காரைக்கால்: இந்திய கடல் எல்லையில் கடலோர காவல்படை தீவிர ரோந்தில் உள்ளது. எனவே மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் மீன்பிடிக்க வேண்டும், மீறினால் மாவட்ட கலெக்டருக்கு புகார் தரப்படும் என காரைக்கால் கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தை மையமாக கொண்டு இயங்கி வரும், காரைக்கால் கடலோர காவல்படை சார்பில், திரு-பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடலோர காவல்படையின் விழிப்புணர்வு கூட்டம், கமாண்டன்ட் உதல்சிங் உத்தரவின்பேரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த உதவி கமாண்டன்ட் குரூப்தீப்சிங், ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் மீனவர்களிடையே பேசியதாவது:
"காரைக்கால், நாகப்பட்டினத்திலிருந்து 55 நாட்டிக்கல் மைல் தூரமும், கோடியக்கரையிலிருந்து 15 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய கடல்பரப்பில் கடலோர காவல் படையின் தீவிர ரோந்துப்பணி திங்கட்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நவீன தொலிநோக்கி கருவி மூலம் காரைக்கால், நாகப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை கண்காணித்து வருகிறோம். இந்திய கடல் எல்லையை தெரியாமல் அல்லது இலங்கை எல்லையில் மீன் பிடிக்கும் ஆசையில் மீனவர்கள் எல்லை தாண்டும் போது, அவர்களை தடுத்து திருப்பி அனுப்புகிறோம். தொடர்ந்து எல்லையை கடந்தால் படகின் எண் மீனவர்கள் பெயர்களை சேகரித்து, மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறைக்கு புகார் தெரிவிக்கப்படும். எனவே, கடல் எல்லையை தாண்டாமல் மீன்பிடிக்க வேண்டும்.
இந்த ரோந்தின் மூலம் இலங்கை மீனவர்கள் மற்றும் அந்நியர்கள் இந்திய எல்லையை தாண்டாமல் கண்காணிக்க பெரும் உதவியாக இருக்கும். வருமானத்திற்கு ஆசைப்பட்டு இலங்கை எல்லைக்கு செல்வதும், ஆஸ்திரேலியாவிற்கு ஆட்கள் கடத்துவதும் சட்டப்படி குற்றமாகும், படகில் அதிகப்படியான் எரிபொருள், இரட்டைமடி வலை பயன்படுத்துவதும் குற்றமாகும். படகில் கண்டிப்பாக இந்திய தேசியக்கொடி, அடையாள அட்டை, உயிர்காக்கும் கருவிகள், மருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும்" என்றார்.
கூட்டத்தில், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment