ஆட்டை கடித்து மாட்டைகடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதை என்பார்கள் அதேபோல ஜிஹாத் என ஆரம்பித்து அது போனியாகாமல் அரசியல் பன்ன ஆரம்பித்த ஏபிசிடிக்கள் ஏதோ விநாயகர் சதுர்த்திக்கு போஸ்டர் அடித்தோம், கோயில் கும்பாபிஷேகத்திர்க்கு வாழ்த்து தெரிவித்தோம் என்று இருந்தவர்கள் இப்போது இஸ்லாமிய சட்டத்தையே விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள்
மரணதண்டனை ஒரு சித்திரவதையாம் இதை எதிர்க்கிறார்களாம். தனது மகனையோ தனது தாயையோ ஒருவன் அநியாயமான முறையில் கொலை செய்து இருந்தால் அப்போது அந்த கொலைகாரனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால் அதை சித்திரவதை என சொல்வார்களா? இவர்கள்.
அல்லாஹ் அருளிய ஒரு சட்டத்தை அதிலும் இஸ்லாத்தை எதிர்க்கும் அத்வானி போன்றவர்களே இஸ்லாமிய சட்டம் தான் சரியான தீர்வு என சொல்லும் இந்த காலத்தில் கேவலம் ஓட்டுக்காக இஸ்லாத்தையே கேலிகூத்தாக்கும் இவர்கள் மறுமையை நினைத்தாவது திருந்துவார்களா?
இஸ்லாத்திற்கு மாற்றமாக யார் சொன்னாலும் கை கட்டி வேடிக்கை பார்க்காதீர்கள் உண்மையை உரக்கச் சொல்லுங்கள் ,
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது?
ஒருவன்மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால்,அதற்கான தண்டனையாக குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டார்.
அது போலவே கொல்லவப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்று சொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும், அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும்.
கொலையாளியைக் கொல்வதின் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம்.
இந்தக்கருத்தை
அறிவுடையோரே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்.(அல்குர்ஆன் 2:43)
நம்பிக்கை கொண்டோரே! சுதந்திர மானவனுக்காக (கொலை செய்த) சுதந்திர மானவன், அடிமைக்காக (கொலை செய்த) அடிமை, பெண்ணுக்காக (கொலை செய்த) பெண், என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது (கொள்கைச்) சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்ல விதமாக நடந்து அழகிய முறையில் (இழப்பீடு) அவனிடம் வழங்க வேண்டும்.401 இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும், அருளுமாகும். இதன் பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது. (அல்குர்ஆன் 2:43)
நன்றி - லெப்பைகுடிகாடு ததஜ
Post a Comment