தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ எழுச்சி - ஓர் வரலாற்றுப் பார்வை (தொடர் - 7)


இதர பிரச்சனைகளுக்காக எழுச்சிப் போராட்டங்கள்

கடந்த காலத்தைப் போன்றல்லாமல் சமுதாயத்தில் யார் அநியாயமாகக் கைது செய்யப்பட்டாலும் வீதியில் இறங்கும் வீரத்தைத் தந்தது தவ்ஹீத் கொள்கை! வீறு கொண்டு எழ வைத்தது. முஸ்லிம்களின் சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளில் அநீதி, அக்கிரமம் இழைக்கப்பட்டபோது ஆர்த்தெழும் போர்க்குணத்தை ஊட்டியது தவ்ஹீத் கொள் கைதான். 


தடையைத் தாண்டிய தமுமுக

இக்கட்டத்தில்தான் வாழ்வுரிமை மாநாடு! இதன் பயனாய் தடையி­ருந்து தப்பியது. தமிழக வட்டத்தில் மட்டுமின்றி டெல்­யிலும் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எதிரொ­க்கச் செய்தது.

இதன் பின்பு அவ்வப்போது தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தமுமுக நிர்வாகிகளுக்கும் அவ்வப்போது உரசல் ஏற்பட்டது. இந்தக் கட்டத்தில்தான் மதுரை தமுக்கம் மைதானத்தில் தவ்ஹீதுக்கான ஒரு மாநாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு உதயமானது.




நஞ்சைக் கலக்கிய தஞ்சை பேரணி

இதன் பின்பு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தஞ்சையில் இடஒதுக்கீடு கோரிக்கையை வ­லியுறுத்தி தமுமுக ஒரு பேரணியை நடத்தியது. இந்தத் தஞ்சை பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் அந்த இயக்கத்தின் நிர்வாகிகளின் உள்ளத்தில் நஞ்சைக் கலக்கியது. இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தவ்ஹீத்வாதிகளை வெளியேற்ற வேண்டும் என்று தப்புக் கணக்குப்போட ஆரம்பித்தனர்.

அரசியல் கட்சிகளின் சகவாசங்கள் அவர் களின் உள்ளங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தன. அரசியல் கட்சியினர் காணும் கனவு களை இவர்களும் காணத்துவங்கினர்.

இதற்கு முந்தைய சமுதாய இயக்கங்கள் நீர்த்துப் போவதற்கும் நிர்மூலமானதற்கும் அடிப்படைக் காரணம் தேர்த­ல் போட்டி என்ற நிலைபாடுதான். அதனால்தான் தேர்த ­ல் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைபாட்டை தமுமுக அடிப்படைக் கொள்கையாகக் கொண்டது. அந்த நிலைபாட்டைக் கடைப்பிடிப்பதில் பீ.ஜே. கண்ணும் கருத்து மாக இருந்தார்.


1.  தேர்த­ல் பங்கெடுப்பதைத் தடுக்கும் பி.ஜே.யின் நடவடிக்கைகள்.

2 . தமுமுகவின் தனித்தன்மையைத் தக்க வைப்பதிலும், பிற இயக்கங்களுடன் கலந்து விடாமல் அதைக் காக்க பீ.ஜே. கொண்டிருந்த கரிசனம், காட்டிய கண்டிப்பு.

3.  தமுமுக தலைவர்களிடம் நாள்பட நாள்பட தலைதூக்கிய தவ்ஹீத் கொள்கையிலேயே சமரசம் செய்யும் உணர்வு, இன்னும் சொல்லப்போனால் தவ்ஹீத் எதிர்ப்புணர்வு ஆகியவை ஏற்கனவே உரச­ல் இருந்ததை விரிசலாக்கியது. விளைவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! தவ்ஹீத்வாதிகளுக்கு, குறிப்பாக தவ்ஹீத் தாயீக்களுக்கு இது உண்மையில் ஒரு விடுதலை உணர்வை அளித்தது.

தவ்ஹீத்வாதிகளை மூலதனமாகக் கொண்டு வளர்க்கப்பட்ட ஒரு இயக்கத்தில் சமுதாய நலனுக்காக தவ்ஹீதை இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படும் அநியாயத்திலிருந்து விடுதலை! அதாவது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் அக்கிரமத்திலிருந்து ஒரு விடுதலை!

இந்த அநியாயங்களுக்கு விடுதலை இயக்கமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உதயமானது. அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்பது பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தாக உருவெடுத்தது.

இந்த இயக்கத்தில் கண்தான் பிரதானமானது. சித்திரம் இரண்டாவது என்றானது. தவ்ஹீத் என்ற கண்ணுக்குத்தான் இங்கு முன்னுரிமை! முதலுரிமை! மற்றவை பின்னுக்கு!

எந்தச் சமுதாய நலனுக்கு தவ்ஹீத் கொள்கை பாதகமாக உள்ளது என்று நம்மை வெளியே தள்ளினார்களோ அந்தச் சமுதாயப் பணிகளுக்குத் தவ்ஹீத் ஒரு தடைக்கல் அல்ல என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் துவங்கிய இரண்டாண்டு காலத்தில் கும்பகோணத்தில் நிரூபித்தோம்.


குலுங்கியது கும்பகோணம்

''குடந்தை குலுங்கட்டும்'' என்று சொன்னோம். தவ்ஹீதை இந்த இயக்கம் முன் வைத்த காரணத்தால், நாம் இரண்டாவதாகக் கொண்ட இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். குடந்தை குலுங்கட்டும் என்ற வார்த்தையை அவன் ஒப்புக் கொண்டான். இல்லையெனில் இவ்வளவு கூட்டத்தைக் கொண்டு வந்து குவித்திருப்பானா?

தவ்ஹீத் என்ற பெயரை நமது இயக்கத்தின் பெயரிலேயே தாங்கிக் கொண்டு, சமுதாயப் பிரச்சினைகளுக்காக அழைத்தால் மக்கள் வருவார்களா? என்ற ஐயம் தவ்ஹீத்வாதிகளிடம் இருந்தது. ஆனால் அந்த ஐயத்தை உடைக்கும் விதமாக, மக்களைக் கொண்டு வந்து கொட்டுகி றேன் என்று அல்லாஹ், குடந்தையைக் குலுங்க வைத்தான்.

தேர்தல் நேரத்தில் எங்களுக்காக வாக்குக் கேட்டு உங்களிடம் வர மாட்டோம் என்று சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுபவர்கள் இவர்கள்தான் என்று நம்மை நம்பி மக்கள் பெருக்கெடுத்தார் கள். காவிரியைத் தாங்க முடியாத குடந்தை இந்த மக்கள் கடலைத் தாங்குமா? என்ற கேள்வி எழுமளவுக்கு கும்பகோணத்தில் மக்கள் குழுமினார்கள்.

எதற்கு வாரியம் வாங்குவதற்காகவா? இலட்சக்கணக்கில் பணத்தை வாரிச் சுருட்டவா? இல்லை. தமுமுக மறந்து விட்ட இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடந்த இந்தப் பேரணியில் கடலாய்ப் பெருக்கெடுத்தனர். முத­ல் ஒரு கட்சியில் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு குடந்தை பேரணியைக் கூட்ட வில்லை. 



இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger