Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்புகள். Show all posts
Showing posts with label இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்புகள். Show all posts

அலர்ஜியைத் தடுக்கும் மீன்

மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: - விஞ்ஞானிகள் தகவல்! 
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்! 
திருக்குர்ஆன் 16:14  
கடந்த வார உணர்வு இதழில், “சைவ, அசைவ உணவுகள் - ஓர் ஒப்பீடு” என்ற தலைப்பில் சைவ உணவுகளை வெறுத்து அசைவ உணவுகளை மட்டுமே ஒருவர் உட்கொண்டால் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி  நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. 
குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. 
அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். 
உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும்.
 மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது. 
மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
onlinepj.com
0 comments

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை

எதிரிகளால் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம்!! 

பெண்களைப் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தடுக்க குட்டைப்பாவாடை மற்றும் உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய லெகின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு பெய்ஜிங்கில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கின. அந்தப் புகார்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், புகார்கள் குறைந்தபாடில்லை. அந்தப் புகார்களைப் பெற்றுக்கொண்ட காவல்துறை பெண்கள் அதிக அளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது. 

பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே சீனப் பெண்களுக்கு சீனப் போலீசார் விடுத்த எச்சரிக்கை.

 பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் இருக்க குட்டைப்பாவாடை, உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் உடைகள், மார்பு தெரியும் பனியன்கள், உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கின்ஸ் பேன்ட் போன்றவற்றை அணியக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

அரசுப்பேருந்துகள் பாதியளவுக்கு உயரமாகவும் இன்னொரு பாதி தாழ்வாகவும் அமைந்துள்ளன. உயரமான பகுதியில் பெண்கள் அமரும் தாழ்வான பகுதியில் உள்ள ஆண்கள் பெண்களின் தொடைகளையும் அதைத் தாண்டியும் செல்போனில் படம் எடுக்கின்றனர். பார்த்து ரசிக்கின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக அரசுப் பேருந்துகளில் உயரமாக உள்ள பேருந்தின் பின்புறத்தில் பெண்கள் அமரக் கூடாது; தாழ்வாக உள்ள  முன்புறத்தில் தான் அமர வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது. 

இதே போல மாடிப் பேருந்துகளில் உள்படியில் நிற்கும் பெண்களை கீழ்தளப்பேருந்தில் இருந்து ஆபாசமாக செல்போனில் படம் பிடிப்பபதைத் தவிர்க்க உள்படியில்  பெண்கள் நிற்க்க் கூடாது எனவும் சீன காவல்துறை எச்சரித்துள்ளது. 

இதைப் பிரசுரமாக அச்சிட்டு பேருந்துகளிலும், பொது இடங்களிலும் ஒட்டி உள்ளனர். 

அரைகுறை ஆடை அணிந்து செல்லும் பெண்களை தவறான முறையில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க தங்கள் உடல்களை பெண்கள் அவரவர் கொண்டு செல்லும் பத்திரிகைகள் மற்றும் கைப்பைகளை வைத்து மறைத்துக் கொள்ளுமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இதுபோல ஆஸ்திரேலியாவில் குட்டைப்பாவாடை அணிந்து சென்ற மாணவிகள் பேருந்தில் ஏறுவதை பேருந்துப் படிகளில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த பேருந்து ஓட்டுநரை ஆஸ்திரேலியப் போலீசார் கைது செய்து வழக்குத்தொடர்ந்து அவருக்கு 7மாத சிறைத்தண்டனை கொடுத்த சம்பவமும் சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதுபோல "அரியானாவில், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணியத் தடை விதிக்க வேண்டும்' என, மாநிலக் கல்விக் குழு அதிகாரியை, அம்மாநிலத்தின் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டது. 

திருமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தவும் ஜீன்ஸ் அணியவும் தடைவிதிக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்திய சம்பவமும் சென்ற வாரம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத்திற்கு முன் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அனுமதிக்கக் கூடாது என மத்தியப் பிரதேச பா.ஜ.க. துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா கடந்த வாரம் மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். 

மாணவர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாலேயே பெரும்பாலான அச்சுறுத்தல்களும், குற்றங்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார். 

அவருக்கு கண்டனக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் பறந்தன. 

பெண்கள் கவர்ச்சி ஆடை அணிவது கூடாது; அதனால் ஆண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து மோலோங்கியதோடு மட்டுமல்லாமல் ஜவுளிக்கடையில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகளுக்குக்கூட கவர்ச்சி ஆடை அணிவித்து ஆடவர்கள் கண்களில் படுமாறு வைக்க எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

 மும்பை மாநகராட்சியின், 121வது வார்டு உறுப்பினர், ரிது தாவ்டே (39). பாரதிய, ஜனதாவைச் சேர்ந்த இவர், செல்லும் பாதையில், பெண் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டார். 

துணிக் கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளில், பெண் பொம்மைகளை வைத்திருப்பதைப் பார்ப்பதால், ஆண்களிடம் பாலியல் வக்கிரம் வெளிப்படுகிறது. எனவே, உள்ளாடை விற்பனை கடைகளில் வைக்கப்பட்டிருக்கும், பெண் பொம்மைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சியில் இவர் மற்றும் 227 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். 


இதுகுறித்து, ரிது தாவ்டே கூறியதாவது: பெண்களின் உள்ளாடை விற்பனைக்காக, கடைக்காரர்கள், இத்தகைய பொம்மைகளை, தங்கள் கடைகளின் வெளிப்புறமாக வைக்கின்றனர். அதில், பிரா, ஜட்டியுடன் காட்சியளிக்கும் பொம்மைகளைப் பார்க்கும் ஆண்கள், அவற்றை பொம்மைகளாகப் பார்ப்பதில்லை; பெண்களாகவே பார்க்கின்றனர். 

இதனால், நல்ல எண்ணம் கொண்ட ஆண்களுக்கும், வக்கிர புத்தி ஏற்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த, ஆண், பெண் என, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில், இத்தகைய கவர்ச்சி பொம்மைகள் வைத்திருப்பது, நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்திற்கு எதிரானது. எனவே, அவற்றை அகற்றுவது என்ற முடிவை எடுத்தேன். 

தீர்மானம் : 

நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய பொம்மைகள், பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும் என்பது என் எண்ணம். எனவே, நாடு முழுவதும், பெண்கள் கவர்ச்சி பொம்மைக்கு தடை விதிக்க வேண்டும் அவர் கூறினார். 

மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? 

பெண்களுக்கு எதிரான தொல்லைகள் அதிகமாவதற்கு அவர்களது ஆடைக் கலாச்சாரம்தான் காரணம். அவர்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்தால் அதுவே அவர்களுக்கு சரியான பாதுகாப்பு என்று இஸ்லாம் சொல்லக்கூடிய கட்டளைகளைக் கடைப்பிடிக்காததே அதற்கு முழுமுதற்காரணம். 

இந்தக்கருத்தை இஸ்லாம் கூறும் கட்டளையாகச் சொன்னபோது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது; அவர்களைச் சித்ரவதை செய்கின்றது; பெண்களை பர்தா அணியச் சொல்லும் இவர்கள் பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள்; காட்டுமிராண்டிகள் என்று கதையளந்தனர் இஸ்லாமிய எதிரிகள். 

ஆனால் தற்போது நிலை என்ன? 

யார் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டார்களோ அந்த முற்போக்கு(?)வாதிகளது வாயிலிருந்தே இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை அல்லாஹ் வழிமொழிய வைத்துள்ளான். 

சீனக் காவல்துறை இந்தச் சட்டத்தை கொண்டுவரும் என்று யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். 

இஸ்லாத்தை இழிவுபடுத்துவதையே முழுமுதற் குறிக்கோளாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வினரது வாயிலிருந்தே பர்தாவின் அவசியத்தை இறைவன் விளங்க வைத்துள்ளான். 

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகுதான் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதற்கு அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்பதை இப்போதுதான் மிகவும் காலம் தாழ்ந்து ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர். 

இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர் ஆன் தெளிவுபடுத்தியுள்ளதைப் பாருங்கள் : 

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். அல்குர் ஆன் 33 : 59 

நன்றி-onlinepj.com
0 comments

தேனீக்களின் வழி அறியும் திறன் (ஆய்வுகளின் முடிவுகள் )

தேனீக்கள் மூலம் கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்கலாம் என்ற செய்தி தமிழில் எல்லா ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு வெளிவந்தது. 

அச்சு அசலாக ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைத்து ஊடகங்களிலும் கீழ்க்கண்டவாறு தான் இச்செய்தி வெளியானது. 

ஏதோ ஒரு ஊடகத்தில் வந்ததை அப்படியே காப்பி அடித்து எல்லோரும் பயன்படுத்தியுள்ளனர். 

ஜாக்ரப், மே 23- 
வெடிகுண்டுகளை தேனீக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அய்ரோப்பிய யூனியனோடு இணைந்த குரோடியா நாடு, அடர்ந்த பசுமை காடுகளும், பெரிய ஏரிகளும் உடையது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாட்டில், 1990இல் பால்கன் போரின்போது புதைத்து வைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. சுமார் 750 சதுர கி.மீ. பரப்பளவுக்கு கண்ணி வெடிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் 90,000 வெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவற்றை அகற்ற பல்வேறு முயற்சிகள் நடந்தாலும், பலனளிக்கவில்லை. கண்ணிவெடியில் சிக்கி இதுவரை 2500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்நாட்டில் உள்ள ஜாக்ரப் பல்கலைக்கழக வேளாண்மை துறை பேராசிரியர் நிகோலா கேசிக், தேனீக்களை பற்றி ஆய்வு செய்தார். அவற்றை தொடர்ந்து கண்காணித்ததில் அவை டிஎன்டி (டிரை நைட்ரோ டோலுவின்) என்ற வெடிபொருள் வாசனை மூலம் இரைதேடுவதைக் கண்டறிந்தார். வெடிகுண்டுகளின் வெடிப் பொருளை அழிவு சக்தியை அளக்க ஒரு கிராம் டிஎன்டி அடிப்படை அலகாக குறிப்பிடப்படுகிறது. இத்தகைய டிஎன் டியை நுகரும் திறனுடைய தேனீக்களை, வெடிகுண்டு கண்டுபிடிக்க பயன்படுத்தலாம் என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உடனடியாக, தனது மாணவர்களுடன் இணைந்து தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார். இந்த ஆராய்ச்சிக்கு இனிப்புடன் டிஎன் டியை கலந்து ஆங்காங்கு வைத்துவிட்டு, தேனீக்களின் நடவடிக்கையை உற்று கவனித்தனர். அப்போது, டிஎன்டி கலந்து வைத்த இனிப்பின் மையப்பகுதியை மட்டும் தேனீக்கள் மிகச்சரியாக நுகர்ந்தன. இதுகுறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞான பூர்வமாக வெற்றி பெற்றால், கண்ணி வெடி இருப்பதாக கருதப்படும் பகுதிகளில் தேனீக் களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். நாய், எலி மூலம் கண்ணிவெடியை கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களை பொறுத்தவரை அந்த பிரச்சினையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார். 

தினகரன், விடுதலை, யஹூ உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் இதே வாசகங்கள் ஒரு புள்ளிமாறாமல் வெளியிடப்பட்டுள்ளன். இதைப் படிப்பவர்களுக்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சி என்ன என்பது விளங்காது. மேலும் தேனீக்கள் வெடிமருந்து வாசனையைக் கொண்டுதான் இரை தேடுவதாக தவறான தகவலும் தரப்பட்டுள்ளது. இது உண்மையும் பொய்யும் கலந்த கலவையாக உள்ளது. 

உண்மையில் தேனீக்கள் வெடிமருந்தின் வாசனையைக் கொண்டு இரை தேடுவதில்லை. நாய்களுக்கும் எலிகளுக்கும் பயிற்சி அளிப்பது போல் பயிற்சி அளிக்கப்பட்டால் அந்த தேனீக்கள் மட்டும் தான் வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கும். எல்லா தேனீக்களும் அதைக் கண்டுபிடிக்காது. இந்த உண்மைக்கு மாற்றமாக இச்செய்தியைத் திரித்து எழுதியுள்ளனர். 

இது குறித்து விரைவில் விரிவுபடுத்தி வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கம் 12 ஆம் பதிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம். 

16:68,69 வசனங்களுக்கான விளக்கம் 68, 69. 

"மலைகளிலும், 
மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!''474 என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது.259 அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.26 474 

தேனீக்களின் வழி அறியும் திறன் 

இவ்வசனத்தில் (16:68) 


தேனீக்களை நோக்கி உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேனீக்கள் பாதைகளை அறிவதில் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இதுகுறித்து பிரிட்டனைச் சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 

அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேனைத் தேடி, தேனீக்கள் அதிகப் பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிகமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கைப் பூக்களைக் கொண்டு, தேனீக்களின் பயண வழியைக் கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக் குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்குச் செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தோம். அந்த வழிகள், விற்பனைப் பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கிக் கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம்,கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

வழிகளை எளிதாகக் கண்டு கொள்ளும்
 திறன் தேனீக்களுக்கு உள்ளது என்ற இந்த உண்மையை திருக்குர்ஆன் சொல்லி இருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது உறுதியாகிறது. 

எளிதாக வழிகளைக் கண்டுபிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது.
 சரியான வழியையும் கண்டுபிடித்தால்
 தான் எளிதாக இருக்கும். ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் 
வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும். தேனீக்களின் மோப்ப சக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டுக்கும் செர்பியாவுக்கும் நடந்த போரின் போது ஏராளமான கன்னிவெடிகளை செர்பியா புதைத்து வைத்தது. போர் முடிந்த பின்னும் கன்னிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் கால் வைப்பவர்கள் செத்துமடிந்து வருகின்றனர். எனவே கன்னிவெடிகளைக் கண்டுபிடிக்க தேனீக்களின் மோப்ப சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்று ஜாக்ரப் பல்கலைக் கழக வேளாண்மைத் துறை பேராசிரியர் நிகோலா கேசிக் ஆராய்ச்சி மேற்கொண்டார். 

தேனீக்களின் உணவு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேனீக்கள் அதைச் சரியாகக் கண்டு பிடிக்கும் திறன் வாய்ந்தவை என்பதை முதலில் இவர் கண்டுபிடித்தார். வெடிமருந்துகளில் உள்ள டி.என்.டி எனும் வாசனையை இனிப்புடன் கலந்து தேன் கூடுகளுக்கு அருகில் வைக்கப்பட்டது. இனிப்பைத் தேடிவரும் தேனீக்கள் டி.என்.டி வாசனையைப் பழகிக் கொண்டன. இப்படியே பழக்கப்பட்ட தேனீக்கள் டி.என்.டி வாசனை எங்கு இருந்தாலும் அது தன்னுடய உணவின் வாசனை என்று நினைக்கும் அளவுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு தேனீக்கள் பழக்கப்பட்ட பின்னர் டி.என்.டி கலந்த இனிப்பையும் டி.என்.டி கலக்காத இனிப்பையும் கூடுகளுக்கு அருகில் வைக்கும் போது டி.என்.டி கலந்த இனிப்பை மட்டும் அது சரியாகக் கண்டு பிடித்து அதில் அமர்ந்தது. இதன் பின்னர் ஒரு இடத்தில் வைக்கப்படும் இனிப்பின் நடுப்பகுதியில் டி.என்.டி கலந்தும் ஓரங்களில் டி.என்.டி கலக்காமலும் வைக்கப்பட்ட்து. அப்போது டி.என்.டி கலந்த மையப்பகுதியில் போய் தேனீக்கள் அமர்ந்தன. இயல்பாக வெடிமருந்தின் வாசனையை தேனீக்கள் தேடிச் செல்லாது. அது தான் தன்னுடைய உணவு என்று பயிற்சியளிக்கப்படும் போது அந்த வாசனையைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விடும். இப்படி பழக்கப்பட்ட தேனீக்களுக்கு அருகில் மண்ணுக்குள் வெடி பொருளைப் புதைத்து வைத்தால் அந்த இடத்தின் மேலே அமர்ந்து மொய்க்க ஆரம்பித்தன. இதன் மூலம் அந்த இடத்தில் கன்னி வெடி உள்ளதைக் கண்டுபிடித்து பக்குவமாக அகற்றலாம் என்பது தான் ஆராய்ச்சியின் முடிவாகும். 

இது குறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், ‘‘இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞானபூர்வமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளில் தேனீக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து அகற்றி விடலாம். 

நாய், எலி மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சனையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது’ என்றார். 

இன்று பல்வேறு ஆய்வுகள் மூலம் இதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் தேனீக்களிடம் இந்தத் தன்மை உள்ளது என்ற விஷயம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். எனவே குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

Article Copied From: www.onlinepj.com , Read more at:http://onlinepj.com/kelvi_pathil/quran_virivurai/thenikkalin_vazi_ariyum_thiran/
Copyright © www.onlinepj.com
0 comments

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்.! அமெரிக்க ஆய்வில் தகவல்


970232_191718850980346_869887548_nகடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின்,  இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.
கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தம் நோயின் தாக்கம்,எந்த வகையிலும் குறையவில்லை. 
ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், “கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார். 
தற்காலத்தில் மனஅழுத்தம் தான் மனிதனை ஆட்கொள்ளும் பெரிய நோயாகக் கருதப்படுகின்றது. உலகில் 75 சதவீதத்தினர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 
உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மனஅழுத்ததின் காரணமாக நடைபெறுபவை என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இவர்கள் தற்போது கண்டுபிடித்துச் சொல்லும் இந்தச் செய்தியை 1400ஆண்டுகளுக்கு முன்பாகவே வல்ல இறைவன் தனது திருமறையில் சொல்லிக்காட்டியுள்ளான். 
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (அல்குர் ஆன் 13 : 28) 
உள்ளத்தில் அமைதியின்மை ஏற்படுவதுதான் மன அழுத்தத்திற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ளது. இறைவனை நினைவு கூர்வதின் மூலம் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்றும், இறைவனை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் அமைதியுறும் என்றும் இறைவன் மேற்கண்ட வசனத்தில் திட்டவட்டமாகச் சொல்லிக் காட்டுகின்றான். 
இறைவனை ஒருவர் நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவருக்கு மனஅழுத்தம் கிஞ்சிற்றும் இருக்காது என்பது உறுதி. அந்த வகையில் இந்த ஆய்வு இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
நன்றி : ஆன்லைன் பி.ஜெ
0 comments

நபி மொழிகளில் நவீன விஞ்ஞானம் (நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டிவிட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலிரி) நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக்கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள்''
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலிரி) நூல் : முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் மிக முக்கியமான ஒரு வழிமுறையை நமக்கு கற்றுத் தருகின்றார்கள்.

அதாவது நம்முடைய பாத்திரங்களில் நாய் வாய் வைத்து விட்டால்
#அந்த நீரைக் கொட்டி விட வேண்டும்.
#அந்தப் பாத்திரத்தை ஏழு தடவைகள் தண்ணீரால் கழுக வேண்டும்.
#முதல் தடவை கழுவும் போதே அல்லது எட்டாவது தடவை கழுவும் போதோ மண்ணினால் கழுக வேண்டும்.

இது நபி (ஸல்) அவர்களின் சுன்னத் வழிமுறை என்பது மட்டுமில்லை. இஸ்லாம் ஒரு மதமல்ல . அது மனிதனுக் கேற்ற மார்க்கம் என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாகத் திகழ்கிறது.

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். அந்தப் பாத்திரத்தை பல தடவை தண்ணீராலும், மண்ணாலும் சுத்தம் செய்யச் சொல்கிறார்கள்.
இவ்வாறு ஏன் கட்டளையிட்டார்கள்? நாய் வாய் வைத்தால் என்ன ? மண்ணை வைத்து ஏன் கழுக வேண்டும்? விஞ்ஞான அடிப்படையில் இறைத்தூதரின் இந்தப் போதனை சரியானதுதானா? என்பது போன்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.
நபியவர்கள் வழிகாட்டுதல் நூறு சதவிகிதம் சரியானதே என்று இன்றைய நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்றது.


நாயின் உமிழ் நீர்
-----------------------
நபி (ஸல்) நாய் வாய் வைத்த தண்ணீரை கொட்டச் சொல்கிறார்கள். தண்ணீரில் நாய் வாய் வைத்தால் அதனுடைய எச்சில் தண்ணீரிலே கலக்கின்றது. நாயின் எச்சிலில் மனிதனுக்கு அபாயகராமான நோய்களை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வைரஸிற்கு ரேபிஸ் என்று பெயர்.
நாயின் உமிழ் நீரில் உள்ள இந்த ரேபிஸ் வைரஸ்கள் நாய் வாய் வைத்த தண்ணீரை நாம் அருந்துவதின் மூலம் நம்முடைய உடலிற்குள் சென்று விடுகின்றது.
அல்லது நம்முடைய உடலில் காயம் பட்ட இடத்தில் நாயின் உமிழ் நீர் பட்டாலோ, அல்லது நாய் வாய் வைத்த தண்ணீரை வைத்து நம்முடைய உடலை சுத்தம் செய்யும் போது நம்முடைய உடலில் உள்ள காயங்களின் மூலம் இந்த வைரஸ் நம்முடைய உடலிற்குள் செல்கிறது.
இதன் மூலம் ஏற்படும் நோய்க்கு ரேபிஸ் நோய் என்று பெயர்.
இந்த ரேபிஸ் வைரஸ் காயம் பட்ட இடத்தில் படிந்தவுடன் தசை இழைகளில் பன்மடங்கு எண்ணிக்கையில் பெருகுகிறது. சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் வைரஸ் கடிபட்ட இடத்திலிருந்து நரம்பு வழியாக தன் இலக்கு உறுப்பான மூளையை நோக்கி நகர்கிறது. இவற்றின் பெருக்கக்காலம் என்பது பல காரணிகளைப் பொறுத்து வேறுபடுகிறது. அப்படிப்பட்ட காரணிகளாவன.

காயம் பட்ட இடம் • காயம் பட்ட இடத்தில் பதியும் வைரஸின் அளவு • வைரஸின் நோய் உண்டாக்கும் தீவிரத் தன்மை • பாதிக்கப்பட்ட நபரின் நோய் எதிர்ப்புத் தன்மையின் நிலை மூளைக்கு அருகில் அதாவது தலை கழுத்து, முகம் அல்லது அதிகளவு நரம்புகளைக் கொண்ட உடலின் எந்த ஒரு கடைப்பகுதியில் கடிபட்டாலும் இவ்வைரஸ் குறைந்த காலத்தில் பெருக்கம் அடையும்.

இந்த ரேபிஸ் கிருமிகள் மனித உடலிற்குள் சென்ற 30 லி 60 நாட்களுக்குள் வியாதி மனிதனிடம் வெளிப்படுகிறது. இந்த வைரஸ் மூளைக்குள் பரவி பல பகுதிகளைத் தாக்கி, நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. அதனால் உடலிலுள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால் இவர்கள் குரல் நாய் குரைப்பதைப் போலிருக்கும். விழுங்கு தசைகள் இறுகுவதால் தண்ணீர் அருந்தமுடியாமல் போகிறது. முதல் அறிகுறி ரேபிஸ் பைரஸ் படிந்த இடத்தில் வலி ஏற்படுகிறது. அடுத்தபடியாக உளச் சோர்வு (Depression) பயம் (apprehension) தூக்கமின்மை தோன்றுகிறது. அதற்குப் பின் ஏதாவது பருக முயலும்போது தொண்டைச் சுருக்கம் (Spasm) ஏற்படுகிறது. உமிழ்நீர் கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் வாந்தியும் உண்டாகும். தண்ணீரைக் கண்டால் பயம் (Hydrophobia) மாய கற்பனைத் தோற்றம் (Hallucinalions), தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்றவற்றை ஏற்படுத்தி முடிவில் மரணத்தை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் முற்றினால் குணமாக்குவதற்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பொதுவாக ரேபீஸ் நோயின் அறிகுறியானது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்தபின்னர் தான் கண்டறியப்படுகிறது அல்லது காணப்படுகிறது. எனவே நரம்பு திசுக்களில் உள்ள இந்த ராபிஸ் வைரஸை எந்த ஒரு நோய் எதிர்ப்பு பொருளும் சென்றடைவதில்லை. நரம்பு திசுவில் இவ்வைரஸ்கள் விரைவாக இனப்பெருக்கம் அடைந்து மரணத்தைத் தோற்றுவிக்கின்றன.

ஒரு மனிதனை நாய்கள் கடிக்கும் போதும் இந்த ரேபிஸ் கிருமிகள் உடலிற்குள் செல்வதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும்
--------------------------------------------------------------------

. இந்த பயங்கரமான நோய்களிலிருந்து நம்மை பாது காத்துக் கொள்ளக்கூடிய வழிமுறை நம்முடைய வீடுகளில் நாய்களை வளர்க்காமல் இருப்பதும் நாய் வாய் வைத்த எந்த ஒரு பொருளையும் சாப்பிடாமல் இருப்பதும் தான்.. இதோ அன்றே நபியவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்;
(நாய் மூலம் வேட்டையாடுவதைப் பற்றி) நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ''வேட்டைக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட நாயை நீங்கள் அனுப்பி வைத்து, அது (பிராணிகளைக்) கொன்று விட்டாலும் அதை நீங்கள் சாப்பிடலாம். (அந்தப் பிராணியை) நாய் சாப்பிட்டுவிட்டிருக்குமானால் அதை நீங்கள் சாப்பிடாதீர்கள். எனெனில் அது (அப்பிராணியை) தனக்காகவே வைத்துக்கொண்டுள்ளது'' என்று கூறினார்கள். நான், ''எனது நாயை வேட்டையாட அனுப்புகிறேன்; (அது வேட்டையாடித் திரும்பும்போது) அதனுடன் மற்றொரு நாயையும் காண்கிறேன் (இவ்விரண்டில் பிராணியைப் பிராணியைப் பிடித்தது எது என்று எனக்குத் தெரியாது. இந்நிலையில் என்ன செய்வது?)'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், நீ சாப்பிடாதே. ''நீங்கள் உங்கள் நாயைத்தான் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயர்) கூறி அனுப்பினீர்களே தவிர மற்றொரு நாயை பிஸ்மில்லாஹ் கூறி அனப்பவில்லை'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல் : புகாரி (175)

நாய்களுக்குப் பயிற்சி அளித்து வேட்டையாட அனுப்பினால் அந்த நாய் வேட்டையாடப் பட்ட பிராணியை தன்னுடைய பற்கள் நன்றாகப் பதியுமாறு கடிக்காது. இதன் காரணமாக நாயின் உமிழ் நீரிலுள்ள நோய் கிருமிகள் வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிற்குள் செல்வதற்கு சாத்தியமில்லை.
அதே நேரத்தில் அந்த நாய் வேட்டையாடப்பட்ட பிராணியை சாப்பிட்டிருந்தால் அதை நாம் சாப்பிடக்கூடாது என நபியவர்கள் தடை விதிக்கிறார்கள்.
மேலும் பயிற்சி அளித்த நாயுடன் வேறொரு நாய் இருந்து எது வேட்டையாடியது என்ற சந்தேகம் ஏற்பட்டால் கூட நபியவர்கள் அதனை சாப்பிடக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள்.
பிஸ்மில்லாஹ் கூறவில்லை என்ற காரணத்தை நபியவர்கள் கூறியிருந்தாலும் விஞ்ஞான அடிப்படையில் அதில் மேலும் பல நன்மைகள் இருப்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
மனித குலத்தின் நன்மைக்காக நபியவர்கள் வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை தடை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூ தல்ஹா (ரலி) நூல் : புகாரி (3225)

பாது காப்பிற்காவும் , வேட்டைக்காகவுமே தவிர நாய்களை விற்பதையும் , வாங்குவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூரியை)யும் தடைசெய்தார்கள்; வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபீ ஜுஹைஃபா (ரலி) நூல் : புகாரி (2086)

பாத்திரங்களை மண்ணால் ஏன் சுத்தம் செய்ய வேண்டும்.?
----------------------------------------------------------------

நபி (ஸல்) அவர்கள் நாய் வாய் வைத்த பாத்திரத்தை 7 தடவைகள் நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்யுமாறு கூறிவிட்டு ஒரு தடவை மண்ணாலும் கழுக வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நபியவர்களின் இந்த வழிமுறையும் மிகவும் அறிவுப் பூர்வமானது. மனிதனுக்கு நன்மை தரக்கூடியது என்பதை இன்றை நவீன விஞ்ஞானம் மெய்ப்பிக்கிறது.

நாயின் எச்சிலில் உள்ள ரேபிஸ் வைரஸ்கள் அளவில் கூற இயலாத அளவிற்கு மிகவும் நூண்ணியமானவை ஆகும். இந்த வைரஸ்கள் எவ்வளவு நூண்ணியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதனுடைய வீரியமும் இருக்கும். இந்த வைரஸ்களை அழிக்கக்கூடிய மூலங்கள் அதிகமாக மண்ணில் இருப்பதை நவீன விஞ்ஞானம் நிருபிக்கிறது.

பலவிதமான நோய்கிருமிகள் உடலில் உள்ள நிலையில் மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டபின் அந்த கிருமிகள் பூமியில் உயிரோடு இருப்பதில்லை. ஏனென்றால் மண்ணில் உள்ள சில மூலங்கள் அந்தக் கிருமிகளை அழித்து விடுகின்றன. இதனை பல முறை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வு நிரூபித்துள்ளனர்.

கிருமிகளை அழிக்கக்கூடிய டெட்ரா சைக்ளின், டெட்ராலைட் ஆகிய இரண்டு மூலங்களும் மண்ணில் உள்ள புழுதிகளில் உள்ளன. சாக்பீஸ் துகள்கள் எவ்வாறு மையோடு கலந்து விடுகிறதோ அது போன்று இந்த மூலங்கள் பாத்திரத்தின் சுவர்களில் நன்றாக பரவி அந்த கிருமிகளை அழித்து பாத்திரத்தை சுத்தப்படுத்துகிறது.

நவீன காலத்தில் பல்லாண்டுகள் ஆய்வு செய்து விஞ்ஞானம் கூறக்கூடிய ஒரு செய்தியை, தேர்ந்த மருத்துவர்கள் பல்லாண்டுகள் கற்றறிந்து மக்களுக்கு கூறும் விஷயங்களையெல்லாம் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால் நிச்சயமாக இந்த வார்த்தைகள் முஹம்மத் அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல.
உண்மையான ஏக இறைவனிடமிருந்து பெற்று அறிவித்த வார்த்தைகள் தான். உண்மையில் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம்.
திருக்குர்ஆன், மற்றும் திருநபி வழி நடப்பதில்தான் உண்மையான வெற்றியிருக்கிறது என்பதை உணர்ந்து வாழ்வோமாக.


நன்றி - முக நூலில் படித்து --

அல்-குர்ஆனின் அத்தாட்சிகள்'
0 comments

முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.



முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கமிக்கது, முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என வஜிர சிறுவர் நிலையப் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் கூறினார்.
சகல சமய ஆய்வு வட்டம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் முஸ்லிம் நாடொன்றுக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அங்கு முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்த நாட்டில்  கவுன்கள் (மேக்ஸி)  அணிய முடியாது. இந்த ஆடை முறையை நாமும் பின்பற்ற வேண்டும். முஸ்லிம் பெண்கள் அணிந்தால் அழகானது. இந்த நல்ல விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
சிங்களவர்கள் இந்த நாட்டில் ஒரு காலத்தில் 90 வீதம் வாழ்ந்தார்கள். இனறு அது 60 வீதமாகவுள்ளது. சனத்தொகை குறைய முஸ்லிம்களோ, தமிழர்களோ காரணமல்ல. பல்வேறு காரணங்களினால் எமது சமூகத்தவர்களது சனத்தொகை குறைந்துள்ளது. எமது மக்கள் மத்தியில் நிகாய பேதம் குலபேதம் போன்ற வேறுபாடுகள் இருக்கின்றன. நாமும் உற்பத்திக் கட்டுப்பாடுகளைச் செய்கின்றோம்.
முஸ்லிம்கள் என்பவர் யார். முஸ்லிம்கள் ஆண்கள் மட்டுமே இங்கு வந்தார்கள். அவர்கள் எமது பெண்களையே மணமுடித்தார்கள். அவர்களுக்கு எமக்குப் போன்றே இந்த நாட்டின் சகல உரிமைகளும் இருக்கின்றன.
ஜெனிவாப் பிரச்சினையின் போது முஸ்லிம் நாடுகளே எமக்கு உதவின. அமெரிக்க எமக்குதவவில்லை. யுத்த காலத்தில் முஸ்லிம்களே எமக்கு கூடுதலாக உதவினர் தமிழர்களும் உதவினர். இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்றப் பெண்களைப் பார்ப்பது ஹராம், வட்டி எடுப்பது ஹராம் இவை நல்ல விடயங்கள். ஹராம், ஹலால் என்று பேசிப்பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்ற வேண்டும்.
இச் செய்தியாளர் மகாநாட்டில் பத்தேகம சபித தேரர், அக்குனவனா கல்லூரியின் முன்னாள் பணிப்பாளர் வண. பிதா கிரிஸ்தன், வண பிதா சக்திவேல், மணி ஸ்ரீநிவாசக் குருக்கள், எம்.ரி.எம்.அஸுர், திருமதி விசாசா, மர்ஷாத் பாரி ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
முஸ்லிம் பெண்களின் ஆடைகளை சிங்கள பெண்களும் பின்பற்றி அணிய வேண்டும் என்று பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா அவர்களும் மட்டக்களப்பில் நடை பெற்ற நிகழ்வொன்றில் இதற்கு முன்பு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.
இஸ்லாம் சொல்லும் வாழ்வியல் நடை முறைகள் நாளுக்கு நாள் உண்மைப் படுத்தப்படுவது மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களினாலேயே இஸ்லாமிய வழிகாட்டல் சரியானதுதான் என்று ஒத்துக் கொள்ளப்படுவது இஸ்லாம் தான் இந்த உலகுக்கான சரியான வாழ்வியல் வழிகாட்டி என்பதற்கு போதுமான நிதர்சனமான சான்றாகும்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், ‎‎(ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க ‎விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) ‎அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.‎ (அல்குர்-ஆன் 33 : 59)
நன்றி - rasminmisc 
0 comments

மாசுபடும் ஆறுகள் மனம் மாறும் சாதுக்கள்

"தாங்களும் முஸ்லிம்களாக இருந்திருக்கலாமே'' என்று சில நேரங்களில் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புவார்கள்.

(அல்குர்ஆன் 15:2)
அண்மையில் இந்தியாவில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்வதைப் போன்று பிற மதத்தவர்களை நினைக்கத் தூண்டுகின்றன.
டெல்லி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டதும் ஒரு பெருங்கூட்டம்கற்பழிப்புக் குற்றங்களுக்கு இஸ்லாம் கூறுகின்ற மரண தண்டனை வேண்டும் என்று கோரினர். முஸ்லிம்களைப் போன்று பெண்கள் புர்கா அணிந்து செல்ல வேண்டும் என்று மதுரை ஆதீனம் போன்றோர் உண்மையை மறைக்காமல் ஊரறியஉலகறியச் சொன்னார்கள்.
அரபு நாட்டுச் சட்டங்கள் வேண்டும் என்றும்பெண்கள் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் இஸ்லாத்தைக் கடுமையாக விமர்சிக்கும் சங்பரிவார்கள் என்பது தான் இதில் ஆச்சரியம்.
பெண்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இஸ்லாம் கூறும் திருமண ஒப்பந்தத்தை பற்றிப் பேசுகின்றார். இப்போது இந்த வரிசையில் சன்னியாசிகள் எனும் சாதுக்களும் இணைந்துள்ளனர். இவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
"ஜல சமாதியின் மூலம் ஆறுகள் மாசுபடுகின்றன. அதனால் சாதுக்களை அடக்கம் செய்வதற்கு நில சமாதி வேண்டும்'' என்று உ.பி. அரசாங்கத்திடம் சாதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜல சமாதி
ஜல சமாதி என்றால் என்னஇறந்த பின் பிணத்தை நீரில் வீசியெறிவது தான் ஜல சமாதியாகும். இதற்கு இரண்டு விதமான காரணங்களைக் கூறுகின்றார்கள்.
1. ராமர் சரயூ நதியில் தன்னை மூழ்கச் செய்து மரணித்தார்அதாவது தற்கொலை செய்து கொண்டார். இதுபோல் யாரும் செய்தால் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது இந்துக்களின் புராண நம்பிக்கையாகும்.
இதன்படி ராம நவமியின் போதுவயதானவர்கள் அயோத்யாவில் தற்கொலை செய்ய முனைவார்கள். இதன் காரணமாகவே காவல்துறை கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
பாதுகாப்பு வளையங்கள் போட்டுகயிறுகளைக் கட்டிமின்னொளி விளக்குகளை நிறுவி இதுபோன்று தற்கொலை செய்ய முனைவோரைத் தடுக்கின்றது. இந்த வயதான சாதுக்கள் சொர்க்கத்தைத் தேடி நீர் சமாதி ஆகிவிடுவார்கள். ஆனால் காவல்துறையோ விசாரணை என்ற நரகத்தில் சிக்கிக் கொள்ளும். இதற்காகத் தான் காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 24 மணி நேரமும் விழிப்பாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. ஆகநேரடியாக ராமரைப் போன்று நதியில் இறங்கி தற்கொலை செய்து கொள்வதற்கு ஜல சமாதி அல்லது நீர் சமாதி என்று பெயர். உடலில் கல்லைக் கட்டிநீரில் தன்னை ஆழ்த்திக் கொள்வதற்கும் நீர் சமாதி என்றே பெயர்.
2. இந்தியாவில் ஓடுகின்ற நதிகளின் கரையோரங்கள் அனைத்திலும் தகன மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறந்தவர்களின் உடலைக் கொண்டு போய் எரித்துச் சாம்பலாக்கி விடுவர். இது அக்னி சமாதி என்று பெயர். இதன் பின்னர் அந்தச் சாம்பலை ஆற்று நீரில் கரைத்து விடுவர். இதையும் நீர் சமாதி என்கின்றனர்.
சாதுக்களின் உடலை எரிப்பதில்லை. அவர்களின் உடலை அப்படியே அந்த நதியில் தூக்கி வீசி விடுகின்றனர். இதுவும் நீர் சமாதி எனப்படுகின்றது. இப்போது சாதுக்கள் கோருவது என்ன?
சாதுக்கள் இருக்கும் போது மனித மற்றும் பிற இனங்களுக்குப் பயனளிப்பவர்களாம். இறந்த பிறகும் அதுபோன்று பயனளிக்க வேண்டுமாம். இதனால் தாங்கள் இறந்த பிறகு நீர் சமாதி செய்கின்ற போது,நீர்வாழ் பிராணிகள் அவர்களது உடலை உண்டு பயனடைகின்றன. ஆனால் இப்போது ஆறுகள் மாசுபட்டு விட்டதால் நீர்வாழ் பிராணிகளே அழிந்து விட்டன. அவை உயிருடன் இருந்தால் தானே, "தானமே பிரதானம்என்று தண்ணீரில் சமாதியான பிரேதத்தை அவை உண்டு உயிர் வாழும்.
அதனால் இப்போது சாதுக்களுக்குத் திடீர் ஞானோதயம் வந்து, "எங்களை நிலத்தில் அடக்கம் செய்வதற்கு நிலம் தாருங்கள்'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கின்றனர்.
மற்றவர்களைப் போன்று உங்களையும் எரித்து விட்டால் என்னஎன்று கேட்டதற்கு, "புனிதமானவர்களை எரிப்பதற்கு மரபு தடை செய்கின்றதுஅதனால் தான் நீர் சமாதி செய்கின்றோம். இப்போது உயிரினங்களுக்கு இரையாகாமல் அந்தப் பூதவுடல்கள் அழுகி விடுகின்றன. இதுவும் அவர்களை அவமானப்படுத்துவதாகும். அதனால் தான் இப்போது நில சமாதி கேட்கின்றோம்'' என்று பதிலளிக்கின்றனர்.
நிறம் மாறிய நீராதாரம்
ஏற்கனவே கும்பமேளா என்ற பெயரில் லட்சக்கணக்கானோர் கங்கை நதிக் கரையில் கூடுகின்றனர். இத்தனை பேரும் கழிக்கும் மலம்ஜலம் கங்கையில் தான் சங்கமமாகின்றது.
அத்தனை பேரும் ஒரே நேரத்தில் புனித நீராடல் என்ற பெயரில் ஆற்றில் இறங்கிகுளித்துக் கழித்தால் கங்கை மாசுபடாமல் இருக்குமாகூவமாக மாறி விடுகின்றது. இத்துடன் நிற்பதில்லை. இவர்கள் கொண்டு வருகின்ற பூமாலைகள்பூஜைப் பொருட்கள்பைகள் அனைத்தும் கங்கையில் தான் விடப்படுகின்றன.
நீறு பூக்கும் நீர்வளம்
இதில் மில்லியன் கணக்கில் இறக்கும் மக்களின் அஸ்தியும்அதாவது அவர்களின் உடலை எரித்த சாம்பலும் இந்த ஆறுகளில் கரைக்கப்படுகின்றன. மங்கைக்கு சூதகம் ஏற்பட்டால் கங்கையில் சுத்தம் செய்வாள்அந்தக் கங்கையே சூதகமானால் எங்கே சுத்தம் செய்யும் என்று கேட்பார்களே! அதுபோன்று கங்கை முழுமையாக சூதகப்பட்டுவிட்டது.
இந்தக் குடிநீரைக் குடிக்கும் இந்தியக் குடிமகன் எப்படி சுகாதாரமாக வாழ்வான்வெகு சீக்கிரத்தில் சூதகமாகி அவனும் சாவான். இது தான் இன்று நடக்கின்றது. ஒரு நோய் அல்ல! பல புதுப்புது நோய்கள் புற்றீசல்களாக இந்தியாவில் முளைப்பதற்கு இதுதான் காரணம்.
இவர்கள் கங்கையை மட்டுமல்ல! வடபுலத்தில் ஓடுகின்ற மிக முக்கியமான யமுனைஷிப்ரா,கோதாவரிசட்லஜ்நர்மதாசரயூ போன்ற நதிக் கரைகளையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் தாமிரபரணிகாவிரி போன்ற நதிகளும் இப்படித் தான் நாசமாகிக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே கழிவுநீர் சாக்கடைகளும் இந்த நதிகளில் தான் மடை திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பிணங்களின் திசுக்கள் கலந்து தண்ணீர் மேலும் மாசாகி விடுகின்றது. இந்தச் சூழலில் தான் சாதுக்கள் தங்களுக்கொரு அடக்கத்தலம் வேண்டும் என்று கேட்கின்றனர்.
இறந்தவர்களின் உடல்களைப் பூமியில் புதைப்பது தான் சுற்றுப்புறச் சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் உகந்தது. அதனால் தான் இஸ்லாம்உடலைப் புதைக்கச் சொல்கின்றது. உலகில் மரணித்த முதல் மனித உடல் மண்ணில் தான் புதைக்கப்பட்டது. இதைத் திருக்குர்ஆன் அழகாக எடுத்துரைக்கின்றது.
தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே''எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான்.
(அல்குர்ஆன் 5:31)
இந்த அடிப்படையில் சாதுக்கள் மட்டுமல்ல! முஸ்லிம்களைப் போன்று அனைத்து சமுதாயத்தவரும் இறந்தவர்களை மண்ணில் அடக்கம் செய்ய முன்வரவேண்டும். இறந்தவர்களை அடக்கம் செய்வதில் மட்டுமல்லஅனைத்துத் துறைகளிலும் இஸ்லாமிய மார்க்கம் அழகியஅற்புத வழியை - வாழ்க்கை நெறியைக் காட்டுகின்றது. எனவே உலக மக்கள் அனைவரும் கவுரவம் பார்க்காமல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என அன்பாய் அழைக்கிறோம்.
நன்றி - ஏகத்துவம் 
0 comments

மனிதனை வாழ வைக்கும் மரண தண்டனை

சவூதியின் தலைநகர் ரியாத் அருகில் அமைந்த தவ்ஆத்மி என்ற ஊரில் நாயிஃப் என்பவரது வீட்டில் இலங்கையைச் சேர்ந்த ரிசானா நாஃபிக் என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நாயிஃபின் மகன் காலித் என்ற நான்கு மாதக் குழந்தை இப்பெண்ணின் பாதுகாப்பில் இருக்கும் போது கொல்லப்பட்டு விடுகின்றது. காவல்துறை விசாரணை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் ரிசானாவின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சவூதி நாட்டுச் சட்டத்தின்படி - உயிருக்கு உயிர் என்ற குர்ஆனிய சட்ட அடிப்படையில் கடந்த ஜனவரி 9, 2013 அன்று ரிசானாவுக்குத் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டது தான் தாமதம்பன்னாட்டு அரசுகள்மனித உரிமை ஆணையங்கள்ஐ.நா. சபை உள்ளிட்ட அத்தனையும் இதை வன்மையாகக் கண்டிக்கத் துவங்கி விட்டன. உலகளாவிய இந்த விமர்சனங்களுக்கு சவூதி அரசு என்ன பதில் சொல்கின்றது என்று விடையும் விளக்கமும் தேடிய போது, "எங்களது அரசாங்கம் நீதித்துறையில் தலையிடாது. சவூதியின் நீதித்துறை சுதந்திரமானது'' என்பது தான் சவூதி அரசாங்கம் சொல்கின்ற ஒரு வரி பதில். உண்மையும் அதுதான்.
குற்றவாளிசவூதி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டால் கொலையாளிக்கு மரண தண்டனை தான். சவூதி அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் இந்தத் தண்டனையை நிறைவேற்றிவிடவில்லை.
காவல்துறையிலிருந்து இந்த வழக்கு பொது நீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அதன் பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அங்கும் இந்தக் குற்றம் உறுதி செய்யப்படுகின்றது. இதன் பின்னர் உச்சநீதிமன்றத்திற்குச் செல்கின்றது. அங்கும் குற்றம் உறுதி செய்யப்பட்ட பின் மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றது. இதைத் தான் உலக நாடுகள் விமர்சனம் செய்கின்றன.
இந்த விமர்சனத்தில் தமிழகத்திலுள்ள அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சேர்ந்து கொண்டுஇஸ்லாமிய மார்க்கத்தை விமர்சிக்க ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டனர். முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதில் சேர்ந்து கொள்கின்றார். அவருடைய விமர்சனத்தின் ஒரு பகுதியைப் பாருங்கள்.
"போலீசார் என்னைத் தடியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெரித்ததாகக் கூறுமாறு சொல்லி அடித்தார்கள். அப்படிக் கூறாவிட்டால் எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பதாகக் கூறினார்கள். என்னை வலியுறுத்தி அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பமிடச் செய்தார்கள். அல்லா மீது ஆணையாக நான் குழந்தையைக் கொல்லவில்லை. கழுத்தை நெறிக்கவில்லை''
இப்படி ரிசானா சொன்னதாக கருணாநிதி கதை வசனம் போன்று எழுதியுள்ளார். சவூதி காவல்துறை கருணாநிதியின் கைவசம் இருந்த காவல்துறை இல்லை. ஒரு குற்றம் நடந்தவுடன் யாரேனும் ஒரு அப்பாவியைப் பலிகடாவாக்கிஅவனை அடித்துத் துன்புறுத்திமிரட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து கொலையாளி ஆக்குகின்ற வேலையை இவர் முதல்வராக இருந்த போது காவல்துறை செய்தது.
இந்திய அளவில் காவல்துறையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்து வருகின்றன. அதிலும் முஸ்லிம்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புமாலேகான் குண்டு வெடிப்புஅஜ்மீர் குண்டுவெடிப்பு ஆகியவற்றில் முஸ்லிம்களே பலிகாடாவாக்கப்பட்டனர். பின்னர் இந்துத்வாவின் பயங்கரவாதச் செயல்கள் இவை என உறுதியான பின் விடுவிக்கப்பட்டனர். இதுபோன்ற ஒரு நிர்ப்பந்தம் சவூதி அரசாங்கத்துக்குக் கிடையாது.
இந்திய நீதித்துறையை எடுத்துக் கொண்டால்பாபரி மஸ்ஜித் வழக்கு இதற்கு நிதர்சனமான எடுத்துக்காட்டு. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளி என்று தெரிந்தும் பெரும்பான்மை என்ற நிர்ப்பந்தத்திற்குப் பயந்துஇதுவரை இந்த வழக்கை இழுத்தடித்து வருகின்றது. இதனால் பல்வேறு வகுப்புக் கலவரங்கள்உயிரிழப்புக்கள்பொருளாதாரச் சேதங்கள் என்று விளைவுகளும் விபரீதங்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.
இப்படி ஒரு நிர்ப்பந்தம் சவூதி நீதிமன்றங்களுக்கு ஒருபோதும் கிடையாது. அதனுடைய பார்வை எல்லாம் ஒன்றே ஒன்று தான். மனித உயிர் புனிதமானது. அந்த உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டால் அதற்குப் பரிகாரம் உயிர் தான். பறிக்கப்பட்டது பச்சிளம் குழந்தையின் உயிராக இருந்தாலும் சரி தான்.
ஒவ்வொரு மரண தண்டனையின் போதும் சவூதி உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிடும். அதேபோன்று ரிசானா விவகாரத்திலும் வெளியிட்டது. அந்த அறிக்கையில் மிக முக்கியமாகக் கூறப்படும் செய்தி, "அடுத்தவர் உயிரைப் பறிப்பவருக்கு இதுதான் கதிஎன்று குறிப்பிடுகின்றது.
இப்படி ஒரு தண்டனை இருக்கும் போதுதான் அடுத்தவன் உயிரை ஒருவன் அநியாயமாகப் பறிக்க மாட்டான். ஆம்! மனித உயிரைப் பாதுகாக்கும் ஒரு கவசமாக இந்தச் சட்டம் திகழ்கின்றது. இதைத்தான் திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.
அல்குர்ஆன் 2:179

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger