குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அடுத்துவரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்துவதை அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கடுமையாக எதிர்த்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டாலும், அவர் பிரதமர் வேட்பாளராக மாட்டார் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பு கூறிவரும் நிலையில், பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றிற்கிடையேயான விரிசல் மேலும் வலுவடைந்துள்ளது.
பீகார் அரசின் வழக்கமான நடவடிக்கைகள் குறித்து விவதிப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்திற்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் அழைப்பு விடுத்து இருந்தும் பாரதிய ஜனதா அமைச்சர்கள் முதல்வரீன் இந்த அழைப்பைப் புறக்கணித்துள்ளனர், மேலும் பீகார் பாஜக அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து பதவி விலக தயராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து பீகார் ஆளுநர் பாட்டீலை சந்தித்து பாரதிய ஜனதாவுடனான உறவை முறித்துக்கொள்வதாக நிதீஷ் குமார் இன்று தெரிவித்துள்ளார். எந்நேரமும் கூட்டணி முறிவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில் " எங்களது அடிப்படைக் கொள்கைகளை மீறி வரும் பாரதீய ஜனதாவினர் மீது நாங்கள் எந்த வித சமாதானமும் செய்துகொள்ள முடியாது. இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் அப்பொறுப்பிலிருந்து விலகுகிறார்" என்று தெரிவித்தார்.
இதன் மூலம் பாரதிய ஜனதாவுடன ஐக்கிய ஜனதா தளத்தின் 17 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

Post a Comment