Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அல்குர் ஆன் இறைவேதமே. Show all posts
Showing posts with label அல்குர் ஆன் இறைவேதமே. Show all posts

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி! ! ! !

இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை 
மற்றவர்களுக்கும் அதிகம் தெரியப்படுத்தவும் முடிந்தால் ஷேர் பன்னவும்
 
 1898ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. 

தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது.

மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகைல் தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது ! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகைல்.
 
சிந்தனையில் மோரிஸ் புகைல்!
 
திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது.

தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா?என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்?
பைபிளில் தேடினார்மோரிஸ் புகைல். பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.
 
 ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில்பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)
 
இவ்வுடல் பாதுகாக்கப்படும்  என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.
 
ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகைல் சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்றகுர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகைல் அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார்.அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்துகடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக்காட்டினார். அவ்வசனம்
 
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்(அல்-குர்ஆன் 10: 92)
 
இவ்வசனம் மோரிஸ் புகைல் அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அங்கு கூடியிருந்தவார் களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார் ! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!
 
கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக் கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது!
 
திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக்கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர்.

திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவுஉண்மை!
 
"நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்ப ற்றி அலட்சியமாக இருக்கின்றார்கல் " (அல்-குர்ஆன் 10:92)
0 comments

அல்குர்ஆன் விடுக்கும் அறைகூவல்....!!

பிறப்பு இறப்பு அடிப்படையில் யாருக்கும் நினைவு நாட்கள் எடுப்பது இஸ்லாத்தில் 
கிடையாது. இஸ்லாம் ஒரு போதும் அதை ஆதரிக்கவும் இல்லை. 

ஆனால் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் இஸ்லாம் நினைவு நாளை எடுக்கின்றது. 
அது தான் புனித குர்ஆன் இறங்கிய நாள். 

அந்நாள் இப்போது நம்மை ஆரத் தழுவி அரவணைத்து நிற்கின்ற ரமளான் மாதத்தில் 
அதிலும் குறிப்பாக பிந்திய 10 நாட்களில் அமைந்திருக்கின்றது. 

அந்த ஒரு நாள் புனித ரமளானில் அமைந்திருப்பதால் அல்லாஹு தஆலா அம்மாதம் 
முழுவதும் தன் அடியார்களை நோன்பிருக்கும் படி கட்டளையிடுகின்றான். 

அதன் கடைசி பத்தில் அமைந்திருக்கும் லைலத்துல் கத்ர் என்ற குர்ஆன் இறங்கிய அந்நாள் இரவில் நின்று வணங்குவோருக்கு ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கியதை விட 
அதிகமான நன்மைகளைப் பரிசாக வழங்குகின்றான். 

குர்ஆன் இறங்கிய நோக்கமே மனிதர்களை சுவனத்திற்குக் கொண்டு செல்வதற்காகத் தான். அதனால் தான் குர்ஆன் இறங்கிய இந்த மாதத்தில் "சிம்பாலிக்காக' அல்லாஹ் சுவனத்தைத் திறந்து வைத்து நரகத்தை அடைத்து விடுகின்றான். 

இது எல்லாம் வல்ல அல்லாஹ் குர்ஆனுக்கு அளிக்கும் மதிப்பும், மாண்புமாகும். குர்ஆன் இறங்கியதையொட்டி ரமளான் மாதத்தின் இரவுகளில் குர்ஆனின் வசனங்கள் 
அல்லாஹ்வின் வீடுகளிலும் அவனை நம்பிய அடியார்களின் வீடுகளிலும் 
ரீங்காரமிடுகின்றன. 

வேதம் என்றால் மனிதனின் இறுதிச் சடங்கில் ஓதப்படும் மந்திரச் சொற்கள் என்ற 
நிலையை மாற்றி மக்களின் ஐந்து நேரத் தொழுகைகளிலும் அவர்களின் அன்றாட 
வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அதிலும் குறிப்பாக ரமளான் மாதத்தில் ஆட்சி 
செய்யும் இயந்திரமாக இக்குர்ஆன் திகழ்கின்றது. 
"தான் ஓர் உயிரோட்டம் மிக்க வேதம்' என்று இதன் மூலம் உலகுக்குப் பறை சாற்றுகின்றது.

வேதங்கள் எத்தனையோ உள்ளன; அவற்றில் இந்தக் குர்ஆனும் ஒன்று என்று தன்னைக் 
கண்டு கொள்ளாமல் செல்வோருக்கு அது விடுக்கும் அறைகூவல் இதோ! 

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:23) 

"இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? 
"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது 
போன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 11:13) 

"இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:88) 

"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவ்விரண்டை விட நேர் வழி காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்! அதைப் பின்பற்றுகிறேன்'' என்று கூறுவீராக! 
(அல்குர்ஆன் 28:49) 

அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும். (அல்குர்ஆன் 52:34) 

குர்ஆனிலுள்ள பத்து அத்தியாயங்கள் அல்லது ஓர் அத்தியாயம் அல்லது ஒரேயொரு வசனத்தைக் கூட 14 நூற்றாண்டுகளாக மனித சமுதாயம் கொண்டு வர முடியவில்லை. 

காரணம் இது அல்லாஹ்வின் வேதமாகும். இந்தக் குர்ஆன் மனிதர்களை சிந்திக்கத் தூண்டுகின்றது. வேதமென்றால் அதற்குப் பல இலக்கணங்கள் இருக்க வேண்டும். 

ஒருபோதும் அதில் முரண்பாடு இருக்கக் கூடாது. பொய் இருக்கக் கூடாது. கற்பனை, கலப்படங்கள் இருக்கக் கூடாது. அது தெரிவித்த முன்னறிவிப்புகள் பலிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அது இறை வேதம் தான் என்பதற்கு உடைக்க முடியாத சான்றுகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். 

திருக்குர்ஆன் அப்படிப் பட்ட சான்றுகளைக் கொண்டிருக்கின்றதா? என்று கேட்டால் 
நிச்சயமாக பல்லாயிரக்கணக்கான சான்றுகளைக் கொண்டிருக்கின்றது என்று அடித்துச் சொல்லலாம். 

இதற்கு உதாரணமாக அறிவியல் சான்றுகளைக் குறிப்பிடலாம். அந்த அறிவியல் 
சான்றுகளைப் பார்க்கும் போது எந்தக் கொம்பனாலும் இதை மனிதச் சொல் என்று ஒரு போதும் கூற முடியாது.

இந்த வேதத்தை எதிர்த்து எந்த வித்தகனும் வந்ததில்லை. இனி வரப் போவதுமில்லை. 

அல்குர்ஆனின் இந்த அறைகூவலை எவராலும் எதிர் கொள்ள முடியாது. எனவே இது 
இறை வேதம் தான் என்ற நம்பிக்கை இதன் மூலம் மேலும் பலப்படும். 

இந்த உண்மையான வேதம் கூறும் மறுமை வாழ்க்கைக்காக நாம் என்ன முற்படுத்தியிருக்கின்றோம் என்று சிந்திப்போமாக!

நன்றி - சங்கை அப்துல் அஜீஸ்
0 comments

நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிரி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக்கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்''
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலிரி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மிக முக்கியமான ஒரு வழிமுறையை நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

அதாவது நம்முடைய பாத்திரங்களில் நாய் வாய் வைத்து விட்டால்
#அந்த நீரைக் கொட்டி விட வேண்டும்.
#அந்தப் பாத்திரத்தை ஏழு தடவைகள் தண்ணீரால் கழுக வேண்டும்.
#முதல் தடவை கழுவும் போதே அல்லது எட்டாவது தடவை கழுவும் போதோ மண்ணினால் கழுக வேண்டும்.

இது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் வழிமுறை என்பது மட்டுமில்லை. இஸ்லாம் ஒரு மதமல்ல . அது மனிதனுக் கேற்ற மார்க்கம் என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாகத் திகழ்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப் பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள்.
இவ்வாறு ஏன் கட்டளையிட்டார்கள்? நாய் வாய் வைத்தால் என்ன ? மண்ணை வைத்து ஏன் கழுக வேண்டும்? விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதரின் இந்தப் போதனை சரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.
நபியவர்கள் வழிகாட்டுதல் நூறு சதவிகிதம் சரியானதே என்று இன்றைய நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்றது.


நாயின் உமிழ் நீர்
-----------------------
நபி (ஸல்) நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். தண்ணீரில் நாய் வாய் வைத்தால் அதனுடைய எச்சில் தண்ணீரிலே கலக்கின்றது. நாயின் எச்சிலில் மனிதனுக்கு அபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வைரஸிற்கு ரேபிஸ் என்று பெயர்.
நாயின் உமிழ் நீரில் உள்ள இந்த ரேபிஸ் வைரஸ்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை நாம் அருந்துவதின் மூலம் நம்முடைய உடலிற்குள் சென்று விடுகின்றது.
அல்லது நம்முடைய உடலில் காயம் பட்ட இடத்தில் நாயின் உமிழ் நீர் பட்டாலோ, அல்லது நாய் வாய் வைத்த தண்ணீரை வைத்து நம்முடைய உடலை சுத்தம் செய்யும் போது நம்முடைய உடலில் உள்ள காயங்களின் மூலம் இந்த வைரஸ் நம்முடைய உடலிற்குள் செல்கிறது.
இதன் மூலம் ஏற்படும் நோய்க்கு ரேபிஸ் நோய் என்று பெயர்.
இந்த ரேபிஸ் வைரஸ் காயம் பட்ட இடத்தில் படிந்தவுடன் தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அப்படிப்பட்ட காரணிகளாவன.

காயம் பட்ட இடம் • காயம் பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு • வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை • பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

இந்த ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 லி 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி ரேபிஸ் பைரஸ் படிந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பொதுவாக ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர் தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.

ஒரு மனிதனை நாய்கள் கடிக்கும் போதும் இந்த ரேபிஸ் கிருமிகள் உடலிற்குள் செல்வதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்
--------------------------------------------------------------------

. இந்த பயங்கரமான நோய்களிலிருந்து நம்மை பாது காத்துக் கொள்ளக்கூடிய வழிமுறை நம்முடைய வீடுகளில் நாய்களை வளர்க்காமல் இருப்பதும் நாய் வாய் வைத்த எந்த ஒரு பொருளையும் சாப்பிடாமல் இருப்பதும் தான்.. இதோ அன்றே நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்;
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ''வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பி வைத்து, அது (பிராணிகளைக்) கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். (அந்தப் பிராணியை) நாய் சாப்பிட்டுவிட்டிருக்குமானால் அதை நீங்கள் சாப்பிடாதீர்கள். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவே வைத்துக்கொண்டுள்ளது'' என்று கூறினார்கள். நான், ''எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும்போது) அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?)'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், நீ சாப்பிடாதே. ''நீங்கள் உங்கள் நாயைத்தான் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனப்பவில்லை'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் : புகாரி (175)

நாய்களுக்குப் பயிற்சி அளித்து வேட்டையாட அனுப்பினால் அந்த நாய் வேட்டையாடப் பட்ட பிராணியை தன்னுடைய பற்கள் நன்றாகப் பதியுமாறு கடிக்காது. இதன் காரணமாக நாயின் உமிழ் நீரிலுள்ள நோய் கிருமிகள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிற்குள் செல்வதற்கு சாத்தியமில்லை.
அதே நேரத்தில் அந்த நாய் வேட்டையாடப்பட்ட பிராணியை சாப்பிட்டிருந்தால் அதை நாம் சாப்பிடக்கூடாது என நபியவர்கள் தடை விதிக்கிறார்கள்.
மேலும் பயிற்சி அளித்த நாயுடன் வேறொரு நாய் இருந்து எது வேட்டையாடியது என்ற சந்தேகம் ஏற்பட்டால் கூட நபியவர்கள் அதனை சாப்பிடக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள்.
பிஸ்மில்லாஹ் கூறவில்லை என்ற காரணத்தை நபியவர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் அதில் மேலும் பல நன்மைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
மனித குலத்தின் நன்மைக்காக நபியவர்கள் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி) நூல் : புகாரி (3225)

பாது காப்பிற்காவும் , வேட்டைக்காகவுமே தவிர நாய்களை விற்பதையும் , வாங்குவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூரியை)யும் தடைசெய்தார்கள்; வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபீ ஜுஹைஃபா (ரலி) நூல் : புகாரி (2086)

பாத்திரங்களை மண்ணால் ஏன் சுத்தம் செய்ய வேண்டும்.?
----------------------------------------------------------------

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7 தடவைகள் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்யுமாறு கூறிவிட்டு ஒரு தடவை மண்ணாலும் கழுக வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நபியவர்களின் இந்த வழிமுறையும் மிகவும் அறிவுப் பூர்வமானது. மனிதனுக்கு நன்மை தரக்கூடியது என்பதை இன்றை நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது.

நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும் நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.

பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பல முறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.

கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்து விடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்த கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.

நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து விஞ்ஞானம் கூறக்கூடிய ஒரு செய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும் விஷயங்களையெல்லாம் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் நிச்சயமாக இந்த வார்த்தைகள் முஹம்மத் அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல.
உண்மையான ஏக இறைவனிடமிருந்து பெற்று அறிவித்த வார்த்தைகள் தான். உண்மையில் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம்.
திருக்குர்ஆன், மற்றும் திருநபி வழி நடப்பதில்தான் உண்மையான வெற்றியிருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோமாக.


நன்றி - முக நூலில் படித்து --

அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்'
0 comments

பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும்


பிர் அவ்னின் உடலும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளரின் உறுதியான கருத்தும்

1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது.

இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.

தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார்.

பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது.

உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார்.

அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே”

என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.

prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான்.

அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.

பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம் புகழ்ளுக்குரிய அர்ரஹ்மான்
அல்ஹம்து லில்லாஹ்...
நன்றி - tntjmvl 
0 comments

அல் குர் ஆன் இறைவேதம் என்பதற்கான அறிவியல் சான்றுகள்

அல் குர் ஆன் இறைவேதமே என்பதற்கான அறிவியல் சான்றுகள்

பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது -2:22, 21:32, 40:64, 52:5
பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு - 86:11
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன - 4:56
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் - 6:125
பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும் - 2:36, 7:24, 7:25
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம் - 16:79, 67:19
விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது - 17:37
பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6
பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30
கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14
நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18
கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது - 25:53, 27:61, 35:12 55:19,20
காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12
வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41,13:2, 31:10, 22:65
பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40
பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11.
மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன - 6:98, 50:4, 71:17
விண்வெளிப் பயணம் சாத்தியமே - 55:33-35
விரல்ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4
உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2
தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது - 16:69
கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன - 24:40
அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம்வரை ஏற்றுக் கொள்ளும் - 13:8
பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில்தான் உள்ளன - 96:15
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும் - 51:41,42
கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32
விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7
வான்வெளியிலும் பாதைகள் உண்டு - 51:7
பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது - 13:2, 31:10
சூரியனும் கோள்களும் ஓடுகின்றன - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5
சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது - 54:2
வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது - 51:47
உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49
உலக வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் - 13:41, 21:44
வான்மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43
அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32
"இருள்கள்' என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலைநீளம் உண்டு என்பதையும்,நிறத்திற்கு நிறம் அலைநீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது. - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11
பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு- 2:259
குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50
ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42
இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது - 57:25
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32
பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துதல். - 41:9,10
நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66
மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31
வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12மாதங்கள்தான் என்று அறிவித்தது - 9:36
கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153
மரபணுக்கள் வழிவழியாக தொடரும் - 7:172
சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரிலேடிவிடி (Relativity) எனும் சார்பியல் கோட்பாடு - 22:47, 32:5
மனிதன் குரங்கில் இருந்து படைக்கப்படவில்லை - 2:30, 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14
மனிதர்களை மூக்கு தான் சரியாக அடையாளம் காட்டும் - 68:16
பூமி பல அடுக்குகளைக் கொண்டது என்பதை துரப்பணக் கருவிகள் இல்லாத காலத்தில் கூறிய திருக்குர்ஆன் - 65:12
தண்ணீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும் சேய்க்கும் நல்லது - 19:24
குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே - 75:39

நன்றி - onlinepj.com 
0 comments

எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபி

அல்குர் ஆன் இறைவேதமே என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி ......

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதப்படிக்க அறிந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும்'' என்று படித்தவர்கள் தங்கள் பங்குக்கு இட்டுக்கட்டிக் கூறி வருகின்றனர்.
படிப்பறிவைக் கொண்டே மனிதர்களின் தகுதிகள் வரையறை செய்யப்படும் காலத்தில் இவர்கள் வாழ்வதால், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படிக்காதவர்கள்'' என்று சொல்ல இவர்கள் கூச்சப்படுகிறார்கள்.
இவ்வாறு கூறினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று கருதிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும் என்று வாதிட்டு வருகின்றனர். 
இதற்கு ஆதரவாகச் சில சான்றுகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்தச் சான்றுகள் சரியானவை தாமா என்பதை ஆய்வு செய்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது உண்மையில் தகுதிக் குறைவு தானா? என்பதை ஆராய்வோம்.
படிப்பறிவு இல்லாதிருப்பது பொதுவாக தகுதிக் குறைவாகவே கருதப்பட்டாலும் நபிகள் நாயகத்துக்கு இது தகுதிக் குறைவை ஏற்படுத்தாது. ஏனெனில், தகுதிக் குறைவாகக் கருதப்படும் சில விஷயங்கள் சில இடங்களில் தகுதியை அதிகப்படுத்தக் கூடியதாக அமைந்து விடும்.
படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.
எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இதுபோல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று தான் மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பது தான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும். 
அவர்கள் எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் என்பதை நிரூபிக்க அல்லாஹ் ஏற்படுத்திய நிலை தான் இந்தத் தகுதிக் குறைவு.
"எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத் தான் இருக்க முடியும்'' என்று அன்றைய மக்கள் நம்புவதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மை தான் முக்கியக் காரணமாக இருந்தது.
இதை நாம் கற்பனை செய்து கூறவில்லை. திருக்குர்ஆன் 29:48 வசனத்தில் அல்லாஹ்வே இவ்வாறு தான் கூறுகிறான். "வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்'' என்ற வாசகத்தைச் சிந்திப்பவர்கள் இதைச் சந்தேகமற அறியலாம். 
வேறொரு சிறப்பை அவர்களுக்கு அளிப்பதற்காக இதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கவில்லை என்று இவ்வசனம் (29:48) இரண்டாவது கருத்துக்கு இடமின்றி அறிவித்து விடுகிறது.
நபிகள் நாயகத்துக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறது.
திருக்குர்ஆன் 7:157,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "உம்மீ' என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர்.
இது முன்னோர்களின் கட்டுக்கதை. அதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர். (திருக்குர்ஆன் 25:4,5)
இந்தக் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) இட்டுக் கட்டியதாக அவர்கள் கூறினார்கள். மேலும், பலர் இதற்கு உதவியாக இருந்ததாகவும் கூறினார்கள். அப்படிக் கூறும் போது கூட நபிகள் நாயகம் (ஸல்) தாமாக எழுதிக் கொண்டார்கள் எனக் கூறாமல் மற்றவர்களை வைத்து எழுதிக்கொண்டார்கள் எனக் குறிப்பிட்டனர். நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியாது என்பது அந்த மக்களுக்கும் நன்றாகத் தெரிந்த காரணத்தினால்தான் எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொண்டார் என்று கூறினார்கள்.
"கதப' என்றால் எழுதினான் என்பது பொருள். "இக்ததப' என்றால் ஒருவரிடம் சொல்லி எழுத வைத்தான் என்பது பொருள். மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தில் "இக்ததப' என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக 29:48 வசனம் அமைந்துள்ளது.
இதற்கு முன்னரும் எந்த நூலில் இருந்தும் நீர் வாசித்ததில்லை; இனியும் உமது வலக்கரத்தால் எழுத மாட்டீர் என்று திட்டவட்டமாக இவ்வசனம் அறிவிக்கிறது.
உமது வலக்கரத்தால் எழுதிக் கொண்டும் இருந்ததில்லை என்று சிலர் தமிழாக்கம் செய்திருப்பது தவறாகும். "வலாதஹுத்து' என்பது எதிர்கால வினைச் சொல்லாகும். இனியும் எழுத மாட்டீர் என்பதே இதன் நேரடியான சரியான மொழிபெயர்ப்பாகும்.
நபியாக ஆவதற்கு முன்பும் எழுதவில்லை. இனியும் எழுத மாட்டீர் என்று அல்லாஹ் அறிவித்து விட்டதால் "நபியாக ஆன பின்பு எழுதப்படிக்க அறிந்திருக்கக் கூடும் அல்லவா?'' என்று சிலர் வாதம் செய்வது தவறு என்பது நிரூபணமாகின்றது.
நபிகள் நாயகத்திற்கு எழுதப் படிக்கத் தெரியும் எனக் கூறுவோர் பின்வரும் நிகழ்ச்சியையும் சான்றாகக் காட்டுவார்கள்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்' என்று எழுதப்பட்டதை எதிரிகள் மறுத்தனர். அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் ஏற்றுக் கொண்டால் தான் நமக்கிடையே எந்த விவகாரமும் இல்லையே எனக் கூறினார்கள். இதை ஏற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்பதை அழித்து விட்டு "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்'' என்று எழுதச் சொன்னார்கள். நபித்தோழர்கள் யாரும் நபிகள் நாயகத்தின் பெயரை அழிக்க முன்வரவில்லை. உடனே நபிகள் நாயகம் (ஸல்) ஒப்பந்தத்தில் எழுதப்பட்ட தமது பெயரை அழித்தார்கள். (பார்க்க: புகாரி 2500, 2501, 2947, 3920)
நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரிந்தால் தான் தமது பெயரைக் கண்டு பிடித்து அழித்திருக்க முடியும் என்றும் வாதிடுகின்றனர். எழுதத் தெரியாது என்று தெளிவான சான்றுகள் இவ்வளவு இருக்கும் போது சுற்றி வளைத்துக் கொண்டு ஆதாரம் காட்டுகின்றனர்.
இவர்களின் வாதம் தவறு என்று புகாரி 3184 ஹதீஸ் மறுக்கின்றது. "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்ததால் "அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்'' என்பதை அழித்து விட்டு "அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்'' என்று எழுதுமாறு அலீ (ரலீ) அவர்களுக்கு கட்டளையிட்டனர்; அலீ (ரலீ) அவர்கள் அழிக்க மறுத்து விட்டனர்; "அப்படியானால் அந்தச் சொல் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள்'' என்று அலீ (ரலீ) அவர்களிடம் கேட்டனர். அலீ (ரலீ) அவர்கள் அந்த இடத்தைக் காட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் அழித்தனர்'' என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகிறது. 
எழுதத் தெரியாமல் இருப்பது பொதுவாக தகுதிக் குறைவு என்றாலும் அதுவே நபிகள் நாயகத்திற்கு மட்டும் சிறப்பான தகுதியாகும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி - onlinepj.com 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger