Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label TNTJ வரலாறு. Show all posts
Showing posts with label TNTJ வரலாறு. Show all posts

இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள்கை

ஆக்கம்  - எம். ஷம்சுல்லுஹா

 இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஏகத்துவ இதழ் ஒரு பரேலவிஸ எதிர்ப்பு இதழ் என்றால் அது மிகப் பொருத்தமான ஒன்று தான். அந்த அளவுக்கு இந்த இதழில் பரேலவிஸத்திற்கு எதிரான கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. பரேலவிஸத்தைப் பற்றிய இந்தப் பார்வைக்குப் பொறியாக அமைந்தது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் நடத்தப்படும் ஒரு மாத இதழ்...
இந்த உலமாக்கள் அன்று இது போன்று பரேலவிஸத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுக்கவில்லை. போர்க்கொடி உயர்த்தவில்லை. மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.
தப்லீக் அணியில் முன்னணி வகித்த கலீல் அஹ்மத் கீரனூரியார் நமக்கு எதிராக போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார். தப்லீக்கும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கலீல் அஹ்மத் கீரானூரி நம்மை மேடையில் பிளந்தெடுத்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!
அரைக்க் அரக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கறோம். அல்ஹம்துலில்லாஹ்!
இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.
மதுரை ஷரீஅத் மாநாடு
இப்படி நம்மைத் திட்டித் தீர்ப்பதற்காகக் கூட்டிய மாநாடுகளில் நம்மால் மறக்க முடியாத மாநாடு மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷரீஅத் மாநாடு.
1991ம் ஆண்டு, ஜூலை மாதம் 6, 7 ஆகிய திகதிகளில் இம்மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டின் தலைமைப் பேச்சாளர் கலீல் அஹ்மத் கீரானூரி, தலைப்பு, 'தராவிஹ் 20 ரக்அத்கள்.'
அப்போது அவர் பேசிய வெறிப் பேச்சை இப்போது கொஞ்சம் ஒலிபரப்புகிறோம்.
மூலையிலே வண்ணார் பள்ளியிலே (இன்றைய மஸ்ஜிதுல் முபாரக்) ஒளிந்து இருந்து கொண்டு நீ எங்களைப் பார்த்துப் பேசுகிறாயா? 'ஷரீஅத் மாநாடு எதற்காக? மதுவை ஒழிக்கவா? விபச்சாரத்தைத் தடுக்கவா? வரதட்சணையைக் கண்டிக்கவா? சாராயக் கடைகளை மூடுவதற்காகவா?' என்றெல்லாம் கேட்டிருக்கிறாயா! இதைக் கேட்பதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கின்றது. நீ முதலில் இதையெல்லாம் செய்! அப்புறம் எங்களைப் பார்த்துக் கேள் நீ!
கப்ரு அனாச்சாரத்தை நாங்கள் போய் தடுக்க வேண்டுமாம்! இவர் (பி.ஜே.) ஒரு சந்திலே ஒதுங்கியிருந்து வெளியே வராமல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பாராம்.. ஏன்? நீ போய் தடுக்க வேண்டியது தானே! எப்போதாவது தடுத்திருக்கின்றாயா? தடுக்க முயன்று இருக்கின்றாயா? அப்போது நீ வெட்டப்பட்டாயா? யாரிடம் வந்து கதை சொல்கின்றாயா?
இது கீரனூரியார் மதுரை தமுக்கம் மைதானத்தில் நின்று கொண்டு பி.ஜே.வை நோக்கிப் பேசிய பேச்சாகும். பேசுகின்ற நாள் 07.07.1991 பேசுகின்ற நேரம் இரவு சுமார் 10 மணி.
தமுக்கம் மைதானத்தில் கீரானூரியார் இவ்வாறு கொதித்தெழுந்து, கொந்தளித்து, நெருப்பு வார்த்தைகளைக் கக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்...
மேலப்பாளையத்தில் மோத்தை மீறாப்பிள்ளை தெருவில் சிப்கத்துல்லாஹ் என்பவரது வீட்டு வாசலில், 'கர்பலா' என்ற தலைப்பில் பரேலவிஸத்தை எதிர்த்து பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
முதலில் தெருவில் தான் மேடை அமைக்கப்பட்டது. மழைக்காலம்! அதனால் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கி உரிமையாளர் வந்து 'மைக் மழையில் நனையும், அதனால் வீட்டு வாசலில் மைக்கை வைப்போம்' என்று சொல்லவே நடுத் தெருவில் நின்ற மைக் வீட்டு வாசலுக்கு வருகின்றது.
ஆதனால் வீதியில் நின்ற பி.ஜே. வீட்டு வாசலுக்கு வருகின்றார். வீடு கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதனால் கிழக்கிரிருந்து மேற்கு நோக்கி நின்று பேசிக் கொண்டிருந்தார். மழை தூறிக் கொண்டிருந்ததால் வீட்டு வாசலுக்கு முன்னால் யாரும் அமரவில்லை.
எதிர் வீடுகளில் உள்ள திண்ணைகளில் தான் ஆட்கள் உட்கார்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். எதிர் வீட்டுத் திண்ணையில் உள்ளவர்கள் மட்டும் பி.ஜேஇவைப் பார்க்க முடிந்தது. தெற்கு வடக்குப் பக்கம் உள்ளவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.
அவர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு ஆள் சென்று வரும் இடைவெளி இருந்தது. அப்போது நான் வாசலுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய திண்டில் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தேன்.
எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், கடுமையான குளிர் என்பதால் அரைத் தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். இந்நேரத்தில் வடக்கில் உள்ள ஒரு சந்திலிருந்து ஒருவர், ஒரு கையில்லாதவர் தோளில் துண்டு போட்டுக் கொண்டு வருவது போல் வந்தார்.
வித்தியாசமான அவரை சற்று வியப்புடன் நான் உற்று நோக்கிப் கொண்டிருக்கும் வேளையில் ஒரு நொடிப் பொழுதில் வீட்டு வாசலுக்கு வந்து, ஒரு வீச்சரிவாளை எடுத்து பி.ஜே.யின் கையில் வீசுகின்றார். அதே வேளையில் எனக்கு அருகில் நின்ற இன்னொருவர் மற்றொரு அரிவாளைத் திருப்பிப் பிடித்து என் இடது கையை தாக்குகின்றார். இவ்வாறு அவர் என்னை தாக்குவதற்குக் காரணம், பி.ஜே.வை வெட்ட வந்த முதலாமவரை நான் தடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான். அரிவாளின் மறுபக்கத்தால் என் கையை தாக்கியதால் என் கை வீக்கத்தில் அப்படியே உப்பி விடுகின்றது.
பி.ஜே.யின் இடது கையில் வெட்டிய பிறகு, அவரது கழுத்தை நோக்கி மீண்டும் அரிவாளை வீசுகின்ற போது, பி.ஜே. தன் வலது கையால் மைக்கின் கம்பியைத் தூக்கி தடுக்கின்றார். மைக் ஸ்டாண்டின் மீது அரிவாள் பட்டவுடன் ஒரு சப்தம் எழுகிறது.
அப்போத தான் அதுவரை என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்கள், அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வருவதற்குள்ளாக வந்த இருவரும் ஓட்டமெடுக்கிறார்கள். ஒரு சிலர் அவர்களைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்து ஓடுகின்றார்கள். ஆனால், அவர்கள் தப்பி விடுகின்றார்கள்.
அல்லாஹ் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யார் தடுக்க முடியும்? தெருவின் மத்தியில் போட்ட மேடையில் பேசவிருந்த பி.ஜே. தூறல் விழுந்த காரணத்தால் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு உரையாறிறனார். அது தான் அவருக்குப் பாதுகாப்பானது. அதாவது வெட்டுக் கையுடன் நின்றது. அரிவாளை கழுத்தை நோக்கி லாவகமாக வீசுவதற்கு வழியில்லாமல் அந்த இடம் குறுகிய இடமாக அமைந்து விட்டது. அதனால் வந்தவர்கள் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் அவர் தெருவில் நின்று கொண்டு பேசியிருந்தால் வந்தவர்கள் கனகச்சிதமாக தலையைக் கையோடு கொண்டு சென்றிருப்பார்கள். அல்லாஹ்வின் அற்புதக் காவல், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல், கழுத்துக்கு வந்தது கையோடு போனது.
கையில் இரத்தம் பீறிட்டவாறு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.ஜே. அனுமதிக்கப்படுகின்றார். மரத்துப் போவதற்காக ஊசிகள் ஒன்றுக்கு இரண்டு போட்டும் காயத்தின் ஆழம் காரணமாக வேதனையில் அவர் விடிய விடியத் தூங்கவில்லை.
இந்தக் கொலை முயற்சி பற்றி காவல்துறையில் நான் புகார் தெரிவித்தேன். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆள் தான் பிடிபடவில்லை. நான் சாட்சி சொல்லி விடக் கூடாது என்பதற்காக எனக்கு ஒரு மொட்டைக் கடிதமும் வந்தது. அதில், 'உலகத்தில் நீ எந்தப் பகுதியில் இருந்தாலும் உன்னை வெட்டாமல் விட மாட்டேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே பி.ஜே.யும் சிகிச்சை முடிந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால் குற்றவாளிகள் பிடிபடவில்லை. பரேலவிகளின் செல்வாக்கு! பலமான பின்னணி!
இந்தக் கொலை வெறித் தாக்குதலின் இயக்குனராகச் செயல்பட்டவர் அடுத்த ஆண்டு அதே ஜூலை 7ம் திகதி அவரது எதிர் கோஷ்டியினரால் கொல்லப்பட்டார்.
இதை இங்கே குறிப்படக் காரணம், பரேலவிஸத்தின் வேகத்தையும் வீரியத்தையும் அதன் விஷத் தன்மையையும் விவரிப்பதற்காகத்தான்.
அந்தப் பரேலவிஸம், அதன் ஆதரவாளர்கள் மேலப்பாளையத்தில் பி.ஜே.யைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று கொடுவாளைத் தூக்கி வீசும் போது தான் கீரனூரியார் தமுக்கம் மைதானத்தில், 
வெட்டப்பட்டாயா? கொல்லப்பட்டாயா?... என்ற வசனங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் கேட்டது போல் கப்ரு அனாச்சாரங்களை எதிர்த்து வெறும் சத்தம் மட்டும் போடாமல் இரத்தமும் சிந்திக் கொண்டிருந்தார்.
இதுபோன்று இந்த ஏகத்துவத்தல் இணைந்த எத்தனையோ சகோதரர்கள் இரத்தம் சிந்திக் கொண்டும், பொருள் இழப்பைச் சந்தித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்தப் பரேலவிஸ எதிர்ப்புப் போராட்டத்தல் சிறைவாசம் அனுபவித்தவர்கள், ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், காவல்துறையின் சித்ரவதைக்கு ஆளானவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அல்லாஹ்வின் பள்ளிவாசலில் கூட இதுவரை, இன்று வரை எத்தனையோ ஊர்களில் ஏகத்துவ சகோதரர்கள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் கலீல் அஹ்மத் கீரனூரி போன்றவர்கள் தான்.
மேலப்பாளயத்தில் பி.ஜே. வெட்டப்பட்ட பிறகு தான் நமது ஜமாஅத்திற்கென்று தனிப் பள்ளிவாசல் மஸ்ஜிதுர்ரஹ்மான் என்ற பெயரில் கண்டோம். இன்று அந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகை நடத்தும் போது சாதாரணமாக 10,000 பேர் கலந்து கொள்கின்றார்கள். 2,000 பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! திருநெல்வேலி மாவட்டத்திலேயே அதிகமான ஆண்களும் பெண்களும் பங்கெடுக்கும் பெருநாள் தொழுகை இது தான் என்று பத்திரிக்கைகள் வர்ணிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அதுபோல் நமது பிரச்சாரக் கூட்டங்களிலும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகின்றது.
அன்று திடலில் நின்று பேசிய கீரனூரி போன்றோர் இன்று பள்ளி வாசல் வளாகத்திற்குள் மட்டும் பேசி விட்டுச் செல்லும் நிலை! ஆனால் இன்னும், இன்றும் இந்த ஊரில் பரேலவிஸத்தை எதிர்த்துப் பேசவில்லை. இவ்வாறு நாம் குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம், இங்க அவரை வைத்துக் கூட்டம் நடத்துபவர்கள் பக்கா பரேலவிகள், முரீது ஏஜெண்டுகள்.
பரேலவிஸத்தை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் இப்போதாவது இவர்கள் மூச்சு விட ஆரம்பித்துள்ளார்களே! அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
நன்றி - onlinepj 
0 comments

தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 9)


நன்றி அறிவிப்புக் கூட்டம்

இதனிடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வீரியமிக்க போராட்டங்களால் இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகிவிடும் என்ற செய்தி கசிய ஆரம்பித்தவுடன், டிசம்பருக்குள் இடஒதுக்கீட்டை அறி விக்கவில்லையென்றால் போராட்டம் என்ற கே­க்கூத்தான அறிவிப்பை தமுமுக வெளியிட்டது. அதுவரை மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிக் கொண்டிருந்த திமுகவின் சிறுபான்மைப் பிரிவினர் தமுமுக, இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியிடப்பட் டால் அதன் பலன் தவ்ஹீத் ஜமாஅத் திற்குச் சென்று விடும் என்று பயந்து இப்படியொரு அறிவிப்பைச் செய்துள்ளனர் என்று மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர்.

இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியான வுடன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், வரும் நாடாளுமன்றத் தேர்த­ல் தனது ஆதரவை திமுகவுக்கு அளிப்பதாக வாக்குறு தியும் கொடுத்து விட்டு வந்தனர். இதிலும் தங்களின் கேடுகெட்ட அரசியலை நடத்த தமுமுக முன் வந்தனர்.


தவ்ஹீத்வாதிகள் இருந்தவரைதான் தமுமுக சார்பில் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் நடைபெற்றன. தவ்ஹீத் வாதிகளைக் கழற்றிவிட்டபின் இடஒ துக்கீட்டிற்காக உருப்படியான எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை என் பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்தபின் வாரியப் பதவி பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்ததால், சிறுபான்மைப் பிரி வின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கை சுத்த மாக வீரியமிழந்தது. இதையெல்லாம் மக்களுக்கு மறக்கடிக்க வேண்டும் என் பதற்காக கருணாநிதிக்கு நன்றி அறிவிப் புக் கூட்டத்தை மானங்கெட்டுப் போய் நடத்தினார்கள். மாநில அரசுக்கு அதிகா ரமில்லை என்றார்கள்.

ஜெயல­தா ஒரு ஆணையத்தை அமைத்தபோது வெற்றுப் பேப்பர் என் றார்கள். கருணாநிதி அந்த ஆணை யத்தை மாற்றியமைத்தபோதும் இதற் கும் இடஒதுக்கீட்டிற்கும் சம்பந்த மில்லை என்றார்கள். அந்த ஆணை யத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு இடஒதுக்கீட்டை வழங் கியபோது, கருணாநிதியின் அறிவிப்பு செல்லாது என்று அறிக்கை விட்டு விட்டு ஒதுங்க வேண்டியதுதானே? அவ்வாறு செய்யாமல் கோடிக்கணக்கில் செலவு செய்து நன்றி அறிவிப்புக் கூட்டம் எதற்காக நடத்த வேண்டும்?

அப்போது அதிகாரமில்லை என்று சொன்னது, வாரியம் தந்த வள்ளலைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக! இப் போது நன்றி அறிவிப்புக் கூட்டம் நடத் துவது, நாங்கள்தான் வாங்கித் தந்தோம் என்று கூறி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்காக!


ஏமாற்றமளித்த இட ஒதுக்கீடு

இப்படிப்பட்ட துரோகங்களையெல் லாம் தாண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் காரியம் முடிந்து விடவில்லை.

கருணாநிதி அறிவித்த இடஒதுக்கீட் டில் குளறுபடிகள் இருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தமிழக அரசுத் தேர் வாணையம் வெளியிட்ட விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவிகித இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட வில்லை என்பதைக் கண்டு தவ்ஹீத் ஜமாஅத் கொதித்தெழுந்தது.

மூன்றரை சதவிகிதம் வழங்கப்பட வில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்து, சென்னையில் ஒரு கண் டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கண்டனப் பொதுக் கூட்டங்களை நடத்தி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

ஆனால் ஏற்கனவே இடஒதுக்கீட்டுக் கொள்கையில் துரோகமிழைத்த தமுமுக இந்த விஷயத்திலும் தனது சமுதாய விரோதப் போக்கைத் தொடர்ந் தது. பதவியையும், பதவி தந்தவர்களை யும் காப்பாற்றுவதற்காக வாரியடித்துக் கொண்டு, வரிந்து கட்டிக் கொண்டு, இந் தக் குளறுபடிகளை நியாயப்படுத்தினார்கள். 

ரோஸ்டர் முறை, புரோட்டா மாஸ்டர் முறை என்று வியாக்கியானம் கொடுத்தார்கள். படிப்பறிவில்லாததால் இதுவெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின ருக்குத் தெரியவில்லை என்று தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் நையாண்டி பேசினார்கள். ஆனால் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இடஒதுக்கீட்டில் குளறு படிகள் நடந்திருப்பது உண்மைதான் என்று கருணாநிதியே முரசொலியில் எழுதி, இவர்களின் முகத்தில் கரியைப் பூசினார். இவர்களது சமுதாய துரோகத் தைத் தோலுரித்துக் காட்டினார்.

ஆள்பவரே சொல்­விட்ட பிறகு இந்த அடிமைகள் என்ன செய்ய முடி யும்? படிப்பறிவில்லாதவர்கள் சொன்ன அதே குற்றச்சாட்டை, முதல்வரிடம் சென்று கோரிக்கையாக வைத்து விட்டு, மானங்கெட்டுப்போய் அதைப்பத்திரிகைச் செய்தியாகவும் அளித்தார்கள். 

இடஒதுக்கீட்டில் உள்ள குளறுபடிக ளைச் சரி செய்ய வேண்டும் என்று இந் தப் படித்த(?) அறிவாளிகள் கருணாநிதி யிடம் சொல்­ விட்டு வந்தார்கள். இவர் களது அடிமைத்தனத்தையும், பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் போக்கையும் பார்த்து, ''நாங்க எவ்வளவோ பரவாயில்லைப்பா!'' என்று ஒரு லீக் பிரமுகர் சொன்னதுதான் இதில் வேடிக்கை!

உண்மையில் ஏனைய அரசியல்வாதி கள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண் டும். அந்த அரசியல்வாதிகள் இவர்க ளிடம் தோற்றுப் போய்விட்டார்கள் என்றே கூறவேண்டும்.

ஆனால் மக்கள் உண்மை நிலை யைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டில் தவ்ஹீத் ஜமாஅத்தைத் தவிர்த்து வேறு யாரும் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதை நன் றாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்தக் குளறுபடிகள் களையப்படுவதற்காக தவ்ஹீத் ஜமாஅத் காத்திருக்கின்றது. தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்குள் அவ் வாறு களையப்படவில்லை எனில், சட்ட மன்ற முற்றுகைக்கான தேதி மாநாட்டில் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு, வல்ல ரஹ்மான் ஏற்படுத்திய நிர்ப்பந்தத் தால் சமுதாயப் பணிக்காகக் களமிறங்கிய தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு துரோகங்களை, குழி பறிப்புகளைத் தாண்டி இன்றுவரை களத்தில் நிற்கின்றது. இவ்வாறு நிற்பதற்குக் காரணம், நீர்த்துப் போகாத அதன் நிலைபாடு! நிறம் மாறாத நெருப்புக் கொள்கை!

இத்தனையும் எதற்கு? நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தேர்த­ல் சீட் வாங் கவா? இல்லை! இந்தச் சமுதாயப் பணிகளைக் கண்டு யாராவது தவ்ஹீத் கொள் கையை ஏற்றுக் கொள்ளமாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில்தான்.


இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்புதான்!

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதைதான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப் போக்கில் தவ்ஹீத் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுப வித்துவிட்டு, சாறை உறிஞ்சிவிட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள்தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை நிறுவினர்.

இதுதான் நம்மைச் சிந்திக்க வைத்தது. சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண் டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத் தில் கொண்டு சமுதாயப் பிரச்சினைகளை மறுத் தார்கள். சமுதாயத்துக்கென்று ஒரு அமைப் பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைச் சாத்துகிறார்கள். இனிமேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமு தாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத் திற்கு முடிவுரை எழுதிவிட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அதுதான் இன்று நம்மை அரவணைத்துக் கொண் டிருக்கின்ற ஓர் இயக்கம். அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சினையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக் கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண் டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

இந்தக் கூட்டணிகளின் சதித்திட்டங்களை யெல்லாம் மீறி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த (மே 10,11) எழுச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்த இயக்கம் மேலும் வலுப்பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவ னுக்கே!  

முற்றுப் பெற்றது....

நன்றி -tntjdubai  
0 comments

தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 8)


கையிலே காசு! வாயிலே தோசை!

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிளில் இடஒதுக்கீட்டை யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.

அதிமுக முத­ல் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தையெல் லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீ­ப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது.

மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இடஒதுக்கீடு அளித்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.

இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்த­ல் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்த­ல் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில் லாத வெற்றி கிடைத்தது.

திமுகவின் கோட்டை என்று கருதப் பட்ட சென்னையை தனது பிரச்சாரத் தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகர்த்தெறித்தது. முஸ்­லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டி யிட்ட கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலி ­ன் ஆகியோர்கூட இழுபறி வெற்றியைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்ப தற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் வ­மைலியான பிரச்சாரம்தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்

ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத்தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயல­லிதா இந்தப் பணியைச் செய்தபோது, வெற்றுப் பேப்பர் என்று கே­யும் கிண்டலும் செய்த தமுமுக, இப்போது அதை வரவேற்றது.

மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்­லிம் நீதிபதியை நியமித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்­லிம்கள் யாரும் இடம் பெறவில்லை.

மேலும் இந்த ஆணையம் தனது அறிக் கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார். ஆனால் கருணாநிதி ஆணையத்தின் காலக்கெடுவை இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்து களத்தில் குதித்தது தவ்ஹீத் ஜமாஅத்துதான்.

கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழ கமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின்படி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப்போகும் வரை காத்திருந்தோம்.

கருணாநிதி காக்க வைத்து கழுத்தறுப்பதில் வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித்தான் பெறவேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று குடந்தைப் பேரணியை நினைவூட்டும் வித மாக, தமிழகமெங்கும் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

அந்தப் போராட்டத்திலேயே அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இட ஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4 ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர். காவல் துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக் கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை.

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத்துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்­லி சுற்றுலா

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிவிட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய் விடும். ஆளுங்கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்று பயந்த தமுமுக, தனது சுய லாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழி பறிக்கும் காரியங்களில் இறங்கியது.

இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இடஒதுக்கீடு கேட்கிறார்கள் என்று நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்­யில் போய் இடஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது.

ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்­லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்­லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைத்த பிரமுகர் கள்கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு குட்டி அணி வகுப்பை நடத்திவிட்டு, டெல்­லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டனர்.

ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கிவிட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அதுபோன்று இவர்களும் வாரியத்தை வாங்கிவிட்டு வாய்பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய்பொத்திக் கிடந்தால்கூடப் பரவா யில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டையே ப­ கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

 
இடஒதுக்கீட்டிற்கான இறுதி யுத்தம் - சட்டமன்ற முற்றுகை

பதவிக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற கொள்கையில் அன்றி­ருந்து இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இடஒதுக்கீட்டிற்காக இறுதிவரை போராட முன் வந்தது. அதன் உச்சக் கட்டமாகத்தான் சட்டமன்ற முற்றுகையை அறிவித்தது. சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சமயத்தில் சட்ட மன்றத்தை முற்று கையிடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. 

இனியும் தாமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உணர்ந்து இடஒதுக்கீட்டை அறிவிக்க முன் வந்தார். கனிமொழி மூலமாக இடஒதுக்கீட்டிற்கான சாத்தியக் கூறுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. அதன்படி மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க முன்வந்தார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

நன்றி - tntj dubai 

0 comments

தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 7)


இதர பிரச்சனைகளுக்காக எழுச்சிப் போராட்டங்கள்

கடந்த காலத்தைப் போன்றல்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீத் கொள்கை! வீறு கொண்டு எழ வைத்தது. முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்டபோது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீத் கொள் கைதான். 


தடையைத் தாண்டிய தமுமுக

இக்கட்டத்தில்தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையி­ருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்­யிலும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொ­க்கச் செய்தது.

இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமானது.




நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சையில் இடஒதுக்கீடு கோரிக்கையை வ­லியுறுத்தி தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீத்வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப்போட ஆரம்பித்தனர்.

அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர் களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவு களை இவர்களும் காணத்துவங்கினர்.

இதற்கு முந்தைய சமுதாய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்த­ல் போட்டி என்ற நிலைபாடுதான். அதனால்தான் தேர்த ­ல் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைபாட்டைக் கடைப்பிடிப்பதில் பீ.ஜே. கண்ணும் கருத்து மாக இருந்தார்.


1.  தேர்த­ல் பங்கெடுப்பதைத் தடுக்கும் பி.ஜே.யின் நடவடிக்கைகள்.

2 . தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைக் காக்க பீ.ஜே. கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு.

3.  தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீத் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப்போனால் தவ்ஹீத் எதிர்ப்புணர்வு ஆகியவை ஏற்கனவே உரச­ல் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீத்வாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீத் தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.

தவ்ஹீத்வாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை!

இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக உருவெடுத்தது.

இந்த இயக்கத்தில் கண்தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீத் என்ற கண்ணுக்குத்தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!

எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீத் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்தச் சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீத் ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.


குலுங்கியது கும்பகோணம்

''குடந்தை குலுங்கட்டும்'' என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன் வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?

தவ்ஹீத் என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சினைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீத்வாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகி றேன் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.

தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள்தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார் கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.

எதற்கு வாரியம் வாங்குவதற்காகவா? இலட்சக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை. தமுமுக மறந்து விட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய்ப் பெருக்கெடுத்தனர். முத­ல் ஒரு கட்சியில் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்ட வில்லை. 



இன்ஷா அல்லாஹ் தொடரும்...

0 comments

தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 6)


1. ஜாக்கில் உள்ள கொள்கைவாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.

(நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்ற நிலை இருந்தது. பீ.ஜே. உட்பட அனைவருக்கும் இந்த கதி! எனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது)

2. நிர்வாக சீரமைப்பு

இன்னும் இதுபோன்ற சில நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த எஸ். கமாலுத்தீன், நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு பீ.ஜே. நாங்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்படமாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். 


காரணம், அடிக்கடி எஸ். கமாலுத்தீன் இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு மாறு செய்வார். வாக்கு றுதியை மீறுவார். எனவே தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பீ.ஜே. கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


ஆறப்போட்டு நாறடித்தல்

ஆறப்போட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ்! ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ். எஸ். கமாலுத்தீன்தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத் தீன் மதனி வழக்கம்போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம் முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப்பூசினார்.

இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீத் பணி தொடர்ந்தது. தவ்ஹீத் இயக்கத்தில் இருந்துகொண்டே சத்தியப் பணி யையும் சமுதாயப் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டும் என்ற எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடி வாதத்தாலும், வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டுவிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு.

இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாறைப் பார்ப்போம்.


அவசரப் பிரசவம்

தமுமுக ஓர் அவசரப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதுபோன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படை யில்தான் தேர்த­ல் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.

இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுக மற்றும் அடுத்த கட்டக் கூட்டங்களிலும், ''நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வரமாட்டோம்'' என்று வாக்குறுதி அளித் தனர். ''எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களைச் செருப்பால் அடியுங்கள்'' என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குர­ல், உச்சஸ்தாயில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவியது.


தவ்ஹீத் ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் பீ.ஜே. ஒரு தீவிர தவ்ஹீத் வாதியாக இருந்தும், (தமுமுக வளர்ச்சிக்கு தவ்ஹீத் ஒருபோதும் தடைக் கல்லாக இருக்கவில்லை) தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சினைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.


தனி இட ஒதுக்கீடும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணி வேராகவும் அமைந்தது இட ஒதுக்கீடு கொள்கைதான். பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப்படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் தமுமுக வைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.

இந்த இடஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், ''இது சாத்தியமா?'' என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குக ளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.


தவ்ஹீத் தாயீக்கள்தான் தமுமுக பேச்சாளர்கள்

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்றுதான்.

இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீத் தாயீக்கள்தான் முதலீடானார்கள். அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.


விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி

இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதேமில்லத்திற்கு மணி மண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்­ம் சமுதாயத்திற்குச் செய்த மிகப் பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட காலம் அது!

இப்படிப்பட்ட காலத்தில்தான் விஜய் டி.வி.யில் பீ.ஜே.யின் பேட்டி ஒளிபரப்பானது. ''மணிமண்டபங்கள் கட்டுவதால், காயிதேமில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள். 

வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மணிமண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய் விடுமா? எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்'' என்று ஆணியடித்தாற்போல் பீ.ஜே. கூறியபோது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் என்பவர் அதிர்ந்து போனார். 

முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போதுதான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள்தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம்போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.

தவ்ஹீத் பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொ­க்க ஆரம்பித்தன.


பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை

இடஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒ­த்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்ட னர்.

அப்போதுதான் தவ்ஹீத் பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், 'யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காக போரிட்டுக் கொல்லப்படுகின்றானோ அவன் ஷஹீத் ஆவான்' என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியி­ருந்து மீட்டனர்.

இதன் விளைவாய் மக்கள் கடல் அலைபோல் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொ­த்தது.


முதல்வர் வீட்டு முற்றுகை

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்று கையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பி யாக்கள் நடத்தப்பட்டன.

அந்த தர்பியாக்களில் மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டியிட வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றி போதிக்கப்பட்டது. அதனால்தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீத்வாதிகள் தயாராகினர். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப் பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீதுதான். தவ்ஹீத் இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டிருக்காது.

முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையணைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர்; விடுவிக் கப்பட்டனர். இப்படிப் பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கிவைக் கப்பட்டது.

இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங்பரிவாரங்களின் பட்டிய­ல் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

0 comments

தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 5)


முதல் மற்றும் கடைசி உண்ணாவிரதப் போர்

மீண்டும் மக்கள் சக்தியைத் திரட்டி ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜாக் தலைமையிடம் இது தொடர்பாக பீ.ஜே. தொடர்பு கொண்டார். கலந்து பேசினார்.

ரிபாயியைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், காவல்துறை அதிகாரி இந்திர ஜித் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உண்ணாவிரதம் நடத்துவதற்கு கமாலுத்தீன் மதனியிடம் பீ.ஜே. அனு மதி கேட்கின்றார். பலத்த யோசனை, தயக்கம், தடுமாற்றத்திற்குப்பின் அனுமதி கிடைக்கின்றது.


தலைவர் என்ற முறையில் தவ்ஹீத் மக்களைத் திரளுமாறு அழைப்பு விடுங்கள். தமுமுக என்ற பெயரில் அழைத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்று பீ.ஜே. வ­யுறுத்தினார். ஆனால் கமாலுத்தீன் மதனி அதற்கு உடன்பட வில்லை. எனது தலைமையில் உள்ள மக்களை, ஹனிபாவின் பின்னால் திரளுமாறு நான் அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார். இரண்டு தலைமை ஏற்படுவதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். அப்பாவிகள் கைது செய்யப் பட்டது அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவேயில்லை.

நீங்கள் அழைப்பு விடுக்காவிட்டால், பீ.ஜே. என்ற என் பெயரிலேயே மக்களை அழைப்பேன். நீங்கள் அழைப்பு விடுக்காமலே தவ்ஹீத் சகோதரர்கள் நிச்சயம் திரளுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். தனது தலைமைப் பீடம் டம்மியாகிவிடும் என்று அஞ்சிய தால் கீழிறங்கி வந்து, ஜாக் தலைவர் என்ற பெயரில் போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அதைப் பிரசுரங்களாக வெளியிட்டோம்.

கமாலுத்தீன் மதனியின் பதவி ஆசை இப்போதுதான் தெளிவாக அனைவருக்கும் தெரிந்தது. தமுமுக என்பதற்கு தவ்ஹீத் மக்களைத் தவிர அன்றைக்கு கடுகளவு ஆதரவும் இருக்கவில்லை என்பதும் இதி­ருந்து தெளி வாகும்.

தவ்ஹீத்வாதிகளின் எழுச்சிமிகு உரையில் ஊர்கள் தோறும் தமுமுக கிளைகள் வேரூன்றின. இத்துடன் தவ்ஹீத் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களும் இயக்கத்தில் இணைந்தனர்.

இயக்கம் வளர்ந்துவிட்டபின் இனி மேல் இயக்கம் தடை செய்யப்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டு, தமுமுக வுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டபின் பீ.ஜே. அமைப்பாளர் பொறுப்பி­ருந்து விலகினார். இப்போது இருப்பவர்கள் நல்ல தலைவர்கள் கஷ்டமான காலத்தில் நான் விட்டு விட்டு ஓடவில்லை.  இனிமேல் நானில்லாவிட்டாலும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவார்கள் என்று மனம் திறந்து மடல் எழுதி, பொறுப்பிலிருந்து விலகினார். 

மாபெரும் மக்கள் இயக்கமாக ஒரு இயக்கத்தை வளர்த்துவிட்டு, அதன் முதல் நிலைத் தலைவராக இருக்கும் ஒருவர் மன நிறைவோடு ஒதுங்குவது எங்குமே நடந்திராத ஒன்று. இவர்கள் நன்றாக இயக்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று பீ.ஜே.யை இவர்கள் நம்ப வைத்திருந்தார்கள்.

ஆனால் பீ.ஜே. முழுமையாக இயக்கத்தை இவர்கள் கையில் ஒப்படைத்த பிறகுதான் இவர்கள் நயவஞ்சக வேடம் போட்டது ஒவ்வொன்றாக அம்பலமானது.

பீ.ஜே. பொறுப்பி­ருந்து விலகியது முதல், பிஞ்சிலே பழுத்த ஒருவரை ஊர்கள்தோறும் அனுப்பி, நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து தவ்ஹீத்வாதிகளைக் களையெடுத்தனர்.

தவ்ஹீத்வாதிகளுக்கும், மற்றவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டு நியாயம் கேட்டு தலைமையை அணுகினால் தமுமுக பொறுப்பில் இருப்பது என்றால் பிரச்சினைக்குரியவற்றை விட்டுவிலக வேண்டும் என்று இப்போதைய தலைவரும், செயலாளரும் எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.

பொறுப்பில் இருந்து பீ.ஜே. விலகினாலும் அமைப்புக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆலோசனை கேட்கும் போதெல்லாம் ஆலோசனை வழங்கத் தவறவில்லை. அதேசமயம் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலைபோவதைக் கவனித்து கவலைப்பட்டார். அந்த அளவுக்கு கீழ்த்தரமாகச் செல்வார்கள் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்.

ஜாக்கில் இருந்து கொண்டே, கமாலுத்தீனின் பணத்தாசை, பதவிவெறி யைக் கண்டு புழுங்கியது போன்ற நிலை ஏற்பட்டது. தவ்ஹீத் தாயிகள் மத்தியில் அதிருப்தியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட தவ்ஹீத்வாதிகளுக்கு உதவமுடியாத நிலையில் இருக்கிறோமோ என்று வேதனைப்படும் அளவுக்கு தமுமுக தவ்ஹீதுக்கு எதிராகக் காய்களைத் திட்டமிட்டு நகர்த்தி வந்தது.

உண்ணாவிரதம் சென்னை குறளகத்திற்கு எதிரில் நடைபெறுகின்றது. மக்கள் அந்தப் போராட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டனர். காவல்துறையின் கண்களை மிரளச் செய்யும் அளவுக்கு மக்கள் கூட்டம். 

ஆம்! தவ்ஹீத்வாதிகளின் கூட்டம் வந்து குவிந்தது. குறளகத்திற்கு எதிரில் குரல் கொடுத்தோம்; கைதுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவர்களில் யார் மீது கை வைத்தாலும் மக்கள் சக்தி திரளும் என்பதை ஒரு முறை அல்ல! இரண்டாவது முறையாக, வ­மையாக எடுத்துக் காட்டினோம்.

(உண்ணாவிரதம் நடத்துவது மார்க்கஅடிப்படையில் கூடுமா? என்பது விவாதப் பொருளாகி, இறுதியில் கூடாது என்று முடிவானது. இதனால் அன்றிருந்து உண்ணாவிரதத்தைக் கை கழுவி விட்டோம்.)


ஜாக் - தமுமுக உரசலும் விரிசலும்

தான் தடை செய்யப்படலாம் என்ற கவலை ஜாக்கிற்கு இருந்தது. இந்தத் தயக்கத்தை பீ.ஜே. நன்கு புரிந்து வைத்திருந்தார். அதனால்தான், தன்னால் ஜாக்கிற்கு எந்தவொரு ஆபத்தும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஜாக்கின் தலைமை நிர்வாகக் குழு பொறுப்பிருந்து விலகினார். 

(இதுவே அவருக்குப் பின்னர் பாதகமானது. அவர் வளர்த்த அந்த ஜாக் இயக்கத்தில் உறுப்பினர் உரிமைகூட இல்லாமல் பறிக்கப்பட்டது)

இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாக்கின் அரசியல், சமுதாயப் பிரிவாக தமுமுகவை செயல்படுத்திக் கொள்ளலாம். இதை வெளிப்படையாகக் கூட கமாலுத்தீன் மதனி செய்ய வேண்டியதில்லை. மறைமுகமாக அனுமதி தந்தால் போதும். அதற்காக பொறியாளர் அப்துஸ்ஸமது, குணங்குடி ஹனீபா ஆகியோர் கமாலுத்தீன் மதனியிடம் பைஅத் செய்வதற்குக் கூடத் தயாராக இருந்தார்கள். (அப்போது நாம் 'அமீர்' சித்தாந்தத்தை ஆதரித்த காலம் அது)

பீ.ஜே. உட்பட பலர் மாநில அமீரிடம் ஒரு போராட்டத்தையே நடத்தினார்கள். பலப்பல அமர்வுகள்! பலப்பல கலந்தாலோசனைகள்! பல்வேறு கட்ட முயற்சிகள்! இத்தனையும் எதற்கு? இவ்வளவு நாள் வியர்வை அல்ல! இரத்தத் துளிகளால் வளர்ந்த ஓர் இயக்கத்தை விட்டுப் பிரிந்து விடக் கூடாது என்பதற்காகவே!

ஜாக் என்ற கட்டமைப்பு வருவதற்கு முன்பே தவ்ஹீத் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக அமைந்த சகோதரர் கலீல் ரசூல் அவர்களும், நானும் தனிப்பட்ட முறையில் கமாலுத்தீன் மதனியை நாகர் கோவி­ல் போய்ச் சந்தித்தோம். நீண்ட நேரம் உரையாடினோம்; கெஞ்சினோம். கல்லும் கரையும் என்பார்கள். ஆனால் கல்மனம் கொண்ட கமாலுத்தீன் மதனி கரையவில்லை.

இதன் பின்னர் திருச்சி அரிஸ்டோ ஹோட்ட­ல் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் உள்ள தாயீக்கள் கலந்து கொண்டனர். அதில் தமுமுகவின் அப்போதைய செயல்பாடுகள் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டவை தான் என்பதற்கான அடுக்கடுக்கான சான்றுகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியிருந்து பீ.ஜே. எடுத்து வைத்தார். 

நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்குப் பிறகு கமாலுத்தீன் மதனி, நான் பரிசீலித்து விட்டுச் சொல்கிறேன் என்று இறுதியில் சொல்­விட்டுப் போனார். பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு அவர் பேசுகின்ற மேடை தோறும் தமுமுவை விமர்சிக்கலானார்.

கமாலுத்தீன் மதனி, தமுமுகவை அடாது விமர்சித்தாலும், விடாது நமது தரப்பில் சமரச முயற்சிகளை மேற்கொண்டோம். ஜாக் உருவாக்கத்தில் ஆரம்ப காலகட்டத்தில் பங்கெடுத்து, உழைப்பு தியாகங்கள் செய்த சகோதரர்களைத் திரட்டி மீண்டும் அதே அரிஸ்டோ ஹோட்ட­ல் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மக்களைத் திரட்டும் பணியில் நானும், ஸைபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ஆகியோரும் ஈடுபட்டிருந் தோம். ஊர் ஊராகச் சென்று ஆட்களை அழைத்தோம். 

அதன் பின்னர் 31.08.1997 அன்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாமல் போனது. காரணம், அப்போது மேலப்பாளையத்தில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்களில், சம்பந்தமில்லாமல் நானும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன்.

இந்தக் கூட்டத்திற்குப்பின் ஓர் இணக்கம் ஏற்பட்டது. ஜாக்கின் வேனை எடுத்துக் கொண்டு பீ.ஜே. திருச்சியில் நடைபெற்ற தமுமுக கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட அந்த இணக்கம் அற்ப ஆயுளிலேயே முடிந்து விட்டது. அந்த வருடம் ரமளான் பிறை விஷயத்தில் கமாலுத்தீன் தான்தோன்றித்தனமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஜாக் - தமுமுக உறவில் உரசல் அல்ல! விரிசல் ஏற்பட்டது.


தவ்ஹீத் பிரச்சாரக் குழு உதயம்

துளைத்தெடுத்த துரோகங்கள், வரம்பு மீறிய வாக்குமீறல்கள், அடுக்கடுக்கான அவமானங்கள் இவ்வளவுக்குப் பிறகும் இவருடன் இருக்க இயலாது என்பதைவிட இவர் நம்முடன் இருக்க விரும்பவில்லை, நம்மை வெளியேற்ற விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொண்டோம். 

வெளிநாட்டுத் தொடர்புகள், தொடர் வரவுகள் இவையெல்லாம் அவருக்குத் தன்னிறைவையும், தலைக்கனத்தையும் ஏற்படுத்தியிருந்தன. அதனால் ஜாக்கி­ருந்து வெளியேறி தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற இயக்கத் தைக் கண்டோம். 

தமுமுக என்ற அமைப்பு நம்மிடம் இருந்தாலும் தவ்ஹீதுக்கு என்று தனி அமைப்பு இருக்கட்டும் என்றெண்ணி இந்த அமைப்பைத் துவக்கினோம். அதற்கு ஹாமித் பக்ரி தலைவராக இருந்தார். அதன் பிறகு நான் (ஷம்சுல்லுஹா) தலைவராக நியமிக்கப்பட்டேன்.

இந்த அமைப்பின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, செய்யது முஹம்மது மதனீ, ஆர்.டி.ஓ.வில் பணி புரிந்த பஷீர் ஆகியோரின் முயற்சியில், நாகர் கோவில் ஹனீபா நகர் பள்ளிவாச­ல் ஒரு சமரசக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டது. இதை சகோதரர் எம்.எஸ். சுலை மான் முன்னின்று ஏற்பாடு செய்தார்.

இந்த சமரசக் கூட்டத்திற்கு வர மாட்டேன் என்று கமாலுத்தீன் முரண்டு பிடித்தார். கடைசியில் ஒருவாறாக அவரைப் பள்ளியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

இறுதியில் பீ.ஜே. ஒரு சில கோரிக் கைகளை அல்லது நிபந்தனைகளை முன் வைத்தார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger