தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 8)


கையிலே காசு! வாயிலே தோசை!

இன்றைய ஆளும் திமுக, அன்றைய ஆளும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிளில் இடஒதுக்கீட்டை யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவு என்று இரு கட்சிகளையும் சம தூரத்தில் வைத்திருந்தோம்.

அதிமுக முத­ல் பதிலளித்தது. ஆந்திர மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நீதிமன்றம் நிறுத்தி வைத்த கசப்பான அனுபவத்தையெல் லாம் கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடு கோரிக்கையைப் பரிசீ­ப்பதற்கான ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் நீதிமன்றம் தலையிடாது.

மேலும் இந்த ஆணையம் பரிந்துரைத்தால் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இடஒதுக்கீடு அளித்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். கும்பகோணம் பேரணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இது அமைந்தது.

இதன் அடிப்படையில் சட்டமன்றத் தேர்த­ல் அதிமுகவுக்காக உழைத்தோம். தேர்த­ல் அதிமுக தோற்றாலும், திமுகவுக்குப் பெரும்பான்மை பலமில் லாத வெற்றி கிடைத்தது.

திமுகவின் கோட்டை என்று கருதப் பட்ட சென்னையை தனது பிரச்சாரத் தின் மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தகர்த்தெறித்தது. முஸ்­லிம்களின் வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் போட்டி யிட்ட கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலி ­ன் ஆகியோர்கூட இழுபறி வெற்றியைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இப்படி ஒரு தொங்கல் வெற்றி கிடைப்ப தற்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் வ­மைலியான பிரச்சாரம்தான் காரணம் என்பதை திமுகவே உணர்ந்தது.

திமுக ஆட்சியும் இட ஒதுக்கீடும்

ஆட்சிக்கு வந்ததும் இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்த்தோம். தானைத் தலைவர் கருணாநிதியும் ஆணையத்தைத்தான் அறிவித்தார். அன்றைய முதல்வர் ஜெயல­லிதா இந்தப் பணியைச் செய்தபோது, வெற்றுப் பேப்பர் என்று கே­யும் கிண்டலும் செய்த தமுமுக, இப்போது அதை வரவேற்றது.

மேற்படி ஆணையத்தில் ஜெயலலிதா ஒரு முஸ்­லிம் நீதிபதியை நியமித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்த ஆணையத்தில் முஸ்­லிம்கள் யாரும் இடம் பெறவில்லை.

மேலும் இந்த ஆணையம் தனது அறிக் கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஓராண்டு என்று நிர்ணயித்திருந்தார். ஆனால் கருணாநிதி ஆணையத்தின் காலக்கெடுவை இரண்டு ஆண்டுகளாக மாற்றினார். இதை எதிர்த்து களத்தில் குதித்தது தவ்ஹீத் ஜமாஅத்துதான்.

கருணாநிதியின் இந்தக் காலம் தாழ்த்தும் முயற்சியைக் கண்டித்து தமிழ கமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பெரும் மக்கள் கூட்டம் திரண்டது.

இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஆணையத்தின் அறிக்கை தாக்கல் பணி நடைபெற்றது. அதில் கூறப்பட்ட பரிந்துரையின்படி இடஒதுக்கீடு அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். கண்கள் பூத்துப்போகும் வரை காத்திருந்தோம்.

கருணாநிதி காக்க வைத்து கழுத்தறுப்பதில் வல்லவர். அதனால் இவரிடம் அமைதி காத்தால், இஸ்லாமியர்களுக்கு இதயத்தில் இடஒதுக்கீடு எப்போதும் உண்டு என்று வசனம் பேசியே ஆட்சிக் காலத்தைக் கடத்தி விடுவார். அதனால் இவரிடம் போராடித்தான் பெறவேண்டும் என்று முடிவெடுத்தோம். அதன்படி 2007 ஜனவரி 29 அன்று குடந்தைப் பேரணியை நினைவூட்டும் வித மாக, தமிழகமெங்கும் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தினோம்.

அந்தப் போராட்டத்திலேயே அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் என்று அறிவித்தோம். அதன் பிறகும் இட ஒதுக்கீடு என்பது கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

சிறை நிரப்பும் போராட்டம்

மூச்சும் இல்லாமல், பேச்சும் இல்லாமல் கிடந்த இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு உயிர் கொடுக்கும் விதமாக, வாழ்வுரிமை மாநாடு நடைபெற்ற தினமான ஜூலை 4 ம் தேதியைத் தேர்ந்தெடுத்து அன்று சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினோம். ஆண்களும் பெண்களும் வந்து குவிந்தனர். தாங்கள் பெற்ற பச்சிளம் குழந்தைகளுடன் வந்து குவிந்தனர். காவல் துறை வேனில் தொட்டில் கட்டித் தங்கள் குழந்தைகளைத் தூங்க வைத்த வரலாறு தமிழகத்தில் இதுவரை எந்தவொரு இயக் கமோ கழகமோ கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை.

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு சிறை நிரப்பும் போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் நடத்தியதில்லை என்று உளவுத்துறையினர் வியக்கும் அளவுக்கு மக்கள் சிறை செல்லத் துணிந்தனர்.

டெல்­லி சுற்றுலா

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதே வீரியத்துடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாக மாறிவிட்ட தமுமுக, திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டிருந்தது.

திமுக ஆட்சியை எதிர்த்துப் போராட்டம் நடத்தினால் வாரியப் பதவிகள் வாய்க்காமல் போய் விடும். ஆளுங்கட்சியின் கூட்டணி என்ற பெயரில் நடத்தும் அடாவடிகளுக்கு ஆப்பு வந்து விடும் என்று பயந்த தமுமுக, தனது சுய லாபங்களுக்காக சமுதாயத்திற்குக் குழி பறிக்கும் காரியங்களில் இறங்கியது.

இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு, மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை என்று மனசாட்சியை விற்று மடமை வாதம் பேசியது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படிப்பறிவில்லாமல் மாநில அரசிடம் போய் இடஒதுக்கீடு கேட்கிறார்கள் என்று நம்மைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தது. கருணாநிதி அரசைக் காப்பாற்றுவதற்காக, நாங்கள் டெல்­யில் போய் இடஒதுக்கீடு கேட்கப் போகிறோம் என்று மாய்மாலம் செய்தது.

ஊரான் வீட்டுப் பணத்தில் டெல்­லிக்கு உல்லாசப் பயணம் சென்றது. டெல்­லி சுற்றுலா சென்று மத்திய அரசை ஏதாவது அறிவிக்கச் செய்ததா? என்றால் ஒன்றுமில்லை. அழைத்த பிரமுகர் கள்கூட கல்தா கொடுத்தார்கள். ஒரு குட்டி அணி வகுப்பை நடத்திவிட்டு, டெல்­லியில் பேரணி நடத்தியதாக பீற்றிக் கொண்டனர்.

ஏற்கனவே உள்ள சமுதாய இயக்கங்கள் ஆளுங்கட்சியிடம் ஒரு சில சீட்டுக்களை வாங்கிவிட்டு, தன்மானத்தை இழந்து பிணமானார்கள் அல்லவா? அதுபோன்று இவர்களும் வாரியத்தை வாங்கிவிட்டு வாய்பொத்திக் கிடக்கின்றார்கள். இவர்கள் வாய்பொத்திக் கிடந்தால்கூடப் பரவா யில்லை. வாரியப் பதவியைப் பெறுவதற்காக சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான இடஒதுக்கீட்டையே ப­ கொடுக்கத் துணிந்து விட்டார்கள்.

 
இடஒதுக்கீட்டிற்கான இறுதி யுத்தம் - சட்டமன்ற முற்றுகை

பதவிக்காக யாரிடமும் கையேந்துவதில்லை என்ற கொள்கையில் அன்றி­ருந்து இன்றுவரை உறுதியாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், இடஒதுக்கீட்டிற்காக இறுதிவரை போராட முன் வந்தது. அதன் உச்சக் கட்டமாகத்தான் சட்டமன்ற முற்றுகையை அறிவித்தது. சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் சமயத்தில் சட்ட மன்றத்தை முற்று கையிடுவோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. 

இனியும் தாமதிக்க முடியாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி உணர்ந்து இடஒதுக்கீட்டை அறிவிக்க முன் வந்தார். கனிமொழி மூலமாக இடஒதுக்கீட்டிற்கான சாத்தியக் கூறுகளை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்தது. அதன்படி மூன்றரை சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க முன்வந்தார். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

நன்றி - tntj dubai 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger