கடந்த 2004 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுக்கெதிரான துப்பாக்கிச் சூடு என்ற பெயரில் இஷ்ரத் ஜஹான் என்கிற கல்லூரி மாணவியும் அவருடைய நண்பர்கள் மூவரும் வேண்டுமென்றே குஜராத் மாநில காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலைகளின் பலியானவர்கள் அப்பாவிகளே என்று தற்போது மத்திய புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், அப்பாவியான அம்மாணவியை அநியாயமாகக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவருகின்றன. இந்தியாவின் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயிடம் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது குறித்து கருத்து கேட்டதற்கு, விதிப்படி நடந்தது நடந்துவிட்டது. தற்போது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதுவே முக்கியம் என்று அமைச்சர் கருத்தளித்துள்ளார்
Post a Comment