புதுடெல்லி: முதலுதவிக்காக குறுகலான பகுதிக்குள்ளும் செல்லும் வகையில் இரு சக்கர ஆம்புலன்ஸ் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்நேரம்
விபத்தில் சிக்கும் மக்களுக்கு முதலுதவி உடனடியாகக் கிடைப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க. குறிப்பாக, ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக முடியாத சிறிய சந்துகளாகவோ, கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களாகவோ இருந்தால் நோயாளியை உடனடியாகக் கவனித்து முதலுதவி செய்ய வசதியாக மத்திய அரசு விரைவில் நான்கு விதமான ஆம்புலன்ஸ் வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி இரு சக்கர ஆம்புலன்ஸில் செல்லும் மருத்துவ ஊழியர்கள் விபத்தில் சிக்கியவருக்கு தேவையான முதலுதவிகளை அளிப்பார்கள். முதல் வகையான இந்த சேவைக்குப் பின்னர், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வாகனங்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் கூடிய வாகனங்கள், மேம்பட்ட மருத்துவ வசத்திகளுடன் கூடிய வாகனங்கள் என நான்கு வகையாக இவை பிரிக்கப்பட்டிருக்கும்.
தற்போது செயல்படும், ஆம்புலன்சுகளில் பெரும்பாலும் தேவையான முதலுதவி கருவிகள் இல்லை. இதிலிருந்து மாறுபட்டு தேசீய ஆம்புலன்ஸ் விதிமுறைகளின்படி இவை வெண்மை நிறத்தில், உருக்குலைந்து போகாத தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.ந்து விரைவில் சேவைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற ஆம்புலன்ஸ் வசதியின் மூலம் மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Post a Comment