அகமதாபாத் :சட்டத்துக்கு புறம்பான விதிமீறல்களில் ஈடுபட்டு ரூ 54 கோடி முறைகேடு செய்த வழக்கில் நரேந்திரமோடி அமைச்சரவையில் நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் பாபுபாய் போக்காரியாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி போர்பந்தர் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அமைச்சர் பாபுபாய் போக்காரியா மற்றும் முன்னாள் எம்.பி பரத் ஒடெதரா உள்ளிட்ட 4 பேருக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது. 3 ஆண்டுசிறைத் தண்டனை வழங்கப் பட்ட நிலையில்அமைச்சர் பாபுபாய் போக்காரியா உடனடியாகக் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
நரேந்திர மோடியின் அரசில் பங்கு பெற்றுள்ள அமைச்சர் ஊழலில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பொறுப்பேற்று நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஊழலை அனுமதிக்க மாட்டேன் என்று பேசி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பங்கு வகித்த அமைச்சர் ஒருவர் ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றுள்ளது நரேந்திர மோடிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப் படுகிறது

Post a Comment