திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் சூழ தலைமைச் செயலகம் சென்று கனிமொழி மனுத் தாக்கல் செய்தார்.
தமிழகத்தைச் சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் ராஜ்யசபா பதவிக்காலம் முடிவுக்கு வருவதையொட்டி, இப்போது தேர்தல் நடக்கிறது. அதிமுக 5 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கனிமொழி தற்போது மனு தாக்கல் செய்துள்ளார். சி பி ஐ யின் சார்பிலும் ஒரு வேட்பாளர் களமிறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தேர்தலில் வெற்றிபெற 34 வாக்குகள் தேவை. ஆனால் திமுகவிடம் 23 எல் எல் ஏக்கள்தான் உள்ளனர். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வெள்ளிக்கிழமை திமுக தலைவரை சந்தித்துப் பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு 5 வாக்குகள் உள்ளன.
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு கைதானவர்களின் கனிமொழியும் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment