Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் உத்தரவில் குண்டுவெடிப்புகள் நடத்தினோம்: சுவாமி அசீமானந்த் தகவல்

சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறையில் சந்தித்து பேசினர்.

அப்போது அசீமானந்தா தெரிவித்த தகவல்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதில் அசீமானந்த் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் சுருக்கம்:
மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாதுராம் கேட்சோ, நாராயண் அப்தே ஆகியோர் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட சிறைதான் இந்த அம்பாலா சிறை. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டு 18 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே. அவர் அடைக்கப்பட்டிருந்த அதே செல்லில்தான் இப்போது நான் இருக்கிறேன். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஹிந்துக்களின் நன்மை கருதியே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை.. அனைத்து விசாரணை அதிகாரிகளிடமும் நான் ஒப்புதல் வாக்குமூலம்தான் கொடுத்திருக்கிறேன்.
2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதாவது குஜராத்தின் சூரத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு முடிவடைந்த பின்னர் அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலராக இருந்த தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் இந்தரேஷ் குமார் ஆகியோர் குஜராத்தின் டாங்க்ஸ் பகுதியில் என்னை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுனில் ஜோஷியும் உடனிருந்தார். இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.
அப்போது மோகன் பகவத் என்னிடம், நீங்கள் சுனில் ஜோஷியுடன் இணைந்து இதை செய்யுங்கள்.. நாங்கள் நேரடியாக தலையிட முடியாது.. இப்படி குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது ஒன்றும் குற்றமும் அல்ல.. இது நமது தத்துவ சிந்தனையுடன் தொடர்புடையது. ஹிந்துக்களுக்கு முகவும் முக்கியமானது. தயவு செய்து இதை நீங்கள் செய்யுங்கள்.. உங்களுக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார்.
இவ்வாறு சுவாமி அசீமானந்த் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தே குண்டுவெடிப்புகளுக்கு உத்தரவிட்டார் என சுவாமி அசீமானந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி-
0 comments

சவூதி உள்ளிட்ட வளைகுடாவில் புதன் கிழமை ரமலான் தொடக்கம்!

ரியாத்: சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நேற்று இரவு ரமலான் பிறை தென்படாததால் நாளை மறுநாள் புதன் கிழமை நோன்பு தொடங்குகிறது.
சவூதி காலண்டர்படி ஷஃபான் பிறை 29 முடிந்து நேற்று திங்கள் இரவு நோன்பு தொடங்கும் என்று எதிர் பார்க்கப் பட்டது. எனினும் ரமலான் பிறை  தென்படாததால் நபிவழிப்படி ஷஃபான் பிறையை 30ஆக கணக்கிட்டு ஜூலை 10 புதன்கிழமை முதல் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது
0 comments

மக்கள்தொகை கணக்கெடுப்பில் பெயர் சேர்க்க மீண்டும் வாய்ப்பு

காரைக்கால்:காரைக்கால் நகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெயர்ச் சேர்க்க, மற்றொரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 இது குறித்து, மாவட்ட ஆட்சியர் செயலர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
"காரைக்கால் புதிய நகராட்சி பகுதிக்குட்பட்ட 18 வார்டுகளில் வசிப்பவர்கள் ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில் கைரேகை, கண் பதிவு, புகைப்படம் எடுக்காமல் விடுபட்டவர்கள் இருப்பின், காரைக்கால் நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
இந்த முகாமுக்கு செல்லும் போது, குடும்ப உறுப்பினர்கள் ஏற்கெனவே புகைப்படம் எடுத்ததற்கான ஆதாரம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை போன்றவற்றை எடுத்து செல்லவேண்டும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைய வேண்டுகிறோம்".
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 comments

சீனாவில் தாய்ப்பால் விற்பனைக்கு எதிர்ப்பு

சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷென்சுன் நகரில் உள்ள திடீர் பணக்காரர்களிடம் ஒரு புதிய பழக்கம் தென்பட்டு வருகின்றது. 

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் என்றும், அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு இது நல்ல பலன்களை அளிக்கும் என்றும் இவர்கள் எண்ணுகின்றனர். 

இதனைப் பயன்படுத்திக் கொண்டு சின்சின்யூ என்ற தரகு நிறுவனம் பணத்திற்காக பல இளம் தாய்மார்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றது. 

ஏழ்மை நிலையில் உள்ள இளம் தாய்மார்கள் பணத்தேவைக்காக தங்களின் தாய்ப்பாலை சில நாட்களில் இருந்து சில வாரங்களுக்கு 2000 முதல் 4 000 டொலர் வரை விற்று வருகின்றனர். 

தங்களின் வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது அவர்கள் கருவி மூலம் எடுத்துத்தரும் பாலையோ அருந்தலாம் என்று இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது. இது நெறிமுறையற்ற செயல் என்று தங்களின் கோபத்தை இணையதளத்தில் வெளிப்படுத்தியுள்ள மக்கள், பணக்காரர்கள் பெண்களிடம் காட்டும் அலட்சியமும், அகம்பாவமும் இதில் வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். 

பெண்களை விற்பனைப் பொருளாக கருதும் மனப்பான்மையும், பணக்காரர்களின் தரக்குறைவான ஒழுக்கப்பண்புகளும் சீனாவின் பிரச்சினைகளாக உள்ளதை இந்த செய்கை வெளிப்படுத்துகின்றது என்று ஊடகங்களில் அறிவிப்பாளராக இருக்கும் கவோ பவோயின் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். 


பொதுமக்கள் வெளியிட்டுள்ள கருத்துகளால், ஷென்சுன் நகர நிர்வாகம் இந்த நிறுவனத்தின் விற்பனை உரிமத்தைத் தடை செய்துள்ளது. ஆயினும், இதுபோல் பதிவு பெறாத எத்தனையோ நிறுவனங்கள் வெளியில் தெரியாமல் இதனைத் தொடரக்கூடும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
0 comments

மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம்!

சென்னை: மாமல்லபுரத்தில் கடல் வாழ் உயிரினக் காட்சியகம் ஒன்றினை இயற்கைச் சூழலில் உள்ளது போல் அமைத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மீன்வளத்துறையின் தொழில்நுட்ப உதவியுடன், பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்புடன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக உலகத் தரம் வாய்ந்த கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தை 250 கோடி ரூபாய் செலவில் அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடல்வாழ் உயிரினக் காட்சியகம், கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கடல் சூழலில் உள்ளது போன்று உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டு ஒரு கடல் போல் காட்சி அளிக்கும். இக்கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில், பெரிய நீர்வாழ் பாலூட்டிகளான டால்பின், கடற்பசு மற்றும் சுறா, கடல் அலங்கார மீன்கள் மற்றும் கடல் வாழ் மீன்கள், கடற்புற்கள், கடற்பாசிகள், பவளப்பாறைகள் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட வாழிடத்தில் காட்சியளிக்கும்.
பார்வையாளர்கள் அக்ரிலிக் கண்ணாடி சுரங்கங்களின் மேற்கூரையில் நீந்தும் சுறாக்களை காணும் பொழுது கடற்சூழலை உணரும் வண்ணம் இக்காட்சியகம் அமைக்கப்படும். இந்தக் காட்சியகம் வண்ணமீன் தொட்டிகள் கொண்ட காட்சியரங்குகள், உணவகங்களுடன் கூடிய ஓய்வரங்கங்கள், திறந்தவெளி வண்ணமீன் தொட்டிகள், செயற்கை ஏரிகள், இசை நீரூற்றுகள், திறந்தவெளி அரங்குகள், கல்வி அரங்குகள், கருப்பொருள் அரங்குகள், பசுமை வெளிகள், ஆராய்ச்சிக் கூடம் மற்றும் பல வசதிகளைக் கொண்டிருக்கும்.
இந்தக் காட்சியகம் சென்னைக்கு அருகில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் அழகான கடற்கரையினைக் கொண்டுள்ள மாமல்லபுரத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படும். இக்காட்சியகம், கடல் சூழலியலையும் அதன் வளங்களையும் பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் பொது மக்களையும், ஆராய்ச்சியாளர்களையும் மற்றும் மாணாக்கரையும் குறிப்பாக சிறுவர், சிறுமியர்களையும் வெகுவாக கவரும்.
இந்த கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தினை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை
தயாரிப்பதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை நிறுவனமாக தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் செயல்படும். விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
0 comments

சீனா: வணிக நோக்கு - ஆட்டுப்பால், மாட்டுப்பால், கழுதைப்பால் வரிசையில் விற்பனைக்கு வந்துள்ள ‘தாய்ப்பால்’

"தாய்ப்பாலுக்குக் கணக்குப் போட்டா தாலி மிஞ்சுமா?" என்று கேட்கிறது தமிழ்ப் படப் பாடல் வரி ஒன்று. தாய்மையின் புனிதச் சின்னமான தாய்ப்பாலையும் வணிகப்படுத்தி பணம் பார்க்கும் நிலை சீனாவில் நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக, சீனாவில் தாய்ப்பால் விற்பனை மிகவும் சூடுபிடித்துள்ளதாம். இதற்காக ஏழைத் தாய்மார்கள் கூலிக்கு அமர்த்தப்படுகின்றனராம். ஆயினும் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக, தாய்ப்பாலைப் பயன்படுத்தி கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் போன்ற தின்பண்டங்கள் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது, சீனாவில், ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் எனக்கூறி தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல தரகு அமைப்புகள் திடீரென்று முளைத்துள்ளனவாம். மாசுவற்றது என்பதால் தாய்ப்பால் வாங்க பெரும் சந்தை உள்ளதாம்.
குழந்தைகளுக்கு மட்டுமின்றி வயதானவர்களும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனராம். இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர். இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது.
பெண்களை வர்த்தக பண்டமாக நடத்தும் நிலைக்கு சீனா சென்றுள்ளது வருத்தத்தை அளிப்பதாக பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊடகச் செய்திகளை வைத்து சென்சென் மாகாணத்தில் தாய்ப்பால் விற்று வந்த சின்சின்யு என்ற நிறுவனத்தின் உரிமத்தை சீன அரசு நீக்கம் செய்துள்ளது.
எல்லாவற்றிலும் காசு பார்க்கும் இந்த கீழான உத்திக்கும், பெண்மையையும் தாய்மையையும் ஒரு பண்டமாகப் பார்க்கும் மனப்பான்மைக்கும் அந்நாட்டிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம்.
1 comments

12 வயது சிறுவனுக்கு 9,00,000 ரியால்கள் அபராதம்!

சக நண்பன் ஒருவன் தீக்காயங்கள் அடைய காரணமாக இருந்தமைக்காக பன்னிரண்டு வயதேயான சிறுவனுக்கு சவூதி அரேபியாவின் துரைஃப் நகர நீதிமன்றம் சவூதி ரியால்கள் 9,00,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
ஃபாயிஸ் முஹம்மது அவ்வாத் என்னும் பெயருடைய அச்சிறுவன் தன் சக நண்பனுடன் பார்பிக்யூ எனப்படும் சுடுகோழி உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது, நண்பனின் வேண்டுகோளின் பேரிலேயே மண்ணெண்ணெய்க் குடுவையை எடுத்து வந்துள்ளான். சமைத்துக் கொண்டிருந்த கரி அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்ற முற்பட்டபோது, அது காற்றின் வேகத்தாலோ என்னவோ நண்பனின் ஆடை மீதே முழுவதும் கொட்டியுள்ளது. உடனடியாக அந்நண்பன் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளான்.
இச்சம்பவம் குறித்து சிறுவன் அவ்வாத் கூறுகையில் "இப்படி நண்பன் தீக்காயம் அடைவான் என்று தெரிந்திருந்தால், சுடுகோழி உணவு தயாரிக்கவே சென்றிருக்க மாட்டேன். இப்போது என் நண்பன் நலமாகவே இருக்கிறான். அவனுடன் எனக்கு இன்னமும் நல்ல நட்பும் உள்ளது" .
தந்தையை மணவிலக்கு செய்து வாழும் தாயுடன் வசித்து வரும் சிறுவன் அவ்வாத் ஆறுமுறை நீதிமன்ற விசாரணைக்காகச் சென்று வந்துள்ளான். இச்சம்பவம் குறித்து தன் தந்தையிடம் தெரிவிக்கவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் அவர் அறியப்பெற்றார் என்றும், சிறுவர்கள் நீதிமன்றம செல்ல நேரிட்டால், தந்தை போன்ற பிரதான பொறுப்பாளர்கள் உடனிருக்க வேண்டும் என்று சட்ட விதி இருக்கும் போது, தன் மகன் தனியாகவே ஆறு நீதிமன்ற அமர்வுகளுக்குச் சென்று வந்துள்ளதை நீதிமன்றம் எவ்வாறு அனுமதித்தது என்று அவர் கேள்வி எழுப்பியதாகவும், தனக்காகவே தந்தை இவ்வழக்கில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் சிறுவன் அவ்வாத் தெரிவித்துள்ளான்.
0 comments

பெரும் ரயில் விபத்து - 60 பேர் உடல் கருகி பலி (காணொளி இணைப்பு)

லாமேக்னடிக்: கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகர் அருகே ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் வடக்கு டோக்டா நகரில் இருந்து எண்ணெய் ஏற்றிக் கொண்டு 77 டாங்கர்களுடன் சென்ற ரயில், கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகர் வந்த போது, திடீரென தடம் புரண்டு கட்டிட பகுதிக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. இதில் 60-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணொளி
சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றனர்.   பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்..
0 comments

எய்ட்ஸ்க்கு புதிய சிகிச்சை - அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர் - எலும்பு மஜ்ஜைகளை மாற்றுவதன் (Bone Marrow Transplant) மூலம் எச்.ஐ.வி. நோயினைக் குணப்படுத்த முடியும் என பாஸ்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு அமெரிக்கர்கள் குருதிப் புற்று நோயினாலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் பாஸ்டனில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களுடைய புற்றுநோயினைக் குணப்படுத்துவதற்காக எலும்பு மஜ்ஜைகளை மாற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்த மாற்றத்திற்குப் பின்பு அவர்களுடைய உடலில் எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் மறைந்தன. புதிய எலும்பு மஜ்ஜைகளில் உள்ள செல்கள் இவர்களது பழைய செல்களை மாற்றி விட்டதால், நோய்க் கிருமிகள் மறைந்துள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
தற்போது நோயாளிகளில் ஒருவர் நான்கு மாதங்களாகவும், மற்றொருவர் ஏழு மாதங்களாகவும் மருந்துச் சாப்பிடாமல் இருந்தும் அவர்களுக்கு எச்.ஐ.வி. நோய்க்கிருமிகள் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலினை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் சொசைட்டி மாநாட்டில் மருத்துவர் டிமோதி ஹென்ரிச் தெரிவித்துள்ளார்.
எலும்பு மஜ்ஜை மாற்றுச் சிகிச்சைக்கான செலவு மிக அதிகமாக இருந்தாலும், எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் மூலம் சிகிச்சை அளிப்பது பற்றி ஆய்வுகள் நடைபெறும் எனத் தெரிகிறது. இந்த நோயினால் ஏறத்தாழ மூன்றரைக் கோடி மக்கள் உலகில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments

இஷ்ரத் ஜஹான் படுகொலை - இறைவனே என்னை தண்டித்துவிட்டான்:ஐபிஎஸ் அதிகாரி!

மும்பை: இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்குபேரை என்கவுண்டர் முறையில் படுகொலை செய்ததை  முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரானகுஜராத் IPS அதிகாரி G L சிங்கால், "இச்செயலுக்காக இறைவனே என்னை தண்டித்து விட்டான்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2004ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் புறநகரில் முதல்வர் நரேந்திர மோடியை கொலை செய்யும் நோக்கத்துடன் ஊடுருவியதாக கூறி இஷ்ரத் ஜஹான் உட்பட 4 பேர் என்கவுண்டர் மூலம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என்றும் இது போலி என்கவுண்டர் என்றும் நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த போலி என்கவுண்டர் படுகொலையை முன்னின்று நடத்தியவர்களில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் குஜராத் IPS அதிகாரி G L சிங்கால்.  ஜாமீனில் வெளி வந்துள்ள இவர் அப்ரூவராக மாறியுள்ளார். மேலும் கொலையை மூடி மறைப்பதற்காக 2011 நவம்பரில் குஜராத் அமைச்சர்கள் அரசு அதிகாரிகளான குஜராத் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா ,கல்வி அமைச்சர் புபேந்தர் சுடாசமா ,மற்றும் பிரபுல் படேல் , IAS அதிகாரி முர்மு ,அட்வகேட் ஜெனரல் கமல் திரிவேதி ஆகியோரது பேச்சினை ரகசியமான முறையில் பதிவு செய்த ஒரு ஒலிப்பேழையை தானாகவே முன்வந்து CBI அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் .
மேலும் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ள சிங்கால், "இந்தப் படுகொலைக்கு இறைவனே எனக்கு தண்டனை கொடுத்துவிட்டான். இரு மாதங்களுக்கு முன்பு என்னுடைய 17 வயதுடைய ஒரே மகன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னரே இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையை கூற முன் வந்தேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் குஜராத் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முதல்வர் மோடி உள்ளிட்டோருக்கு இந்தப் படுகொலையில் தொடர்பிருப்பதாகவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
0 comments

எகிப்து: இடைக்கால அதிபரானார் தலைமை நீதிபதி

எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முகமது முர்ஸியை அந்நாட்டின் இராணுவம் பதவியில் இருந்து அகற்றியுள்ள நிலையில், நாட்டின் புதிய இடைக்கால அதிபராக தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ளார்.
கெய்ரோவில் நடந்த ஒரு வைபவத்தில் அரசியல் சாசன நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் அத்லி மன்சூர் இடைக்கால அதிபராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அடுத்த தேர்தல் நடக்கும் வரை அத்லி அதிபராக செயல்படுவார் என்பதாக இராணுவத்தின் திட்டம் அமைந்துள்ளது.
முகமது முர்ஸியும் அவது ஆலோசகர்களும் அதிபர் பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்றும், வெளியுலகத்துடன் தொடர்புகொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் முர்ஸி சார்ந்துள்ள முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் சார்பாகப் பேசவல்ல கெஹாத் அல் ஹத்தாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் சர்ச்சைக்குரிய புதிய அரசியல் சாசனம் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், துறைசார் நிபுணர்களால் வழிநடத்தப்படும் புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்று நிறுவப்படும் என்றும் இராணுவத்தின் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல் சிஸ்ஸி புதன்கிழமை மாலை அறிவித்திருந்தார்.

இராணுவத்தின் நடவடிக்கையை ஒரு அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பு என தான் தடுத்துவைக்கப்படுவதற்கு முன்பாக முர்ஸி வர்ணித்திருந்தார்.
0 comments

தமிழ் மொழியில் சாட்சியம் - மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

மும்பை - பிற மொழிகளை அறியாத ஒரு பெண்ணிற்கு தமிழில் சாட்சியம் அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கூத்தாயி ஆதிமூலம் என்ற பெண் மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ் மட்டுமே தெரிந்த கூத்தாயி, ஒரு மொழி பெயர்ப்பாளர் மூலம் தனது தரப்புச் சாட்சியத்தினை அளிக்க கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தினை அணுகினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சொந்துர்பல்தோடா கூத்தாயி ஆதிமூலம் தனக்குத் தெரிந்த மொழியில் சாட்சியம் அளிக்கலாம் என தீர்ப்பளித்தார். 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 277 ன்படி ஒரு சாட்சி, குறிப்பிட்ட நீதிமன்ற மொழியல்லாத மொழிகளில் சாட்சியம் அளிக்கும் போது அதனைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
0 comments

மெக்ஸிகோவில் குமுறும் எரிமலையால் விமான சேவைகள் ரத்து

மெக்ஸிகோவில் குமுறிக்கொண்டிருக்கும் எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல்புகை காரணமாக அந்நாட்டுக்கான விமானப் பயணங்களை அமெரிக்க விமான சேவைகள் ரத்துசெய்துள்ளன.
வியாழக்கிமை மெக்ஸிகோ சிட்டி செல்லவிருந்த 40 விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
போப்போகத்தேபெத்ல் எரிமலை ஆண்டு முழுவதும் குமுறிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் முதல் சாம்பல்-புகையை கக்கத் தொடங்கியுள்ளது.
மெக்ஸிகோ சி்ட்டி விமான நிலையத்தில் ஓடுபாதைகள் திறந்தே உள்ளன. எரிமலையால் விமானப் பயணங்களுக்கு பாதிப்பில்லை என்று விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் யூஎஸ் ஏர்வேஸ், டெல்டா, யுனைடட், அமெரிக்கன் மற்றும் அலஸ்கா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் பயணங்களை ரத்துசெய்துள்ளதாக மெக்ஸிகோ விமானநிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெக்ஸிகோ நகர விமான நிலையத்திலிருந்து தென்கிழக்காக 64 கிலோமீட்டர் தொலைவில் இந்த எரிமலை உள்ளது.

எரிமலையைச் சுற்றி 11 கிலோமீட்டர் பகுதியை 'செல்வதற்குத் தடை' உள்ள பகுதியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
0 comments

முர்ஸியின் ஆட்சி கவிழ்ப்புக்கு காரணம் யார்..?

(அஹ்மத் ஜம்ஷாத்(அல் அஸ்ஹரி)
Cairo,Egypt)

எகிப்தின் இக்வானிய ஆட்சி கவிழ்ப்பில் இஸ்லாமிய கட்சியான ஹிஸ்புன்நூர் கட்சியும் பங்காளி என சில தரப்பு விமர்சித்துவருகின்றனர்.அதன் உண்மை தன்மை என்ன என்பதை காண முன் அக்கட்சி ஆற்றிய மிகப்பெரிய சாதனை என்ன என்பதை இங்கு நாம் காண்போம்.

ஹிஸ்புன்நூர் கட்சியானது சென்ற பாராளுமன்ற தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்ற ஒரே இஸ்லாமிய கட்சி என்ற பெருமையை பெற்ற கட்சியாகும்.அரசியலில் குதித்து சில மாதங்களிலேயே நூற்றுக்கும் அதிகமான ஆசனங்களை பாராளுமன்ற தேர்தலில் பெற்றுகொண்டது.

ஆசனங்கள் அடிப்படையில் இரண்டாவது பெரும் கட்சியாகவும் வாக்குகள் அடிப்படையில் அதிகூடிய மக்கள் செல்வாக்கை பெற்ற ஒரே கட்சி ஹிஸ்புன்நூர் ஆகும்.

நாட்டின் ஸ்தீரதன்மையை கருத்தில் கொண்டு அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும் என்பதை கடந்த ஆறுமாதமாக சாத்வீக முறையிலும் ஆலோசனை முறையிலும் இக்வானிய அரசுக்கு முன்வைத்து வரும் கட்சியில் ஹிஸ்புன்நூர் மிக முக்கிய கட்சியாகும்.

அரச எதிர்ப்பு போராட்டகாரர்களும் இதே கோரிக்கையை வைத்த போதும் அவர்கள் நிலைப்பாடு வேறு ஹிஸ்புன்நூர் கட்சியின் நிலைப்பாடு வேறு என்பதை ஹிஸ்புன்நூர் அரசியல் நகர்வுகளை அவதானிக்கின்றவர்களுக்கு புரியும்.

இக்வானிய அரசில் தமது உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல் பல கசப்பான சம்பவங்களை அனுபவித்த போதும் இக்கட்சி இக்வானிய அரசுக்கு ஆதரவுக்குரலாக பல கட்டங்களில் நின்ருவந்தமை இக்கட்சி நடுநிலைமையை கருத்தில் கொள்ளும் கட்சி என்ற உண்மையை உணர்த்தி வந்தது.இக்கட்சிக்கு வெளியில் உள்ள பல அரசியல் ஆய்வாளர்கள் கூட இக்கட்சியின் அரசியல் முதிர்ச்சியை புகழ்ந்தே வந்தனர்.

எகிப்தின் மிகப்பெரும் இஸ்லாமிய கட்சியான ஹிஸ்புன்நூரின் நடுநிலை சாணக்கிய போக்கினால் தற்போதைய அரசின் போக்கில் ஏற்பட இருந்த தீமைகள் சில குறைக்கபட்டன. முர்சிக்கு எதிரான புரட்சியின் தலைவர்களில் ஒருவரான அல் பாராதயி என்வரை ஜனாதிபதியாக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. ஏலவே முன்னாள் ஜனாதிபதி முர்சி அரசில் வரையப்பட்ட யாப்பை நிரந்தரமாக ரத்து செய்யும் நடவடிக்கை தடுக்கப்பட்டது.

எகிப்தின் இக்வானிய ஆட்சியை வீழ்த்துவதில் காரணமாக அமைந்த தரப்பு யார் என்ற கேள்வி பரவலாக எழுகின்ற ஒன்றே.
ராணுவம் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்ததாக சிலர் பேசிவருகின்றனர்.இராணுவ புரட்சி என்றால் என்னஇராணுவ புரட்சியின் ஆட்சி எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களே இதை இராணுவ புரட்சி என்று சொல்வர்.

ராணுவம் சிவில் அரசிடமே நாட்டின் தலைமையை ஒப்படைத்துள்ளது.தற்போது எகிப்தை ஆளுபவர் சிவில் ஜனாதிபதியே தவிர ராணுவம் அல்ல.ராணுவம் இவ்வரசில் எந்த ஒரு பங்காளியாகவும் இருக்கமாட்டாது என்றும் தாம் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பிலேயே இருப்போம் என்றும் அறிவித்துள்ளது.

வன்முறைகளை தூண்டும்விதமாக மக்களை உசுப்பேற்றி குழப்பங்களை விளைவிக்காமல் அமைதிவழியில் அரசியல் நகர்வுகளை வைக்கும் பட்சத்தில் தீர்வுகள் குழப்பம் இல்லாமல் கிட்டும்.

ராணுவம் புரட்சி செய்தால் அங்கு சிவில் அதிகாரம் இருக்காது.ராணுவ ஆட்சியில் இராணுவமே நாட்டின் நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை எடுக்கும்.இந்த இரண்டு நிலையும் அல்லாத சிவில் அரசிடம் ஆட்சியை ராணுவம் கொடுத்த பின்பும் இராணுவ ஆட்சி என்று சொல்வது பிழையாகும்.

இக்வானிய ஜனாதிபதி அவர்கள் ஆட்சியில் இருந்தவாறே பல தீர்வுகளை கொண்டுவந்திருக்க வேண்டும்.அதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் திட்டங்களையும் ஹிஸ்புன்நூர் கட்சியும் இன்னும் சில கட்சிகளும் வைத்தன.ஆனால் இவற்றை இக்வானிய அரசு பதவி போதையில் அலட்சியம் செய்தது.எதிரியை  எப்படி அணுகுவது ஆட்சியை எப்படி தக்கவைப்பது என்ற ஆளுமை அற்ற இக்வான்கள் தமது தவறுகளை மறைக்க அடுத்தவர்களை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.

நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு எதிரியின் பலத்தை கருத்தில்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியே இன்னுமொரு தேர்தலை அறிவிப்பது தவறா?அவ்வாறு அறிவிக்க கூடாது என்பது அல் குர்ஆன் ஆயத் கூறும் ஹராமான விடயமா

எகிப்திய பாதுகாப்பு தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் ,

ஏற்கனவே பாதுகாப்பு படை அறிவித்த ஒரு வார கால அவகாசம் எந்த முன்னேற்றமும் இன்றி முடிவடைந்த நிலையில் மீண்டும் இரண்டு நாட்கள் சந்தர்பம் வழங்குவதாகவும் இதை பயன் படுத்தி சம்மந்தபட்ட இரு தரப்பினரும் (அரசாங்கமும் ,போராட்டகாரர்களும் ) ஒரு முடிவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது.

மக்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்துநாட்டின் நலனை கருத்தில் கொண்டும் இந்த சந்தர்பம் பயன் படுத்தப்படாதபோது அடுத்து வரும் நாட்களுக்கான அரசியல் வரைபை இராணுவ தலமையகம் வெளியிடும். அதை நடை முறை படுத்துவதற்கு தேவையான அணைத்து நடவடைகைகளையும் இராணுவம் மேற்கொள்ளும் .

மேலும் இந்த நடவடிக்கையில் எந்தொரு தரப்புக்கும் சார்பில்லாமலும் ,இந்த போராட்டத்தில் கலந்துள்ள இளைஞர்களை உள்ளடக்கியதாகவும் அந்த தீர்வு அமையும் என்றும் தனது அறிக்கையில் ராணுவம் அறிவித்திருந்தது.
இந்த அறிக்கை அரசியல் ஆய்வாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும் இருந்தது.
நாட்டின் ஜனாதிபதியே பாத்துகாப்பு படையின் தலைவராக இருக்கும் நிலையியல் ஜனாதிபதி முர்சி உள்வாங்கபடாமல் பாதுகாப்பு அமைச்சின் அவை இந்த அறிக்கையை வெளியிட்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிலையை ஏலவே அறிந்த ஹிஸ்புன்நூர் ஜனாதிபதி முர்சி அவர்களிடம் பலமாத காலமாக அவசரகால ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தியது.ஆனால் இக்வானிய அரசு இதை அலட்சியம் செய்தே வந்தது.ஹிஸ்புன்நூர் கட்சியின் இந்த கோரிக்கை ஆரம்பத்தில் இஸ்லாமிய இயக்கங்களிடம் விமர்சனத்துக்கு உட்பட்டிருந்தாலும் இறுதிக்கட்டத்தில் சில இஸ்லாமிய கட்சிகள் கூட ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தினர்.

இதில் இக்வானிய முக்கிய பிரமுகர்களில் ஒருவரான கலாநிதி ஜமால் ஹிஷ்மத் அவசரமான ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.ஆனாலும் இக்வானிய உயர்பீடம் இந்த கோரிக்கையை செவிமெடுக்க தயாராக இருக்கவில்லை.

எதிர்ப்பு ஆர்பாட்டகார்களின் எதிர்ப்பை சமாளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி முர்சி அவர்கள் சில நடுநிலை முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கபட்ட விடயங்கள் கூட நடக்கவில்லை.

ஜனாதிபதி முர்சி தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முடியுமா?இல்லையா?என்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை முர்சி அறிவிப்பதாக தன்னிடம் கூறினார் என்று எகிப்தின் அரசியல் ஆய்வாளர் பஹ்மி ஹுவைதி என்பவர் கூட கூறி இருந்தார்.அதுகூட நடக்கவில்லை என்பது அரசியல் ஆய்வாளர்களிடம் ஆச்சர்யகுறியை ஏற்படுத்தி நின்றது.

ஆட்சி கவிழ்ப்புக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்புவரை ஜனாதிபதி முர்சி அவர்கள் ராணுவத்துடனான சந்திப்பில் தான் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை அறிவிக்க போவதாக வாக்குறுதி அளித்துவிட்டு தனது கடைசி உரையில் அவர் அதை செய்யவில்லை என்றும் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தில் சட்ட திட்டங்களில் விட்டுகொடுப்பு உள்ளது நெகிழ்வுத்தன்மை உள்ளது என்று ஏற்றுகொல்கின்றவர்கள் எதற்காக அரசியலில் உள்ள விட்டுகொடுப்பை ஏற்றுகொள்ளவில்லை.இரண்டு தீமைகளில் குறைந்த தீமையை எடுப்பது பற்றிய இஸ்லாமிய உசூல் கலை இவர்களுக்கு தெரியாதா?

நெகிழ்வுத்தன்மை அல்லாத அகீதா சம்மந்தப்பட்ட விடயங்களில் கூட அனுசரிப்பு செய்பவர்கள்,கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றவர்கள் அரசியலில் விட்டுகொடுப்பு என்று ஒன்று உள்ளதை மறந்துவிட்டார்களாஅகீதா விடயம் அடிப்படை அதில் சமரசம் இல்லை என்று தெரிந்தும் அதில் சமரசம் கொண்டார்கள்.அரசியல் என்பது அஹ்லு சுன்னா அறிஞர்களிடம் கிளை விடையமாகும் அது நெகிழும் தன்மை கொண்டது சமரசம் செய்ய முடியுமானது என்று இருந்தும் அதில் அவர்கள் சாதூரியமாகவோ சாத்வீகமாகவோ யோசிக்காமல் அதிரடி பேச்சுகள் எதிரியின் பலம் அறியாத அலட்சியபோக்குகள் என்று எத்தனையோ தவறுகளுக்கு வழிவகுத்துவிட்டனர்.சில இஸ்லாமிய கட்சிகள் சொன்னதற்கு அமைய அவசர தேர்தல் ஒன்றை முர்சி அறிவித்திருந்தால் தற்போதைய பிரச்சினையில் பல பிரச்சினைகளுக்கு ஆட்சியில் இருந்தவரே தீர்வுகள் சொல்லியிருக்க முடியும்.தேர்தலும் நீதமாக நடத்தபட்டிருக்கும்.

தாலிபான்கள் ஐந்துவருடமாக ஆட்சி செய்து அமெரிக்க சூழ்ச்சியில் வீழ்ச்சி கொண்டதை எள்ளி நகையாடிய இக்வான்கள் தமது ஆட்சியை ஒருவருடம் நகர்த்துவதில்கூட படுதோல்வி அடைந்த பரிதாப நிலையில் உள்ளனர்.
தவறுகள் எவ்வாறாயினும் திருந்துவத்தகான வாய்ப்புகள் பல உள்ளன அதில் இந்த சந்தர்பமே மிகப்பெரிய அனுபவ பாடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எது எப்படியோ ஆட்சி மாற்றம் என்பது எகிப்தில் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. இக்வான்கள் விழுந்த பின்பும் தமது தவறுகளை திருத்திகொள்ளாமல் அடுத்தவர்களின் மீது குற்றத்தை சுமத்தி தப்பிக்க எண்ணுவது தங்கள் ஆட்சியின் வாய்ப்பை நழுவ விட்டதுபோல் தவறுகளில் இருந்து திருந்தும் வாய்ப்பையும் நழுவ விட்டதாகவே கருதப்படும்.
இவர்களின் இந்த அனுபவமற்ற அரசியல் நகர்வு எகிப்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி அப்பாவி பொதுமக்களை பலியாடாக்கி ரெத்தம் சிந்தும் புரட்சிக்கு வித்திட்டாமல் பாதுகாக்க அல்லாஹ்வை வேண்டுவோம்.

0 comments

ஓரினச் சேர்க்கை வீடியோ ஆதாரம் - பா.ஜ.க அமைச்சர் பதவி பறிப்பு!

போபால்: ஓரினக் சேர்க்கை புகாரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் நிதியமைச்சர் ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து கூறப் படுவதாவது:
மத்திய பிரதேச மாநில மூத்த பாஜக தலைவரும் நிதி அமைச்சருமான ராகவ்ஜி(79) அவரது வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவரை அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து ஓரினச் சேர்க்கை வைத்துக் கொண்டதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவரது ஆட்கள் இருவரும் இவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் . அமைச்சரின் பங்களாவில் பணியாற்றிய தன்னுடைய நண்பர் அமைச்சர் தன்னுடன் உறவு கொண்டதை வீடியோவாக எடுத்த சிடியையும் அந்த வேலைக்காரர் காவல்துறையிடம் அளித்துள்ளார்..
இதனை அடுத்து முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான் அமைச்சர் ராகவ்ஜியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இததைத் தொடர்ந்து ராகவ்ஜி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் ஜெயந்த் மல்லையா, கூடுதல் பொருப்பாக நிதியமைச்சராகவும் இருப்பார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
0 comments

இஷ்ரத்தைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: உள்துறை அமைச்சர்!

கடந்த 2004 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுக்கெதிரான துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் இஷ்ரத் ஜஹான் என்கிற கல்லூரி மாணவியும் அவருடைய நண்பர்கள் மூவரும் வேண்டுமென்றே குஜராத் மாநில காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலைகளின் பலியானவர்கள் அப்பாவிகளே என்று தற்போது மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், அப்பாவியான அம்மாணவியை அநியாயமாகக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவருகின்றன. இந்தியாவின் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயிடம் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது குறித்து கருத்து கேட்டதற்கு, விதிப்படி நடந்தது நடந்துவிட்டது. தற்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே முக்கியம் என்று அமைச்சர் கருத்தளித்துள்ளார்
0 comments

திருமணமாகி இரண்டு மாதங்களில் குழந்தை - கணவன் அதிர்ச்சி

திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் 
பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர முன்னர் தனது வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றவுள்ளதாகவும் அவர் கணவனுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண் திடீரென்று நேற்று முன்தினம் அதிகாலை வவுனியாவில் குழந்தையென்றை பிரசவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியுள்ள கணவன் உடனடியாகவே குழந்தையையும் குறித்த பெண்ணையும் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து மாமியார் வீட்டில் நடந்தவற்றைக் கூறி மனைவியையும் அவர் பிரசவித்த குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளார்.

அத்தோடு அவர் சீதனங்களாக பெற்ற நகை பணம் என்பவற்றையும் திரும்ப கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக பெண்ணின் வீட்டார் தீவிரமாக விசாரித்த போது யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சிரமமென்றிலுள்ள துறவியொருவரே காரணமென்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்து பெண்ணின் வீட்டார் குறித்த துறவியை சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்த அவர் பின்னர் ஒருவழியாக அதனை ஏற்றுக் கொண்டு குழந்தைக்கு தானே தகப்பன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகவே அவர் தனது ஆச்சிரமத்தை பூட்டிவிட்டு திறப்புக்களை அருகிலுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது
0 comments

இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷப் பேச்சு!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரானப் போக்கு சற்று ஓய்ந்துள்ள நிலையில் பெளத்தன இனவாதிகளின் கவனம் முஸ்லிம்கள் மீது குவிந்திருப்பதைப் போன்று முஸ்லிம் துவேஷக் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பொதுபலசேனா என்கிற பெளத்த வலதுசாரி அமைப்பின் செயலாளர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பொதுபல சேனா என்ற சிங்கள இனவாத அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்பவராவார். அண்மையில் கட்டுநாயக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கலகொட, "இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு இலங்கையை கொண்டு செல்லத் திட்டமிட்டு இனத்தைக் கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில்  தற்போது முஸ்லிம் விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். எனவே முஸ்லிம் வர்த்தகத்தையும், முஸ்லிம் மருத்துவர்களையும் சிங்களவர்கள் நிராகரிக்க வேண்டும். மேலும் சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் " என்று பேசியுள்ளார்.
0 comments

பள்ளிவாசலுக்குள் பெண்கள் நிர்வாண போராட்டம் - சுவீடனில் அசிங்கம்

ஸ்வீடனின் ஸ்டொக்ஹோம் பள்ளிவாசலுக்குள் மூன்று பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியுள்ளனர். சர்வதேச பெண்ணிய குழுவான பெமினின் அங்கத்தவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இவர்கள் பொலிஸாரினால் பள்ளிவாசலில் இருந்து அகற்றப்பட்டனர்.

ஹிஜாப் அணிந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்த பெண்கள் ஆடையை களைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஏ. எப். பி. செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களது உடலில், ‘எகிப்து மற்றும் உலகுக்கு ஷிரிஆ தேவையில்லை’, ‘எனது உடல் என்னுடையது, யாருடைய கெளரவத்திற்கானதும் அல்ல’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள், ‘பெண்களை விடுதலை செய்’, ‘ஷிரிஆ தேவையில்லை’, ‘துன்புறுத்தல்களை நிறுத்து’ போன்ற கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

எனினும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும்போது பள்ளிவாசல் வெறுமையாகவே இருந்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலின் பணியாளர்களும் ஊடகவியலாளர்களுமே அங்கு இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எகிப்து நாட்டு செயற்பாட்டாளர் அலியா அல் மஹ்தி என்ற பெண்ணும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இவர் எகிப்து சமூக அமைப்புக்கு எதிராக தனது நிர்வாண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவராவார். கடந்த 2008 ஆம் ஆண்டு உக்ரைனில் ஆரம்பிக்கப்பட்ட பெமின் அமைப்பு தம்மை கடும்போக்கு பெண்ணியவாதிகளாக அடையாளப்படுத்துகின்றது. இவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி அரைநிர்வாண போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
0 comments

காரல் மீன்வரத்து அதிகரிப்பு - மீனவர்கள் மகிழ்ச்சி!

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் வலையில், மருத்துவ குணம் வாய்ந்த காரல் மீன்வரத்து அதிகம் கிடைப்பதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்த காலம் முதல், காரைக்கால் மீனவர்கள் வலையில் மீன்வரத்து குறைவாகவே உள்ளது. குறிப்பாக, பெரிய வகை மீன்களான பாறை, திருக்கை, வஞ்சிரம், கொடுவா உள்ளிட்ட மீன்கள் அதிகம் கிடைக்காததால் மீனவர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கால்சியம் சத்து அதிகம் உள்ள காரல்வகை மீன்கள் அதிகம் கிடைத்து வருகிறது. 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை நீளமும், 5 செ.மீ அகலமும் கொண்ட இவ்வகை மீன்களை பத்தியக்குழம்பு வைத்து சாப்பிடுவார்கள். மேலும், ஏழை எளிய மக்கள் இந்த வகை காரல் வகை மீன்களையே அதிகம் வாங்கி செல்வார்கள்.

தற்போது அதிகம் கிடைக்கும் இந்த வகை காரல் வகை மீன்கள் 50 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.1500 முதல் ரூ.2000 வரை விலை போகிறது. கிலோவாக வாங்கினால், ரூ.30 முதல் ரூ.40 வரை விலை போகிறது. உள்ளூர் மார்க்கெட்டுக்கு போக, மீதி உள்ள மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதியாகிறது. பெரிய வகை மீன்கள் கிடைக்காமல் கவலையில் இருந்த மீனவர்கள் காரல் வகை மீன்வரத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger