Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

உடலை எப்பவும் ஆரோக்கியமா வெச்சுக்கணுனா... எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க..

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் எலுமிச்சை. ஏனெனில் எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. இந்த சிறிய பழத்தில், உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் இந்த எலுமிச்சையை உணவில் அதிகம் சேர்த்தால், மிகப்பெரிய பிரச்சனையைக் கூட எளிதில் தீர்த்துவிட முடியும். 



பொதுவாக எலுமிச்சையைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது என்றால், உடல் பருமன், தொண்டைப் புண் மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனைகளைப் போக்கும் என்பது தான். ஆனால் இதில் இவற்றைத் தவிர, இன்னும் பலருக்கும் தெரியாத நன்மைகள் நிறைந்துள்ளன. எலுமிச்சையானது உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் மிகவும் சிறந்தது. 


இப்போது எலுமிச்சையை சாப்பிட்டால், எந்த பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதில் எலுமிச்சையைப் பற்றிய உங்களுக்குத் தெரிந்ததை நாங்கள் சொல்ல மறந்திருந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

சரியான குடலியக்கத்திற்கு... 



தினமும் காலையில் எழுந்ததும், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, தேன் சேர்த்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராக செயல்படுவதோடு, குடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

தொண்டை புண்ணை சரிசெய்ய... 



எலுமிச்சையில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் குணமாகிவிடும்.

இளமையை தக்க வைக்க... 



எலுமிச்சை அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க... 



எலுமிச்சையில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியமும் உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அப்போது உண்ணும் உணவுகளில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...



 எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளதால், அதனை சாப்பிட்டால், உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இதனால் எந்தவிதமான நோய் தாக்குதல்களில் இருந்தும் தப்பிக்கலாம். 

கொழுப்பை குறைக்க... 



எலுமிச்சை ஒரு சிட்ரஸ் பழம். அத்தகைய பழத்தின் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களானது கரைக்கப்படும். எனவே உடல் எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.

குமட்டலை போக்க... 



சிலருக்கு பயணம் மேற்கொள்ளும் போது, வாந்தி வருவது போல் உணர்வார்கள். அவ்வாறு குமட்டல் ஏற்படும் போது, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால், குமட்டலைப் போக்கலாம்.

வாத நோயை சரிசெய்ய... 



எலுமிச்சையில் நீர்ப்பெருக்கப் பொருள் அதிகம் உள்ளது. அதாவது, எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். எனவே வாத நோய் உள்ளவர்கள், எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் நல்லது.



புற்றுநோயை தடுக்க... 


அனைவருக்குமே எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது என்று தெரியும். அதேப் போன்று இதில் பல வகையான புற்றுநோயை தடுக்கும் பொருளும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.

தலைவலியை போக்க... 



உடலில் சோர்வு மற்றும் மன அழுத்தம் இருந்தால் வருவது தான் தலைவலி. இத்தகைய தலைவலியைப் போக்குவதற்கு, எலுமிச்சை டீ மிகவும் சிறந்ததாக இருக்கும்.

நாடாப்புழுக்களை அழிக்க... 



குழந்தைகளுக்கு வயிற்றில் நாடாப்புழுக்களானது இருக்கும். இவ்வாறு வயிற்றில் புழுக்கள் இருந்தால், வயிற்று வலி மற்றும் வழக்கத்திற்கு மாறாக மலம் கழிக்க நேரிடும். இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு எலுமிச்சை மிகவும் உதவியாக இருக்கும். எப்படியெனில் எலுமிச்சையில் புழுக்களை அழிக்கக்கூடிய அளவில் சக்தியானது உள்ளது.

உணவை செரிப்பதற்கு... 



அனைவருக்குமே செரிமானப் பிரச்சனை அவ்வப்போது வரும். இவ்வாறு செரிமானப் பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில், உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் குணமாகிவிடும்.



உடலை சுத்தப்படுத்த... 


தினமும் உடலில் நச்சுக்களானது பலவாறு உள்ளே நுழையும். உதாரணமாக, ஜிங்க் உணவுகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவற்றின் மூலம் நுழையும். ஆனால் அத்தகைய நச்சுக்களை போக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடித்தால், வெளியேறிவிடும்.

பற்களை ஆரோக்கியமாக வைக்க... 

எலுமிச்சை சாற்றில், உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கி, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

காயங்களை குணப்படுத்த... 

உடலில் ஏதேனும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டால், அப்போது அதனை குணமாக்குவதற்கு, அன்த இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், காயங்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, காயங்கள் எளிதில் குணமாகிவிடும்.

முகப்பருவை போக்க...
 
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு ஒரு சிறந்த பொருள் என்றால் அது எலுமிச்சை தான். எனவே தான் சரும பராமரிப்பில் எலுமிச்சை அதிகம் சேர்க்கப்படுகிறது.

கல்லீரல் பிரச்சனைக்கு... 

எலுமிச்சையை தினமும் உணவில் சேர்த்தால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

பிறப்புறுப்பை சுத்தமாக்க... 

பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த பயமாக உள்ளதா? அப்படியெனில், கெமிக்கல் இல்லாத இயற்கைப் பொருளான எலுமிச்சையைக் கொண்டு சுத்தம் செய்தால், பிறப்புறுப்பில் எந்த ஒரு பக்கவிளைவும் வராமல் இருக்கும்.

கண் பிரச்சனையை போக்க... 

எலுமிச்சையில் ரூடின் என்னும் பொருள் உள்ளது. ஆகவே எலுமிச்சை உணவில் சேர்த்தால், கண் பார்வை கூர்மையாவதோடு, ரெட்டினாவில் உள்ள பிரச்சனைகளையும் சரிசெய்யலாம்.

சிறுநீரகக் கற்களை கரைக்க... 

எலுமிச்சை பழத்தில் சிட்ரிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள், எலுமிச்சை ஜூஸை அவ்வப்போது குடித்து வந்தால், சிட்ரிக் ஆசிட்டானது சிறுநீரகக் கற்களை கரைத்துவிடும்.

நன்றி- bold sky

0 comments

40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள்

 Middle age is when your children are no longer friends but critics stern of face and severe with their tongue

- Poet Kamala Das


40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.
என்னென்ன நோய்கள் வரும்?
உடல் எடை அதிகரித்தல்
மன அழுத்தம்
சர்க்கரை நோய்
அதிக அளவில் கொழுப்பு சேருதல்
உயர் ரத்த அழுத்தம்
இதய நோய்
எலும்பு மூட்டு நோய்கள்
புற்று நோய்
வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :
மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.

தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85 செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும் கொழுப்பு களில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது ஏன்?

நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.

உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பல காரணங்களால் உடல் குண்டாகிறது.

இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்?

ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள். அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும்.

சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.

சர்க்கரை நோய் தோன்றுவது ஏன்?

பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய் வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிக உடல் எடை இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும்.
உடலில் வயிற்றுப் பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது. அங்குதான் உடலுக்கு தேவை யான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது பான்கிரியாஸ் பாதிக்கப்படுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. தந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கு அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்?

சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது. உடற்பயிற்சி செய்யா மல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது.

உயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம்?

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை, பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது. ஏ.சி. அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான் அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்?

இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்தில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது.

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்?

40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மான மாகி மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.
வந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும் சக்தி படைத்தது யோகாசன பயிற்சிகளேஎன்பது உலகம் அறிந்த உண்
மை

நன்றி - கருப்பு ரோஜாக்கள்
0 comments

நோய் எதிர்ப்பு சக்தி ((Immunity) என்றால் என்ன?

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, தோலில் ஏற்படும் வெடிப்பு இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், நுண் கிருமிகள் போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) என்கிறோம்.

எதிர்ப்பு சக்திகள் எத்தனை வகை

நமது உடலில், இயற்கையான எதிர்ப்பு சக்தி

(Innate Immunity), தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity), உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

இயற்கையான எதிர்ப்பு சக்தி (Innate Immunity)

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை. அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (Neutrophils, Bosophils, Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த (Adaptive Immunity)

இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது Lymphocytesஎன்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity)

மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது?
நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. காய்ச்சல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils ), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

நோய்த்தொற்று எப்போது ஏற்படுகிறது?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன.

நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில...

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது

4. மது, போதைப்பொருள் பழக்கம்,

5. புகைப்பழக்கம்,

6. தூக்கமின்மை,

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்க

சாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது.

கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது.

சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

நன்றி: நக்கீரன்

நன்றி - கருப்பு ரோஜாக்கள்
0 comments

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்!

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும். 

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும். 

அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது. 

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும். 

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். 


சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது! 
0 comments

சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன. இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு. அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்: யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க:
* உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

* அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

* தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

* வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.


முக நூலில் படித்தது....
0 comments

இதய நோய் வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்

இன்றைய காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அன்று 90 முதல் 100 வயது வரை ஆரோக்கியமாக இருந்து மறைந்தவர்கள் ஒரு புறம், இன்று 30 மற்றும் 40 களிலேயே மருத்துவ காப்பீட்டினை முழுமையாக பயன்படுத்தும் நிலவரம்! 

அந்த வகையில் இன்றைய தலைமுறையை ஆட் டிப்படைக்கும் மோசமான நோயாக இதய நோய் இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பெரும்பாலானோர் இறப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், அது இதய நோயாகத் தான் இருக்கும். 

ஏனெனில் அங்குள்ளவர்கள் உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் இதய நோய் வராமல் என்ன வரும். ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன? 

அதுமட்டுமின்றி அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. 

எனவே இத் தகைய பாதிப்பு இதயத்தில் ஏற்படாமல் இருக்கவும், பாதிக்கப்பட்டுள்ள இதயம் குணமாகவும் ஒருசிலவற்றை மனதில் கொண்டு, அதனை பின்பற்றி வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். 

புகைப்பிடிப்பது......... 
இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம். 

கொலஸ்ட்ரால்........... 
கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படி என்றால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, ரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200-க்கு குறைவாக இருக்க வேண்டும். 

உடல் எடை.......... 
இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடை யானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும். 

உடற்பயிற்சி............. 
தினமும் உடற்பயிற்சி செய் வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். 

நீரிழிவு........... 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற்கொள்வது அவசியம். 

உணவுகள்......... 
டயட்டில் இருக்கும் போது, குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதயநோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் “சி” நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும். 

ஆல்கஹால்......... 
ஆல்கஹாலை சரியான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது. 

ட்ரான்ஸ் கொழுப்புகள்...... 
பேட்டி ஆசிட்களில், ட்ரான்ஸ் பேட்டி ஆசிட் உள்ள உணவுகளை சாப்பிட்டால், இதய நோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இந்த கொழுப்புகள் மிகவும் கொடுமையானது. எனவே இவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் இறைச்சிகளில் அதிகம் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சியில் அதிகம் இருக்கும். 

வைட்டமின்களில் கவனம்........ 
ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்கும் வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் அவசியம். அதிலும் வைட்டமின் ஈ மற்றும் போலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஹோமோசைஸ்டீனை குறைக்கும் ஏஜென்ட்களை உடலில் சேர்க்கும் போது, அவை இதய நோய் வராமல் தடுக்கும். 

ஆனால் அந்த ஹோமோசைஸ்டீன் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதிக கொழுப்புக்கள் உடலில் இருந்தால் எப்படி இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்குமோ, அதே அளவு ஆபத்தை உருவாக்கும். எனவே இந்த ஹோமோசைஸ்டீனை குறைக்க மருந்துகள் எதுவும் சாப்பிடாமல், போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம். 

மனஅழுத்தம்........
அதிகமான வேலைப்பளுவின் காரணமாக நிறைய பேர் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 

எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது உடலில் ரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும். 

மருத்துவ ஆலோசனை......... 
குடும்ப நல மருத்துவரிடம் அவ்வப்போது உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பரிசோதிக்கும் போது, ஏதாவது குறைபாடு உடலில் தென்பட்டால், அதனை சரிசெய்ய என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று, அந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். 

இதனாலும் இதய நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் அனைவருக்குமே ஒரே மாதிரியான நிலையில் உடலானது இருக்காது, எனவே மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ளவேண்டும். 

கொழுப்பின் அளவை தொடர்ச்சியாக பரிசோதித்தல் ஒவ்வொரு வருடமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவை தவறாமல் பரிசோதித்து அறிவது, இதயம் பலவீனமடைவதை தடுப்பதற்கான முதன்மையான வழிமுறையாகும். 

இவ்வாறு கொழுப்பின் அளவினை அறிவதன் மூலம் உடலுக்கு கொடுக்க வேண்டிய சரியான அளவிலான உணவு, உடற் பயிற்சி ஆகியவற்றை அறிந்து, அவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலமாக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேற்கண்ட வழிமுறைகளை தவறாமல் பின்பற்றும் போது, பலமான இதயத்தை கொண்டவராகவும் மற்றும் இதய நோய்களிலிருந்து விடுதலை பெற்றவராகவும் இருக்க முடியும்.
0 comments

பாலூட்டும் தாய்மார்களின் கவனத்திற்கு

• பிறந்த குழந்தைக்கு கூடுமானவரை தாய் பாலே கொடுப்பதே சிறந்தது. 

• பால் அதிகமாக சுரக்க ஹார்லிக்ஸ், ராகி, ஓட்ஸை பாலில் காய்ச்சி குடிக்க வேண்டும். தினமும் ஐந்து டம்ளர் குடிக்கலாம். ஓவ்வொரு முறை பாலூட்டும் போதும் தாய்மார்கள் சூடாக மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு பானத்தை குடித்து கொண்டு பாலுட்டுவது நல்லது. 

• குழந்தைக்கு சளி இருப்பது போல் தோன்றினால் இஞ்சி காபி குடிக்கலாம். பாலூட்டும் தாய்மார்கள் குளுமையான அயிட்டங்கள் சாப்பிட கூடாது. மிளகை சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக் கொண்டால் குழந்தைக்கு சளி பிடிக்காது. 

• தாய்மார்கள் இர‌ண்டு காதுக‌ளையும் ஒரு ஸ்கார்ஃப் கொண்டு சுற்றி கொள்ள‌வும். காலில் எப்பொழுதும் செருப்பு அணிந்து கொண்டிருக்க வேண்டும். இர‌வில் தூங்கும் போது சாக்ஸ் போட்டு கொள்ள‌வும். இப்ப‌டி செய்வ‌தால் ந‌ர‌ம்புகளில் காற்று ஏறுவ‌தை த‌விர்க்க‌லாம். 

• எலும்புகள் வலுவடைய‌ சிக்கன், மட்டன், ஆட்டு கால், மீன் போன்றவைகளில் மிளகு சேர்த்து எலும்புகளில் சூப் வைத்து 40 நாட்கள் வரை தினமும் மூன்று டம்ளர் அளவிற்கு குடித்தால், உங்கள் எலும்பும் பலம் பெறும், உங்கள் குழந்தை எலும்பும் பலம் பெறும். பாலும் ந‌ன்கு சுர‌க்கும். 

• பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறும் பத்து மாதமாக பெரியதாக இருந்ததால் சுருங்க நாள் எடுக்கும். நார்மல் டெலிவரி ஆனவர்கள் இடுப்பை சுற்றி ஒரு ஜான் அளவிற்கு பெல்ட் போடவும், இல்லை மெல்லிய காட்டன் சேலையை மேல் வயிறுக்கும், அடிவயிற்றிக்கும் சுருட்டி இருக்கமாக கட்டி கொள்ளவும். சாப்பிடும் நேரம், பாத்ரூம் போகும் நேரம் தவிர மற்ற நேரம் கண்டிப்பாக கட்டவும். இது தொடர்ந்து 40 நாள் வரையும், அதற்கு மேல் கொண்டும் கட்டாலாம். 

• வயிற்றில் சுருக்கம் விழாமால் இருக்க நல்லெண்ணை (அ) ஆலிவ் ஆயிலில் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது நிவ்யா கிரீமும் கலந்து வயிற்றில் தேய்த்து குளிக்கவும். நாளடைவில் சுருக்கம் மறைந்துவிடும். வயிற்றில் சுருக்கம் விழாமல் இருக்க பிள்ளை உண்டாகி மூன்றாம் மாதத்திலிருந்து வயிறு விரிவு கொடுக்கும் போது அரிப்பெடுத்தால் சொரியாமல் ஏதாவது கிரீம் (அ) ஆலிவ் ஆயில் தடவி வந்தால் பிரசவத்திற்கு பிறகு சுருக்கம் அவ்வளவாக விழாது.
0 comments

மது குடிப்பதால் தூக்கம் கெடும்... நிபுணர்கள் எச்சரிக்கை!!

தூக்கம் உடலின் செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று. அதனால் ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் என்பது அவசியமான ஒன்று. எதுவுமே அளவாக இருந்தால் தான் நமக்கு நன்மை. அதே போல் தான் தூக்கமும். 

தூக்கமின்மையும் சரி, அதிகமான தூக்கமும் சரி, இரண்டுமே நமக்கு பெரிய பிரச்சனை தான். தொடர்ச்சியாக பல இரவுகள் போதிய தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலரை போலவே, அதிகமாக தூக்கம் வரும் பிரச்சனை உள்ளவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்களா? 

அப்படியானால் அதிகமாக தூக்கம் வருவதற்கான காரணங்களையும் அதனை குணப்படுத்தும் வழிகளையும் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். 

இன்சோம்னியா எனப்படும் போதிய தூக்கமின்மை, இது ஒரு பொதுவான பிரச்சனையே. இது உங்கள் ஆக்கத்திறன், மனது, உடல்நிலை மற்றும் வேலை பார்க்கும் திறனை வெகுவாக பாதிக்கும். இதுவே கரனிக் இன்சோம்னியா என்றால் பல உடல்நல கோளாறுகள் கூட வரும். வாழ்வு முறை மற்றும் தினசரி பழக்க வழக்கத்தில் எளிய மாற்றங்களை கொண்டு வந்தால் தூக்கமில்லாமைக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம்.

வேலை நேரம் 


இரவு நேரங்களில் வேலையில் ஈடுபட்டிருப்பதால் பகலில் தூங்குகிறீர்களா? அப்படியானால் இயல்பான தூக்க சுழற்சியில் மற்றம் ஏற்பட்டும் . தூக்க சுழற்சி மாறியிருப்பதால், உடம்புக்கு கிடைக்க வேண்டிய சீரான, தேவையான அளவு தூக்கம் கிடைப்பதில்லை. இதனால் போதிய தூக்கம் கிடைக்காமல் முழித்திருக்கும் நேரத்தில் கூட தலை குடைச்சல் ஏற்படும்.

உடற்பயிற்சி 

நம் உடல் போதிய அளவு உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் மெட்டபாலிசத்தின் செயல்பாடு குறைந்து விடும். இதனால் சோம்பல் ஏற்பட்டு எப்போதும் தூக்க கலக்கத்தோடு இருப்பீர்கள்.

அதிகமான எடை 

அதிக எடை அல்லது கொழுத்த உடலை கொண்டவர்களுக்கு ஹைபர்சோம்னியா என்ற தூக்கமிகைப்பு இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிக எடை இருந்தால் உடலில் உள்ள மெட்டபாலிச வீதம் குறைத்து விடும். இதனால் ஆக்கத்திறனும் குறைந்து விடும். இதன் விளைவு அதிகப்படியான பகல்நேர தூக்கம் ஏற்படும்.

செல்லப்பிராணிகள் 

பல பேர் படுக்கையில் செல்லப்பிராணிகளை படுக்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் பிராணிகள் நம்முடன் படுக்கையில் படுக்கும் போது நமக்கு தூக்கம் வருவது கடினமாக இருக்கும் என்று சான்றுகள் கூறுகின்றன. அதேபோல் மயோ கிளினிக் ஸ்லீப் டிஸ்ஆர்டர் மையம் நடத்திய சர்வேயின் படி, மிருகங்கள் தூக்கத்தை கெடுக்கின்றன என்று மிருகங்களுடன் படுக்கும் 53% மக்கள் தெரிவுத்துள்ளனர்.

மதுபானங்கள் 

மதுபானம் பருகுவது தூக்கம் இழப்புக்கு காரணம் என்று சொல்வது நம்மை வியப்புக்குள் ஆழ்த்தலாம். மது நம் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும். முதலில் போதையை தந்தாலும், சில மணி நேரங்கள் பிறகு இரத்தத்தில் உள்ள அல்கஹால் அளவு குறைந்தவுடன், தூக்கம் களைந்து விடும்.ஒரு கோப்பை வைன்தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என்றால், படுப்பதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் குடிப்பதை நிறுத்துங்கள்.

ஜி.இ.ஆர்.டி 

ஜி.இ.ஆர்.டி(gastro esophageal reflux disorder) உள்ளவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். அவர்கள் படுக்கையில் படுக்கும் போது, உடம்பில் உள்ள அமிலம் ஈசோஃபேகஸ் நுழையும். இதனால் இதயத்தில் எரிச்சல் ஏற்பட்டு வலியும் எடுக்கும். சில பேர் தலையனைகளுக்கு நடுவில் படுத்து உறங்க முயற்சிப்பர்.

மருந்துகள் 

உங்கள் தூக்கம் கெடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உங்கள் மருந்துப் பெட்டியிலேயே உள்ளது. ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் சந்தேகப்படுவதில்லை. ஆஸ்துமாவிற்காக பயன்படுத்தும் ஊக்க மருந்து மற்றும் அதிக இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்களுக்காக பயன்படுத்தும் பீட்டா-ப்ளாக்கர்ஸ்(beta-blockers) போன்ற மருந்துகள் இரவில் விழித்திருக்கச் செய்யும்.

வலி 

உடம்பில் எந்த ஒரு வலி இருந்தாலும் அது தூக்கத்தை கெடுக்கும். தலைவலி, முதுகு வலி, கீல்வாதம், தசை வலி மற்றும் மாதவிடாயினால் ஏற்படும் வலி போன்றவைகள் எல்லாம் இதற்கு உதாரணங்களாகும். வலி அதிகமாக இருந்தால் தான் தூக்கம் கெடும் என்பதில்லை.

தூக்க பிரச்சனை 

உங்கள் வாழ்க்கை துணைக்கு தூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் இருந்தாலோ அல்லது உங்களை மிதிக்கும் பழக்கம் இருந்தாலோ, உங்கள் இருவரின் தூக்கமும் கெட்டுப்போகும்.

படுக்கையறையின் அமைப்பு 

உங்கள் படுக்கையறை அதிக வெப்பமாக அல்லது அதிக குளிராக இருக்கிறதா? அல்லது சுவற்றுக்கு அடிக்கப்பட்ட வர்ணம், வெளிச்சம் வராமல் தடுக்கிறதா? இதனை போன்ற பல அமைப்பின் காரணமாக உங்கள் தூக்கம் கெடும்.

பதற்றம் மற்றும் மன அழுத்தம் 

பல பேருக்குபதற்றம் மற்றும் மன அழுத்தத்தால் தூங்குவதில் பிரச்சனை ஏற்படும். தூக்கம் கெட்டுப் போவதால் இந்த பதற்றமும் அழுத்தமும் அதிகமாகும். இந்த இரண்டு காரணங்களால் தூக்கம் கெடுகிறது என்றால் இந்த மன ரீதியான பிரச்னைக்கு முதலில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.

குட்டித் தூக்கம் 

பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போட்டால் இரவு நேரத்தில் தூங்குவதில் சிரமம் ஏற்படும். குட்டித் தூக்கம் போட வேண்டுமென்றால் மதியம் 3 மணிக்கு முன் அதிகபட்சமாக அரை மணி நேரத்திற்கு மேல் தூங்காதீர்கள்.
0 comments

உடல்நலத்தை பாதுகாக்க புதிய டயட் முறை

தங்களது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் சிலருக்கு அதீத ஆர்வம் இருக்கும். உடல் மெலிந்து காணப்படவேண்டும் என்பதற்காக எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றுவார்கள். அத்தகைய ஆர்வலர்களுக்கு மத்தியில் இப்போது ஒரு வித்தியாசமான உணவுமுறை வரவேற்பைப் பெற்றுள்ளது. 

வாரத்தின் ஏழு நாட்களில் முதல் ஐந்து நாட்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளையும் உண்ணலாம், ஆனால், கடைசி இரண்டு நாட்களும் 600 கலோரிக்கு மேற்பட்டு உண்ணக்கூடாது என்பதே அந்தப் புதிய முறையாகும். இங்கிலாந்து மக்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த உணவுமுறை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது. 

ஃபாஸ்ட் டயட் அல்லது 5:2 என்று அறியப்படும் இந்த உணவுமுறையை மிமி ஸ்பென்சர் மற்றும் மைக்கேல் மோஸ்லி என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்து நாட்டில், விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 

அமெரிக்காவில், இதுவரை பனிரெண்டு முறைக்கு மேல் மறு பதிப்புகள் போடப்பட்டுள்ளன. இருவரும் நடத்திய ஆய்வு, உணவிற்கு இடையிலான இடைவெளிகள் அதாவது உண்ணாவிரதம் இருப்பது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்டிரால் அளவைக் குறைகின்றது என்று தெரிவித்தது. 

அதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் எடை குறைவதால், உடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றது. இதனால், இதய நோய், சர்க்கரை நோய் போன்றவை வராமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்று மோஸ்லி தெரிவித்தார். 

தன்னுடைய கொலஸ்டிரால் அளவும், சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தபின், சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக இந்த உணவு முறையைப் பின்பற்ற ஆரம்பித்ததாக மோஸ்லி கூறினார். 

மூன்று மாதங்களில் 8 கிலோ எடை குறைந்ததாகக் கூறிய அவர், இப்போது தனது கொலஸ்டிரால் அளவும், சர்க்கரை அளவும் குறைந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறினார்.
0 comments

மன உளைச்சலும், மாதவிடாய் கோளாறும்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயைப் பொறுத்தவரைக்கும் அதில் ஓர் ஒழுங்குமுறை இருக்க வேண்டும். ஆனால், சிலருக்கு அதில் ஒழுங்கற்றதொரு தன்மை காணப்படும். பெரும்பாலும் வேலைக்குச் செல்லும் இளம் பெண்களுக்கு இப்பிரச்சினைக்கு அதிகமாக காணப்படுகிறது. 
இதற்கு பெண்களின் மன அழுத்தமே பிரதான காரணமாக அமைகின்றது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். வீட்டில் இருக்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகுவது மிகவும் குறைவு எனலாம். 

வேலைக்குச் செல்கின்ற இளம் பெண்கள், வேலைத்தளங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் போன்ற பல்வேறு வழிகளில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பருவமடைந்த பெண்கள் இவ்வாறு அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது, அவர்களின் மூளையில் அது ஒரு சுமையாகவே பதியப்படுகிறது. 

இந்தச் சுமையானது மூளையிலிருந்து வருகின்ற மாதவிடாய்கான தூண்டுதல்களில் தாமதங்களை ஏற்படுத்துகின்றது. இத்தூண்டுதல்கள் ஹார்மோன்கள் சுரப்பதை தாமதப்படுத்தி அவர்களின் மாதவிடாயிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது. இதுவே பெண்களின் மாதவிடாய் ஒழுங்கற்று ஏற்படுவதற்கான பிரதான காரணியாக அமைகின்றது. 

ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமை, சரியான உடற்பயிற்சியின்மை போன்ற பிற காரணிகளும் பெண்களின் மாதவிடாய் ஒழுங்கு முறையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சாதாரணமாக முதல் மாதவிடாய் ஏற்பட்டு அடுத்த மாதவிடாயானது சற்று பிந்தி ஏற்படலாம். அதற்காக பயப்பட தேவையில்லை. 

அதேவேளை மாதவிடாய் முறையற்ற விதத்தில் ஏற்படுவது ஒரு நோயின் அறிகுறியல்ல என்பதையும் நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே, தேவையற்ற மனக்குழப்பங்களுக்கு ஆளாகுவதை இளம் பெண்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அத்துடன் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்காமல் முடிந்தளவு ஓய்வாக உடம்பை வைத்துக்கொள்ளவும் வேண்டும். ஆகவே, சத்துள்ள உணவுகளை உட்கொள்வதுடன், முறையான உடற்பயிற்சி என்பனவற்றின் மூலம் ஒழுங்கானவிதத்தில் மாதவிடாயை பேணிக் கொள்வதுடன் உங்கள் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.
0 comments

அனைத்து நோய்களுக்கும் நிவாரணி: வாழைப்பழம்

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப்பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள். 
ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் `ஏ', வைட்டமின் `பி' 6, வைட்டமின் `சி', மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். 
அவ்வாறு சாப்பிட வாங்கும் வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள். அத்தகையவர்கள் அதனை விரைவில் பழுக்க வைப்பதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. அது என்னவென்றால், அதனை ஒரு பிரவுன் பேப்பரில் போட்டு சுற்றிவிட்டால், சீக்கிரம் பழுத்துவிடும். 

மேலும் சிலர் ப்ரிட்ஜில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும். அதற்காக சாப்பிட கூடாது என்பதில்லை. சிலருக்கு நிறம் மாறிவிட்டால், கெட்டுப் போய்விட்டது என்று தூக்கிப் போட்டு விடுவார்கள் என்பதாலேயே தான். இவ்வாறு நன்கு கனிந்த வாழைப்பழத்தை பலவாறு சாப்பிடலாம். 

குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்திருப்பதில்லை, வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும், நிறைய சத்துக்கள் உள்ளன. இப்போது அதில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். 

அலர்ஜி...... 
அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும். 

ரத்த சோகை....... 
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கி, ரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள். 

மலச்சிக்கல்...... 
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். 

வயிற்றுக்கடுப்பு.........  
மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். 

தலை பாரம்........ 
மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும். 

புகைப்பிடித்தலை நிறுத்த...
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும். 

மன அழுத்தம்......... 
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். 

குடல் கோளாறு........... 
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும். 

மூளை செயல்பாடு.......  
பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள். 

சிறுநீரக பிரச்சனை.......  
வாழைப் பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும். அதிலும் இந்த பழத்தை தொடர்ந்து மூன்று நாட்களில், ஒரு நாளைக்கு 89 பழங்கள் சாப்பிட்டால், எந்த ஒரு பிரச்சனையானாலும் போய்விடும். 

மாதவிடாய் பிரச்சனை.......  
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால்,அது மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவும். அதிலும் அதிகப்படியான ரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான ரத்தப் போக்கு குறையும். 

எடை குறைய......... 
உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும். 

இதய நோய்.........  
வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40% பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 

சிறுநீர் கோளாறு.......  
வாழைத்தண்டை ஜுஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறை போக்கலாம். இந்த ஜுஸ் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரக கற்களை போக்குவதற்கு சிறந்த நிவாரணி. இதுபோன்று உடலில் ஏற்படும் அசாதாரண கோளாறுகளை நீக்கவல்ல வாழைப்பழத்தை தினமும் உண்டு உடல் உபாதைகள் இன்றி வாழ்வோம்.

இலங்கை முஸ்லிம் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger