எண்ணெய் வளம் கொழிக்கும் கத்தாரில் தான் கோடீஸ்வரர்கள் அதிகமாம்!

துபாய்: கோடீஸ்வரர்கள் அதிகமாக வாழும் நாடு கத்தார் என சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட கத்தார் குடிமக்களில் 14.3 சதவீதத்தினர் கோடீஸ்வரர்களாம். 

செல்வந்தர்களிடமே மென்மேலும் செல்வம் கொழிக்கும் என்பதை நிரூபிக்கிறது இந்த ஆய்வறிக்கை. உலக நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது பாஸ்டன் ஆலோசனைக் குழு. 

இதில், சராசரியாக கத்தாரில் வாழ்பவர்களில் ஆயிரத்தில் 143 பேர், பொதுவாக ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துடையவர்கள் என தெரிய வந்துள்ளது. இது மற்ற நாடுகளின் செல்வந்தர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் அதிகமாகும். 


இருமடங்கு வளர்ச்சி : 



மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் செல்வந்தர்களின் வளர்ச்சி சென்ற ஆண்டில் மட்டும் 9.1 என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளதாம். இது 2012 ஆண்டை ஒப்பிடும்பொழுது இருமடங்கு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.




எண்ணெய் வளமே காரணம் : 


மேலும் இது, 2017க்குள் 6.5 டிரில்லியன் டாலராக உயரக் கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக அமையப் போவது அங்குள்ள எண்ணெய் வளம் என அறிக்கை தெளிவு படுத்தியுள்ளது.

மற்ற கோடீஸ்வர நாடுகள் : 

அதிக கோடீஸ்வரர்கள் வாழும் மற்ற அரபு நாடுகளில், குவைத் 11.5 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், பஹ்ரைன் 4.9 சதவீதத்துடன் ஏழாவது இடத்திலும் , ஐக்கிய அரபுக் குடியரசு 4 சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்திலும் இருக்கிறது.

பாஸ்டன் ஆலோசனைக்குழு : 


இது பாஸ்டன் ஆலோசனைக் குழுவின் 13வது அறிக்கை. பாஸ்டன் ஆலோசனைக் குழு உலக் அளவில் வியாபார உத்திகளுக்கும், நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger