மழை


ஆக்கம் -மங்களம் மைந்தன் 

இந்த பிரபஞ்சம் சுயமாக உருவாகவில்லைஇதைப் படைத்து இயக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் எதிர்ப்படும் திசையெங்கும் இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்திற்கு உரிமையாளனாக
இருக்கும் இறைவனின் தனித்தன்மையைபேராற்றலைப் பறைச் சாற்றும் விதத்திலே பல வகையான படைப்புகள் வானங்களிலும் பூமியிலும் பரவிக்கிடக்கின்றன. இவ்வாறுஇறைவனை அறிய உதவும் அத்தாட்சிகளுள் முக்கியமான ஒன்றாக மழை இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இஸ்லாமிய மார்க்கம் மழை தொடர்பாக ஏராளமான பயனுள்ள செய்திகளை,முக்கியமான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கிறது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மழையுடன் இணைத்து மனித குலத்தின் நல்வாழ்விற்கு தேவையான பல்வேறான போதனைகள் அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன. இரவு பகல் விடாது தொடரும் மழை காலமாக இருந்தாலும்மழையே வராதாஎன்று எதிர்பார்ப்போடு கன்னத்தில் கைவைத்துக் காத்திருக்கும் காலமாக இருந்தாலும் இந்த மழைத் தொடர்பான செய்திகளை நம்பிக்கையாளர்கள் தவறாமல் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆகையால்மிகைத்தவனின் மகத்தான அருளாக இருக்கும் மழையைப் பற்றிய கருத்துக்களை இந்த கட்டுரையில் காண்போம்.
மழையில் மறைந்திருக்கும் சான்றுகள்
மழை நீரை சுமக்கும் மேகம் எப்படி உருவாகிறதுமேகத்தின் மடைகள் திறந்து எவ்வாறு மழை பொழிகிறதுஎங்கெல்லாம் மழை பொழிகிறதுமழை நீரின் தன்மை எப்படி இருக்கிறதுமழைநீர் பூமிக்கு வந்த பிறகு என்னவாக ஆகிறதுஎன்னென்ன விளைவுகள் மழையினால் ஏற்படுகின்றன?என்று பகுத்தறிவைக் கொண்டு ஆராய்பவர்களுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் சான்றுகள் மழையின் மூலம் முன்வைக்கபட்டுள்ளன. இவ்வாறுசிந்திச்சிதறும் மழைத்துளியைப் பற்றி சிறிதுநேரமாவது சிந்திக்க முன்வரும்போது மாசற்ற குறைகளற்ற இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அவனது மகத்துவத்தையும் நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆதலால்தான்மழையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இதிலே அறிவுடையோருக்கு சான்றுகள் இருக்கின்றன என்று இறைவன் பிரகடனப்படுத்துகிறான். அவனது கூற்று எந்தளவிற்கு மெய்யானது என்பதை மழையைப் பற்றி யோசிக்கும்போதும் படிக்கும் போதும்  நிச்சயமாக நாம் தெரிந்து கொள்ளலாம். இதோ இக்கருத்தை பிரதிபலி க்கும் சில இறைவசனங்களை இப்போது பார்ப்போம்.
வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும்இரவு பகல் மாறி மாறி வருவதிலும்,மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கட-லி ல் செல்லும் கப்பலி லும்அல்லாஹ் வானத்திலி -ருந்து இறக்கி வைக்கும் மழையிலும்பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும்,ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவவிட்டிருப்பதிலும்காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும்வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
(திருக்குர்ஆன் 2 : 164)
அவனே வானத்திலி -ருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. அதன் மூலம் பயிர்களையும்ஒலி வ மரம்பேரீச்சைதிராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.
(அல்குர்ஆன் 16 : 10)
அல்லாஹ்வே வானிலி ருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான். செவியுறும் சமுதாயத்துக்கு இதில் சான்று இருக்கிறது.
(திருக்குர்ஆன் 16 : 65)
அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்தி-லி ருந்து தண்ணீரை இறக்கிஅதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம். உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேயவிடுங்கள்! அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(திருக்குர்ஆன் 20 : 53, 54)
இரவு பகல் மாறி மாறி வருவதிலும்வானி-லி ருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும்பூமி வறண்ட பின் அதன் மூலம் உயிரூட்டுவதிலும்காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.
(திருக்குர்ஆன் 45 : 5)
மின்னலை அச்சமூட்டுவதாகவும்நம்பிக்கையூட்டுவதாகவும் உங்களுக்கு அவன் காட்டுவதும்,வானத்திலி ருந்து தண்ணீரை இறக்கிபூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. விளங்கக் கூடிய சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(திருக்குர்ஆன் 30 : 24)
இறைவனே மழையை தருகிறான்
விண்ணைத் தொடும் விஞ்ஞான வளர்ச்சியில் மனிதர்கள் இருந்தாலும் அவர்களால் மழையை உருவாக்கிக் கொண்டு வர இயலாது. சற்றும் தாமதிக்காமல் இன்று மனிதன் செயற்கை மழையை பொழிவிக்கிறானே என்று நீங்கள் கேள்வியை கேட்கலாம். ஒன்று திரண்டு இருக்கும் கனத்த மேகங்களின் மீது சில்வர் அயோடைடு என்ற பொடியை தூவி மழையை பொழிய வைக்கிறான் மனிதன். இது மட்டுமே சாத்தியம். இவ்வாறு செய்வது எப்படி இறைவன் செய்யும் காரியத்தை செய்யததாக ஆகும்எந்தவொன்றும் இல்லாத இடத்தில் மேகத்தை உருவாக்கி இறைவன் மழையை கொடுப்பது போல் மனிதனால் கொடுக்க இயலுமாஎன்றால் முடியாது என்பதுதான் உண்மை. மேகத்தை உருவாக்கி அதிலி ருந்து மழையைக் கொண்டு வரும் ஆற்றல் என்பது மனிதனுக்கு கிடையாது. இந்தத் தன்மை இறைவனுக்கு மட்டுமே இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயில் வீசும் நேரத்தில் திடீரென்று மழைமேகங்கள் திரண்டு மழைபொழிவதை நாம் பார்க்கத்தானே செய்கிறாம். இன்னும் சொல்வதெனில் இறைவன் நினைத்தால் மேகமே இல்லாமலும் மழையை கொடுக்க இயலும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலால்தான்திருமறையின் மூலமான இறைவன் நம்மிடம் பேசும் போதுநானே மழையை இறக்குகிறேன் என்றும்அது எனது அதிகாரம் என்றும் பல வசனங்களில் கூறுகிறான்.
வானிலி ருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையாக ஆவதையும் நீர் அறியவில்லையாஅல்லாஹ் நுட்பமானவன்நன்கறிந்தவன்.
(திருக்குர்ஆன் 22:63)
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும்வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலி -ருந்து தண்ணீரையும் இறக்கினான்.
(அல்குர்ஆன் 2 : 21)
அவனே வானிலி ருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம்.
(அல்குர்ஆன் 6 : 99)
வானத்திலி ருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.
(திருக்குர்ஆன் 23 : 18 )
மழையைத் தருவதற்கு தனிதெய்வமா?
மாரி இல்லாமல் காரியம் இல்லை என்று தமிழில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள். மாரி என்றால் மழை என்று பொருள். மழை பொழியாமல் இருந்தால் எந்தவொரு காரியமும் நடக்காது என்பதை அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். நம்மைப் படைத்து நாம் வாழ்வதற்கு தேவையானதைக் கொடுத்து நம்மைப் பரிபா-லி க்கும் இறைவனேஇந்த வையகத்தின் இயக்கத்திற்கு உயிர்நாடியாக இருக்கும் மழையைக் கொடுக்கிறான் என்பதை முதலி ல் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால்இதை விளங்காமல் தொட்டதற்கெல்லாம் தெய்வங்களை ஏற்படுத்தும் காண்பதெற்கெல்லாம் கடவுள்களை உருவாக்கும் மக்கள்இந்த மழைக்கென்றும் ஒரு கடவுளை மழையின் பெயரிலேயே மாரி என்று உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பது வேதனையாக இருக்கிறது. மழையைத் தரும் இறைவனை அறியாமல் அவனை மறந்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் இறைமறுப்பிலும் இணைவைப்பிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். வான்மழை தரும் படைத்தவனைப் புகழாமல் தங்களது கைகளால் படைக்கப்பட்ட போலி -யான தெய்வங்களை பாராட்டி துதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த பாரதூரமான மோசமான காரியத்தை இறைவன் கடுமையாக கண்டிக்கிறான்.
அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும்வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலி ருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலி ருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு  நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!
(அல்குர்ஆன் 2 : 21,22)
 (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையாஅல்லது) வானங்களையும் பூமியையும் படைத்து வானத்தி-லி ருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனாஅதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளாஇல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.
(திருக்குர்ஆன் 27 : 60)
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையாஅல்லது) படைப்பினங்களை முதலி -ல் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனாவானத்திலி ருந்தும்பூமியிலி ருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனாஅல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!
(திருக்குர்ஆன் 27 : 64)
தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலி ருந்து தூய்மையான தண்ணீரை இறக்கினோம்.
இறந்த ஊரை அதன் மூலம் நாம் உயிர்ப்பிப்பதற்காகவும்நாம் படைத்த கால் நடைகளுக்கும்,ஏராளமான மனிதர்களுக்கும் அதை நாம் புகட்டுவதற்காகவும் (மழையை இறக்கினோம்). அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம். மனிதர்களில் அதிகமானோர் (நம்மை) மறுப்போராகவே உள்ளனர்.
(திருக்குர்ஆன் 25 : 48 50)
"வானத்திலி ருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.                         (திருக்குர்ஆன் 29 : 63)
மழை உருவாகும் விதம்
பூமியிலுள்ள கடல்ஆறுகுளம் போன்ற நீர்நிலைகளில் இருக்கும் நீரானது சூரிய வெப்பத்தின் மூலமாக ஆவியாகி மேலே செல்கின்றது. இவ்வாறு மேலே செல்லும் நீராவிகள் ஒன்று சேர்ந்து மேகமாக மாறுகிறது. காற்றின் மூலமாக சிறிய மேகங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து பளுவான கருமேகக் கூட்டங்கள் உருவாகின்றன. இவ்வாறான நீர்த்திவலைகள் கொண்ட கனமான மேகங்களின் பக்கம் குளிர்ந்த காற்று வீசும் போது மேகத்தின் கட்டுடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் வலுவான புவிஈர்ப்பு விசையின் காரணமாக கனத்த மேகத்ததில் இருக்கும் நீர்த்துளிகள் பூமியை நோக்கி வெளிப்படுகின்றன. இதையே நாம் மழை என்கிறோம். இவ்வாறு மழை பொழியும் விதத்தை விஞ்ஞானத்தின் உதவியால் மனிதன் தெரிந்து கொண்டான். ஆனால்அறிவியல் வளர்ச்சியின் அடையாளமே இல்லாத அதாவது நுண்ணோக்கிகளோ சேட்டிலைட்டுகளோ இல்லாத காலத்திலேயே திருக்குர்ஆன் மழை பொழியும் விதத்தை மனிதர்களிடம் தெளிவாகப் பேசுகிறது. இதன் மூலம் இறைவனே திருக்குர்ஆனை கொடுத்துள்ளான் என்பதையும்அது உண்மையான இறைவேதம் என்பதையும்  நாம் விளங்கலாம். இப்போது மழை உருவாகும் விதத்தைப் பற்றிப் பேசும் வசனங்களைத் தெரிந்து கொள்வோம்.
அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும்பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா?
அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்!
(திருக்குர்ஆன் 24 : 43)
அச்சத்தையும்எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும்
அவன் உருவாக்குகிறான்.
(அல்குர்ஆன் 13 : 12)
அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர்.
(திருக்குர்ஆன் 30 : 48)
தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலி -ருந்து தூய்மையான தண்ணீரை இறக்
கினோம்.                          (25 : 48, 49, 50)
ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவவிட்டிருப்பதிலும்காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும்வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 2 : 164)
சூல் கொண்ட காற்றுகûளை அனுப்புகிறோம். அப்போது வானிலி ருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(அல்குர்ஆன் 15 : 21, 22)
படைத்தவனால் மட்டுமே தம்மால் படைக்கப்பட்டுள்ள பொருளின் தன்மையை முழுமையாக சரியாக சொல்ல முடியும். உதாரணமாக இறைவன் கொடுத்த அறிவை கொண்டு ஒரு மனிதன்,பொருளொன்றைக் கண்டுபிடிக்கிறான் என்றால் அவனால் மட்டுமே மற்றவர்களைக் காட்டிலும் அந்தப் பொருளின் இயக்கத்தைப் பற்றி முழுமையாக சரியாக சொல்ல முடியும். அதைப் பற்றிய அறிவை அவன் வெளிப்படுத்தாமல் இருந்தால் யாருக்கும் தெரியாது. மாறாகஅந்தப் பொருளைப் பார்த்துபரிசோதித்து அது சம்பந்தமாக அவனை விட அரைகுறையாகவே மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். இந்த விதத்திலே பார்த்தால்படைத்தவனால்
மட்டுமே படைப்பினத்தின் மொத்த ரகசியத்தையும் துல்லி யமாக சொல்லமுடியும். எனவேதான்,மழையை உருவாக்குவது மகத்துவம் மிகுந்த இறைவன் என்பதாலும் அந்த இறைவனின் வார்த்தைகளே குர்ஆன் என்பதாலும் குர்ஆனின் வசனங்கள் மழை பொழியும் விதத்தை சரியாக எடுத்துரைக்கின்றன.
மனிதர்களால் தடுக்க முடியாத மழை
மனிதர்கள் மழைமேகத்தை உருவாக்க இயலாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நுண்ணறிவு கொண்ட இறைவனின் தொழில்நுட்ப திறமையால் உருவாகும் மழையை வானத்திலேயே மனிதர்களால்  சேமித்து வைக்க இயலுமாஅல்லது அங்கேயே தடுத்து வைக்கமுடியுமாஅல்லது அகன்ற வான்வெளியில் மிதக்கும் கனத்த மேகங்களிலி ருந்து தண்ணீரை பூமியின் மேலே கொட்டவிடாமல் கடத்திச் செல்ல இவர்களால் இயலுமாஇவ்வாறு தடுக்கும் ஆற்றல் கூட மனிதனுக்கு இல்லை எனும் போது மழையை உருவாக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது எந்தளவிற்கு தவறு என்பதை நாம் புரிந்து வேண்டும். இவ்வாறு செய்வதற்கு சக்தியின்றி இருக்கும் மனிதகுலத்தை நோக்கி இறைவன் பேசும் வார்த்தைகளை கவனியுங்கள்.
எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம். சூல் கொண்ட காற்றுகûளை அனுப்புகிறோம். அப்போது வானி-லி ருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.
(அல்குர்ஆன் 15 : 21, 22)
வளரும் இன்ஷா அல்லாஹ்

நன்றி - தீன்குலப்பெண்மணி 2013 பிப்ரவரி 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger