பூமியின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாலைவனங்களாக உள்ளன. பொதுவாக பாலைவனம் என்று சொல்வதற்கு காரணம், இங்கு மழையானது மிகவும் குறைவாக பொழிவது தான். மேலும் பாலைவனங்கள் அதிக வறட்சியுடன் இருப்பதால், அங்கு மக்கள் வாழ முடியாது. ஆனால் வறண்ட நிலப்பகுதிகளில் வளரக்கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் வளரும். அதுமட்டுமின்றி, பாலைவனங்களில் பகலில் அதிகப்படியான வெப்பமும், இரவு நேரத்தில் அதற்கு எதிர்மறையாக குளிரும் நிலவும். இதுப் போன்று பூமியில் நிறைய பாலைவனங்கள் உள்ளன. மேலும் இவற்றில் அதிகப்படியான குளிர் மற்றும் வெப்பம் என்ற இரண்டு வகையான பாலைவனங்களும் உள்ளன. அவற்றில் மிகவும் பிரபலமான சில பாலைவனங்களை, உங்கள் பார்வைக்காகக் கொடுத்துள்ளோம்.
உலகில் வெறிச்சோடி காணப்படும் சில பாலைவனங்கள்!!!
சஹாரா பாலைவனம் (Sahara Desert)
பாலைவனங்களில் மிகவும் பிரபலமானது தான் சஹாரா பாலைவனம். இது ஆப்ரிக்காவில் அனைத்துள்ளது. இந்த பாலைவனம் 9,400,000 கிலோமீட்டர் பரப்பளவுடையது. இது உலகில் உள்ள பாலைவனங்களுள் இரண்டாவது பெரிய பாலைவனமாகும். இந்த பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழமை வாய்ந்தது. இங்கு சாதாரணமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதுவே கோடைகாலமாக இருந்தால், குறைந்தது 57.7 டிகிரி செல்சியஸ் வெப்பமும் இருக்கும்.
அண்டார்டிக் பாலைவனம் (Antarctic Desert)
உலகின் மிகவும் குளிச்சியான இடம் என்றால் அது அண்டார்டிக்கா தான். இந்த இடம் பொதுவாக உறைந்த நிலையில் பனிக்கட்டிகளாகத் தான் இருக்கும். அதே சமயம் இது ஈரத்துடன் கூடிய வறட்சியாக இருப்பதால், இதுவும் ஒரு பாலைவனமாக உள்ளது. இந்த பாலைவனத்தில் -80 டிகிரி முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். மேலும் இந்த பாலைவனத்தில் பனிப் பிரதேசத்தில் வளரக்கூடிய விலங்குகளும், தாவரங்களும் மற்றும் இதர பிராணிகளும் மட்டும் தான் வாழ முடியும்.
அடகாமா பாலைவனம் (Atacama Desert)
இதுவும் மிகவும் வறட்சியான மற்றும் விநோதமான ஒரு பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 105,000 கிலோ மீட்டர் ஆகும். இந்த பாலைவனம் நான்கு நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கியது. மகர ரேகையின் எல்லையில் அமைந்துள்ள இந்த பாலைவனமானது, அரிதான வானிலை மாற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த பாலைவனத்தில் இரவில் வெப்பநிலை குறைவாக, அதாவது -25 டிகிரி செல்சியஸ் காணப்பட்டாலும், பகல் நேரத்தில் 45 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
கலஹாரி பாலைவனம் (Kalahari Desert)
உலகின் கவர்ச்சிகரமான பாலைவனங்களில் கலஹாரி பாலைவனமும் ஒன்று. இந்த பாலைவனம் 900,000 கிலோமீட்டர் பரப்பளவில் பரந்திருப்பதோடு, தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் இந்த பாலைவனத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தது 3 முதல் 7.5 இன்ச் மழையானது பொழிந்து விடுவதால், பெரும்பாலான மக்கள் இதனை ஒரு உண்மையான பாலைவனமாக நினைக்க மறுக்கின்றனர். ஆனால் மற்ற பாலைவனங்களை விட இங்கு தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ முடிந்தாலும், சற்று சவாலாகவே இருக்கும். கோடைகாலத்தில் இங்கு வெப்பநிலையானது 50 டிகிரி செல்சியஸ் ஏறி இருக்கும்
தக்லாமகான் பாலைவனம் (Taklamakan Desert)
சீனாவில் அமைந்துள்ள இந்த பாலைவனம், 337,000 கிலோமீட்டர் பரப்பளவுடையது. இதுவும் குளிர்ச்சியான ஒரு பாலைவனம். இந்த பாலைவனமானது எந்த காலத்திலும், இரவில் மிகவும் குளிர்ச்சியுடன் இருக்கும். குளிர்காலத்தில் இந்த பாலைவனத்தின் வெப்பநிலையானது -20 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
தார் பாலைவனம் (Thar Desert)
இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரிய பாலைவனம் தான், தார் பாலைவனம். இந்த பாலைவனம் இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களையும், பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் பரவியுள்ளது.
கோபி பாலைவனம் (Gobi Desert)
ஏறத்தாழ 13,000,000 சதுர கிலோமீட்டர் பரந்து காணப்படும் கோபி பாலைவனம், மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது. இதுவும் உலகின் பெரிய பாலைவனங்களுள் ஒன்று. இந்த பாலைவனத்திலிருந்து நிறைய தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் டயனோசர் முட்டையும் ஒன்று.
காரகும் பாலைவனம் (Karakum Desert)
தர்க்மெனிஸ்தானில் உள்ள காரகும் பாலைவனமானது 350,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. இந்த பாலைவனத்தில் குறைந்த அளவில் மக்கள் வாழ்கின்றனர். மேலும் இந்த பாலைவனம் தான் உலகின் இரண்டாவது பெரிய நீர்பாசன கால்வாய் ஆகும். இந்த பாலைவனத்தில் ஒரு பெரிய துவாரம் உள்ளது. இந்த துவாரம் வருதற்கு காரணம், வேற்று கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டு விழுந்தது தான் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இதற்கு பின்னணியில் நிறைய கதைகள் உள்ளன.
லட் பாலைவனம் (Lut Desert)
தென்கிழக்கு ஈரானில் அமைந்துள்ள இந்த பாலைவனம், 51,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. இந்த பாலைவனத்தை உப்பு பாலைவனம் என்றும் கூறுவர். ஏனெனில் இந்த பாலைவனம் உப்பு, பாறை மற்றும் மண்ணை உள்ளடக்கியது. இந்த பாலைவனம் வெறிச்சோடி, வறட்சியாகக் காணப்படுவது மட்டுமின்றி, இது மிகவும் சூடான பாலைவனம் என்று நாசா செயற்கைக்கோள் நிரூபித்துள்ளது. ஏனெனில் இங்கு அதிகப்படியாக 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது நிலவுகிறது.
thanksto - tamil.boldsky.

Post a Comment