இஸ்லாமாபாத் - பாகிஸ்தானில் குவெட்டா என்ற இடத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் ஏறத்தாழ 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
குவெட்டாவில் உள்ள போலன் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் அலி கான் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனை வளாகத்தில் புகுந்த தீவிரவாதிகள் பொதுமக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தெரிகிறது.
வளாகத்தினை தீவிரவாதிகளிடமிருந்து மீட்பதற்காக பாதுகாப்புப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் , மேலும் நான்கு தீவிரவாதிகள் உயிருடன் இருப்பதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சர்தார் பஹதூர் கான் பெண்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத்தாக்குதலில் 14 மாணவிகள் கொல்லப்பட்டுள்ளனர். மாலை 3 மணிக்கு ஒரு பேருந்தில் இந்த வெடிகுண்டுத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
காயமடைந்த மாணவிகள் போலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அரை மணி நேரத்திற்குள்ளாக மருத்துவமனையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் பர்வேஷ் ரஸீத் இந்தத் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானின் எதிரிகள் ஆவர் என அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
Post a Comment