தவ்ஹீத் ஜமாத்தின் கொம்பனி தெரு பொதுக் கூட்டம் தடையானது ஏன்?





ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக இன்று (06.04.2013) கொழும்பு கொம்பனி தெருவில் நடத்தப்படவிருந்த மாபெரும் விளக்கப் பொதுக் கூட்டம் அரசினால் தடை செய்யப்பட்டு இறுதியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.
நடந்தது என்ன?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக மூன்று தலைப்புக்களில் கொழும்பு கொம்பனி தெரு  ஹோலிரோஸரி மகா வித்தியாலயத்துக்கு முன்னால்  ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அபே உறுமய ரெககனிமு என்ற தலைப்பில் சிங்கள மொழியில் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்களும், சதி வலையில் சிக்குமா முஸ்லிம் சமுதாயம்? என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை தலைவர் சகோதரர் பர்சான் அவர்களும் வஹாபிஸம் தீவிரவாதமா? என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோதரர் ரஸ்மின் அவர்களும் உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த (05.04.2013) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பாதுகாப்பு அமைச்சில் இருந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தை சந்திப்பதற்காக வருகை தந்த அமைச்சின் உயர் அதிகாரிகள் தற்காலிகமாக நிகழ்ச்சியை நடத்துவதை நிறுத்தும் படி நிர்வாகத்தை வேண்டிக் கொண்டார்கள். சுமார் நான்கு மணி நேரங்கள் நடை பெற்ற இந்த சந்திப்பில் பேசிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி அவர்கள் சில செய்திகளை முன் வைத்தார்.
‘இந்நிகழ்ச்சி நடப்பதினால் சில விரும்பத் தகாத பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.”
‘இந்த நிகழ்சியை அதே இடத்தில் வேறு ஒரு நாளில் நடத்துவதற்கு நாங்கள் அனுமதி தருகின்றோம்.”
‘இன்றைக்கு இந்நிகழ்ச்சியை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்துங்கள்.’ என்று பாதுகாப்பு அதிகாரி கூறினார் அப்போது அவருடன் பேசிய ஜமாத் நிர்வாகிகள் “நாங்கள் எங்கள் ஜமாத் நிர்வாகத்துடன் பேசி முடிவெடுக்க வேண்டும். நாங்களாக எந்த முடிவையும் சொல்ல முடியாது மஷுரா செய்துவிட்டு சொல்கின்றோம்” என்று செய்தியை சொல்லி அனுப்பினார்கள்.
இன்று காலை கொழும்பு போலிஸ் தலைமையத்திற்கு சென்ற நமது நிர்வாகிகள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்து நடக்கவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பாக பேசினார்கள். அப்போது பேசிய போலிஸ் தலைமை அதிகாரி ‘இன்றைக்கு நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை நிறுத்துங்கள் கண்டிப்பாக அதே இடத்தில் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளில் நடத்துவதற்கு உங்களுக்கு கட்டாயம் அனுமதி தருகின்றோம்’ என்று வாக்குறுதியளித்தார்.
உடனடியாக கூடிய ஜமாத்தின் தலைமை நிர்வாகம் பாதுகாப்பு அதிகாரிகளின் கருத்துக்கினங்க இன்று நடக்கவிருக்கும் பொதுக் கூட்டத்தை வேறு ஒரு நாளில் நடத்துவதென்றும் அதே தலைப்புக்களை ஜமாத்தின் தலைமையத்தில் இன்றே நடத்துவதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதைத் தொடந்து இன்று மாலை சரியாக 6.45 க்கு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இனவாதம் பரப்பும் பொது பல சேனா மற்றும் அது போன்ற அமைப்புக்களின் குற்றச் சாட்டுக்களுக்கு பதில் சொல்லும் விதமாக நடத்தப்படவிருந்த இந்த நிகழ்ச்சி பொதுக் கூட்டம் தடை செய்யப்பட்டாலும் அதே நிகழ்ச்சி எவ்வித குறைபாடுகளும் இன்றி ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
sltj 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger