சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் பிற்பகலில் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டனர். இதனால் இன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்றது. காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முற்பகல் 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா முதலில் வாக்களிக்க பின்னர் அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். அவர்களுடன் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் இணைந்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக அணி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.
பின்னர் பிற்பகல் 1 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் திமுக வேட்பாளரை ஆதரிக்கும் மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணியவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். பிற்பகல் 1.45 மணியளவில் மொத்தமாக 231 எம்.எல்.ஏக்களும் வாக்களித்ததால் வாக்குப் பதிவு நிறைவு அடைந்தது.

Post a Comment