கொழும்பு: இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே உள்ள அங்குலானாவில் பழமையான புனித பிரான்சிஸ் சேவியர் ஆலயம் உள்ளது. கடந்த 5ம் தேதி இரவு 10 மணிக்கு சிங்களர்கள் சிலர் அந்த ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த இயேசு, தேவமாதா சிலைகளை சேதப்படுத்தினர்.
மேலும் நற்கருணை பேழையை உடைத்து அதன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். ஆனால் பேழையில் இருந்த அப்பங்கள் தீயால் சேதமடையவில்லை. சுமார் 30 லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி பேழை எரிக்கப்பட்டும் அப்பங்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருந்தது கிறிஸ்தவர்களைஆச்சரியப்பட வைத்துள்ளது.
சிங்களர்கள் ஆலயத்தை தாக்கியது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Post a Comment