தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 6)


1. ஜாக்கில் உள்ள கொள்கைவாதிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும்.

(நாங்கள் ஜாக் என்று சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை என்ற நிலை இருந்தது. பீ.ஜே. உட்பட அனைவருக்கும் இந்த கதி! எனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது)

2. நிர்வாக சீரமைப்பு

இன்னும் இதுபோன்ற சில நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த எஸ். கமாலுத்தீன், நான் இதை ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் அவர்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவை உடனே கலைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதற்கு பீ.ஜே. நாங்கள் தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். ஆனால் மூன்று மாதங்களுக்கு இந்தப் பெயரில் செயல்படமாட்டோம். அதற்குள் எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். 


காரணம், அடிக்கடி எஸ். கமாலுத்தீன் இப்படி வாக்குறுதி கொடுத்துவிட்டு மாறு செய்வார். வாக்கு றுதியை மீறுவார். எனவே தவ்ஹீத் பிரச்சாரக் குழுவைக் கலைக்க மாட்டோம். இந்த மூன்று மாதங்களுக்குள் நாங்கள் வைத்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பீ.ஜே. கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்கள் பொறுப்பு என்று சமரசக் குழுவினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.


ஆறப்போட்டு நாறடித்தல்

ஆறப்போட்டு நாறடிக்கும் கலையில் வல்லவர் நரசிம்மராவ்! ஆனால் அவரை மிஞ்சிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது எஸ். எஸ். கமாலுத்தீன்தான். காலை வாருவதில் கை தேர்ந்த கமாலுத் தீன் மதனி வழக்கம்போல் இந்த சமரச முயற்சியிலும் காலை வாரினார். இம் முயற்சியில் இறங்கியவர்களின் முகத்தில் கரியைப்பூசினார்.

இனிமேல் நாம் நமது வழியில் தவ்ஹீதைச் சொல்வோம் என்று பிரச்சாரக் குழு என்ற பெயரிலேயே தவ்ஹீத் பணி தொடர்ந்தது. தவ்ஹீத் இயக்கத்தில் இருந்துகொண்டே சத்தியப் பணி யையும் சமுதாயப் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டும் என்ற எங்கள் முயற்சி, கமாலுத்தீனின் வறட்டுப் பிடி வாதத்தாலும், வாக்குமீறல்களாலும் தோற்றுப் போயிற்று! நாங்கள் வளர்த்த ஜாக்கை விட்டுவிட வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டவே இந்தச் சுருக்க வரலாறு.

இப்போது சமுதாயப் பணிக்காகத் தொடங்கிய தமுமுகவின் வரலாறைப் பார்ப்போம்.


அவசரப் பிரசவம்

தமுமுக ஓர் அவசரப் பிரசவம் எனினும் அது அரைகுறைப் பிரசவமல்ல! முழுமையாகப் பிறந்த குழந்தை! ஏற்கனவே இருந்த சமுதாய இயக்கங்கள் அழிந்ததற்கான காரணங்களைக் கண்டறிந்து, அதுபோன்ற காரணங்கள், கரையான்கள் இதை அண்டக் கூடாது, அணுகக் கூடாது என்பதில் முழுக் கவனம் செலுத்தப்பட்டது. அதன் அடிப்படை யில்தான் தேர்த­ல் போட்டியிடக் கூடாது என்று கொள்கையாகக் கொள்ளப்பட்டது.

இதனால் தமுமுகவின் ஒவ்வொரு அறிமுக மற்றும் அடுத்த கட்டக் கூட்டங்களிலும், ''நாங்கள் உங்களிடம் ஒரு போதும் எங்களுக்காக ஓட்டுக் கேட்டு வரமாட்டோம்'' என்று வாக்குறுதி அளித் தனர். ''எங்களுக்கு வாக்குக் கேட்டால் எங்களைச் செருப்பால் அடியுங்கள்'' என்று கூடப் பேசியதுண்டு. இப்படி ஓர் உறுதியான குர­ல், உச்சஸ்தாயில் பேசியது மக்களுடைய உள்ளங்களில் ஊடுருவியது.


தவ்ஹீத் ஒரு தடைக்கல்லா?

வெகு வேகமாக இந்த இயக்கம் மக்களிடம் வளர்ச்சி கண்டது. இத்தனைக்கும் பீ.ஜே. ஒரு தீவிர தவ்ஹீத் வாதியாக இருந்தும், (தமுமுக வளர்ச்சிக்கு தவ்ஹீத் ஒருபோதும் தடைக் கல்லாக இருக்கவில்லை) தமுமுக மேடையில் சமுதாயப் பிரச்சினைகளை மட்டும் பேசுவோம்; அங்கு தவ்ஹீதைப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். அதன்படி அந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்டது.


தனி இட ஒதுக்கீடும் தவ்ஹீத் ஜமாஅத்தும்

தமுமுக என்ற இந்த சமுதாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், ஆணி வேராகவும் அமைந்தது இட ஒதுக்கீடு கொள்கைதான். பாபரி மஸ்ஜித் முதல் அனைத்துப் பிரச்சினைகளுக்கும், முஸ்லிம்கள் கிள்ளுக்கீரைகளாக நடத்தப்படுவதற்கும் காரணம் சுதந்திரத்திற்குப் பிறகு, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு இட ஒதுக்கீடு கோரிக்கையைக் கையில் எடுத்தது. இட ஒதுக்கீடு கிடைத்து விட்டால் தமுமுக வைக் கலைத்து விடுவோம் என்று கூட மக்களிடம் அறிவிக்கப்பட்டது.

இந்த இடஒதுக்கீட்டைக் கையில் எடுத்ததும், ஏற்கனவே சரிந்து விழுந்த சமுதாயம், ''இது சாத்தியமா?'' என்ற கேள்வியை எழுப்பினார்கள். சாத்தியமே என்று கூறி அதை மூலை முடுக்குக ளுக்கு அதன் பேச்சாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.


தவ்ஹீத் தாயீக்கள்தான் தமுமுக பேச்சாளர்கள்

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள் யார்? அவ்வியக்கத்திற்கென்று பேச்சாளர்கள் கிடையாது. நாவலர், பாவலர் கிடையாது. வாணியம்பாடி வாத்தியார் மட்டும் பாடம் நடத்துவார். அதுவும் இந்தியாவைத் தாண்டி, செசன்யா, கஜகஸ்தான் என்றுதான்.

இந்த இயக்கம் மக்களிடம் போய்ச் சேருவதற்கு தவ்ஹீத் தாயீக்கள்தான் முதலீடானார்கள். அவர்கள்தான் இந்த இடஒதுக்கீடு கொள்கையை எட்டுத் திக்குகளுக்கும் எடுத்துச் சென்றார்கள்.


விழிப்புணர்வை ஏற்படுத்திய விஜய் டிவி பேட்டி

இடஒதுக்கீடு என்றால் என்ன? அதன் பயன் என்ன? என்ற விளக்கங்கள் கூட சமுதாயத்திற்குத் தெரியாமல் இருந்தது. காயிதேமில்லத்திற்கு மணி மண்டபம் கட்டுவதையும், மீலாது நபிக்கு விடுமுறை அறிவிப்பதையும் முஸ்­ம் சமுதாயத்திற்குச் செய்த மிகப் பெரிய சாதனைகளாகக் கருதப்பட்ட காலம் அது!

இப்படிப்பட்ட காலத்தில்தான் விஜய் டி.வி.யில் பீ.ஜே.யின் பேட்டி ஒளிபரப்பானது. ''மணிமண்டபங்கள் கட்டுவதால், காயிதேமில்லத் சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைப்பதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன்? முஸ்லிம்கள் வாழ்வுரிமை இழந்து நிற்கிறார்கள். 

வயிற்றுக்கு உணவில்லாமல் நிற்கிறார்கள். மணிமண்டபம் கட்டினால் முஸ்லிம்களின் பசி போய் விடுமா? எங்களுக்குத் தேவை இடஒதுக்கீடு தான்'' என்று ஆணியடித்தாற்போல் பீ.ஜே. கூறியபோது, அவரைப் பேட்டி கண்ட ரபி பெர்ணாட் என்பவர் அதிர்ந்து போனார். 

முஸ்லிம்களிடம் இப்படி ஒரு கோரிக்கை இருப்பதே அப்போதுதான் உலகுக்குத் தெரிய வந்தது. அந்தப் பேட்டி ஒளிபரப்பானவுடன் சட்டசபையில் கருணாநிதி அதற்குப் பதிலளித்துப் பேசினார். நாங்கள்தான் முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று வழக்கம்போல் பல்லவி பாடினார். அதன் பிறகு இந்தத் தீ தமிழகமெங்கும் பற்றிக் கொண்டது.

தவ்ஹீத் பள்ளிவாசல்களின் ஜும்ஆ மேடைகளில் இடஒதுக்கீடு பற்றிப் பேசப்பட்டது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இதற்குப் பிறகு எல்லா அரசியல் கட்சிகளும் இந்தக் கருத்தை எதிரொ­க்க ஆரம்பித்தன.


பாபரி மஸ்ஜித் மீட்புக் கோரிக்கை

இடஒதுக்கீட்டிற்கான குரல் ஒரு பக்கம் ஒ­த்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கத்தில் பாபரி மஸ்ஜித் மீட்புக்கான போராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தியது.

பாபரி மஸ்ஜித் இடிந்து விழுந்தது போலவே, அதை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற எண்ணமும் இடிந்து விழுந்திருந்தது. அதை மறக்க முற்பட்ட னர்.

அப்போதுதான் தவ்ஹீத் பேச்சாளர்கள் வெள்ளி மேடைகளிலும், இதர சொற்பொழிவு மேடைகளிலும், 'யார் தனது பொருளைப் பாதுகாப்பதற்காக போரிட்டுக் கொல்லப்படுகின்றானோ அவன் ஷஹீத் ஆவான்' என்ற ஹதீஸையெல்லாம் ஆதாரமாகக் காட்டி, பாபரி மஸ்ஜிதை மீட்பதற்காகப் போராட வேண்டும்; அதற்காகப் போர்க்குரல் கொடுக்க வேண்டும் என்று தூண்டினர். மஸ்ஜிதை மீட்பதற்கு முன்பாக மக்களை மறதியி­ருந்து மீட்டனர்.

இதன் விளைவாய் மக்கள் கடல் அலைபோல் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் போராட்டங்களில் திரண்டனர். இந்தப் போராட்டங்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொ­த்தது.


முதல்வர் வீட்டு முற்றுகை

ஒரு டிசம்பர் 6 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி வீட்டை முற்று கையிட வேண்டும் என்று தமுமுக அறிவித்தது. அதற்கும் தவ்ஹீத்வாதிகள் தயாரானார்கள். அந்த அளவுக்கு தர்பி யாக்கள் நடத்தப்பட்டன.

அந்த தர்பியாக்களில் மரணத்திற்கு அஞ்சாத தியாகிகள் பற்றிப் போதிக்கப்பட்டன. குறிப்பாக மூஸா நபியவர்களிடத்தில் போட்டியிட வந்த மந்திரவாதிகள் ஈமான் கொண்டு, ஃபிர்அவ்னால் தண்டிக்கப்பட்ட வரலாறு பற்றி போதிக்கப்பட்டது. அதனால்தான் முறுக்கேறிய நரம்புகளுடன் முதல்வர் வீட்டு முற்றுகைக்கு தவ்ஹீத்வாதிகள் தயாராகினர். காக்கிச் சட்டை பயம் கழற்றி எறியப் பட்டது. இதற்கான அடிப்படையே தவ்ஹீதுதான். தவ்ஹீத் இல்லையேல் இந்தத் தெம்பு, திராணி, துணிச்சல் அவர்களுக்கு ஒருபோதும் ஏற்பட்டிருக்காது.

முதல்வராயிருந்தும் தன் வீட்டை முற்றுகையிடுவதைக் கருணாநிதியால் தடுக்க முடியவில்லை. கடுமையான கைது நடவடிக்கைகள், தடுப்புச் சுவர்கள், துப்பாக்கிச் சூடு நடக்கும் என்ற மிரட்டல்கள் இவையணைத்தையும் மிஞ்சி குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கொள்கைவாதிகள் குவிந்தனர்; கைது செய்யப்பட்டனர்; விடுவிக் கப்பட்டனர். இப்படிப் பாபரி மஸ்ஜித் மீட்புப் போர் மக்களிடம் துவக்கிவைக் கப்பட்டது.

இதன் மாபெரும் பயன், பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டதோ இல்லையோ ஆனால் சங்பரிவாரங்களின் பட்டிய­ல் இருந்த காசி, மதுரா போன்ற பள்ளிவாசல்கள் மீது அவர்கள் கை வைக்க அஞ்சினர். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger