தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 3)






சத்தியத்திற்கு ஜாக்; சமுதாயத்திற்கு பி.டி.பி.
 
இந்த வெற்றிடம்தான் தவ்ஹீத் ஜமா அத்தினரிடம் ஒரு கேள்விப் புயலை மீண்டும் மீண்டும் கிளப்பியது. அதிலும் குறிப்பாக ஜாக்கின் மேல்மட்ட நிர்வாகக் குழு உறுப்பினருக்குக்கூட பி.டி.பி. மீது பகிரங்கக் காதல்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் பாணியில், அவரது பாதையில், தங்கள் பெற்றோர், உற்றாரைப் பகைத்துக் கொண்டு ஒன்று கூடியிருக்கும் ஓர் இயக்கத்தில், அதிலும் குறிப்பாக அதை வழி நடத் தும் உயர் பொறுப்பி­ருந்து கொண்டு, ஷிர்க்கைக் கொள்கையாகக் கொண்ட பி.டி.பி. தலைமை மீது காதல் கொள்கிறார்; புகழ்கிறார்; போற்றுகிறார் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் வெற்றி டம் என்ற கோளாறுதான்.

தவ்ஹீத் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடமே இந்த நிலை என்றால் தவ்ஹீத் இயக்கத்தில் உள்ள சாதாரண உறுப்பினர்களின் நிலை என்ன? உண்மையில் அவர்களிடமும் பி.டி.பி.யில் ஈடுபாடு இருந்தது. இன்னும் சிலருக்கு ஜிஹாத் கமிட்டியின் மீது நாட்டம் இருந்தது. இதுதான் பீ.ஜே.யை சமுதாயப் பிரச்சினையை நோக்கிக் கொண்டு சென்றது.

அப்போதிலிருந்து அவரது மேடைப் பேச்சுக்கள் சமுதாயப் பிரச்சினையையும் மையமாகக் கொண்டு சுழன்றது. மத்திய, மாநில அரசுகள், அரசியல்வாதிகள், கட்சிகள் முஸ்லி­ம்களுக்குச் செய்த துரோகங்களைத் தோலுரித்துக் காட்டியது.

பழனிபாபா, அப்துந் நாஸர் மதானி போன்று மக்களின் உணர்ச்சிகளை மட்டும் தூண்டி விடாமல், மக்களை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தது. விடிவு காலம் இல்லை என்று விரக்தியில் வீழ்ந் திருந்தவர்களை வீறு கொண்டு எழ வைத்தது. 

அத்துடன், சமுதாய வெற்றி என்பது சத்தியக் கொள்கை மூலமே சாத்தியம் என்பதை உணர்த்தி, மக்களை அசத்தியத்தி­ருந்து சத்தியப் பாதைக்குக் கொண்டு வந்தது.

சத்தியப் பேச்சுடன் சமுதாயப் பேச்சையும் கலந்து கொடுக்க ஆரம்பித்த மாத்திரத்தில் ஜாக் இயக்கம் பல பரிமாணங்களில் வளர்ச்சி கண்டது. இதனால் சமுதாய மக்கள் நம் மீது கொண்டிருந்த வெறுப்பின் அளவு மிகப் பெரிய அளவில் சரிந்தது.

ஆடியோ, வீடியோ அணிவகுப்பு

அந்தக் கட்டத்தில் வெளி நாடுகளில் இளைஞர் வட்டாரங்களில் மிக வேகமாக வலம் வந்தவை பழனிபாபா அவர்களின் ஒலி­ நாடாக்கள்தான். அந்த இடத்தை பீ.ஜே.யின் ஒலி­ நாடாக்கள் பிடித்தன. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!

ஆடியோ, வீடியோ கேஸட்டுகள் வளைகுடா நாடுகளில் சமுதாய உணர்வுள்ள மக்களிடம் அணிவகுத்தன.

பீ.ஜே.யின் இந்த சத்தியப் பேச்சு அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தினரையும் ஓர் உலுக்கு உலுக்கியது. தமிழகத்தையே குலுக்கியது.

யாரையும் தடாவில் கைது செய்யலாம் என்ற ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடன நிலை மத்தியிலும் மாநிலத்திலும் இருந்த காலகட்டத்தில் பீ.ஜே. பேசிய பேச்சுக்கள் ஓர் அக்னிப் பிரவேச மாகும்.

சமுதாய மக்களை உசுப்பியும், உயிர்ப்பித்தும்விட்ட அந்த உரைகளில், ''இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி'' என்ற தலைப்பில் பீ.ஜே. பேசிய பேச்சாகும். மேலப்பாளையம் பஜார் திட­ல், 94 அல்லது 95ல் ஆற்றிய இந்த உரை, உலகளாவிய வரவேற்பைப் பெற்றது. மதச்சார்புடைய கொள்கையைக் கொண்ட இலங்கையில் முஸ்­லிம்களுக்கு வழங்கப்படும் பிரதிநிதித்துவம், மதச்சார்பற்ற கொள்கையுடைய இந்தியாவில் வழங்கப்படவில்லை என்பதை மையப்படுத்தி இந்தப் பேச்சு அமைந்திருந்தது.

நாடாளுமன்றத்தி­ருந்து, வானொலி­, தொலைக்காட்சிவரை முஸ்லிம்களுக்கு இலங்கையில் வழங்கப்பட்டிருந்த பிரதிநிதித்துவத்தையும், இந்தியாவில் முஸ்லி­ம்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் ஒப்பு நோக்கி அவ்வுரையில் பேசிய பேச்சு, பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தது. அவர்களைச் சிந்திக்க வைத்தது.

''இதைத்தான் யார் பேசுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது இவர்தான் பேசியிருக்கிறார்'' என்று கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த முஸ்­லிம் சகோ தரர் ஒருவர் மனநிறைவுடன் குறிப்பிட்டது இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றது. இப்படி ஒரு பாராட்டைத் தெரிவித்த அவர் ஆரம்பத்தில் தவ்ஹீதை முழு மூச்சாக எதிர்த்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

இப்படி மக்களின் உள்ளங்களைச் சுண்டியிழுத்த இந்தப் பேச்சு மத்திய, மாநில உளவுத் துறையினரின் அகலாத ஆந்தைப் பார்வைக்கும் உள்ளானது.

சத்தியப் பிரச்சாரத்துடன் சமுதாயப் பிரச்சினையையும் கையில் எடுத்ததால் மத்திய, மாநில அரசுகளின் கழுகுப் பார்வைக்கும் பீ.ஜே. ஆளானார். அதனால்தான் இதை ஓர் அக்னிப் பிரவேசம் என்று குறிப்பிட வேண்டியுள்ளது.

ஆனால் அதுவும் அழைப்புப் பணிக்கு அடுக்கடுக்கான பலன்களைத் தந்தது. அதிகமான ஆட்களை சத்தியத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

இது, சத்தியப் பேச்சு என்ற ஆயுதத்தால் கிடைத்த வெற்றியாகும். அடுத்தது எழுத்துப் பணி!

மாத இதழ் அல்ல! மந்திர இதழ்!

தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கையில் இருந்த ஒரே ஒரு மாத இதழ் அல் ஜன்னத்தான். ஆனால் அன்று அது ஒரு மந்திர இதழாக இருந்தது. அரசியல், சமுதாயப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, அதில் பீ.ஜே. தீட்டிய நுழைவாயில் (தலையங்கம்) பகுதி வாசகர்களின் உள்ளங்களை சத்தியத் தின் பக்கம் வளைத்துப் போட்டது.

சமுதாய மாற்றத்திற்கு தவ்ஹீத் கொள்கைதான் அவசியம் தேவை என்ற சிந்தனையை அவர்களின் உள்ளங்களில் பதிவு செய்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அவ்விதழ், அவர்களைச் சத்தியத்தின் பக்கம் வரவழைத்தது. (இன்று இவ்விதழ் குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளை விட்டு விட்டு, அதற்கு எதிரான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பது வேறு விஷயம்)
 
தவ்ஹீத்வாதிகளின் தடா எதிர்ப்புப் பேரணி

பேச்சு, எழுத்து என்ற இவ்விரு ஆயுதங்களைக் கொண்டு அல்லாஹ்வின் அருளால் நடத்திய அக்கினிப் பிரவேசத்தின் உச்சக்கட்டம்தான், தடா எதிர்ப்புப் பேரணி! 'இம்' என்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம் என்ற அடிப்ப டையில் இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின்னர், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சில சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லி­ம்கள் சரமாரியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.

தமிழகத்தில் ஒரு குட்டி அவசர நிலைப் பிரகடனம்தான் அப்போதைய ஜெயல­லிதா ஆட்சியில் நடைபெற்றது என்று உறுதியாகக் குறிப்பிடலாம்.

ஜெயல­தா ஆட்சியை எதிர்த்து சமுதாயமே குரல் கொடுப்பதற்கு அஞ்சிய காலம் அது! அடங்கிப்போன காலம் அது! காவல் துறையின் கைகள் கட்ட விழ்த்து விடப்பட்டிருந்த காட்டு தர்பார் அது!

குரல் கொடுப்பவரின் குரல்வளை நெறிக்கப்படும். கூட்டம் சேர்ப்பவரின் குறுக்கு உடைக்கப்படும். இக்கால கட்டத்தில்தான் மேலப்பாளையத்தில் திருக் குர்ஆன் மாநாட்டைத் தொடர்ந்து நடை பெற்ற தடா எதிர்ப்புப் பேரணி!

அனுமதி மறுத்த அன்றைய தலைமை

இந்தப் பேரணி நடத்துவதற்கு அன்றைய தலைமையிடம் அனுமதி கோரிய போது கமாலுத்தீன் மதனி அனுமதி தர மறுத்தார். நீண்ட வாதப் பிரதிவாதங்க ளுக்குப் பிறகு அனுமதி கிடைத்தது.

முதல் நாள் திருக்குர்ஆன் மாநாடு! இரண்டாம் நாள் பேரணி! அதன் முடிவில் ஒரு பொதுக்கூட்டம். இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் இந்தப் பேரணிதான்.

சமுதாய இயக்கங்கள் சமாதி ஆன பின், சத்திய இயக்கமான தவ்ஹீத் ஜமாஅத் (ஜாக்) நடத்திய இந்தப் பேரணியில் இளைஞர் பட்டாளம் குவிந்தது.

நஜாத்காரன், நஜாத்காரன் என்று நம்மைத் தூர வைத்த, தூக்கி எறிந்த, தூற்றி எறிந்த சுன்னல் வல் ஜமாஅத்தினர் சாரை சாரையாக அணி வகுத்தனர். சிறைக் கைதிகளை விடுவிக்கச் சொல்­ சிங்கங்களாய் கர்ஜித்தனர். பெண்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டது அந்த காலகட்டத்தில் புது அத்தியாயமாகும்.

தமிழகத்தில் தடாவை எதிர்த்து யாரும் குரல் உயர்த்தாத கால கட்டத்தில், இந்த தடா எதிர்ப்புப் பேரணியில் தங்கள் குழந்தை குட்டிகளுடன் தாய்மார்கள் கலந்து கொண்டது அதிகார வர்க்கத்திற்கு ஓர் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்தது.

தமிழகம் எங்கும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போராட்டங்களில் பெருமளவு பெண்கள் பங்கேற்பதற்கு அடிப்படையாகவும், அஸ்தி வாரமாகவும் அமைந்தது இந்தத் தடா எதிர்ப்புப் பேரணிதான்.

அல்லாஹ்வின் அருளால் அன்று தடா எதிர்ப்புப் பேரணியில் அடியெடுத்து வைத்த தாய்மார்கள் குடந்தை இடஒதுக்கீட்டுப் பேரணி, சிறை நிரப்பும் போராட்டம்வரை பங்கெடுத்து, தமிழகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முஸ்லி­ம் இயக்கங்களில் தாய் மார்களை அதிகமாகக் கொண்டிருக்கும் அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத்துதான் என்ற தனிப் பெயரைப் பதிவு செய்வதற்கு அவர்கள் காரணமாக அமைந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger