Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts
Showing posts with label இலங்கை செய்திகள். Show all posts

திருமணமாகி இரண்டு மாதங்களில் குழந்தை - கணவன் அதிர்ச்சி

திருமணமாகி இரண்டு மாதங்களில் பெண்ணொருவர் குழந்தையைப் 
பிரசவித்துள்ளார். இந்த விபரீதச் சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை கடந்த மே மாதம் திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் குடும்ப வாழ்க்கையை தொடர முன்னர் தனது வயிற்றில் கட்டி உள்ளதாகவும் அதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றவுள்ளதாகவும் அவர் கணவனுக்கு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த பெண் திடீரென்று நேற்று முன்தினம் அதிகாலை வவுனியாவில் குழந்தையென்றை பிரசவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியுள்ள கணவன் உடனடியாகவே குழந்தையையும் குறித்த பெண்ணையும் வாகனம் ஒன்றில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து மாமியார் வீட்டில் நடந்தவற்றைக் கூறி மனைவியையும் அவர் பிரசவித்த குழந்தையையும் விட்டுச் சென்றுள்ளார்.

அத்தோடு அவர் சீதனங்களாக பெற்ற நகை பணம் என்பவற்றையும் திரும்ப கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக பெண்ணின் வீட்டார் தீவிரமாக விசாரித்த போது யாழ்ப்பாணத்திலுள்ள ஆச்சிரமமென்றிலுள்ள துறவியொருவரே காரணமென்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்து பெண்ணின் வீட்டார் குறித்த துறவியை சென்று விசாரித்த போது ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுத்த அவர் பின்னர் ஒருவழியாக அதனை ஏற்றுக் கொண்டு குழந்தைக்கு தானே தகப்பன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உடனடியாகவே அவர் தனது ஆச்சிரமத்தை பூட்டிவிட்டு திறப்புக்களை அருகிலுள்ளவர்களிடம் ஒப்படைத்து விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது
0 comments

இலங்கை: முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷப் பேச்சு!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரானப் போக்கு சற்று ஓய்ந்துள்ள நிலையில் பெளத்தன இனவாதிகளின் கவனம் முஸ்லிம்கள் மீது குவிந்திருப்பதைப் போன்று முஸ்லிம் துவேஷக் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், பொதுபலசேனா என்கிற பெளத்த வலதுசாரி அமைப்பின் செயலாளர் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பொதுபல சேனா என்ற சிங்கள இனவாத அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் என்பவராவார். அண்மையில் கட்டுநாயக்காவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கலகொட, "இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு இலங்கையை கொண்டு செல்லத் திட்டமிட்டு இனத்தைக் கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட அனைத்துத் துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில்  தற்போது முஸ்லிம் விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். எனவே முஸ்லிம் வர்த்தகத்தையும், முஸ்லிம் மருத்துவர்களையும் சிங்களவர்கள் நிராகரிக்க வேண்டும். மேலும் சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம் " என்று பேசியுள்ளார்.
0 comments

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயத்தை எரித்து சிங்களர்கள் அட்டூழியம்

கொழும்பு: இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள அங்குலானாவில் பழமையான புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயம் உள்ளது. கடந்த 5ம் தேதி இரவு 10 மணிக்கு சிங்களர்கள் சிலர் அந்த ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த இயேசு, தேவமாதா சிலைகளை சேதப்படுத்தினர். 

மேலும் நற்கருணை பேழையை உடைத்து அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். ஆனால் பேழையில் இருந்த அப்பங்கள் தீயால் சேதமடையவில்லை. சுமார் 30 லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி பேழை எரிக்கப்பட்டும் அப்பங்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருந்தது கிறிஸ்தவர்களைஆச்சரியப்பட வைத்துள்ளது. 

சிங்களர்கள் ஆலயத்தை தாக்கியது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

0 comments

இலங்கையில் புயல்-மழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது

இலங்கையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை திடீரென வீசிய புயலுடன் கூடிய மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. காணாமல்போன 30 மீனவர்கள் தேடப்பட்டுவருகின்றனர்.
நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கரையோர மாவட்டங்களில் கடலுக்குச் சென்றிருந்த பல மீன்பிடி படகுகள் இந்த புயலில் சிக்கி காணாமல்போயிருந்தன.
கடற்படையினரும் விமானப்படையினரும் தொடர்ந்தும் தேடுதல்- மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை 38 மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே அளவிலானோர் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
காணாமல்போயுள்ள 30 பேரின் கதி என்னவென்று தெரியாதநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீனவர்கள் கடலுக்குச் செல்ல முன்னதாகவே, சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் அதிகாரிகள் எச்சரிக்கை அறிவித்தல்களை விடுத்தார்களா என்று ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகைகள் வழங்கப்படுமென்று அரசாங்கத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை முஸ்லிம் 
0 comments

சீனா அமைக்கும் கொழும்பு - யாழ். அதிவேக பாதை... - இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு !!

சீன உதவியுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு - யாழ்ப்பாணம் அதிவேக விரைவுப் பாதை குறித்த கவலைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான அதிவேக விரைவுப் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அண்மையில் சீனா சென்றிருந்த ஜனாதிபதி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இலங்கை அரசின் இந்தச் செயற்பாடானது வடக்குக்கு மிக அருகில் தலைமன்னாரில் இருந்து சுமார் 32 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இவ்வாறான நிலையில் வடக்கில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகளை இலங்கை அரசு சீனாவிடம் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில வழங்கியுள்ளது.
சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வாறான பாரிய வேலைத்திட்டங்கள் நிச்சயம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி என்ற பேர்வையில் எந்த வெளிநாட்டு படைகளையும் வடக்கில் நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை. தன்னுடைய சொந்த திட்டமிடல்களின் மூலமாகவே வடக்கு மாகாணம் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மக்களின் தற்போதைய உடனடித் தேவை அதிவேக விரைவுச் சாலை அல்ல. அவர்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்து அவர்கள் இன்னமும் மீளாத நிலையில் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்தே முதலில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தில் தமது கணவனை இழந்த 87 ஆயிரம் இளம் விதவைகள் வடக்கில் உள்ளனர். இத்தகைய பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாராத்தை மேம்படுத்துவதற்கு எந்த தி;ட்டங்களையும் இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை. யுத்தத்தின் போது கணவனை இழந்த அவர்களின் குடும்பங்கள் நீடித்த சுமையை ஏற்க வேண்டியிருக்கிறது.
இத்தகையோரின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தும் வகையிலான திட்டங்களை இலங்கை அரசு செயற்படுத்தினால் அது பெரும் வரவேற்புக்குடையதாக அமையும். இதுவே வடக்கு, கிழக்கு பகுதி மக்களின் அவசியமானவும் அவசரமானதுமான தேவையாகும். மாறாக அதிவேக விரவுச் சாலை அல்ல எனறார் சுரேஷ் எம்.பி.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்க கடனுதவி வழங்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கடனைப் பெற்றுக்கொள்வது எவ்வளவு சிரமம் என் அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.
முன்னாள் போராளிகளுக்கும் இத்தகைய கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பொறுப்பு கையெத்து கேட்கப்படுகிறது. அவர்கள் எங்கே போய் பொறுப்புக்கு கையெழுத்திட ஆட்களைத் தேடுவது?
ஆகவே அரசு இத்திட்டங்களை இலகுவாக்க முன்வரவேண்டும். அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு வர உதவமுடியும் எனவும் அவர் கூறினார்.
எனவே முதலில் வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு முன்வரவேண்டும். தற்போதுள்ள ஏ-9 வீதியே போக்குவரத்துக்கு போதுமானது. முதலில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுவிட்டு அதன்பின் வேண்டுமானால் சில வருடங்களின் பின்னர் அதிவேக விரைவுச் சாலை குறித்து கவனம் செலுத்தலாம்.
இது தொடர்பாக சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
10 முதல் 15 வருடங்களுக்கு தற்போதுள்ள ஏ-9 வீதியே போதுமானது. இதனைச் சொல்வதன் மூலம் நாங்கள் வட பகுதியின் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் என்று கருதிவிடக் கூடாது.
எங்களுடைய தற்போதைய கவலை வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது தான் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம் 
0 comments

அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூள் கொட்டி விசாரணை செய்யும் இலங்கை பொலிஸ்!

இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது, மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டுகிறது. 

அண்மையில் நடந்துள்ள 7 சித்திரவதை சம்பவங்களை சுட்டிக்காட்டி அந்த நிறுவனம் ஜனாதிபதி மஹிகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. 
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ பீபீசிக்கு அளித்த செவ்வியில், 
"அண்மையில் திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்றில் கைதான ஒருவர் கண்ணில் மிளகாய் தூள் கொட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸ் விசாரணையில் இவ்வாறான சித்திரவதைகள் அதிகரித்து காணப்படுகிறன்றன. இதற்கு எம்மிடம் ஆதாரம் உள்ளது. 
இந்த சித்திரவதைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை. 
அதனால்தான் 78ம் ஆண்டு அரசியல் யாப்பின்படி சகல அதிகாரங்களும் படைத்த ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளோம். அவர் உத்தரவிட்டால்தான் எல்லாம் நடக்கும். 
சித்திரவதைகள் குறித்து 400 சம்பவங்கள் எம்மிடம் பதிவாகியுள்ளன. இவற்றை புத்தகமாக வெளியிட உள்ளோம். 
சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. ஆனால் இலங்கை பொலிஸ் அதனை மீறி செயற்படுகிறது. 
சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா மாநாடு 2011ல் நடந்தபோது இலங்கையில் பொலிஸ் சித்திரவதைகள் குறித்து முறைப்பாடு செய்தோம். சம்பந்தப்பட்டவர்களிடம் ஐநா அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு முறைப்பாடு செய்வோம்" என பசில் பெர்னாண்டோ தெரிவித்தார். 
இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ள அரசாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, "எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பொலிஸார் விசாரணைகளில் கடைபிடிக்கும் முறைகளையே இலங்கை பொலிஸாரும் கடைபிடிக்கின்றனர். 
சில நிறுவனங்கள் அடிப்படை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன" என்று பதிலளித்தார். 

நன்றி - இலங்கை முஸ்லிம் 
 
0 comments

கிழக்கை நோக்கி நகரும் பொது பலசேனாவின் பொதுக் கூட்டம்

பொது பல சேனாவின் முஸ்லிம் வேட்டை தற்போது  கிழக்கை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.எதிர் வரும் 9ம் திகதி கல்முன மற்றும் அம்பாரை நகரங்களில் இனவாதிகளின் ஒன்று கூடல் நடைபெறவுள்ளது. முஸ்லிம்கள் கூட்டம் போட்டால் இராணுவத்தை கொண்டு தடுக்கும் அரசு இவர்களுக்கு மட்டும் அனுமதியளித்திருப்பது பின்புலத்தில் இருப்பது யார் என்பதை துளாம்பரப்படுத்தியுள்ளது!

நன்றி - இலங்கை முஸ்லிம் 
0 comments

உஷ்..! ஒரு நாடகம் அரங்கேறுகிறது.

M.T.M FARZAN  - ஆசிரியர் அழைப்பு மாத இதழ்.

“மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும். பலாத்காரமாக மதம் மாற்றுவதற்கு எதிரான பிரேரணை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், பௌத்த நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பௌத்தத்தை ஒழிக்கும் சர்வமத அமைப்புகள் ஒழிய வேண்டும். பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே தலதா மாளிகையின் முன்னால் நான் முன் வைக்கும் பிரார்த்தனையாகும்.”
இது கடந்த 24.05.2013 அன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக தீக்குளித்து இறந்தபோவத்தை இந்திர ரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் வரிகள் என்று ஜாதிக ஹெல உறுமய தனது ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தியது.
புகைந்து கொண்டிருந்த முஸ்லிம் விரோதப் போக்கை பஞ்செனப்பற்றி எரியச் செய்ய தருணம் பார்த்திருந்த இனவாதிகளை உத்வேகமடையச் செய்த உந்து சக்தியாய் பிக்குவின் மேற்படி மரணம் அமைந்துள்ளது. அனைத்து மீடியாக்களும் இதனை ஊதிப் பெருப்பித்தது மட்டுமன்றி, தீக்குளித்த பிக்குவை பௌத்தத்தை காப்பதற்காய் உயிர் துறந்த உத்தமராகவும் சித்தரித்த வண்ணம் உள்ளன. சிங்கள பொது மக்களிடம் இவரது மரணம் குறித்த அனுதாப அலைகள் வேர் பிடித்து வருவதோடு, மரணித்த பிக்குவின் கோரிக்கைகளை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற உணர்வலைகளும் வியாபித்த வண்ணம் உள்ளமை முஸ்லிம்களுக்கான அபாய சமிக்ஞையாகவே கருத வேண்டியுள்ளது.
குறிப்பாக பொதுபல சேனா, சிங்கள ராவய, ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத அமைப்புகள் முன்பை விட பன்மடங்கு உத்வேகத்துடன் முஸ்லிம் விரோத போக்கை விஸ்தரிப்பதற்குண்டான பிரச்சார பீரங்கிகளாக மாறிவிட்டனர். சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (26-05-2013) இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. “மிருகவதை மற்றும் அடிப்படைவாதத்தால் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அமுல்படுத்துமாறு தனது உயிரை போவத்தே இந்திர ரத்தின தேரர் மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் பௌத்த மதத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாகவே உயிரைத் தியாகமாக்கினார். பௌத்தர்களின் தீர்க்கப்படாத நீண்ட நாள் பிரச்சினை தான் அவர் உயிரைமாய்த்ததற்கு முக்கிய காரணம். இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் ஆகும். நாட்டில் அடிப்படைவாத தலையீட்டால் பௌத்த தர்மத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் அடிப்படைவாத செயற்பாடுகளால் பௌத்த தர்மத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும். இதில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.”
இனவாதத்தை மட்டுமன்றி மத வெறியை கக்கும் இதுபோன்ற பிரச்சாரங்கள் பெரும்பான்மை சமூகத்திடம் பாரிய எதிர்வலைகளை நிச்சயம் தோற்றுவிக்கும். பொது பல சேனா மற்றும் ஹெல உறுமய நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புகள், இலங்கையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை கொண்டுவர வேண்டும் என்றும் பௌத்தர்கள் மற்ற மதங்களுக்கு மாற்றப்படுவதை தடுப்பதற்கு சட்டம் தேவை என்றும் கோரி 26-05-2013 அன்று பெருமளவிலான பிக்குகள் கொழும்பில் நடாத்திய ஆர்ப்பாட்டம், தீக்குளித்த போவத்தே இந்திரரத்ன ஹிமியின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி 28-05-2013 அன்று பொதுபலசேனா பதுளை கிளை பதுளையில் நடாத்திய எதிர்ப்பு ஊர்வலம், மாடறுத்தல் மற்றும் மதமாற்றத்தை தடைசெய்யக் கோரி ஒன்றிணைந்த பௌத்த பிக்குகள் அமைப்பு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள எதிர்ப்பு மனு உள்ளிட்ட செயற்பாடுகள் யாவும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்புணர்வை சமூமயப்படுத்துவதற்கான முன்னெடுப்பாகவே நோக்க வேண்டியுள்ளது.
சிதறிக்கிடக்கும் பௌத்தர்களை உணர்வுபூர்வமான ஒரு நிகழ்வின் ஊடாக ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டிய தேவையை இனவாதிகள் உணர்ந்தனர். இத்திட்டத்தினை அடையும் பொருட்டு வகுக்கப்பட்ட வியூகமே பிக்குவின் தீக்குளிப்பு நாடகம். பிக்கு தீயினால் பற்றியெரியும் காணொளி செய்திகளில் வெளியிடப்பட்டன.  பிக்கு தானாக தீ மூட்டிக் கொண்டாரா? அல்லது பிறரால் தீ மூட்டத் தூண்டப்பட்டாரா? என்பதை  உண்ணிப்பாய் அவதானிக்கையில் உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகையதொரு நாடகத்தை இனவாதிகள் கையிலெடுப்பதற்கான பின்புலம் யாது? அரசு இது குறித்து தெளிவான நிலைப்பாட்டினை அறிவிக்காமைக்கான காரணங்கள் என்ன? என்பது அலசப்பட வேண்டிய அம்சங்களாகும்.
தீக்குளித்தல் நாடகத்திற்குப்பின்னால் மறைந்திருக்கும் இலக்குகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
01- அரசியல் ரீதியானவை.
1.     அரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை வேறு விடயம் நோக்கி திசை திருப்புதல்
மின்சாரக் கட்டண உயர்வு, எரிபொருள் வாயு விலை உயர்வு உள்ளிட்ட அண்மைக் காலமாய் நாட்டில் ஏற்பட்டு வரும் விலையேற்றத்தினால் மக்கள் அரசின் மீது வெறுப்பில் உள்ளனர். எதிர் கட்சிகள் எல்லாம் அடிக்கடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இறங்குகின்றனர். அரசின் மீதான இவ்வதிருப்தியை குறைக்க வேண்டுமாயின் மக்கள் கவனத்தை வேறு விடயம் நோக்கி திருப்ப வேண்டும். இப்போது மக்கள், எமக்கு எமது மத ரீதியான கோரிக்கையை அரசு நிறைவேற்றித்தரவேண்டும் என்பர். அரசு அதனை நிறைவேற்றும் போது இயல்பாக மக்கள் அரசை ஆதரிக்கத் தொடங்குவர். பழையதை மறந்து விடுவர்.
1.     பூதாகரமாகும் மாத்தளை புதைகுழி விவகாரம், மத்தளை விமான நிலைய தோல்வி உள்ளிட்ட விமர்சனங்களிலிருந்து கவனத்தை திசை திருப்புதல்.
1.     ஓட்டு மொத்த மக்களினதும் கவனம் பிக்குவிடயத்தில் இருக்கும் சமயம் பார்த்து தம்புள்ளை பள்ளிவாசலுக்கு மூடுவிழா எடுத்தல். ஏனெனில்,சுற்றியுள்ள முஸ்லிம்களுக்கு மாற்று இட ஒதுக்கீடு கூட இல்லாத நிலையில் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனார். இதனை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
02- மத ரீதியானவை.
1.     முஸ்லிம்களுக்கெதிரான போராட்டத்தை வீரியப்படுத்துதல்.
அமெரிக்க விஜயத்தையடுத்து சர்வதேச வியூகங்களுடன் களமிரங்கியுள்ள பொது பல சேனா முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத கருத்துக்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாயும், பௌத்தர்களுக்கு எதிரானவர்களாயும் சித்தரிப்பதற்கு கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டும் வருகின்றது. அமெரிக்காவில் வெடித்த குண்டுத்தாக்குதலை இலங்கை முஸ்லிம்களுடன் முடிச்சுப்போட்டு அறிக்கை விட்டமை, பாகிஸ்தானிலிருந்து யாரோ கடத்திய கர்ப்பத்தடை சாதனங்களை முஸ்லிம்கள் தான் சிங்களவர்களின் கர்ப்பப் பாக்கியத்தை தடுப்பதற்காக கடத்தி வந்தனர் என்று கதையளந்தமை, சிங்கள இளைஞர்களின் சிந்தனைத்திறனை அழிப்பதற்காகவே முஸ்லிம்கள் பான் பராக்கை இலங்கைக்குள் விநியோகிக்கின்றனர். அல்காஇதா, ஹமாஸ், பதாஹ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற தீவிரவாத அமைப்புகள் இலங்கையில் இயங்குகின்றன. அரசு அவர்களை உடனே தடைசெய்ய வேண்டும் என்பன போன்ற அவதூறுகளை அமெரிக்க விஜயத்தையடுத்து இவர்கள் அள்ளி வீசி நஞ்சை கலந்தனர்.
இவர்களின் பொய் பிரச்சாரத்தினை நோக்கி மக்களின் கவனத்தை திருப்புவதற்காக தீக்குளிப்பு நாடகத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
§  நாட்டில் பௌத்த தர்மத்திற்கு ஏற்றவாறு பௌத்த அரசியல் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
§  பலவந்தமாக மதமாற்றம் செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
§  சர்வமத, சர்வஜன அமைப்புகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
§  மாடுகள் கொல்லப்படுவதற்கு முற்றாக தடை விதித்தல்  வேண்டும்.
§  உயர் நீதி மன்றம் ஒன்றே போதுமானது. காழி நீதி மன்றங்கள் தடை செய்யப்பட வேண்டும். இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றன.
§  முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.
§  சிங்கள பாடசாலைக்கு முஸ்லிம்கள் பர்தா அணிந்து செல்வதை தடை செய்ய வேண்டும், முஸ்லிம்கள் கருப்பு ஹபாயா உடைகள் அணிந்து காரியாலயங்களுக்கு செல்வதையும், தொழில்களில் ஈடுபடுவதையும் தடை செய்ய வேண்டும்.
§  13ஆம் சட்டமூலம் நீக்கப்பட வேண்டும்.
§  பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு பௌத்த சாசன அமைச்சு வழங்கப்பட வேண்டும்.
திட்டமிட்டு நடாத்திய தீக்குளித்தல் நாடகத்தை தொடர்ந்து இனவாதிகளால் பரப்புரை செய்யப்படும் நச்சுக் கருத்துக்களில் சிலதே இவை. ஆளும் அரசாகட்டும், எதிர் அணியிலுள்ள கட்சிகளாகட்டும் அனைத்தும் எhpயும் வீட்டில் பிடுங்குவதே இலாபம் எனும் மனப்பான்மையோடே நடந்து கொள்கின்றன. முஸ்லிம்களுக்காய் குரல் கொடுப்பது போன்று பாசாங்கு செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் தத்தமது அதிகாரக்கதிரைகளை அழகு படுத்தி, அரசு தரும் பதவிப்பிச்சைகளை ஓடிச்சென்று கவ்விக்கொள்ளும் சுயநல சிந்தனையுடனே செயற்படுகின்றனர்.
இனவாத செயற்பாடுகள் தணிந்து விட்டன. இதன் பிறகு பொது பல சேனா எம்மை எதிர்க்க மாட்டார்கள். எனவே குனூத் ஓதுவதை விட்டு விடுங்கள் என்று ஹலாலை தாரைவாh;த்து அவசர அறிக்கை விட்ட ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட அவர்களின் துதிபாடிகள் காழி நீதிமன்றம், ஹிஜாப் உள்ளிட்ட விடயங்களிலும் அவசரப்பட்டு வாபஸ் வாங்கினால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை.
அநீதிகளின் போது அடங்கிப்போய் மௌனித்து நிற்கும் இதே அவல நிலை தொடருமானால் எதிர் காலம் மியன்மாரை நோக்கி எம்மை வெகுவிரைவில் இழுத்துச் செல்லும் என்பது மட்டும் உறுதி. சிந்திக்குமா நம் சமூகம்?

நன்றி - இலங்கை முஸ்லிம்

0 comments

இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகளாக உலாவுகிறார்கள்: சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணாமற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையை கடுமையாக விமர்சிக்கிறது.
  
அதிகாரத் துஷ்பிரயோகங்கள், மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக் கூறும் கடப்பாடுகள் நிராகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், நீதித்துறை உறுப்பினர்கள் ஆகியோர் அரச அதிகாரிகளாலும், ஆதரவாளர்களாலும் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்; மிரட்டப்பட்டுள்ளார்கள் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சட்டத்துக்கு முரணான தடுப்புகள், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் பெருமளவில் எஞ்சியுள்ளன, தண்டனைகளுக்குத் தப்பியுள்ளன என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. சந்தேகநபர்களைக் கைதுசெய்து எத்தகைய குற்றச்சாட்டுகளுமின்றி நீண்டகாலத்துக்குத் தடுத்துவைக்க அதிகாரிகள் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.

சப்வான் லங்கா 
0 comments

பொதுபலசேனாவின் தலைமையகத்திற்கு வெளியே பிக்குமார் ஆர்ப்பாட்டம் - பெரும் பதற்றம்; பொலிஸார் தலையீடு


பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக நேற்றுக் காலை பெளத்த பிக்குகள் குழுவொன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்த முற்பட்டதைத் தொடர்ந்து தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனா தலைமையகக் காரியாலயத்திற்கு வெளியே பதற்ற நிலை ஏற்பட்டது.

மேற்படி எதிர்ப்புப் பேரணியை நடத்த முற்பட்ட பிக்குமாரை பொதுபலசேனா உறுப்பினர்கள் தூஷித்துக் கொண்டிருந்த அதே சமயம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கென பொலிஸார் வரவழைக்கபட்டிருந்தனர். தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்த மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை பொதுபலசேனா அமைப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

ஏனைய சிறுபான்மையின மதங்களை நிந்திக்கும் உரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பிக்குகள் அடங்கிய சிறிய கூட்டத்தினர் பொதுபலசேனாவிடம் கேள்விக்கணை தொடுக்கும் பெளத்தர்கள் ’’ என்ற வாசகம் அடங்கிய பதாதையுடன் மேற்படி தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்தனர்.

எது எப்படியிருந்தபோதிலும் பொதுபலசேனாவின் நிறைவேற்று உறுப்பினர் டிலாந்த விதானகே பொதுபலசேனா ஆதரவாளர்கள் சிலருடன் மேற்படி கூட்டுத்தினரை நெருங்கி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கோரினார்.

பொதுபலசேனாவுக்கு இதற்கு முன்னர் பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்த பொலிஸார் பின்னர்ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பணித்தனர்

இலங்கை முஸ்லிம் 

0 comments

வேடர்களும் நாகர்களுமே இலங்கையின் ஆதிக்குடிகள் - பொதுபல சேனாவுக்கு இதுதான் பதில்! மனோ கணேசன்!!


பொதுபல சேனாவின் வண. ஞானசார கலபொட தேரர், இந்த நாடு சிங்கள பெளத்தர்களுக்கு மாத்திரம் உரியது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்கிறார். இந்த அடிப்படையில் வடக்கில் தமிழர் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் மாகாணசபை ஒன்று உருவாக முடியாது என்கிறார். ஆகவே மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்கிறார். அனைத்துக்கும் முதலில் இந்த நாட்டின் ஆதிகுடிகள் வேடர்கள், நாகர்கள் என்பதை கலபொட தேரர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த அடிப்படை உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தத்தம் மூதாதையர்கள் வந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும்.
  
வேடர்களை காட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு இனத்தவர்களுக்கு மாத்திரம் முழு நாட்டையும் உரிமை கோரும் எந்த ஒரு கருத்தையும், இந்நாட்டில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும், நல்லெண்ணம் கொண்ட சிங்களவர்களும் நிராகரிக்கின்றோம் என பொதுபல சேனாவின் பொது செயலாளர் வண. ஞானசார கலபொட தேருக்கு சொல்ல விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த தேரர்கள் தமிழர்களையும், முஸ்லிம்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற திட்டம் போடுகிறார்கள். இதனால் இவர்கள் நிகழ்கால கேள்விகளுக்கான விடைகளை கடந்த காலத்துக்குள் சென்று தேடுகிறார்கள். கடந்த காலத்துக்குள் போவோம் என்றால் எல்லோருக்கும் பிரச்சினை இருக்கின்றது. ஆதி சிங்கள ஆண்கள் வட இந்தியாவிலிருந்தும், பெண்கள் தென்னிந்தியாவில் இருந்தும் வந்தவர்கள் என்று மகாவம்சம் சொல்கிறது. எனவே சிங்கள ஆண்கள் வட இந்தியாவிற்கும், சிங்கள பெண்கள் தென்னிந்தியாவிற்கும் செல்ல வேண்டும். பெளத்த மதம் கூட இந்தியாவிலிருந்துதான் வந்தது. அதையும் பாரத நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே இத்தகைய நடைமுறை சாத்தியமில்லாத கூற்றுகளை கூறுவதை ஞானசாரர் நிறுத்த வேண்டும். இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கு சொந்தமான பல்லின நாடு என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். 13ம் திருத்தம் மூலமாக மாகாணசபை அமைத்தால், ஈழம் உருவாக வழி ஏற்படும் என்பது முட்டாள்தனமான கருத்து. மாகாணத்தின் காணி, போலிஸ் உரிமைகள் முழுமையாக 13ம் திருத்தத்தில் இல்லை. 13ம் திருத்தத்தை முழுமையாக வாசிக்காமல் பேசுபவர்களின் கருத்து இது. வட மாகாணசபை கூட்டமைப்பின் கரங்களுக்கு போவது தொடர்பில் சிங்கள மக்களுக்கு அச்சம் இருக்கின்றது என திரும்ப, திரும்ப கூறுகிறீர்கள். ஆனால் தமிழர்களின் அச்சம் பற்றி என்றாவது சிந்தித்து பார்த்தீர்களா? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அதிகாரத்தையும், பலமிக்க பாராளுமன்றத்தையும், முப்படைகளையும் வைத்திருக்கும் உங்களுக்கு அச்சம் இருந்தால், இன்று தமிழர்களுக்கு, தம் எதிர்காலம் தொடர்பில் எந்த அளவு அச்சம் இருக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்? ஒரு இனமாக, தம் சொந்த மண்ணில், இந்நாட்டில் தொடர்ந்து வாழ முடியுமா என்ற நியாயமான அச்சம் இன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் நிலம், கடல் பறிபோகின்றன. தமிழர்களின் மொழி, கலாச்சாரம், மதம் அழித்து ஒழிக்கப்படுகின்றன. இந்நிலையில் அரசியலமைப்பில் உள்ள 13ம் திருத்தம் என்ற உரிமையைக்கூட வழங்க மறுத்துவிட்டு, இந்த நாட்டை சிங்கள பெளத்த நாடு என அறிவிக்கின்றீர்கள். இந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக நாம் ஜனநாயக ரீதியாக போராடுவோம். இது தொடர்பில் எந்த ஒரு விட்டுக்கொடுப்புக்கும் இடம் கொடுக்க முடியாது. விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர, கலபொட ஞானசார தேரர் ஆகியோர் இன்று உசுப்பி விடப்பட்டுள்ளர்கள். இதற்கு பின்னால் இந்த அரசாங்கம் இருக்கின்றது. இது எமக்கு தெரியாது என நினைக்க வேண்டாம். செப்டம்பர் மாதம் வட மாகாணசபை தேர்தல் என்று சர்வதேச சமூகத்துக்கு உறுதி வழங்கி விட்டு இன்று நீதிமன்றத்தின் பின்னால் சென்று ஒளிவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. இப்படியே போனால் ஓடி ஒளிவதற்கு இடம் இல்லாத நிலைமை ஏற்பட போகின்றது. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை

சப்வான் லங்கா 
0 comments

முஸ்லிம்களோ இன்னும் அகதி முகாம்களில் - மன்னாரிலோ சிங்கள குடியேற்றம்

மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக முசலி பிரதேசம் உள்ளது சில மாதகாலமாக முசலி பிரதேச செயலாளனர் பிரிவில் வெளிபிரதேசத்தில் இருந்து 1400 சிங்கள குடும்பங்கள் பிரதேச செயலகத்தில் தங்களின் பெயர்களை பதிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன சில நாட்கஞக்கு முன்பு ஓரு பாராஞமன்ற உறுப்பினர் இவ் விடயம் சம்மந்தமாக ஊடகங்கள்வாய்லாக சில அறிக்கையினை வெளியிட்டார்.



அநூராதபுரம்.விலச்சி மற்றும் நொச்சியாகம போன்ற பிரதேசங்களை பிறப்பிடமாக கொண்டவர் சிங்களவர்கள் ஆகும். யுத்தினால் பாதிக்பட்ட முஸ்லிம்கள் இன்னும் விடுகள் இல்லாமல் ஒலை குடிசைகளிலும் மரநிளல்களில் மற்றும் காணிகள் இல்லாமலும் அவஸ்தை படுகின்றனர் இவ்வாறான வேலையில் வேறு பிரதேசத்தில் உள்ளவர்களை குடியேற்றினால் முசலி முஸ்லிம்களின் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை எனவே முசலி மண்ணின் மீது பற்றுகொண்டவர்கள் இதனை தடுப்பதற்கு நடவடிக்கை ஏடுக்க வேண்டும்

இலங்கை முஸ்லிம் 

0 comments

பிடில் வாசிக்கும் ‘நீரோ’க்கள்.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் இனவாத செயல்பாடுகள் தொடர்பாக எதிர் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள் ஆற்றிய உரையை எதிர்த்து - இலங்கையில் எந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை என்றும் அது தொடர்பான ஆதாரங்களை ரனில் பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் என்றும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட வேலை அமைதியாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் பற்றியும், ரனிலின் கூற்றுக்கு ஆதரவாக இருந்து நாட்டில் இடம் பெற்ற இனவாத செயல்களை சுட்டிக்காட்டாமல் ரனிலின் கூற்றுக்கு எதிராக பேசிய முஸ்லிம் அமைச்சர்களின் உண்மைத் தன்மை மற்றும் நீதி, நேர்மை பற்றியும் இவ்வாக்கம் எழுதப்பட்டுள்ளது.

இந்த ஆக்கத்தில் ஒரு சில மாற்றுக் கருத்துக்கள் எனக்கு இருந்தாலும் காலத்தின் தேவை கருதி இங்கே அதைப் பதிகின்றேன்.
..............................................................

ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்.

மிதுலா நகரம் தீப்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஜனக மகாராஜா தன் அரண்மனையில் வேதாந்தம் படித்துக் கொண்டிருந்தார்.

பிடில் வாசிக்கவில்லை என்றாலும், வேதாந்தம் படிக்கவில்லை என்றாலும் ……….. பேரினவாதம் கொழுந்துவிட்டு எரிகையில் நமது அரசியல் தலைமைகளும் அவர்களைப் போலத்தான் புதினம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது இனி அனைத்து மக்களும் பேதங்களை மறந்து வாழும் சூழல் உருவாகும் என்று சிறுபான்மையின மக்கள் மட்டுமன்றி சகோதர வாஞ்சையுள்ள சிங்கள மக்களும் எண்ணினர்.

ஆனால் அந்த எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுள்ளது பேரினவாதத்தின் கோரமுகம்.

இந்நாட்டின் முதலாவது சிறுபான்மையினமான தமிழர்களுக்காக போராடிய இயக்கத்தின் தலைவரையே கொன்றொழித்தாயிற்று. எனவே இனி தமிழ் மக்களை அடக்கி ஆளலாம் என்ற நிலை வந்துவிட்டது. அதுபோலவே அடுத்த சிறுபான்மை இனமாக திகழ்கின்ற முஸ்லிம்களையும் ஏதோ ஒரு வழியில் அடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்கின்றது மிகைப் பேரினவாத சக்திகள்.

தம்புள்ளைப் பள்ளிவாசலில் தொடங்கி, குருணாகல், தெஹிவளை, அனுராதபுரம், பள்ளிவாசல்கள் என பேரினவாதிகளாலும் காவியுடை தரித்தவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்ட புனிதஸ்தலங்களின் பட்டியல் நீளமானது - தொடர்ந்து நீண்டுகொண்டே செல்வது. பள்ளிவாசல்களை அகற்றுமாறு நடாத்தப்படும் போராட்டங்கள் நியாயமற்றவை என்ற சலசலப்பு சிங்கள சமூகத்திற்குள்ளேயே தோற்றம் பெற்றுவிட்டது.

இதனை நன்றாக உய்த்தறிந்துகொண்ட மேலாதிக்க சக்திகள் அடுத்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டுள்ளன. ‘ஹலால’; சான்றிதழும் அவ்வகையிலேயே கையாளப்படுகின்றது. சற்று நடுநிலையாக இருந்து சிந்திக்கும் சிங்கள சகோதரர்களையும் திருப்திப்படுத்தும் அளவுக்கு கருத்துநிலைகள் சிங்கள சமூகத்திற்குள் திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு காரியங்களையும் (நீங்கள் சொல்வது போல்) ஒரு சிறு குழுவினரே மேற்கொள்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பலம் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் ?!

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் - தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற எத்தனையோ பிரதேசங்களில் வழிப்போக்கர்களாக வரும் சிங்களவர்கள் தங்கள் மத கடமையை நிறைவேற்றுவதற்கென பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு விகாரையை அல்லது அங்கிருக்கின்ற ஒரு செங்கல் தூணை அகற்றச் சொல்லி சிறுபான்மை மக்கள் சாத்வீகப் போராட்டம் நடாத்துகின்றார்கள் என எடுத்துக் கொள்வோம்.
என்ன நடக்கும்? ……….

அதில் பங்குபற்றியவர்கள் மட்டுமன்றி வீதியால் போனவர்கள் கூட சிறையிலடைக்கப்படுவர். ஓட்டுமொத்த சிங்கள மக்களே வீதிக்கு இறங்குவர். முஸ்லிம்களும் தமிழர்களும் இனவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்படுவர்.

ஆனால் சுமார் 10 பள்ளிவாசல்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எதிராக இது எதுவுமே மேற்கொள்ளப்படாதது ஏன்? என்று தரம்-5 படிக்கும் சிறுவன் கேட்கின்ற கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாதுள்ளது.

இனவாத சிந்தனை

இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகியதில் இருந்து தமிழ் மக்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவே இனவாத சக்திகள் செயற்பட்டன (சாதாரண சிங்கள மக்களல்ல).

அம்மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற வஞ்சகம் எப்போதும் அவர்களது மனங்களில் கனன்று கொண்டுதான் இருந்தது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது மட்டுமன்றி பிரபாகரனும் படுகொலை செய்யப்பட்டார். எனவே தமிழர்களின் போராட்டம் முடிந்து விட்டது. இனி அவர்கள் ‘பல் பிடுங்கப்பட்ட பாம்புகள்தான்’ என்ற தப்பான கணக்கு ஒன்றை சிங்கள பேரினவாதிகள் போட்டுள்ளனர்.

தமிழர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகுதான் அடுத்த சிறுபான்மை இனத்தின் பக்கம் பேரினவாதிகளும் சிங்கள அடிப்படைவாதிகளும் தமது பார்வையைத் திருப்பினர். தமிழர்கள் மீது தமது மொத்த இனவாதத்தையும் கட்டவிழ்த்து விட்டிருந்ததால் முஸ்லிம்களை கவனிக்க தவறிவிட்டோமே என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.
இன்று முஸ்லிம்கள் மிகப் பெரிய வியாபாரிகளாக, செல்வந்தர்களாக, தனியுரிமை கோருமளவுக்கு அரசியல் பலம் (?) மிக்கவர்களாக முன்னேறி இருக்கின்றார்கள் என்பது அவர்களது கண்களை உறுத்தியது.

உடனே உஷாரானார்கள். மதவாதம் எனும் ஆயுதத்தை கையிலெடுத்தார்கள். போருக்குப் பின்னரான அமைதியைக் குலைத்தனர். இன்றைய முஸ்லிம் தலைமைகள் முன்பிருந்த தலைமைகளைப் போல சமூக சிந்தனை உடையவர்களல்ல என்பதும் இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களைப் போல போராடும் குணம் அற்றவர்கள் என்பதையும் சிங்கள மேலாதிக்க சக்திகள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன.

ஒருவேளை, சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக (சாதாரண சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல) முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கினால் தமிழர்களை அடக்கியது போன்று அடக்கி ஆளலாம். அவ்வாறில்லாத பட்சத்தில் மியன்மாரை போல இனச் சுத்திகரிப்பு ஒன்றை மேற்கொண்டு முஸ்லிம்களை அரபு நாடுகளை நோக்கி துரத்தியடிக்கலாம் என்றும் பொது பலசேனா போன்ற மிதவாத அமைப்புக்கள் அடிமனதில் நிறைய கற்பனைகளை வைத்திருக்கின்றன.

பள்ளிவாசல்கள் தொழுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் கதையளப்பதைப் போல அங்கு போராட்ட குணம் போதிக்கப்படுவதில்லை. அதேபோன்று முஸ்லிம்களிடையே ஆயுதங்களும் இல்லை. போராட்ட அமைப்புக்களும் இல்லை. என்பதை சிங்கள மக்களுக்கு உரக்க எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மை மக்கள் ஆற்றிய பங்களிப்பு திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்துவதும் அவசியமாகியுள்ளது.

இனக்கலவர வரலாறு

இலங்கையில் தனிச் சிங்கள சட்டத்தின் பின்னரே இனப்பிரச்சினை ஏற்பட்டது என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இனவாத சக்திகள் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதான மேலாண்மையை வெளிப்படுத்திய ஒரு வழிமுறைதான் தனிச் சிங்கள சட்டம். தவிர, இன முரண்பாடு என்பது அதற்கு முன்னரும் இருந்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் முதலாவது இனக்கலவரமே சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில்தான் இடம்பெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது. அரசியல் ரீதியாக முறையாக கட்டமைக்கப்பட்ட ஓர் இனக்கலவரம் என்று வர்ணிக்கப்படுகின்ற இது 1915ஆம் ஆண்டு நிகழ்ந்தேறியது.

இதுவிடயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் தீவிரமாகச் செயற்பட்டு டி.எஸ். சேனானாயக்க, ஆர். டயஸ். பண்டாரநாயக்க, டி.எஸ். விஜேவர்தன, என். பெரேரா, ஈ.டி. தசில்வா, எச். அமரசூரிய, ஏ.எச். மொலமுற போன்ற சிங்களத் தலைவர்களை கைது செய்தனர். அப்போது, சிறுபான்மை இனத்தவரான சேர். பொன்னம்பலம் இராமநாதன் பிரித்தானியாவுக்குச் சென்று பேசி அந்த சிங்கள தலைவர்களை விடுவிக்கச் செய்தார். அவர் நாட்டுக்கு திரும்பிவந்தபோது துறைமுகத்தில் இருந்து அவரை குதிரை வண்டியில் அமர்த்தி, குதிரைகளை அகற்றிவிட்டு தாமே காலி வீதி வழியாக வீடுவரை தேரிழுத்துச் சென்றனர் சிங்கள தலைவர்கள்.
மறுபுறத்தில் முஸ்லிம்கள் இந்த நாட்டின் வரலாற்றில் மிக முக்கிய பங்களிப்புக்களை வழங்கி இருக்கின்றனர். ஏ.எம்.ஏ. அஸீஸ், ரி.பி.ஜாயா, தேசமான்ய பாக்கீர் மாக்கார், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், எம்.சித்திலெப்பை, சேர் ராசீக் பரீட், டாக்டர் எம்.சி.எம். கலீல் முதல் - மறைந்த தலைவர் அஷ்ரப் வரை பெருமளவிலான பெருந்தகைகள் இந் நாட்டின் சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டுக்காக பாடுபட்டுள்ளனர்.

ஆனால், ‘மர கல மினியா’ எனும் முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் வாசகத்தை தமக்கு ஏற்றாற்போல் திருபுபடுத்தி எழுதியது போலவே, மேற்சொன்ன பங்களிப்புக்களையும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் இருட்டடிப்புச் செய்துவிட்டனர்.

இப்போது வெளிப்படையாகவே முஸ்லிம் விரோத கருத்துக்களை மிகச் சரியாக கட்டமைக்கப்பட்ட முறையில் அடிமட்டத்தில் இருந்து புகுத்தி வருகின்றன பேரினவாத சக்திகள். இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத தம்பர அமில தேரர் போன்ற நடுநிலை கொள்கையாளர்களையும் பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் மூளைச்சலவை செய்வதற்கான திட்டங்களையும் தீட்டி வருகின்றன.

கையாலாகாத்தனம்

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களுக்கு பதிலிறுப்பதும் விளக்கமளிப்பதும் உலமா சபை போன்ற அமைப்புக்களின் வேலை என்றும், அரசசார்பு போக்கை கடைப்பிடிப்பதே தமது வேலை என்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைமைகள் நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிகின்றது.

இதனைப் பார்க்கும்போது சிங்கள இனவாதிகள் பரவாயில்லை என்று சிலவேளைகளில் தோன்றுகின்றது. நியாயமோ இல்லையோ அவர்கள் தங்களது சயமத்திற்காக குரல் எழுப்புகின்றார்கள். ஆனால் நமது சிறுபான்மை தலைமைகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்பவர்கள் சிங்கள சமூகத்திற்கு எதிராக அல்ல - தமது சமூகத்தின் பக்கமுள்ள நியாயங்களை எடுத்துக் கூறுவதற்குக் கூட ஏனோ தயங்குகின்றனர். அவர்கள் உண்மைகளைப் பேசுவதையிட்டும் எதுவோ ஒரு விடயம் அவர்களைத் தடுக்கின்றது.

அவர்கள் பாவம்…. நாவிழந்து இருக்கின்றார்கள். இல்லாவிட்டால், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என 17 உறுப்பினர்களை கொண்ட சபையில் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.

சபையில் கைசேதம்

கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் விஷேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளதாக சொன்னார். கிட்டத்தட்ட 10 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம்களுக்கு எதிராக 10 ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அப்போது ஆளும் தரப்பில் இருந்து முஸ்லிம் அமைச்சர் ஒருவர் எழுந்தார். ரணிலின் கருத்துக்கு அவர் பலம் சேர்ப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக எதையோ கூறுவதிலேயே குறியாக இருந்தார்.

அவ்வேளையில் சபையில் அமர்ந்திருந்த 1 பாராளுமன்ற உறுப்பினரைத் தவிர வேறெந்த முஸ்லிம் மக்கள் (?) பிரதிநிதிகளும் இவ்விடயத்தை வழிமொழிந்தோ அன்றேல் ரணிலின் தரவுகளில் இருக்கும் பிழைகளைத் திருத்தியோ சபைக்கு கூறவில்லை.
ரணிலின் கூற்றுக்கு மறுநாள் வியாழக்கிழமை அரசாங்கம் சபையில் பதிலளித்த போது இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது குறித்து விளக்கமளித்தார். நாட்டில் எந்தவொரு மதஸ்தலமும் இதுவரையில் தாக்கப்படவில்லை. அவ்வாறு தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை அரசாங்கம் நிராகரிப்பதாக அவர் கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தடுப்பதற்கு 7 நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரணில் குறிப்பிட்டவாறு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறும் சவால் விடுத்தார்.

அப்போது முஸ்லிம் அமைச்சர்கள் பலர் சபையில் இருக்கவில்லை என்றபோதும் பிரசன்னமாகி இருந்த எந்தவொரு முஸ்லிம் எம்.பி.யும் அரசாங்கத்தின் பதிலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

அரசாங்கம் இவ்வாறு கூற முனைவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. இந்த இந்த இடங்களில் பள்ளிவாசல்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கின்றன என்பதை எவரும் சபைக்கு தெளிவுபடுத்தவில்லை. சிறிபால டி சில்வாவின் அறிக்கை முற்றுமுழுதாக உண்மை என்பதுபோலதான் சபையில் முஸ்லிம் உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர்.

அப்போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. நீதிக்கு பொறுப்பான அமைச்சர் எழுந்து உரையாற்றினார். அரசாங்கத்தின் பதிலானது தமது இணக்கத்துடனேயே தயாரிக்கப்பட்டதாகவும், தமது கருத்துக்களும் அதில் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் சபைக்கு எடுத்துரைத்தார். ‘தாக்கப்பட்டது’ என்ற சொல்லாடல் பிழை ‘அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது’ என்பதே சரி என அவர் குறிப்பிட்டிருந்தால் அதில் ஒரு நீதி இருந்திருக்கும்.

ஆனால் கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது கிழக்கில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மேடையில் தோன்றிய அதன் தலைவர், அரசாங்க “ஆதரவுடன் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பீரங்கிப் பேச்சுக்களை பேசிவிட்டு, இன்று அவ்வாறு பள்ளிகள் எதுவும் உடைக்கப்படவில்லை என்று கூறுவதைவிட இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் காமடி ஒன்றும் இருக்க முடியாது.

பாராளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களுக்கு கைமாறாக – அசுர காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால், முஸ்லிம் தலைமைகள் நியாயங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். சிங்கள அடிப்படைவாதக்குழுக்கள் துண்டுப் பிரசுரங்கள், போஸ்டர்கள், பிரசாரங்கள் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது மட்டுமன்றி, பள்ளிவாசல்களையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன என்பதை அந்த உயரிய சபையில் எடுத்துரைத்திருக்க வேண்டும் என்பதே உங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு.

ஆனாலும் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை !
தேர்தல் முடிந்தபிறகு நீங்கள் எப்படி மக்களை மறந்து விடுகிறீர்களோ, அப்படித்தான் தேர்தல் வந்துவிட்டால் மக்கள் நீங்கள் செய்த எந்தத் துரோகத்தையும் மறந்துவிடுவார்கள். நீங்கள் பயப்பட வேண்டியதில்லை.


படித்ததில் பிடித்தது....


நன்றி : வீரகேசரி இணையதளம்
 
நன்றி - றஸ்மின் மிஸ்க் முக நூல் தளத்திலிருந்து ....
0 comments

ரிசானா நபீகின் மரண தண்டனை ; முஸ்லிம்களை ஏமாற்றும் ஊடகங்கள் + அரசியல் வாதிகள் = அரசியல் ராஜ தந்திரம்



இலங்கை முழுவதும் கடந்த சில வருடங்களாகவே அனைத்து ஊடகங்களிலும் ஆங்காங்கே இடம் பிடித்த ‘ரிசானா நபீக்’ என்ற பெயர் இறுதியாக இலங்கை பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாகவே இடம் பிடித்தது. காரணம் ‘ரிசானா நபீகுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது’. இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை நடை முறைப்படுத்தி வரும் ஸவூதி அரேபியாவில் தான் இது நடந்தது.
ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து இந்நேரம் வரை அவரைப் பற்றிய அனுதாபச் செய்திகளை பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும், சமூக வலை தளங்களிலும் தாராளமாகவே காணக் கிடைக்கின்றது.
வெளிநாட்டு வேலைவாய்புக்காய் சவூதியை நாடிச் சென்ற ரிசானா நபீக் கொலைக் குற்றத்திற்காக தற்போது மரண தண்டனைக்கு உள்ளாகியுள்ளார். இலங்கை மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் வெளிநாட்டுக்குச் செல்லும் போது வயது 17 கடந்த சில வருடங்களாக சிறையில் இருந்தவருக்கு கடந்த புதன் கிழமை மரண தண்டனை நிறை வேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் பலவிதமான கோரிக்கை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டது.
ரிசானா நபீக் மரணத்தைத் தழுவிய இந்தத் தருணம் வரை அவருக்கான அனுதாபத்தின் பெயரில் பலவிதமான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ரிசானாவுக்காக அரசியல் பிரமுகர்களின் அனுதாபங்கள்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி.
சவூதி அரசைக் கண்டித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை.
சவூதி அரரை கண்டிக்கும் விதமாக சவூதிக்காக இலங்கைத் தூதுவர் மீள அழைப்பு.
இது போன்ற பலவிதமான செயல்பாடுகளும் ரிசானாவுக்கான அனுதாபத்தின் பெயரில் நடை பெற்று வருகின்றது.
இதே நேரம் ரிசானா நபீக் பற்றிய செய்தியைப் பிரசுரிக்கும் அனைத்து ஊடகங்களும் மூன்று விஷயங்களை முக்கியத்துவப் படுத்துகின்றன.
ரிசானாவின் வயது.
ரிசானாவின் குடும்பம்.
வீட்டின் வறுமை.
பெரும்பாலான இலங்கைப் பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தியாக ரிசானாவின் தாய் தந்தை அடங்கிய வீட்டின் நிலைமைதான் புகைப்படக் காட்சிகளாக பிரசுரிக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பார்க்கும் யாராக இருந்தாலும் ‘பாவம் ரிசானா! சவூதி அரசாங்கத்திற்கு பாச குணமே இல்லையா? இஸ்லாம் இப்படியான கொடூரமான மார்க்கமா? என்ற வெறுப்பு எண்ணங்களையே அந்தப் புகைப்படங்களும், பத்திரிக்கைச் செய்திகளும் உண்டாக்கும். உண்டாக்கியது.
மொத்தத்தில் ரிசானாவின் தரப்பு கஷ்டத்தை மாத்திரம் தான் நாம் செய்தியாக உணர்ந்து கொண்டோமே தவிர இஸ்லாமிய குற்றவியல் ஷரீஅத் சட்டத்தின் உண்மைத் தண்மை மற்றும் நியாயமான நேர்மையான பார்வையை நாம் புரிந்து கொள்ள தவரிவிட்டோம்.
ரிசானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளாகியதில் இருந்து இது வரைக்கும் ரிசானா பற்றிய பரிதாபச் செய்திகளைப் பேசும் அனைவரும் சவுதி அரசு செய்த காரியத்தை வெறுப்புடன் பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களே சவுதியின் செயலை வெறுப்புணர்வுடன் தான் பார்க்கிறார்கள். ஆனால் சவுதி அரேபிய அரசு நடை முறைப்படுத்தியது இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை என்பதை இவர்கள் உணர மறுக்கின்றார்கள்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)
ரிசானாவுக்காக இவ்வளவு தூரம் பேசும் நாம் இது வரை மற்றவர்களாக இதைப் பேசவில்லையே? இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காய் சவுதிக்கு சென்று திருடியவர்கள், கொலை செய்தவர்கள், விபச்சாரம் செய்தவர்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என எத்தனையோ பேர்களுக்கு இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கைகள் வெட்டப்பட்டன.
தலைகள் துண்டிக்கப்பட்டது.
கல்லால் அடித்துக் கொள்ளப்பட்டார்கள்.
இப்படி பலரும் இந்த தண்டனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் போது அப்போது இவைகள் பற்றி பேசாத அரசியல் தலைவர்களும், ஜனாதிபதியும் ரிசானாவுக்கு மாத்திரம் குரல் எழுப்புவது ஏன்? இதற்கு முன்பு கொல்லப்பட்ட யாருக்கும் மௌன அஞ்சலி செலுத்தாத பாராளுமன்றம் ரிசானாவுக்காக மாத்திரம் மௌன அஞ்சலி செலுத்தியதின் மர்மம் என்ன? கேட்டால் ஒரு வரி பதில் தான் மிஞ்சும். 
‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’
இன்றைக்கு ரிசானாவுக்கு வழங்கிய தண்டனை தவறு என்று பேசும் பல அரசியல் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை நாட்டில் இடம் பெற்ற பாரதூரமான தவறுகளைப் பற்றி கருத்து வெளியிட்ட நேரத்தில் அரபு நாட்டு சட்டங்கள் இலங்கைக்கு வேண்டும் அப்போதுதான் இந்த குற்றங்களைத் தடுக்க முடியும் என்று பகிரங்கமாகவே பேசிய வரலாறு உண்டு.
அவ்வளவு ஏன் இலங்கையில் மரண தண்டனை சட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இப்போதும் வாதப் பிரதி வாதங்கள் பாராளுமன்றத்திலேயே முன்வைக்கப்பட்டுத் தான் வருகின்றன. அப்படியெனில் ஏன் ரிசானா விஷயத்தில் மாத்திரம் இந்த இரட்டை நிலைபாடு எடுக்கிறீர்கள்?
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடகம்.
ரிசானாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து ஐரோப்பிய யூனியன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை பெரிய செய்தியாக ஊடகங்களும் பகிர்ந்து கொண்டிருக்கின்றன.
உண்மையில் ரிசானா நபீக் விஷயத்தில் சவுதி அரசு செய்தது தவறு. அவருக்கு மரண தண்டனை விதித்திருக்கக் கூடாது என்று ஐரோப்பிய யூனியன் பேசுவது சரியானதா? அதைப் பேசும் தகுதி ஐரோப்பிய யூனியனுக்கு இருக்கிறதா? என்றால் கிடையாது.
காரணம் ரிசானா நபீக் குற்றம் செய்தார் என்று நீதி மன்றத்தில் முடிவெடுத்து இந்த தண்டனையைப் பெற்றுக் கொண்டார். ஆனால் ஈராக்கிலும், ஆப்கானிலும், பாலஸ்தீனிலும், காஷ்மீரிலும், செச்னியாவிலும் இன்னும் எத்தனையோ நாடுகளில் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி மக்கள் தினம் தினம் அழிக்ப்படுகின்றார்கள் இது பற்றி ஐரோப்பிய யூனியன் கருத்து வெளியிடவில்லை? அவர்களின் உயிர்கள் மதிப்பற்றவையா?
இஸ்லாமிய குற்றவியலை கொடூரமான என்று வெளி உலகுக்கு ஒரு பொய்ப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். அதற்கான பகடைக் காயாக ஊடகங்களுக்கும் அரசுகளுக்கும் கிடைத்தது ‘ரிசானா நபீக்’ விவகாரம். அதனால் தான் இந்தனை கருத்துக்கள் எழுகின்றனவே தவிர ரிசானா மீது வைத்த பாசமல்ல என்பதை சிந்திப்பவர்கள் தெளிவாக உணரலாம்.
அன்பின் சகோதரர்களே! இஸ்லாமிய குற்றவியலை நடை முறைப்படுத்திய சவுதி அரேபிய அரசை வெறுப்பதை விடுத்து இஸ்லாமிய குற்றவியல் தண்டனை முறை சொல்லும் நியாயமான காரணங்களை சிந்தித்துப் பாருங்கள். உண்மை தெளிவாக விளங்கிவிடும். 
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் தொடர்பான விரிவான விளக்கங்களைப் பாருங்கள்.
இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் கொடூரமானவையா?
“இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமான மற்றவை”என்று பரவலாக விமர்சிக்கின்றனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை இஸ்லாம் வழங்குவதே இதற்குக் காரணம்.
ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் தாம் மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.
கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்து விடப்போவதில்லை; கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வரப்போவதில்லை; பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறி போனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.
இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?
1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.
2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.
3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளா னவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மனநிறைவு அடைய வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.
குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச் சாலைகள், காவல் நிலையங்கள்,நீதிமன்றங்கள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.
ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.
அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச் சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழி வகுக்கின்றன.
குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?
திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ,சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும் பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.
சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.
நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத் தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக் குள்ளேயே செய்து தரப்படுகின்றன.
இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வேதனையான அம்சம் என்ன வென்றால், எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ, அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
இந்தப் பெயரளவிலான தண்டனை யால் ஒரு பயனும் ஏற்படாது;ஏற்படவில்லை.
53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!
15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!
என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை.
சிறைச் சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் “நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்?ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச்சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே” என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.
மேலும் குற்றவாளிகள் சிறைச் சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளை வகுக்கின்றனர்.
சிறைச் சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.
ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.
மனிதாபிமானச் (?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.
பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மன நிறைவு அடைவானா?என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
திருட்டுக் கொடுத்தவனிடம் போய் திருடியவனை என்ன செய்யலாம் என்று கேட்டால் “ஆறு மாதம் சோறு போடலாம்” எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் “பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்” என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?
கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.
ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
கண்ணை இழந்தவன் குற்ற வாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.
அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படா விட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளி யாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்? “கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது” என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.
இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.
திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.
மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
முதன் முதலாகத் திருட எண்ணுபவ னும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.
கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
“இவர்கள் இங்கே இருக்கிறார்களா?” என்று திருடர்களின் புகைப் படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாள மாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.
தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.
“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?
நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கிய னுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.
இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.
உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.
கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.
உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும்,உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.
திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா?என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.
இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.
மேலும் “எடுத்தேன்; கவிழ்த்தேன்” என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.
மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. (பார்க்க: திருக்குர்ஆன் 24:4, 24:13)
இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.
(மேலதிக தகவல்களுக்கு திருமறைக் குர்ஆனின் இந்த வசனங்களையும் பார்த்துக கொள்ளலாம் : 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4)
(பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கம்.)
பெண்களிடம் ஓர் வேண்டுகோள்.
அன்பின் இஸ்லாமிய சகோதரிகளே! சகோதரி ரிசானா நபீக் இன்று ஒரு கொலையாளியாக நம் முன் நிற்பதற்கான காரணம் உழைப்பிற்கான தனது வெளிநாட்டுப் பயணம் தான்.
மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்கு பெண்கள் வெளிநாட்டு வேலை வாய்பைத் தேடிச் செல்வது இலங்கையில் தான் அதிகமாக உள்ளது.
இஸ்லாத்தை சரியான முறையில் நாம் புரிந்து கொண்டால் இந்த பிரச்சினை நமக்கு ஏற்படவே மாட்டாது என்பதுதான் உண்மையாகும். இஸ்லாமிய சட்டத்தில் பெண்கள் உழைக்க வேண்டும், வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டமே கிடையாது உழைப்பதை ஆண்களுக்குத்தான் இஸ்லாம் கடைமையாக்கியுள்ளதே தவிர பெண்களுக்கு அல்ல.
தந்தையர்களே! கணவர்களே!
உழைப்பது உங்கள் மீது கடமை என்று இஸ்லாம் தெளிவாக தெரிவித்துள்ள போது அதனை மீறி உங்கள் மனைவியரை, பிள்ளைகளை நீங்கள் வேலை வாய்பைத் தேடி வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள் இது எந்த விதத்தில் நியாயமானது. உங்கள் மனம் உறுத்தவில்லையா? நீங்கள் செய்யும் இந்த கேவலமான செயல்பாட்டினால் இஸ்லாமிய ஷரீஅத் சட்டமே விமர்சிக்கப்படுகிறதே இதை நீங்கள உணர வேண்டாமா?
ரிசானா நபீக் பற்றிய முன்னைய ஆக்கத்தைப் படிக்க இங்கு க்லிக் செய்யவும்
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger