புதுடெல்லி:குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஜனதா கட்சியில் தேர்தல் பிரச்சாரப் பணிக்குழுத் தலைவராக முதன்மைப் பொறுப்பு அளிக்கப்பட்டதையடுத்து கட்சியின் மூத்த தலைவரான அத்வானி வெகுண்டெழுந்து தனது கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் - அடிப்படை உறுப்பினர் நீங்கலாக - துறப்பதாக அறிவித்தார். தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரம் நேற்று (11.06.2013) மாலையே முடிவுக்கு வந்தது.
இந்நேரம்
பாரதிய ஜனதாவின் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், 11.06.2013 அன்று மாலை அத்வானியின் இல்லத்தில் அவரைச் சந்தித்து சமரசம் பேசிய பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் இச்செய்தியை வாசித்தளித்தார். "பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு, நாடாளுமன்ற குழு மற்றும் தேர்தல் குழுவிலிருந்து விலகும் அத்வானியின் விலகலை ஏற்பதில்லை என்று கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்தது.
தனது பொறுப்புகளில் அத்வானி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் அவரை தேசிய செயற்குழு கேட்டுக் கொண்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்ராவ் பகவத்தும் அத்வானி கட்சிப் பொறுப்புகளைத் துறக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதை ஏற்று தனது விலகலைத் திரும்பப் பெற பெற அத்வானி ஒப்புக் கொண்டுள்ளார் "என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.நரேந்திர மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமித்ததை அத்வானி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தனது உரையில் குறிப்பிட்டார்.
தேசிய அரசியலில் கட்சி மீது கவனம் ஈர்க்கும் உத்தியாக அத்வானியின் பதவி விலகல் அறிவிப்பு வெளியானதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அத்வானி பதவி விலகுவதும், பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வதும் இது மூன்றாவது முறை என்பதும், இம்முறையும் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்நாத்சிங்குடன் அத்வானி காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நேரம்
Post a Comment