ஏசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டாரா?-பகுதி-2


ஏசு மரணிக்கவில்லை                                                                     

ஆதாரம்: 1 - போர் வீரர் ஏசு 
             ஆரம்பம் முதல்கடைசி வரை யூதர்கள் ஏசுவை அங்கீகரிக்கவே இல்லை. அவரை அவர்கள் மறுத்தே வந்தனர்.அவரை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் அவர்மீது யூதர்களால் மரண தண்டனை விதிக்க முடியாது. காரணம், ஆட்சியதிகாரம்அன்றைய ரோமானியப் பேரரசிடம் தான் இருந்தது. யூதர்களிடம் கோவில் நிர்வாகம் மட்டுமேஇருந்தது. 
        அதே சமயம், தங்கள்திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ரோமானியப் பேரரசை வழிக்குக் கொண்டு வரும்செல்வாக்கை யூதர்கள் பெற்றிருந்தனர். அதன் அடிப்படையில் ஏசு சிலுவையில்அறையப்படுகின்றார். அவரைச் சிலுவையில் ஏற்றிக் கொல்வதற்கான காரணத்தை, அதாவது அதற்கானகுற்றத்தை யூதர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பின்னணியுடன் உள்ளேசெல்வோம். 
        யூதர்கள் ஏசுவைஏற்றுக் கொள்ளவே இல்லை. ஏசுவும் இதைப் பொறுப்பதாக இல்லை. அதனால் அவர் தன்னுடன்இருக்கின்ற 12 சீடர்கள் சகிதமாக ஜெருஸலத்தை நோக்கிப் புறப்படுகின்றார். 
      ஏசுவின் நம்பிக்கைக்குரியசீடர் யோவான் ஒரு விருந்து படைக்கின்றார். அவ்விருந்தில் ஏசுவின் 12 சீடர்களும்கலந்து கொள்கின்றனர். இவ்விருந்து யோவானின் வீட்டு மாடியிலுள்ள அறையில்நடைபெறுகின்றது. ஏசு, யோவான் ஆகிய இருவரையும் சேர்த்து 14 பேர் உணவுமேஜையில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றார்கள். இதற்கு,"கடைசி இரவு விருந்து' என்றுஅழைக்கப்படுகின்றது. இந்த விருந்து சாப்பிட்ட தெம்பில் தான் ஏசு ஜெருஸலம் நோக்கிப்புறப்படுகின்றார்.  எதற்காக? யூதர்களின்கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றி கடவுளின் ராஜ்ஜியத்தை நிலை நாட்ட! 
மகளேசீயோன்! மகிழ்ந்து களிகூரு; மகளே எருசலேம்!ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர் வெற்றி வேந்தர் எளிமையுள்ளவர் கழுதையின் மேல் கழுதைக்குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர். 
ஜெக்கரிய்யா 9:9

   இந்த முன்னறிவிப்பு நிறைவேறும் வகையில் ஏசுவின்வருகை அமைகின்றது. 
"கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்' என்று இறைவாக்கினர்உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது. 
   சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியேசெய்தார்கள். அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து அவற்றின் மேல்தங்கள் மேலுடைகளைப் போட்டு இயேசுவை அமரச்செய்தார்கள். பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறுசிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர். அவருக்கு முன்னேயும்பின்னேயும் சென்ற கூட்டத்தினர் , " தாவீதின் மகனுக்குஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! உன்னதத்தில் ஓசன்னா! என்று சொல்லிஆர்ப்பரித்தனர் . 

மத்தேயு 21:5-9

வழியெங்கும்வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் காத்திருந்தன. கடவுளின் ராஜாங்கம் வெகு விரைவில்உதயமாகவிருந்தது. 
இயேசுஎருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப் போகிறது என்று நினைத்தார்கள்.
லூக்கா 19:11

கழுத்தைத் துண்டிக்கக் கட்டளை 
   கடவுளின் ராஜாங்கத்தை எதிர்க்கும் துரோகிகளைத் தன்முன்னே கொண்டு வரச் சொல்லி கழுத்தை வெட்டுமாறு கர்த்தர் ( ?) ஏசுகட்டளையிடுகின்றார். 
மேலும்அவர் , " நான் அரசனாக இருப்பதைவிரும்பாத என் பகைவர்களை இங்கு கொண்டு வந்து என் முன் படுகொலை செய்யுங்கள் என்று சொன்னார். 

லூக்கா 19:27

      குருத்தோலைகளைப்பிடித்துக் கொண்டு அவருக்கு எதிர் கொண்டு போய் ," ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக!இஸ்ரயேலின் அரசர் போற்றப் பெறுக! என்று சொல்லிஆர்ப்பரித்தனர். 

யோவான் 12:13

இவ்வாறுஏசு வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தார். 
கலக்கத்தில் யூத குருமார்கள் 
      இதைக் கண்ட பரிசேயர் ," பார்த்தீர்களா! நம் திட்டம் எதுவும் பயனளிக்கவில்லை. உலகமேஅவன் பின்னே போய்விட்டது என்று தங்களிடையேபேசிக் கொண்டார்கள். 

யோவான் 12:19

ஏசுவின் எச்சரிக்கை 
           இப்போதே இவ்வுலகுதீர்ப்புக்குள்ளாகிறது இவ்வுலகின் தலைவன்வெளியே துரத்தப்படுவ ான். 

யோவான் 12:31

களத்தில் இறங்கிய ஏசு 
       சீடர்கள் வெளிப்படுத்தியஉற்சாகத்தில் ஏசுவுக்கே தலைகால் புரியவில்லை. அவரே நேரடியாகக் களத்தில் வீரசாகசங்களை ஆற்றத் துவங்கி விடுகின்றார். 
   அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள்எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார் ஆடு மாடுகளையும்விரட்டினார் நாணயம் மாற்றுவோரின்சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். 

யோவான் 2:15
இன்ஷா அல்லாஹ்  தொடரும்.... 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger