி வடிவிலேயே இருக்க வேண்டும்'' எனவும் பைபிள் கடவுளுக்கு இலக்கணம் கூறுகிறது.
"தேவன் ஆவியாக இருக்கிறார்." - (யோவான் 4:24)

இந்த வசனத்தில் கூறப்படும் இலக்கணத்திற்கேற்ப இயேசு இருந்தாரா? இல்லை என்று பைபிள் அடித்துச் சொல்கிறது. இயேசுவின் முழு வாழ்க்கையிலும் அவர் ஆவியாக இராமல் மாம்சம், சதை, எலும்பு ஆகியவற்றுடனே இருந்தார். அவர் சிலுவையில் அறையப்பட்ட போதும் அவர் இவ்வாறே இருந்தார். ஒரு ஆவியைச் சிலுவையில் அறைய முடியாது. இயேசுவைச் சுட்டிக் காட்டும் ஓவியங்களில் அவர் சிலுவையிலறையப்பட்டு இரத்தம் சிந்தும் நிலையிலேயே தீட்டப்படுகிறார்.
அது மட்டுமின்றி அவர் உயிர்த்தெழுந்த பின்னரும் இதே நிலையிலேயே இருந்திருக்கிறார்.

"அவர், அவர்களை நோக்கி, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும் படி என் கைகளையும், என் கால்களையும் பாருங்கள்! என்னைத் தொட்டுப் பாருங்கள்! நீங்கள் காண்கிற படி எனக்கு மாம்சமும், எலும்புகளும் உண்டாகியிருக்கிறது போல் ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்." - (லூக்கா 24:38-40)

உயிர்த்தெழுந்த பின்னரும் கூட இயேசு ஆவியாக இல்லை; இரத்தமும், சதையும், எலும்பும் உள்ளவராகவே இருந்தார். இதன் பிறகும் அவரைக் கடவுள் என்றோ கடவுள் தன்மை பெற்றவர் என்றோ நம்பினால் அது பைபிளை மறுத்ததாக ஆகாதா?

மரணித்தல் கடவுளின் தன்மை அல்ல:கடவுள் என்றென்றும் நிலையாக இருக்க வேண்டும். அவருக்கு ஆரம்பமும், முடிவும் இருக்க முடியாது.
"கர்த்தரே என்றென்றைக்கும் இருப்பார்." - (சங்கீதம் 9:7)
இயேசு உயிர்த்தெழுந்ததை நம்பினால் கூட அவர் பிறப்பதற்கு முன் இருந்திருக்கவில்லை. மரணத்திற்கும் உயிர்த்தெழுவதற்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர் இருக்கவில்லை. என்றென்றைக்கும் இராததால் இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று அறியலாம்.

கொல்லப்படுதல் கடவுளின் தன்மை இல்லை:
கடவுளை ஒருவரும் ஒருக்காலும் கொலை செய்ய முடியாது. கொல்லப்பட்ட யாரும் கடவுளாயிருக்க முடியாது என்றும் பைபிள் கூறுகிறது.
"உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப் போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே!" - (எசக்கியேல் 28:9)
குத்திப் போடப்பட்டவன் மனுஷனாகத் தான் இருக்க முடியுமே தவிர கடவுளாக இருக்கவே முடியாது என்ற இந்த இலக்கணத்துக்குப் பொருந்தும் வகையில் இயேசு கொல்லப்பட்டிருக்கிறார்.

"நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலை செய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி...." - (அப்போஸ்தலர் 5:30)
கொலை செய்யப்பட்ட காரணத்தால் இயேசு கடவுள் இல்லை என்று பைபிள் தெளிவாகக் கூறிய பிறகும் அவரைக் கடவுள் என்று கூறலாமா?
                                                                                         இன்ஷா அல்லாஹ் தொடரும்....
0 comments

இயேசு இறை மகனா ? - தொடர் 16

பரிசுத்த ஆவி பெற்ற பலர்
இன்னும் யாரிடமெல்லாம் பரிசுத்த ஆவி குடி கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள்!
"பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல. உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்." - (மத்தேயு 10:20)
இயேசு தன் சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார். இயேசு எப்படி பரிசுத்த ஆவியால் பேசினாரோ அது போல் அவரது சீடர்களும் பரிசுத்த ஆவியின் மூலமே பேசியுள்ளனர். 

பரிசுத்த ஆவியால் பேசுகின்ற இயேசுவின் சீடர்களும் கடவுளர்களா?
இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

"அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான். அவன் நீதியும் தேவ பக்தியும் உள்ளவனாயும் இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான். அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார்." - (லூக்கா 2:25)

"இந்தச் சங்கதிகளைக் குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம். தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்." - 
(அப்போஸ்தலர் 5:32)

"அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான். அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய் சேர்க்கப்பட்டார்கள்." -
 (அப்போஸ்தலர் 11:24)

"இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மார்க்கத்தமைந்தவனான அந்தியோகிய பட்டணத்தானாகிய நிக்கோலாவையும் தெரிந்து கொண்டு..." - 
(அப்போஸ்தலர் 6:5)

"உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்" - (இரண்டாம் தீமோத்தேயு 1:14)
"தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை. தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு பேசினார்கள்." - 
(இரண்டாம் பேதுரு 1:21)

இவ்வாறு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டவர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருந்துள்ளதாக பைபிள் கூறும் போது இயேசுவை மட்டும் கடவுள் என்று கூறுவது என்ன நியாயம்? பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுதல் என்பதன் பொருள் என்ன? கடவுள் தன்மை வந்து விட்டது என்பது தான் அதன் பொருளா? நிச்சயமாக இல்லை. தேவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது அடிமைகளாகத் தங்களைக் கருதுவோர் தாம் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டவர்கள். மேலே எடுத்துக்காட்டப்பட்ட அப்போஸ்தலர் 5:32 வசனத்திலிருந்து இதை விளங்கலாம்.

இயேசுவைத் தவிர மற்றவர்களிடம் பரிசுத்த ஆவி இருப்பதாகக் கூறப்படும் போது அவர்கள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்று விளங்கிக் கொள்ளும் கிறித்தவர்கள் இயேசுவுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது மட்டும் அவர் கடவுள் தன்மை பெற்றவர் என்று பொருள் கொள்ள என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்? விளக்குவார்களா?

இன்னும் சொல்வதென்றால் பரிசுத்த ஆவியினால் நிரம்பிய மற்றவர்களைக் கடவுள் என்று கூறினால் கூட இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. அதற்கு பைபிளிலேயே ஆதாரம் கிடைக்கின்றது.
"சோதிக்கப்படுகிற எவனும் நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக." - (யாக்கோபு 1:13)
கடவுள் என்பவர் தீமைகளால் சோதிக்கப்பட முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது. ஆனால் இயேசுவோ பலமுறை பிசாசினால் - தீமைகளால் சோதிக்கப்பட்டதாகவும் பைபிள் கூறுகிறது. (மத்தேயு 4:1-10)

இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிரம்பி வழிந்தாலும் அவர் பிசாசினால் சோதிக்கப்பட்டிருக்கிறார். இவ்வாறு சோதிக்கப்பட்டவர் கடவுளாக இருக்க முடியாது எனும் போது இயேசுவைக் கடவுளாக ஏற்பதில் கடுகளவாவது நியாயம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்! தங்களுக்குச் சிறு வயது முதலே ஊட்டப்பட்டதை மறந்து விட்டு வேதமாக நம்புகின்ற பைபிளை நடுநிலையோடு ஆராய்ந்தால், "இயேசு நிச்சயமாகக் கடவுள் அல்லர்; கடவுளின் மகனுமல்லர்; அவர் ஒரு நல்ல மனிதர்; கடவுளின் தூதர்'' என்ற முடிவைத் தவிர வேறு முடிவுக்கு எந்தக் கிறித்தவரும் வர முடியாது.
                                                                               இன்ஷா அல்லாஹ்  தொடரும்....
0 comments

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-12

நான் ஆவியல்ல-ஏசு
ஏசு மரணிக்கவில்லை                       ஆதாரம்: 12
 ஆவியல்ல! மனிதர் தான்!
தனது சீடர்களுக்கு ஏசு முறையாக முகமன் கூறிய பின்னர் பின்வருமாறுகூறுகின்றார்:
"நீங்கள்ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறுஉங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக்காண்கிறீர்களே; இவை ஆவிக்குக்கிடையாதே'' என்று அவர்களிடம்கூறினார்; இப்படிச்சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
                                                                                  லூக்கா 24:38-40
 ஏசு இதன் மூலம் தெரிவிப்பது இது தான். அட அடிமுட்டாள்களா! ஆவிக்குஏது சதை? ஆவிக்கு ஏது எலும்பு? ஆவிக்கு ஏது இரத்தம் என்று சிந்தியுங்கள்; நான் சாகவில்லை; அதே ஏசு தான் அப்படியே வந்திருக்கிறேன் என்றுதெளிவாகத் தெரிவிக்கின்றார்.
 ஆவிக்கு சதையோ, எலும்போகிடையாது என்பது எல்லோரும் ஏகோபித்து ஒத்துக் கொண்ட உண்மை. ஏசு அதைத் தான் தனது சீடர்களிடம்உணர்த்துகின்றார். எனவே இறந்தவர் மீண்டும் எழுந்து வந்தால் அவர் ஆவியாகத் தான் வருவார்.அதே ஆளாக வர மாட்டார்.
 அஹ்மத் தீதாத் அவர்கள் இவ்வாறு ஒரு கருத்தரங்கில் கூறிய போதுஒரு கிறித்தவ அழைப்பாளர் எழுந்து, "இறந்தவர்மீண்டும் உயிர் பெற்றால் அவர் ஆவியாகத் தான் வருவார் என்று யார் சொன்னது?'' என்று கேட்டார். அதற்கு அஹ்மத் தீதாத், "ஏசு தான்'' என்று பதில் கூறினார். "இது எங்கு இடம் பெறுகின்றது?'' என்று கேட்டார். "இது பைபிளில் லூக்காவில்இடம் பெறுகின்றது. ஆவிக்கு சதையோ, எலும்போகிடையாது என்று பைபிள் கூறுகின்றது'' எனக் கூறிப்பின்வரும் விளக்கத்தை அளித்தார் அஹ்மத் தீதாத்!
 ஒரு யூதப் பெண்ணுக்கு 7 கணவர்கள்.யூதக் கலாச்சாரப்படி ஒருவர் குழந்தையில்லாமல் இறந்து விட்டால் அவரது சகோதரர் அந்த மனைவியைத்திருமணம் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு சகோதரரும் இறந்து கொண்டே இருந்தால் அடுத்தடுத்துஉள்ள சகோதரர்கள் திருமணம் முடிக்க வேண்டும்.
 ஏழு பேரையும் இந்தப் பெண் திருமணம் முடிக்கிறாள். அந்தப் பெண்ணும்இறந்து விட்டாள். பரலோக வாழ்வில் அந்த ஏழு பேரும் அந்தப் பெண்ணும் எழுப்பப்படுவார்கள்.அப்போது ஏழு பேருமே அந்தப் பெண் தனக்கு என்று கோருவார்கள். அங்கு அந்தப் பெண் யாருடன்சேர்ந்து வாழ்வாள்? இது தான் ஏசுவுக்குமுன்னால் உள்ள கேள்வி.
 அதற்கு ஏசு அளிக்கும் பதில்:
இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள்.உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே.
                                                                                லூக்கா 20:36
       லூக்கா                
அவர்கள் சாகாத ஆவிகளாகி விடுவார்கள். அவர்களுக்கு உணவுதேவையில்லை. உடை தேவையில்லை. பாலியல் உணர்வு தேவையில்லை. அவர்கள் வானவர்களுக்குச் சமமானவர்கள்.
 இந்தச் சம்பவம் லூக்கா 20:27-36 வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
 இந்த விளக்கத்தின்படி,தான் மீண்டும் உயிர் பெற்று வந்தவர் அல்ல! அதாவது ஆவி அல்ல! உடலும் உயிரும் சேர்ந்தஅதே ஏசு தான். பசி, தாகம் உள்ள ஒரு ஜீவன்தான் என்பதையும் இங்கே ஏசு நிரூபித்துக் காட்டுகின்றார்.
 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போதுஅவர் அவர்களிடம், "உண்பதற்குஇங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?''என்று கேட்டார். அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம்கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார்.
                                                                                              லூக்கா24:41-43
இவ்வளவும் எதற்காக? தான் ஓர்ஆவி என்பதை நிரூபிக்கவா? இல்லை! எலும்பும்சதையும் இணைந்த மனிதன் தான் என்பதை நிரூபிப்பதற்காக! அல்லது இவை அனைத்தும் நடிப்புஎன்று கிறித்தவ உலகம் சொல்ல வேண்டும்.
     இன்ஷா அல்லாஹ் தொடரும்.......

0 comments

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-11

சீடர்களின் பயத்திர்க்கு காரணம் என்ன ?

ஏசு மரணிக்கவில்லை                        ஆதாரம்:11
பயந்து நடுங்கிய சீடர்கள்
எம்மாவுவைச் சேர்ந்த இருவரும் ஜெருஸலத்திற்கு வருகையளிக்கின்றனர்.
அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.
அங்கிருந்தவர்கள், "ஆண்டவர் உண்மையாகவேஉயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார்கள்.
அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக்கொடுக்கும் போது அவரைக் கண்டுணர்ந்து கொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
   லூக்கா 24:33-35
 இங்கே லூக்கா சொல்கின்ற 11 பேர் என்ற கணக்கு தவறான கணக்காகும். ஏனெனில், ஏசு வருகையளித்த போது அவரது சீடர்களில் ஒருவரானதாமஸ் அங்கு இல்லை. (பார்க்க யோவான் 20:24)
 மேலும் யூதாசும் அங்கு இல்லை. ஏனெனில் ஏசு திரும்ப வரும் போதுயூதாசு உயிருடன் இல்லை. தற்கொலை செய்து விட்டான். (பார்க்க மத்தேயு 27:5)
 எம்மாவுவைச் சேர்ந்தவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேரைத் தாண்டாது. இங்கு லூக்கா 11 பேர் என்று குறிப்பிடுவது மாற்கு 16:14 வசனத்தைக் காப்பியடித்துத் தான். இந்த லட்சணத்தில்1 கொரிந்தியர் 15:5 வசனத்தில், "அவர்கள் 12 பேர்' என்று பவுல்குறிப்பிடுகின்றார். பவுலையும் சேர்த்தால் கூட 12 வராது.
 பைபிள் எழுத்தாளர்களிடம் இந்த எண்ணிக்கைகளுக்குப் பெரிய மதிப்புஇருக்காது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இவர்களுடைய அறிவிப்புக்களில் தான் எத்தனை தில்லுமுல்லுகள் என்பதைக்காட்டுவதற்காகத் தான். இப்போது விஷயத்திற்கு வருவோம்.
 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்குஅஞ்சி, சீடர்கள்தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்துஅவர்கள் நடுவில் நின்று,"உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார்.
                                                                                                 யோவான் 20:19
 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள்நடுவில் நின்று, "உங்களுக்குஅமைதி உரித்தாகுக!'' என்று அவர்களைவாழ்த்தினார்.
அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.    லூக்கா 24:36-37
 பயப்படக் காரணம் என்ன?
 மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைக் காணச் செல்கின்றார். ஆனால் பத்துஆண் சீடர்கள் பயந்து நடுங்குகின்றார்கள். ஒரு மகதலா மேரி என்ற பெண் நடுங்கவில்லை. அதுமட்டுமின்றி பற்று மிகுதியால் அவரைப் பற்றிப் பிடிக்கவும் முனைகிறாள். ஆனால் பக்திமிகு இந்தப் பத்து சீடர்கள் பயந்து நடுங்கிச் சாகின்றார்களே! ஏன்?
 இதற்குப் பெரிய காரணம் ஒன்றுமில்லை. இந்தப் பத்து சீடர்களும்ஏசுவை நட்டாற்றில் விட்டு ஓடியவர்கள் என்று பைபிள் கூறுகின்றது.
 அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.     (மாற்கு 14:50)
 அந்தச் சீடர்கள் அனைவருமே ஏசு சிலுவையில் கட்டப்பட்டு இறந்துவிட்டார் என்று மட்டும் தான் கேள்விப்பட்டிருந்தார்கள். ஏசு சிலுவையில் ஏற்றப்படும்போது, அவர் சிலுவையிலிருந்துஇறக்கப்படும் போது, கல்லறையில் வைக்கப்படும்போது, அங்கிருந்து எழும்போது இவர்கள் ஏசுவுடன் இருக்கவில்லை. அதனால் அவர்கள் ஏசுவை ஆவியாகத் தான் பார்க்கிறார்கள்.
 ஆனால் மகதலா மேரியோ ஏசுவை மனிதராகப் பார்த்தாள். காரணம், அவள் இறுதி வரை ஏசுவுடன் இருந்தவள். ஏசு இறக்கவில்லை, கல்லறைக்குள் உயிருடன் தான் இருந்தார் என்பதுமகதலா மேரிக்குத் தெரியும். இது தான் சீடர்கள் பயந்ததற்கும், மகதலா மேரி பயப்படாமல் ஏசுவைத் தொட முயன்றதற்கும்காரணம்.
                                            இன்ஷா அல்லாஹ் தொடரும்......
0 comments

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-10

சாட்சியங்களை நம்ப மறுக்கும் சீடர்கள்
ஏசு மரணிக்கவில்லை                       ஆதாரம்: 10
நம்ப மறுக்கும் சீடர்கள்
 மரியா அந்தத் தகவலை சீடர்களிடம் சொன்ன போது அவர்கள் நம்ப மறுக்கின்றனர்.
 அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார்என்றும் கேட்ட போது அவர்கள் நம்பவில்லை.
                                                                                                 மாற்கு 16:11
 கல்லறையிலிருந்து கிளம்பிய ஏசு எம்மாவு என்ற ஊரை நோக்கிச் செல்கின்றார்.
அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொருகிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு.
 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர்உரையாடிக் கொண்டே சென்றார்கள்.
இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்ற போது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.
 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள்கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
                                                                                                லூக்கா 24:13-16
 பயணம் ஒரு கட்டத்தை அடைந்த போது, சீடர்களுடன் உணவும் சாப்பிடுகிறார்.
 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்த போது அப்பத்தைஎடுத்து, கடவுளைப்போற்றி, பிட்டு அவர்களுக்குக்கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள்.உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்து போனார்.
                                                                                                     லூக்கா 16:30, 31
 இங்கு, அவர்களதுகண்கள் திறந்தன என்று கூறப்படுவது, நேரடி அர்த்தத்தில்இல்லை. ஏனெனில் அவ்வாறு அர்த்தம் கொடுத்தால் இவ்வளவு நேரம் பயணம் செய்யும் போது கண்களைமூடியிருந்தார்கள் என்றாகி விடும். எனவே கண்கள் திறந்தன என்று கூறப்படுவது, ஏசுவை அடையாளம் கண்டு கொண்டார்கள் என்ற பொருளில்தான்.
 இவர்கள் போய் இதர சீடர்களிடம் சொல்கிறார்கள். அவர்களும் நம்பமறுக்கிறார்கள்.
 காரணம், ஏசு உயிருடன்இருக்கிறார் என்ற ஆதாரத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதே இரத்தமும் சதையும்உள்ள ஏசு! உணவு சாப்பிடும் ஏசு! அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
 ஆனால் இதே சீடர்களிடம் மகதலா மரியா, "ஏசுவின் ஆவியைக் கண்டேன்' என்று கூறியிருந்தால் ஒப்புக் கொண்டிருப்பார்கள்.ஏசுவுடன் ஒன்றாய் எம்மாவு என்ற ஊருக்கு வந்த இருவரும், அவரது ஆவியைக் கண்டேன் என்று சொன்னால் ஒப்புக்கொண்டிருப்பார்கள்.
 இதற்குக் காரணம் அவர்கள் ஆவியை அதிகமதிகம் பார்த்தவர்கள். பன்றிக்குள்ஆவி புகுந்து இரண்டாயிரம் பேரைக் காலி செய்தது என்று நம்பியவர்கள்.
 பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன.ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்துகடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
                             மாற்கு 5:13
 மகதலா மரியாவிடமிருந்து ஏழு ஆவிகள் வெளியானதைப் பார்த்தவர்கள்.அதனால் அவர்களுடைய வாழ்நாளில் நம்பப்படுபவற்றை,அவர்கள் நம்பத் தான் செய்தனர். ஆனால் உயிருடன் உள்ள ஏசுவை, அதிலும் உயிருடன், உடலுடன் உள்ள ஏசுவை அவர்களால் நம்ப முடியவில்லை.அதிலும் குறிப்பாக மரணத்தின் பிடியிலிருந்து தப்பிய ஏசுவை அவர்களால் நம்ப முடியவில்லை.காரணம் இவர்கள் நம்பிக்கை குன்றியவர்கள் என்று பைபிள் கூறுகின்றது. (பார்க்க மத்தேயு6:30, 8:26, 14:31, 16:8, லூக்கா12:28)
 1. ஏசு உயிருடன் இருக்கிறார்என்று மக்தலா மரியா சாட்சி சொல்கிறார்.
2. ஏசு உயிருடன் இருக்கிறார்என்று எம்மாவுவின் இரு சீடர்கள் சாட்சி         சொல்கின்றனர்.
3. ஏசு உயிருடன் இருக்கிறார்என்று இரு வானவர்கள் சாட்சி சொல்கின்றனர்.
4. ஏசு உயிருடன் இருக்கிறார்என்று பெண்ணுக்கு அருகில் நின்ற இரு மனிதர்கள் சாட்சி சொல்கிறார்கள். (லூக்கா 24:4,5)
இத்தனை பேர்களும் சொன்னதைக் கேட்காத இவர்கள், தங்களின் தலைவர் ஏசு சொல்வதையாவது கேட்பார்களா? இனி வரும் தலைப்புகளில் பார்ப்போம்.
                                                              இன்ஷா அல்லாஹ்  தொடரும்......
0 comments

இயேசு இறை மகனா ? - தொடர் 15

பரிசுத்த ஆவி நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா?
இயேசு பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார் என்பதால் இயேசு கடவுளாகவும் கடவுளின் குமாரராகவும் கடவுளின் அம்சம் பெற்றவராகவும் ஆகி விட்டார் என்பதும் கிறித்தவர்களின் வாதம். இயேசுவிடம் பரிசுத்த ஆவி நிறைந்திருந்ததால் அவரைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் கிறித்தவர்கள் இன்னும் எத்தனையோ பேரிடம் பரிசுத்த ஆவி நிரம்பியிருந்ததாக பைபிள் கூறுவதை ஏன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை?

இதோ பைபிள் கூறுவதைக் கேளுங்கள்! இயேசுவுக்கு ஞானஸ்நானம் தந்து அவருக்கு குருவாகத் திகழ்ந்தவர் யோவான். அவரைக் குறித்து பைபிள் பின் வருமாறு கூறுகிறது.
"அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான். திராட்சை ரசமும், மதுவும் குடியான். தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருப்பான்." - (லூக்கா 1:15)
"அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்ட தீர்க்கதரிசனமாக..." - (லூக்கா 1:67)

இவ்விரு வசனங்களும் சகரியா அவரது மகன் யோவான் ஆகியோர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறுகின்றன. கிறித்தவர்கள் இவர்களைக் கடவுளர்களாக அல்லது கடவுளின் குமாரர்களாக நம்புவதில்லையே அது ஏன்?

"எலிசபெத்து, மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்ட பொழுது அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று. எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு..." - (லூக்கா 1:41)

யோவானும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்;
அவரது தந்தை சகரியாவும் ஆவியினால் நிரப்பப்பட்டவர்;
அவரது தாய் எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இப்படிப் பாரம்பர்யமாகப் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்களை மறப்பதும் அவர்களிடம் ஓரவஞ்சனையாக நடப்பதும் நியாயம் தானா? இயேசுவுக்குக் குருவாகவும் அவரை விட ஆறு மாதம் மூத்தவராகவும் இருந்த யோவானைக் கடவுளின் குமாரர் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லையே அது ஏன்?

இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது.
"பிசாசினால் அவர் சோதிக்கப்பட்டார்" - ( மத்தேயு 4:1-10)

இந்தச் சந்தர்ப்பத்தில் பரிசுத்த ஆவி அவரை விட்டு விலகி விட்டது என்று தெரிகின்றது. யோவானிடம் இயேசு வந்து ஞானஸ்நானம் பெற்ற பிறகு தேவ ஆவி அவர் மேல் இறங்கியதாகவும் மத்தேயு (3:16) கூறுகிறார். அப்படியானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்பது தெரிகின்றது. ஆனால் யோவான், தனது தாயின் வயிற்றிலிருக்கும் போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார். இப்போது யாரைக் கடவுளின் குமாரர் என்று சொல்ல அதிகத் தகுதி உள்ளது என்பதை கிறித்தவ அன்பர்கள் சிந்திக்கட்டும்.

                                                                                         இன்ஷா அல்லாஹ் 
தொடரும்....
0 comments

ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-9

ஏசுவின் மரணத்தில் யூதர்களின் சந்தேகம்

ஏசு மரணிக்கவில்லை                        ஆதாரம்:9
யூதர்களின் சந்தேகம்
இப்போது ஏசு, கல்லறையில்வைக்கப்பட்டு விட்டார். கல்லறை என்றதும் ஆறடி நீளம், இரண்டடி அகலம் என்று கற்பனை செய்ய வேண்டாம். அது பெரிய காற்றோட்டமானஅறை என்று சொல்லலாம்.
"கிறிஸ்து இறந்த அந்தநாள்' என்ற நூலில் ஏசுவின்கல்லறை 5 அடி அகலம், 7 அடி ஆழம், குறுக்கு வாட்டக் கம்புகள் கொண்ட அறை என்று ஜிம் பிஷப் என்பவர்குறிப்பிடுகின்றார்.
 குடிசை வாழ் மக்களுக்கு இது போன்ற இடங்கள் கிடைத்தால் மகிழ்ச்சியாகஏற்றுக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட விசாலமான அறையில் தான் ஏசு அடக்கம் செய்யப்படுகின்றார்.அடக்கம் செய்யப்பட்ட பின் யூதர்களுக்கு ஐயப்பாடும், அமைதியின்மையும் ஏற்படுகின்றது. ஏன்?
 1. கல்லறை மிக மிக அருகில்அமைந்திருந்தது.
2. அந்தரங்க சீடர்களின்உதவிகள்.
3. இன்னும் ஏசுவின்சிலுவைக் கூட்டாளிகள் உயிருடன் இருந்தது.
4. உடலைப் பெறுவதற்குபிலாத்தின் அவசர அவசரமான அனுமதி
 இத்தனையும் யூதர்களின் சந்தேகப் புயல்களைக் கிளப்பி விட்டன.உடனே அவர்கள் பிலாத்திடம் ஓடோடி வருகின்றார்கள்.
 மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும்பிலாத்திடம் கூடி வந்தார்கள்.
அவர்கள், "ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது"மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.
ஆகையால் மூன்று நாள் வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல்செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச்சென்றுவிட்டு, "இறந்த அவர்உயிருடன் எழுப்பப்பட்டார்' என்று மக்களிடம்சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையை விடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்'' என்றனர்   (மத்தேயு 27:62-64)
 ஆனால் அவர்கள் மறுநாள் அதாவது ஞாயிற்றுக் கிழமையன்று பிலாத்திடம்வந்து புகார் செய்கின்றார்கள். நீங்களே போய் காவல் காத்துக் கொள்ளுங்கள் என்று பிலாத்கூறி விட்டார்.
 இங்கே முந்தைய தவறு என்று யூதர்கள் குறிப்பிடுவது, ஏசுவின் காலை முறிக்காமல் சிலுவையிலிருந்துஇறக்க அனுமதித்ததைத் தான். கடைசித் தவறு என்று குறிப்பிடுவது கலலறையைச் சரியாக மூடாமல்விட்டதை!
அதாவது குதிரையைக் கட்டிப் போட்டு விட்டு, லாயத்தை மூடச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத்தெரியாது, குதிரை மாயமாகி விட்டதுஎன்பது! கடவுளின் இந்தத் திருவிளையாடல் அவர்களுக்குத் தெரியவில்லை.
வாரத்தின் முதல் நாள்! ஞாயிற்றுக்கிழமை முதன் முதலில் மகதலாமரியா மட்டும் வருகிறாள்.
 வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்புஅவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார்.
                                                                                                       மாற்கு 16:9
 எதற்காக அவள் அங்கு சென்றாள்?
 ஓய்வுநாள் முடிந்ததும் மகதலா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமி என்பவளும் அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக் கொண்டு,
                                                                                                       மாற்கு 16:1
 பர் ஹய்ர்ண்ய்ற் ட்ண்ம் - அவருக்கு சுகந்த வர்க்கமிடுவதற்காக!
இது உயிருள்ளவர்களைக் குறிக்கும் சொல்! இதற்கு எபிரேய மொழியில்மஸஹ், தடவுதல், மஸாஜ் செய்தல், தேய்த்து விடுதல் என்று பொருள்.
இறந்தவரின் உடலில் மூன்று நாளுக்குப் பிறகு தேய்த்து விடக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யூத,கிறித்தவர்கள் இதுபோன்று செய்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது முஸ்லிம்கள் இப்படிச் செய்வார்களா? எவருமே இப்படிச் செய்வதில்லை.
 அப்படியானால் மக்தலா மரியா என்ற யூதப் பெண் இறந்து போனவரின்(ஏசுவின்) உடலுக்கு 3 நாளுக்குப் பிறகுஎதற்காக நறுமணப் பொருள் தேய்த்து விட வருகின்றார்?
 இறந்தவரின் உடல் இறந்து போன சிறிது நேரத்தில் விறைத்துப் போகத்தொடங்கும். மூன்று நாட்கள் ஆகி விட்டால் உடலில் திசுக்கள் உடைந்து, உடல் பொங்கி, நாற ஆரம்பித்து விடும்.
 இப்போது தேய்த்தால் என்ன வரும்? சதை துண்டு துண்டாகப் பிய்த்துக் கொண்டு வரும்.எனவே மூன்று நாட்களுக்குப் பிறகு தேய்த்தல் என்பது அர்த்தமற்ற செயல்!
 ஆனால் அதே சமயம் உயிருள்ள ஒருவரை தேய்த்து விடுதல் என்று சொன்னால்ஒரு அர்த்தமிருக்கும். அது தான் இங்கு நடக்கின்றது.
ஏசுவுக்கு இறுதிச் சடங்கு செய்தவர்கள், அரிமேத்திய ஊரைச் சார்ந்த யோசேப், மகதலா மரியா போன்றவர்கள் தான்.
 அவர்களில் ஒருவரான மகதலா மரியா தான் 2 இரவுகள், ஒரு பகல் கழித்து யூதர்களின் புனித நாளான சனிக்கிழமைக்குப் பின்ஏசுவைக் கவனிப்பதற்காக வருகின்றார். அங்கு வந்த போது தான் அவருக்கு ஓர் அதிர்ச்சியும்ஆச்சரியமும் காத்திருக்கின்றது.
 ஏசுவுடைய கல்லறைக் கல் அகற்றப்பட்டிருந்தது. அவருடைய மேனியில்கிடந்த துணி உள்ளே சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்தநறுமணப் பொருள்கள் எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;
 கல்லறை வாயிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.
 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்தஇருவர் அவர்களுக்குத் தோன்றினர்.
இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் அப்பெண்களை நோக்கி,"உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?'' (என்று கேட்டனர்-   லூக்கா 24:1-5
 பேதுரு எழுந்து கல்லறைக்கு ஓடினார். அங்கு அவர் குனிந்துபார்த்தபோது உடலைச் சுற்றியிருந்த துணிகளை மட்டுமே கண்டார்; நிகழ்ந்ததைக் குறித்துத் தமக்குள்வியப்புற்றவராய்த் திரும்பிச் சென்றார்.
                                                                                                           லூக்கா 24:12
 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர்விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.
அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனிவெண்மை போன்றும் இருந்தது.
அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர்போலாயினர்.
அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, "நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள்என எனக்குத் தெரியும்.
அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்.அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.
நீங்கள் விரைந்து சென்று, "இறந்த அவர் உயிருடன்எழுப்பப்பட்டார்'' எனச் சீடருக்குக்கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கேநீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்'' என்றார்.   மத்தேயு28:2-7
 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார்என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.
                                                                                                          லூக்கா 24:23
 இயேசு உயிரோடு இருக்கிறார் (ஆப்ண்ஸ்ங்) என்று தான் வானவர்கள்கூறுகிறார்கள். உயிர் பெற்று எழுந்தார் என்று சொல்லவில்லை.
 இது பல கேள்விகளை எழுப்புகிறது.
 கல் ஏன் அகற்றப்பட்டது?மரணத்தை வென்றவர் என்றால் ஆவியாக வெளியேற வேண்டும். ஆவி வெளியேறுவதற்குக் கல் ஏன்அகற்றப்பட வேண்டும்? ஓர் ஆவி வெளியேறவேண்டும் என்றால் அதனுடைய உடலில் கிடந்த துணி ஏன் நீக்கப்பட வேண்டும்?
 கற்கோட்டையின் சிறைச்சாலையோ, இரும்புக் கம்பியினால் ஆன கூண்டுகளோ ஆவியைத் தடுத்து நிறுத்தமுடியாத போது இந்தக் கல்லறைக் கல் எம்மாத்திரம்?
 அப்படியானால் ஏசுவை யாரும் கடத்தியிருக்க வேண்டும் என்று மகதலாமரியா அழுகின்றார். அதை ஏசு - வானத்திலிருந்து அல்ல - அருகில் நின்று கவனித்துக் கொண்டுஇருக்கிறார்.
 இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார்.மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால்எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார்.
                                                                                                      யோவான் 20:15
 தோட்டாக்காரர் வேடத்தில்...
ஏசுவுக்கு அவள் யாரென்று நன்கு தெரியும். அவள் யாரைத் தேடுகிறாள்என்பதும் ஏசுவுக்குத் தெரியும். தன்னைக் காணவில்லை என்பதற்காகத் தான் அவள் அழுகின்றாள்என்பதும் தெரியும். தான் ஒரு தோட்டக்காரர் போல் காட்சியளிப்பதால் அவளால் அடையாளம் காணமுடியவில்லை என்றும் ஏசுவுக்குத் தெரியும். இருப்பினும் இப்படி ஒரு கேள்வி எதற்கு? ஒரு சின்ன விளையாட்டு காட்டுவதற்காகத் தான்.
 மகதலா மரியா அவரை ஏன் தோட்டக்காரர் என்று நினைக்க வேண்டும்? உயிர்த்தெழுந்து வந்தவர்கள் தோட்டக்காரர்போலவா காட்சியளிப்பார்? ஒருபோதும்கிடையாது.
 அவள் ஏசுவைத் தோட்டக்காரர் என்று எண்ணியதற்குக் காரணம், அவர் தோட்டக்காரர் வேடத்தில் இருந்ததால் தான்.அவர் ஏன் தோட்டக்காரர் தோற்றத்தில் காட்சியளிக்க வேண்டும்? காரணம், அவர் யூதர்களைக் கண்டு பயப்படுவதால்! அவர் ஏன் யூதர்களைக் கண்டுபயப்பட வேண்டும்? காரணம் அவர் இறக்கவில்லை.
 அவர் இறந்திருந்தால்,அவர் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. காரணம், உயிர்த்தெழுந்தவர் மீண்டும் இறக்க மாட்டார்.இவ்வாறு பைபிள் தான் கூறுகின்றது.
 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித்தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி.
                                                                                                        எபிரேயர் 9:27
 பத்திரிகைகளில்,"இறந்தவர் உயிருடன் திரும்பினார்' என்று செய்தி வெளியிடுவார்கள். அதாவது இறந்துவிட்டார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள்;டாக்டர் சான்றிதழ் அளித்திருப்பார்; ஆனால் அவர்தெய்வாதீனமாகப் பிழைத்திருப்பார். அந்தச் செய்தியை சாதாரணமாகப் போட்டால் அதற்கு ஒருவிறுவிறுப்பு இருக்காது. அதனால், "இறந்தவர்'' உயிருடன் திரும்பினார் என்று வெளியிடுகின்றன.அதாவது அவர் உண்மையில் இறக்கவில்லை என்பதை இந்தக் கொட்டேஷன் மூலம் தெரிவித்து விடுகின்றன.
 பிணத்திற்கு அவர் என்று சொல்வதுண்டா?
இப்போது மகதலா மரியாவின் உரையாடலுக்கு வருவோம்.
இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?'' என்று கேட்டார்.மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால்எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்'' என்றார்.
                                                                                                 யோவான் 20:15
 ஐண்ம் அவரை, அவரை எங்கேஎன்று மகதலா கேட்கிறாள். ஏசுவின் உடலை மகதலா கேட்கவில்லை. காரணம் இறந்தவரின் உடலை ஒருபெண் தனியாகச் சுமக்கவும் முடியாது என்பது மகதலா மரியாவுக்கு நன்றாகவே தெரியும். அதனால்அவள் கேட்டது, உயிருடன் உள்ள ஏசுவைத்தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.
இப்போது ஏசு, "மரியா' என்று அழைக்கிறார்.
 இயேசு அவரிடம், "மரியா'' என்றார். மரியா திரும்பிப்பார்த்து, "ரபூனி'' என்றார். இந்த எபிரேயச்சொல்லுக்கு "போதகரே'' என்பது பொருள்.
இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள்தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்'' எனச் சொல்'' என்றார்.
                                                                                                         ஜான் 20:16, 17
 இந்த அழைப்புக் குரல் யாருக்குச் சொந்தம் என்பதை மரியா புரிந்துகொள்கிறாள். உடனே ரபூனி என்று அழைக்கிறாள். ஆர்வத்தில் அவரைத் தொட முயற்சிக்கிறாள்.அப்போது ஏசு, அதற்கு மேற்கண்டவாறுகூறுகிறார். இவ்வாறு அவர் கூறுவதற்குக் காரணம்,உடல் மற்றும் மன ரீதியான காயங்கள் தான்.
 அதாவது, நான் இன்னும்மரணிக்கவில்லை. ஆவியாக எழுந்து வரவில்லை. திரும்பத் தான் வந்திருக்கிறேன் என்று குறிப்பிடுகின்றார்.
"நான் இன்னும் என்தந்தையிடம் செல்லவில்லை' என்றும்கூறுகிறார். இது யூதர்களின் வழக்கப்படி,"நான் இன்னும் மரணிக்கவில்லை' என்றே பொருள்.
இதுவரை நாம் கண்ட விளக்கங்கள் அனைத்துமே, ஏசு இறக்கவில்லை, அவர் இறந்து மறுபடி உயிர் பெற்று வரவில்லை.கல்லறையில் உயிருடன் தான் இருந்தார். அதே உயிருடன் தான் எழுந்து வந்திருக்கின்றார்என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றன.
                                           இன்ஷா அல்லாஹ் தொடரும்...
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger