பாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும் ஆய்வில் கண்டுபிடிப்பு

பெண்களைப் புற்று நோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல்

இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம்கொஞ்சமாக குறைந்து வருகின்றது.
புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றதுதாய்ப்பால் கொடுத்தால்தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் அஞ்சுவதுதான் இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால் தாய்ப்பால் கொடுக்காமல் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு புட்டிப்பால்கொடுப்பார்களேயானால் குழந்தைகளும் சரியான நோய் எதிர்ப்பு சக்தி பெறாமல் சீரழிவதோடு,பெண்களுக்கும் இதனால் புற்றுநோய் ஏற்படுகின்றது என்றும்தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்புற்றுநோயிலிருந்தும்மாரடைப்பிலிருந்தும் காக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையும் சமீபத்தியஆய்வில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற ஆய்வு :
இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 (மூன்று லட்சத்து எண்பதாயிரம்பெண்களுக்கு மேல் பரிசோதித்ததில்தாய்ப்பால் கொடுத்தால்புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.
குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம்பெண்கள் புற்றுநோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றதுஅதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும்மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றதுஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத்தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம்பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.
உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும்அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும்கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்துகாத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்அந்த வழிமுறைகள் வருமாறு:
·ஆரோக்கியமான உடல் எடை,
·சுறுசுறுப்பாக இருத்தல்,
·உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத் தவிர்த்தல்,
·தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல்,
· மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும்
· 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்தல்
மேற்கண்ட விஷயங்களை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்று இந்த ஆய்வுகூறுகின்றது.
லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழிநடத்தியவர்இந்த வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய்ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப்பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் கூறியுள்ளார்.
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம்அவனை அவனது தாய்பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.எனக்கும்உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாகஎன்னிடமே திரும்பி வருதல் உண்டு.
அல்குர் ஆன் 31 : 14
பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிறவனுக்காக  தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாகஇரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும்வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமைசக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்படமாட்டார்.
அல்குர் ஆன் 2 : 233
மேற்கண்ட வசனங்களில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்என்று இறைவன் கட்டளையிடுகின்றான்.
தங்களது குழந்தைகளுக்கு பெண்கள் பாலூட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில்தான்இறைக்கட்டளையாக போடப்பட்டுள்ளதுவேறெந்த மதமோசித்தாந்தமோ பாலூட்டுவதைகட்டளையாகப் போடவில்லை.
இஸ்லாம் கட்டளையிடக்கூடிய ஒவ்வொரு வழிமுறையும் மனித குலத்துக்கு நன்மைப் பயப்பதாகவேஅமைந்துள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன.
onlinepj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger