சினிமா கூத்தாடிகளின் உண்மை முகம்!

இந்த வார உணர்வின் தலையங்கம் 

ஜின்களிலும்மனிதர்களிலும் நரகத்திற்காகவே பலரைப் படைத்துள்ளோம். அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்குக் கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றோர். இல்லை! அதை விடவும் வழி கெட்டவர்கள். அவர்களே அலட்சியம் செய்தவர்கள்.
அல்குர்ஆன் 7 : 179
சமுதாயத்திலுள்ள பல துறைகளில் கடைந்தெடுத்த கடைமட்ட கழிசடைத் துறைதான் சினிமாத்துறை. இங்கே பொய்பித்தலாட்டம்ஏமாற்றுவிபச்சாரம் என்று அயோக்கியத்தனங்களின் அத்தனை சொற்களுக்கும் நேர்முக சாட்சிகளைப் பார்க்கலாம்.
காசு சம்பாதிக்க எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் செய்யத் தயங்க மாட்டார்கள். சென்சார் எதையெல்லாம் அனுமதிக்குமோ அத்தனையும் செய்யத் துணிவார்கள். சென்சார்போர்டு முழு நிர்வாணத்தையும் அனுமதிக்குமானால் எவ்வித வெட்கமும் இல்லாமல் நிர்வாணமாகக் காட்சி தர எந்த நடிகரும் நடிகையும் மறுக்கமாட்டார்கள்.
சமுதாயத்தில் குற்றங்களைக் கற்றுக் கொடுப்பவர்களே இவர்கள்தான். குற்றங்களைதப்பு தண்டாக்களைபாவங்களை எப்படிச் செய்ய வேண்டும்எங்ஙனம் திறம்படச் செய்ய வேண்டும்?எங்ஙனம் எளிதாகச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்து சமுதாயத்தைச் சீரழிப்பதில் முன்னோடிதான் சினிமா. ஆனால் இவர்கள் பேசுவதெல்லாம் சமுதாயத்தைச் சீரமைக்கப் போவதாக.
ஒரு சர்வேயில் சமுதாயத்தைச் சீரமைக்கத் தகுந்தவர்கள் யார் என்பதில் சினிமா கதாநாயகர்களே முதலிடம் வகித்தார்கள். காரணம் என்னவெனில்இவர்கள் தொடர்ந்து நல்லவர்களாக நடிப்பதுதான்.
ஒருவன் நல்லவனாக நடிக்கிறான் என்றால் அவன் கெட்டவன் என்றே பொருள். ஏனெனில் நல்லவன் நல்லவனாக நடிக்க வேண்டிய அவசியமில்லை. மக்களை ஏமாற்றி திட்டமிட்டு அரசியலில் சமுதாயத்தில் புகழ் பெறவே தங்களது கேரக்டர்களை சிறு பழுது கூட வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த கதாநாயகன் போலீசாக நடித்தால் அவரைப் பரிசுத்த போலீசாக காட்டுவார்கள். மற்ற அரசியல்வாதிகளையும் மற்ற அனைத்து துறையினரையும் அயோக்கியர்களாக்க்காட்டுவார்கள்.
கதாநாயக போலீஸ்காரன்தான் அனைத்து குற்றவாளிகளையும் எதிர்த்து போராடி மக்களைக்காப்பாற்றியதாகக் காட்டுவார்கள். கதாநாயகன் திருடனாகவோரவுடியாகவோ நடித்தால் அந்த ரவுடியை நல்லவனாகக் காட்டுவார்கள். ரவுடி கதாநாயகன் மக்களுக்காக தனது ரவுடியிசத்தைக் காட்டி போராடுவது போலவும் போலீஸ்காரர்கள்அரசியல்வாதிகள்கதாநாயகியின் அப்பாவான  தொழில் அதிபர் உட்பட அனைவரையும் அயோக்கியர்களாகக் காட்டுவார்கள். இந்த ரவுடி கதாநாயகனே வென்று மக்களுக்கு உதவுவதாகக் காட்டுவார்கள்.
கதாநாயகன் தொழிலாளியாக நடித்தால் தொழிலாளியை நல்லவனாகவும்தொழில் அதிபரை மற்றும் அதைச் சார்ந்த துறையினரை கொடுமைக்காரர்களாக காட்டுவார்கள். கதாநாயகன் தொழிலதிபராக இருந்தால் தொழில் அதிபர் நல்லவராகவும் தொழிலாளிகள் அவருக்கு தொந்தரவு கொடுப்பவர்களாகவும் காட்டுவார்கள்.
இந்தக் கதாநாயகர்கள் தீப்பிடித்த கட்டடத்திற்குள் குதித்து அதனுள் புகுந்து ஒருவரே கட்டிடத்திற்குள் உள்ள அனைவரையும் காப்பாற்றுவார். இதைப் பார்த்தே அவனுக்கு ரசிகனாக மாறி போஸ்டர் ஒட்டுவான்ஓட்டுப் போடுவான். ஆனால் இவர்கள் அனைவரும் இருக்கும் சென்னையில் எத்தனை தடவைகள் தீப்பிடித்தும் எந்தக் கதாநாயகனும் தீயணைந்த பிறகு கூட வரமாட்டான்.
இது மட்டுமாஅரசு துறைகளும் போலியோ சொட்டு மருந்து இவர்கள் சொன்னால்தான் குழந்தைக்கு ஊட்டுவார்கள். இல்லையெனில் அந்தக் குழந்தைகளுக்கு இளம்பிள்ளை வாதம்  வந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பது போல இவர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள்.
வருமான வரி கூட வரிஏய்ப்புச் செய்யும் இவர்கள் சொல்லித்தான் கட்ட வேண்டிய நிலையில் நாடு உள்ளது.
ஊடக சிகாமணிகளும் இவர்களைப் பற்றிய செய்திகள் இல்லையென்றால் மக்கள் பத்திரிக்கை வாசிப்பதையும்டிவி பார்ப்பதையும் நிறுத்தி விடுவதுபோல அவர்கள் திருமணத்தில் கட்டிய சேலையின் நிறம் முதல் கொழுகொழு குழந்தை பிறந்தது வரை செய்திகள் சேகரித்து மக்களின் தகவல் தாகத்தை தீர்த்து வைப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.
சினிமாக்காரர்களை வைத்து திறந்த எத்தனையோ கடைகள் மூடிவிட்டார்கள். ஆனால் தரம்நியாய விலைகளில் வர்த்தகம் பண்ணும் பல கடைகள் சந்தையில் நிலைத்து நிற்கின்றன.
இவ்வாறு பலதுறையினரும் சினிமாக்காரர்களை உயர்த்திப் பிடித்து சமுதாயத்தில் அவர்களுக்கு ஒரு உயர்ந்த அந்தஸ்தை கொடுத்து விடுகிறார்கள். ஆனால்  இவர்கள் யார் என்பதையும்எவ்வளவு பெரிய கொடுமையான அயோக்கியர்கள் என்பதையும் 1989 அல்லது 1990ல் வெளியான குமுதம் வார இதழில்,ஒரு நடிகையின் கதை என்ற பெயரிலே அந்த நடிகையின் உதவியோடு ஸ்ரீனிவாசலு என்பவர் எழுதி இவர்களை  தோலுரித்து காட்டினார்.
பல உண்மைகளை வெளிப்படுத்தினார். அந்தக்கால பிரபல நடிகையின் பேரில் கோவையில் தியேட்டர் வந்த கதை முதல் தன்னையும் தனது அம்மாவையும் ஒரே நேரத்தில் படுக்கையில் அனுபவித்த ஒரு மிருகத்தையும் பற்றிஅவர் யார் என்பதை சினிமா ரசிகர்களுக்கு புரியும்படி சங்கேத வார்த்தைகளைக் கூறி எழுதினார். அரண்டுபோன சினிமா உலகம் அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் ராதரவியுடன் குமுதம் அலுவலகத்தை தாக்கினார்கள். அப்போது கலையுலக பிதாமகன் கருணாநிதி ஆட்சி என்பதால் அவர் தலையிட்டு குமுதத்தில் அத்தொடரை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஸ்ரீனிவாசலுவும் எச்சரிக்கையால் அத்தொடரை நிறுத்தினார்.
இப்படி இவர்களைப் பற்றி உண்மையைச் சொன்னால் ஆக்ரோசப்பட்டு வன்முறையில் இறங்கிய சினிமா கூத்தாடிகள் முஸ்லிம்களைப் பற்றி தீவிரவாதியாகக் காட்டி இவர்களை தேச பக்தர்களாக இமேஜை உயர்த்துகிறார்கள். தனது  அசல் வருமானத்தில் நூறில் ஒரு பங்கைக் கூட வருமானமாகக்காட்டாமல்வருமான வரி கட்டாமல்வரி ஏய்ப்பு  செய்யும் இந்த எத்தர்கள் தேசிய கொடிக்காக உயிரையும் துச்சமனே மதித்து காப்பாற்றுவது போல நடிப்பார்கள்.
அறுபது வயதைத் தாண்டிய பிறகும் அரைகுறை ஆடையுடன் வரும் 14 வயது பெண்ணுடன் காதல் வசனம் பேசுவது முதல் ஜட்டியுடன் காட்சி தருவார்கள். முதலிரவு காட்சிகளில் கட்டிப்பிடித்து புரள்வார்கள். கட்டிய மனைவியுடன் ரோட்டில் கைபிடித்து செல்லவே 95%தமிழர்கள் வெட்கப்படுவார்கள். ஆனால் இவர்களோ பலர் மத்தியில் படமெடுக்கப்படும் நிலையில்கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தாரளமாககட்டிய மனைவி பெற்ற பிள்ளைகள் ரசிக்க அந்நிய இளம் பெண்களுடன் படுக்கையறை காட்சிகளில் கட்டிப் புரள்வார்கள். அந்தப் படத்தை தனது மகள்மகன்,பேத்தி எல்லாம் பார்ப்பார்களே என்று வெட்கம் அற்ற மிருக ஜென்மங்கள்.
இவர்களுக்கு அத்தனை அரசியல்வாதிகளும் ஊதுகுழல்களாக செயல்படுகிறார்களே ஒழிய,இவர்களைப் பற்றி விமர்சிக்கவே பயப்படுகிறார்கள். மிகவும் கேவலமான இந்த அயோக்கிய கூட்டம் தங்களுக்கு என்று தனி இமேஜை உருவாக்கிஅதை மக்கள் நம்பும் வண்ணம் திரையில்  நல்லவர்களாக நடித்து வருகிறர்கள். ஆனால் அவர்களது சுயரூபமோ முற்றிலும் திரைக்கு மாற்றாமாக உள்ளது.
இதில் எந்த முன்னாள் கதாநாயகர்களும்கதாநாயகிகளும் இந்நாள் கதாநாயகர்களும் நாயகிகளும் விதிவிலக்கில்லை. குமுதத்தில் தொடர் எழுதிய ஸ்ரீனிவாசலுவைப்போல இவர்களது சுயரூபங்களை  தோலுரித்துக் காட்ட வேண்டும்.
23.12.2012. 00:02
நன்றி -onlinepj.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger