ஆடையணிவதின் ஒழுக்கங்கள் (தொடர் : 1)

1.       ஆடையணிவதின் ஒழுக்கங்கள்

அல்லாஹ்வின் அருள்
يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) سورة الأعراف
ஆதமுடைய மக்களேஉங்கள் வெட்கத் தலங்களைமறைக்கும் ஆடையையும்அலங்காரத்தையும்உங்களுக்கு அருளியுள்ளோம். (இறைஅச்சம் எனும்ஆடையே சிறந்ததுஅவர்கள் சிந்திப்பதற்காக இதுஅல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.
                (அல்குர்ஆன் 7: 26)
 
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنْ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمْ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ(81) سورة النحل
வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும்போரில் உங்களைக் காக்கும் கவசஉடைகளையும் அவன் ஏற்படுத்தினான்நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன்தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81)

அழகிய ஆடை
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ  رواه مسلم
நபி (ஸல்அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர்சொர்க்கத்தில் நுழையமாட்டார்'' என்று கூறினார்கள்அப்போது ஒரு மனிதர், "தமது ஆடைஅழகாக இருக்க வேண்டும்தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர்விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார்அதற்கு நபி (ஸல்)அவர்கள், "அல்லாஹ் அழகானவன்அழகையே அவன் விரும்புகின்றான்தற்பெருமைஎன்பது (ஆணவத்தோடுஉண்மையை மறுப்பதும்மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)நூல் : முஸ்லிம் (147)

அழுக்கான ஆடையணியத் தடை
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ رواه أبو داود
நபி (ஸல்அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள்.அப்போது ''இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக்கொள்ளவில்லையா?'' என்று  கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),  நூல் : அபூதாவூத் (3540)
வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ رواه أبو دود
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும்உளூச் செய்யும் போதும்உங்களுடைய வலது புறங்களிலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுýரைரா (ரலி),  நூல் : அபூதாவூத் (3612)

புத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ رواه الترمذي
நபி (ஸல்அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகைசட்டை என்று அந்த ஆடையின்பெயரைக் கூறி பிறகு '' அல்லாஹுýம்ம லகல் ஹம்துஅன்த கஸவ்தனீஹிஅஸ் அலுகஹைரகு வஹைர மாஸுýனிஅ லஹுý.  அவூது பிக மின் ஷர்ரிஹி  ஷர்ரி மாஸுýனிஅலஹுý'' என்று கூறுவார்கள்.
பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும்.இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும்உன்னிடம் நான் கேட்கிறேன்இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோஅதனுடைய தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி),  நூல் : திர்மிதீ (1689)

நன்றி - அப்துந்நாஸிர்
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger