புது டெல்லி: இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சியடைந்ததால் பெட்ரோல் விலை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 4.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கடந்த 10 மாதத்தில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பில் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோலின் விலையினைச் சர்வதேச சந்தைவிலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி ஆகியவற்றின் அடைப்படையில் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமையிருப்பதால், தற்போது வீழ்ச்சியடைந்துள்ள ரூபாயின் மதிப்பினால் ஏற்படும் இழப்பினை ஈடுகட்ட இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1ரூபாய் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதன்படி விலை உயர்த்தப்படுமானால், நாளை முதல் பெட்ரோலுக்கு ஒரு ரூபாய் அதிகம் கொடுக்கவேண்டியிருக்கும்.
Post a Comment