நரேந்திர மோடியை முன்னிறுத்தும் பாரதிய ஜனதாவின் போக்கு அக்கட்சிக்கே பாதகமாக அமையும் என்று காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
நரேந்திர மோடியை எதிர்த்து ஒவ்வொரு கட்சியாக பா ஜ கூட்டணியிலிருந்து விலகும் என்ற ஒமர் அப்துல்லா, ஐக்கிய ஜனதாதளம் கட்சி, பாஜக கூட்டணியில் இருந்து விலகியது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் கூறினார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும். நிதீஷ்குமார் இணைந்தால் தங்கள் கூட்டணி பலம் பெறும் என்றுரைத்த ஒமர் அப்துல்லாஹ், வாஜ்பாய் காரணமாகவே தங்கள் கட்சியும் முன்பு பாஜகவின் கூட்டணியில் இருக்க நேரிட்டது என்றார் காஷ்மீர் முதல்வர். பாஜக தன் விருப்பத்தின் பேரில் முன்னிறுத்தும் பிரதம வேட்பாளர்களை கூட்டணிக் கட்சிகள் ஏற்பதில்லை என்றும் ஒமர் கூறினார்.
"மூன்றாவது அணி எப்போதும் உருவாகாது. தேர்தலுக்கு பின்னரே மூன்றாவது அணி ஏற்படும். மூன்றாவது அணியின் தலைவராக எவரை முன்னிலைப்படுத்துவர். மூன்றாவது அணி குறித்து அறிவிப்பு வெளியானவுடனே தலைவர் குறித்த சர்ச்சை எழுந்து விடும். ஒவ்வொருவரும் தன்னைத் தானே பிரதமர் வேட்பாளராக அறிவித்துக் கொள்ளவே முற்படுவர்" என்றும் காஷ்மீர் முதல்வர் கூறினார்.
Post a Comment