தாருஸ் சுன்னாவுடனான தவ்ஹீத் ஜமாத்தின் விவாத ஒப்பந்தம் – நடந்தது என்ன?

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தாருஸ் சுன்னா அல் இஸ்லாமியா என்ற அமைப்பிற்கும் இடையில் 27.12.2012 அன்று விவாத ஒப்பந்தம் செய்வதாகவும், ஒப்பந்தம் சரியாக 8.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பதும் கடிதப் பரிமாற்றத்தின்படி இரு தரப்பும் ஒத்துக் கொண்ட செய்தி. கொழும்பில் இருந்து பயணித்து காலை 8.30 மணிக்கு சரியாக ஒப்பந்தம் நடக்கும் இடத்திற்கு நமது குழு சென்று விட்டது.(செல்லும் வழியில் இரவு 10.50 அளவில் தனமல்வில எனும் இடத்தில் வைத்து எங்கள் வாகனம் பாரிய விபத்தை சந்தித்தது.)
விவாத ஒப்பந்தத்திற்கு எங்கு வர வேண்டும் என்று கடிதத்தில் கேட்ட நேரம், ‘தாருஸ் சுன்னா’ வளாகத்திற்கு வாருங்கள் என்று எழுதியிருந்தார்கள். வளாகத்திற்கு சரியாக 8.30 மணிக்கு சென்று பார்த்தால் ‘தாருஸ் சுன்னா’ சார்பாக 03 நபர்கள் அவர்களது பள்ளிவாசலில் இருந்தார்கள்.   ஆனால் ஒப்பந்தத்திற்கு எந்த ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை. ஒப்பந்தத்திற்கு வாருங்கள் என்று அழைத்தார்கள் கொழும்பில் இருந்து பல கஷ்டங்களுக்கும் மத்தியில் நாம் விவாத ஒப்பந்தத்திற்கு சென்று சேர்கிறோம். ஆனால் அவர்களோ கல்யாண வீட்டில் காலை சாப்பாடு சாப்பிட வந்தவர்களைப் போல் கொஞ்சம் கூட பொறுப்புணர்வில்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒப்பந்தம் என்றால் என்னவென்பதையும், நேரத்தின் முக்கியத்துவத்தையும் அவர்களுக்கு உணர்த்திவிட்டு மீண்டும் சரியாக 9.30 மணிக்கு வருவோம். ஏற்பாடுகளை செய்து வையுங்கள் என்று கூறி நமது குழு திரும்பிச் சென்றது.
சரியாக 9.30 மணிக்கு மீண்டும் வந்து நேர்ந்த போது அப்போதும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்கள். பின்னர் சரியாக 9.40 க்கு ஒப்பந்தம் ஆரம்பமாகியது.
ஒப்பந்தம் ஆரம்பம் :
ஆரம்பமாக விவாத தலைப்புகள் பற்றி பேசப்பட்டது. அதில் எங்களுக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள மார்க்கப் பிரச்சினை சூனியம் மாத்திரமல்ல. சூனியத்துடன் சேர்த்து இன்னும் ஏராளமான விஷயத்தில் நாம் வேறுபடுகின்றோம். ஆகவே எமக்கும் உங்களுக்கும் இடையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் இப்போது தலைப்பிட்டு ஒப்பந்தம் போட்டு நேரம் எடுத்து விவாதிப்போம். என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
முதலில் இதை அடியோடு மறுத்த தாருஸ் சுன்னா அமைப்பினர் பின்பு ஒத்துக் கொண்டார்கள். மீண்டும் அடுத்த தடவை அதை மறுக்க ஆரம்பித்தார்கள்.
ஒரு முறை சரி என்பார்கள், மறு முறை முடியாது என்பார்கள். ஒரே தரப்பாக கலந்து கொண்ட பலருக்கு மத்தியில் பலத்த வேறுபாடுகள் காணப்பட்டது. ஒருவர் சரி என்பார் அதை அவருக்கு பக்கத்தில் இருப்பவரே தவறு என்பார். இது விவாத ஒப்பந்தம் நெடுகிலும் அவர்களுக்கு சுட்டிக் காட்டப்பட்டுக்கொண்டே இருந்தது.
ஒரு தகர டப்பா தாளம் போட்டது 
தாருஸ் சுன்னா தரப்பில் கலந்து கொண்டவர்களில் கொஞ்சம் விளக்கமுள்ளவராக ஆரம்பத்தில் கண்ணுக்குத் தெரிந்தவர் அமீருல் அன்சார் (அக்கரைப்பற்று அன்சார் மவ்லவியின் மத்ரஸா உஸ்தாத்) போகப் போகப் பார்த்தால் இவரெல்லாம் எதற்கு விவாத ஒப்பந்தத்திற்கு வந்தார்கள் என்று யோசிக்க வைத்துவிட்டார். அந்த அளவுக்கு அறிவாளி (?)த் தனமாக பேசினார். (வீடியோவைப் பார்ப்பவர்கள் இதை உணரலாம்.)
போதாக் குறைக்கு இர்பான் (சேலம் கல்லூரியில் இருந்து இடையில் வெளியேறியவர்) என்றொருவரும் அவர்கள் தரப்பில் கலந்து கொண்டார்.
அமீருல் அன்சார் அவர்களோ தாருஸ் சுன்னாவுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் சூனியத்தைத் தவிர வேறு என்ன விஷயங்களில் கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது தெரியாது என்றார். அவர்கள் தரப்பில் கலந்து கொண்ட அரைவேக்காடு இர்பார் என்பவரோ ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், தாருஸ் சுன்னாவுக்கும் இடையில் நிறைய கருத்து வேறுபாடுள்ள விஷயங்கள் இருக்கின்றன. எனக் கூறி பட்டியலை வாசிக்க ஆரம்பித்தார்.
தாருஸ் சுன்னா தரப்பில் கலந்து கொண்ட அமீருல் அன்சார் தாருஸ் சுன்னாவுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் தெரியாது என்கிறார். அவருடைய தரப்பில் கலந்து கொண்ட இன்னொருவர் இரு தரப்புக்கும் இடையில் இருக்கும் பிரச்சினைகளின் பட்டியலை வாசிக்கின்றார். இதிலிருந்தே இவர்களுக்கு மத்தியில் எந்தவொரு கலந்து பேசும் தன்மையும் இல்லை. ஆளுக்காள் நினைத்ததைப் பேசும் கூட்டம் தான் இவர்கள் என்பது தெளிவாக விளங்கியது.
அதே போல் பட்டியலைப் படித்தவரோ இவ்வளவு பிரச்சினைகள் தாருஸ் சுன்னாவுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் இருக்கிறது. ஆனால் இவற்றை இப்போது ஒப்பந்தம் செய்ய முடியாது. காரணம் எங்களுக்கு (தாருஸ் சுன்னா) சூனியத்தைப் பற்றி மாத்திரம் தான் தெளிவு இருக்கிறது. மற்ற எந்தத் தலைப்பைப் பற்றியும் எங்களுக்கு தெளிவில்லை என்றார்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் சூனிய விஷயம் தவிர மற்ற எந்த விஷயத்திலும் தெளிவில்லாதவர்கள் வெளியில் போனால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றி கண்டபடி விமர்சிக்கின்றார்கள். காரணம் தவ்ஹீத் ஜமாத்தை திட்ட வேண்டும் அவ்வளவுதான். உண்மையை அறிய வேண்டும். சத்தியத்தின் பக்கம் வர வேண்டும் என்ற சிந்தனைக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை.
அடம் பிடித்தார் அமீருல் அன்சார்! ஆட்டம் கண்டது தாருஸ் சுன்னா!!
ஆரம்பத்தில் அனைத்துத் தலைப்புகளுக்கும் ஒத்துக் கொண்டவர்கள் கொஞ்ச நேரத்தில் முடியாது என்று மறுத்தார்கள். பின்னர் ஒத்துக் கொண்டு அதன் பின்பும் மறுத்துவிட்டார்கள். மொத்தத்தில் போதையில் இருப்பவனைப் போல் உளரிக் கொட்டியதை பார்க்க முடிந்தது.
சூனியத்தைப் பற்றி மாத்திரம் தான் எங்களுக்கு தெளிவிருக்கிறது. என்று கூறியவர்களிடம் மற்ற தலைப்புகள் பற்றிய பேசிய போது சூனியம் தான் கண்டிப்பாக பேசப்பட வேண்டிய விடயம் ஏன் என்றால் சூனியத்தை நம்பிய எங்களை இணைவைப்பளர்கள் என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினராகிய நீங்கள் கூறுகிறீர்கள். எனவே முதலில் சூனியம் குறித்து பேசுவோம் அதன் பின் மற்ற தலைப்புகள் பற்றி யோசிப்போம் என்றார்.
அமீருல் அன்சாரின் வாதத்திற்கு பதில் கொடுத்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர், சூனியத்தை நம்பும் உங்களை நாம் இணை வைப்பவர்கள் என்றுதான் கூறுகின்றோம். அதே போல் தான் நபித்தோழர்களை பின்பற்றுவதையும் இணை வைத்தல் என்கிறோம். சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மாத்திரம் உரியது. அந்த அதிகாரம் வேறு யாருக்கும் இருப்பதாக நம்பினால் அதுவும் தெளிவான (ஷிர்க்) இணை வைப்பாகும். அது போல் சர்வதேச பிறையை நீங்கள் ஆதரிக்கின்றீர்கள். சர்வதேச பிறையை ஆதரிப்பவர்கள் மனோ இச்சையை தான் பின்பற்றுகின்றார்கள், அது வழிகேடு, நரகத்திற்கு சேர்க்கும் காரியம் என்று கூறுகின்றோம்.
சூனியத்தை நம்புவதை இணைவைத்தல் என்று நாம் கூறியதினால் அதைப்பற்றி விவாதிப்பதற்கு ஆதங்கப்படுகின்றீர்கள்? ஸஹாபாக்களைப் பின்பற்றுவதையும் நாங்கள் இணைவைப்பு என்று தான் கூறுகின்றோம். அதே போல் தான் பிறை விஷயத்தையும் கூறுகின்றோம். ஆகவே சூனியத்திற்கு காட்டும் ஆதங்கத்தையும், அவசரத்தையும் ஏன் இவற்றுக்கும் நீங்கள் காட்டுவதில்லை? என்று கேட்ட போது ‘இல்லை நாங்கள் சூனியத்தைப் பற்றி மாத்திரம் தான் பேசுவோம் வேறு தலைப்புகள் பேச மாட்டோம்’ என்று மீண்டும் விடாப்பிடியாக நின்றார்.
சூனியம் தலைப்பிலும் சூனியமான தாருஸ் சுன்னா
‘சூனியம் பற்றி மாத்திரம் தான் பேசுவோம் வேறு தலைப்புகளில் வரமாட்டோம்’ என்கிறீர்கள் ஆனால் சூனியம் பற்றிய உங்கள் நிலைபாடு கூட சுத்த சூனியமாகத் தான் இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தினோம்.
அதாவது சூனியத்தைப் பற்றி கண்டிப்பாக பேசுவோம். ஆனால் சுனியத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பாக ‘குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்’ தொடர்பாக இரு தரப்பாரும் விவாதிக்க வேண்டும். காரணம் சூனியம் தொடர்பான செய்திகளை நாம் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறுகின்றோம். ஆனால் நீங்களோ அதை நம்புகின்றீர்கள். குறிப்பிட்ட செய்திகள் ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா? என்பதை நாம் விவாதித்து முடிவு கண்ட பின்னர் தான் அந்த ஹதீஸ்களை வைத்து சட்டம் இயற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்தினோம்.
இவ்வளவு தெளிவாக எடுத்து சொன்ன பின்னரும் ‘மனப்பாடம் செய்த கிளிப் பிள்ளை’ போல் முடியாது சூனியத்தைப் பற்றித் தான் பேச வேண்டும் என்று அடம்பிடித்தார் அமீருல் அன்சார். (அக்கரைப் பற்று அன்சார் மவ்லவியின் மத்ரஸா உஸ்தாத்)
‘எங்களுக்கு சூனியத்தைப் பற்றி மாத்திரம் தான் தெளிவிருக்கிறது. அதனால் அதைப்பற்றி விவாதிப்போம்’ என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ‘குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்’ விஷயத்தில் உங்களுக்கு தெளிவில்லாவிட்டாலும், நீங்கள் இந்தத் தலைப்பை வாதிட்டுத்தான் ஆக வேண்டும். காரணம் உங்கள் கடிதத்திலேயே சூனியம் பற்றிய உங்கள் நிலைபாட்டையும் நீங்கள் அனுப்பித்தான் உள்ளீர்கள் என்று தாருஸ் சுன்னாவினர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு அனுப்பிய கடிதத்தை எடுத்துக் காட்டினோம்.
அதில் சூனியம் பற்றிய உங்கள் நிலைபாட்டை குறிப்பிடும் போது, ‘நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது உண்மை. காரணம் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது உண்மை என்று நீங்கள் நம்புவதற்கான காரணம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருப்பதுதான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் எந்த ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்று ‘சூனியம்’ பற்றிய தலைப்பில் எடுத்து வைப்பீர்களோ, அந்த ஹதீஸ்கள் அனைத்தும் குர்ஆனுக்கு முரண்படுவதினால் அவை இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்று நாம் சொல்கின்றோம்.
ஆகவே இப்போது சூனியம் தொடர்பாக நாம் விவாதிப்பதற்கு முன் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் தொடர்பில் விவாதிக்க வேண்டும். காரணம் அடிப்படையை முதலில் தீர்மானித்தால் தான் அடுத்த பிரச்சினைகளை பேச முடியும்.
இல்லாமல் சூனியம் பற்றிப் பேசினால் நீங்கள் விவாத அரங்கில் சூனியத்திற்கு ஆதரவாக எந்த செய்திகளையெல்லாம் எடுத்து வைப்பீர்களோ அவற்றை நாம் ஒரே வார்த்தையில் இட்டுக்கட்டப்பட்டது என்று மறுத்து விடுவோம்.
அந்நேரத்தில் அந்த ஹதீஸின் தரம் என்ன? என்ற தலைப்பில் இரு தரப்பாரும் பேச வேண்டி வருமே தவிர சூனியம் பற்றி பேச முடியாமல் போய் விடும். அதனால் முதல் தலைப்பாக ‘குர்ஆனுக்கு முரன்படும் ஹதீஸ்களை’ பற்றி நாம் பேசுவோம். என்று தாருஸ் சுன்னாவினருக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
‘சூனியம் என்று தலைப்பிட்டு நீங்கள் வேண்டியதை பேசுங்கள் எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சிறுபிள்ளைத் தனமாக பேசினார் அமீருல் அன்சார்.
‘சூனியம் என்று தலைப்பிட்டுவிட்டு குர்ஆனுக்கு முரண்டும் ஹதீஸ்கள் தொடர்பில் நீங்கள் எங்களை விவாதிக்க அழைக்கிறீர்கள். இப்படி அழைத்து பின்வாங்கப் பார்க்கின்றீர்கள்’ என்று ஓடிக்கொண்டே, ‘எதிர்த் தரப்பார் ஓடுகின்றார்கள்’ என்று கூறுவதைப் போல் கூறினார் அமீருல் அன்சார்.
சூனியம் பற்றி வாதிப்பதாக இருந்தால்; குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் பற்றி வாதிட்டுவிட்டுத்தான் அந்தத் தலைப்பை வாதிக்க வேண்டும் என்று தாருஸ் சுன்னா அமைப்பினர் அனுப்பிய கடிதத்தை எடுத்துக் காட்டி விளக்கிய பின்னும் ‘முடியாது நாங்கள் அப்படி கடிதம் அனுப்பியிருந்தாலும் சூனியத்தைப் பற்றித் தான் முதலில் விவாதிக்க வேண்டும். இரண்டாவது வேண்டுமானால் குர்ஆனுக்கு முரன்படும் ஹதீஸ்கள் தலைப்பைப் பார்க்கலாம்’ என்றார்.
அடிப்படைப் பிரச்சினையாக எது இருக்கிறதோ அதை முதலில் பேசிவிட்டு மற்ற பிரச்சினைகளை பேசலாம் என பல முறை தெளிவுபடுத்தியும், ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர் தெளிவுபடுத்துவது புரிகின்றது என்று கூறிவிட்டு பின்பு முடியாது, முதலில் சூனியத்தைத் தான் பேச வேண்டும் என பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருந்தார்கள்.
‘திருமணம் செய்துவிட்டுத் தான் குடும்ப வாழ்வில் ஈடுபட வேண்டும். குடும்ப வாழ்வில் ஈடுபட்டுவிட்டு திருமணம் செய்யக் கூடாது’ முதலில் அடிப்படையான பிரச்சினையாக இருக்கும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வதா? மறுப்பதா? என்பதற்கு தீர்வு காண்போம். அதன் பின் சூனியத்தைப் பற்றிப் பேசுவோம் என்று கூறியும் முடியாது என்று விடாப்பிடியாக மறுத்துவிட்டார்கள் தாருஸ் சுன்னாவினர்.
சூனியம் பற்றி முதலில் பேசுவோம். இரண்டாவதாக பேசுவதாக இருந்தால் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வோம். விவாதிக்க முடியாது என்று கண்டிப்பான பதிலாக கூறினார்கள். இதை கேட்டுக் கொண்டிருந்த தாருஸ் சுன்னா தரப்பு வைத்தியர் ஒருவர் ‘ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சொல்வதுதான் சரியானது. அந்த அடிப்படையில் விவாதிக்கலாம்’ என்று கூறியும் அதையும் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
மொத்தத்தில் ஒரு பூச்சாண்டி காட்டலாம் என்று நினைத்தார்கள். இறுதியில் மாட்டிக் கொண்டார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் சிக்குவான் என்பதைப் போல் அன்சார் மவ்லவியின் மத்ரஸா உஸ்தாதும் ஓடி ஒழிந்தார்.
தாருஸ் சுன்னாவை ஓட விடுவதா? மடக்கிப் பிடிப்பதா?
தாருஸ் சுன்னா அமைப்பினர் விவாதத்தில் இருந்து தப்பிக்க பார்க்கிறார்கள் என்பதை அறிந்ததும், அவர்களை எப்படியாவது விவாதக் களத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர் இன்னொரு முடிவை அறிவித்தனர்.
நீங்கள் சொல்வதைப் போல் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுவோம். இரண்டாவது குர்ஆனுக்கு முரன்படும் ஹதீஸ்கள் பற்றிப் பேசுவோம். ஆனால் ஒரு நிபந்தனை; சூனியம் பற்றிய உங்கள் விவாதத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினராகிய நாம் குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி எந்த செய்திகளை நிராகரித்துள்ளோமோ அந்த செய்திகளை ஆதாரமாக வைக்கக் கூடாது.
அப்படி நீங்கள் வைத்தால் அதை நாங்கள் இட்டுக்கட்டப்பட்டது என்று ஒரேயடியாக மறுத்துவிடுவோம். இதற்கு நீங்கள் தயாரா? என்று கேட்ட போது அதையும் முடியாது என்று மறுத்தார்கள்.
சூனியத்தைப் பற்றித்தான் முதலாவது விவாதிக்க வேண்டும். அதில் நீங்கள் எந்த செய்திகளை மறுக்கிறீர்களோ அந்தச் செய்திகளை நாங்கள் ஆதாரமாகக் காட்டித்தான் சூனியம் இருப்பதாக வாதிப்போம். இதுதான் விவாத அடிப்படை என்று தாருஸ் சுன்னாவினர் பிடிவாதமாக நின்றனர்.
அப்போதும் மீண்டும் அவர்களுக்கு தெளிவுபடுத்தினோம். நீங்கள் சொல்வதைப் போல் சூனியம் தலைப்பில் நாம் மறுக்கும் செய்திகளைத்தான் நீங்கள் ஆதாரமாக வைப்பீர்கள் என்றால் அதையே முதல் தலைப்பாக பேசுவோம். அந்த செய்திகள் ஆதாரமானதா? இட்டுக்கட்டப்பட்டவைகளா? என்று முதலில் தீர்மானிப்போம். அதை தீர்மானித்தால் சூனியம் இருக்கிறதா? இல்லையா? என்ற தலைப்பும் முடிவுக்கு வந்துவிடும். என்று தெளிவுபடுத்திய பின்பும் முடியாது, முதலில் சூனியத்தைப் பற்றி பேசுவோம் என்று பழைய நிலைக்கே மீண்டும் வந்து நின்றார்.
ஒழுக்கம் கெட்ட மத்ரஸா உஸ்தாத்(?)
ஒப்பந்தத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க முடியாத (அக்கரைப்பற்று அன்சார் மவ்லவியின் மத்ரஸா உஸ்தாத்) அமீருல் அன்சார் தகாத, அசிங்கமான வார்த்தைகளை பேச ஆரம்பித்தார். இன்னொருவர் சண்டைக்கு வருவது போல் சத்தம் போட ஆரம்பித்தார். இதற்காக தாருஸ் சுன்னா தரப்பினரை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினர் வீடியோவுக்கு முன்னால் மண்ணிப்புக் கேட்க வைத்தார்கள்.
இறுதியாக ஒரு வேண்டுகோள்
சூனியம் தலைப்பை முதலில் பேசிவிட்டு அடுத்ததாக மற்ற தலைப்புகளைப் பேசுவோம் இல்லாவிட்டால் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் தாருஸ் சுன்னாவினர் உறுதியாக இருந்தார்கள்.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களைப் பற்றி வாதிக்காமல் சூனியம் என்ற தலைப்பைப் பற்றி வாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஆகவே முதலில் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் பற்றி விவாதிப்போம் என்று மீண்டும் மீண்டும் நியாயங்களை கூறிப்பார்த்தும் முடியாது அப்படியானால் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வோம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினருடன் விவாதிக்க முடியாது என்று தெளிவாகவும், கண்டிப்பாகவும் தெரிவித்தது தாருஸ் சுன்னா தரப்பு. உங்களினால் முடியாவிட்டால் நாங்கள் உங்களை கட்டாயப்படுத்த முடியாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விவாத ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. விவாதிக்க முடியாது என்று தாருஸ் சுன்னா அமைப்பு பின்வாங்கியது.
குறிப்பு : விவாத ஒப்பந்தத்தில் தரப்புக்கு 10 பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒத்துக் கொண்டு நமது தரப்பில் 10 பேர் சென்றார்கள். அவர்கள் தரப்பில் 06 பேர் கலந்து கொண்டார்கள். எவரும் விவாதம் பற்றியோ விவாத ஒப்பந்தம் பற்றியோ ஓரளவுக்குக் கூட அறியாதவர்கள். அதிலும் அவர்கள் தரப்பில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள் அமீருல் அன்சார் மற்றும் இர்பான் ஆகியோராகும். இந்த இருவருமே விவாதிப்பதற்கோ விவாத ஒப்பந்தம் செய்வதற்கோ கொஞ்சம் கூட தகுதியில்லாதவர்கள். எனவே அவர்களே விவாதிக்க முடியாது என்று பின்வாங்கும் போது அவர்களை நாமும் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு இழுக்கவில்லை. காரணம் அக்கரைப்பற்று அன்சார் மவ்லவியின் பாணியில் சொல்வதாக இருந்தால் ‘அவர்களுடன் விவாதிப்பது சுத்த வேஸ்ட்’.
 நன்றி - sltjweb.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger