மாணவிகள் குட்டை பாவாடை அணிய தடைவிதிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.எல்.ஏ. யோசனை! இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள்:
இஸ்லாம் கூறும் பர்தா முறை என்பது பெண்களை இழிவுபடுத்துகின்றது; பெண்களை இஸ்லாம் பர்தா அணியச் சொல்லி அடிமைப்படுத்துகின்றது என்று சொல்லி இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் தற்போது நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளின் வாயிலாகவும் பெண்களுடைய பாதுகாப்பிற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள்தான் சரியானது என்பதை உலகமே உணர ஆரம்பித்துள்ளது.
பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் இந்தியா முழுவதுமுள்ள அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களைப்போல பர்தா அணிய வேண்டும்; அதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று மதுரை ஆதினம் கூறிய கருத்துக்கள் குறித்து இந்த வார உணர்வலைகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்.
எதிரிகள் மூலம் வலுப்பெறும் இஸ்லாம்:
அதேபோல இதேபோன்றதொரு கருத்தை இஸ்லாத்தை எதிர்க்கக்கூடிய மதவாத கட்சியான பி.ஜே.பி.யின் எம்.எல்.ஏ கூறியுள்ளார். இஸ்லாத்தை எதிர்க்கும் எதிரிகளைக் கொண்டும் வல்ல ரஹ்மான் இந்த மார்க்கத்தை வலுப்படுத்துவான் என்ற நபிகளாரின் முன்னறிவிப்பை உண்மைப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குட்டைப் பாவடைக்கு தடை கோரிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.:
தனியார் பள்ளிகளில், மாணவிகளுக்கு, குட்டைப் பாவாடையை, சீருடையாக வைத்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல்களுக்கு, வழி வகுக்கும் இதுபோன்ற உடைகளுக்கு, தடை விதிக்க வேண்டும்' என, ராஜஸ்தான் பா.ஜ.க - எம்.எல்.ஏ., பன்வாரி லால் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ராஜஸ்தான், அல்வார் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான, பா.ஜ.க.வைச் சேர்ந்த, பன்வாரி லால் சிங், அம்மாநில தலைமைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:
பெரும்பாலான, தனியார் பள்ளிகளில், மாணவியருக்கான சீருடைகள், சற்றும் பொருத்தமற்றதாக உள்ளன.
மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வர வேண்டும்' என, வற்புறுத்துகின்றனர். அத்துடன், குட்டைப் பாவாடையை சீருடையாகவும், பல்வேறு பள்ளிகளும், அங்கீகரித்துள்ளன. இதற்கு தடை விதிக்க வேண்டும்.
மாணவியர், குட்டைப் பாவாடை அணிந்து வருவது, பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கும், கேலி, கிண்டல்களுக்கும், வழி வகுத்து, ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
பள்ளிகளுக்கு நடந்து செல்லும்போதும், பஸ் ஏறுவதற்காக, பஸ் ஸ்டாப்புகளில், காத்திருக்கும்போதும், குட்டைப் பாவாடை அணிந்துள்ள மாணவியர், பலரின், கேலி, கிண்டல்களுக்கு ஆளாகின்றனர்.
ஜெய்ப்பூரை பொறுத்தவரை, பெரும்பாலான பள்ளிகளின், சீருடை, குட்டைப் பாவாடையாகத்தான் உள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும், தற்போதைய சூழலில், இந்த உடை, சற்றும் பொருத்தமற்றது. குட்டைப் பாவாடைக்கு பதிலாக, வேறு நல்ல உடையை பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில், பன்வாரி லால் சிங், வலியுறுத்தியுள்ளார்.
குட்டை பாவாடை அணிந்தால் 6மாதம் சிறைத் தண்டனை:
ஆப்பிரிக்காவில் குட்டை பாவாடை அணியத்தடை :
ஆப்பிரிக்கா கண்டத்தில் சுவாசிலாந்து என்ற குட்டி நாடு உள்ளது. இது சுமார் 200 கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு இன்னும் மன்னராட்சி நடக்கிறது.
இந்த நாட்டில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்ததால் அதற்குரிய காரணம் ஆராயப்பட்டது.
பெண்கள் குட்டை பாவடை அணிவதால்தான், ஆண்களின் பார்வை பெண்களிடம் திரும்பி, கற்பழிப்பு குற்றங்கள் அதிகரிப்பதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி எச்லீட்டா கூறியதாவது:
ஸ்வாசிலாந்தில் பெண்கள் இனி குட்டை பாவடை அணியக்கூடாது. மீறி அணிந்தால் அவர்களுக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
இங்கு பெண்கள் குட்டை பாவாடை (மினி ஸ்கர்ட்) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கழுத்து இறக்கமான மேல் சட்டை அணியவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆடை அணிவதால் ஆண்களுக்கு சபலம் ஏற்பட்டு கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே அவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை மீறி குட்டை பாவாடை அணியும் பெண்களுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் நாட்டின் பாரம்பரிய விழாக்களின்போது நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் குட்டை பாவாடை அணிய அனுமதி வழங்கி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விழாக்காலங்களில்தான் அதிகமான சேட்டைகள் நடைபெறும் என்பதையும் அவர்கள் கூடிய விரைவில் உணர்ந்து அந்த விதிவிலக்கையும் மாற்றிக் கொள்வார்கள்.
ஆடை விஷயத்தில் பெண்களுக்கு கட்டுப்பாடு தேவை என்ற இந்த கருத்தை இவர்கள் மட்டும் சொல்லவில்லை. இதோ இந்த கருத்தை வலியுறுத்துவோரின் பட்டியல்:
தமிழகத்தில்....
ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சுற்றறிக்கை:
மாணவியரையும், மாணவர்களையும் பாதிக்கும் வகையிலான உடைகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் அணியக் கூடாது. அது பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துக்களை ஏற்படுத்த வழி வகுத்து விடும் என்று ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சில மாதங்களுக்கு முன்பு சுற்றறிக்கை அனுப்பியது.
மணிப்பூரில்....
மாணவ அமைப்புகள் எடுத்த முடிவு :
மணிப்பூர் மாநிலத்தில் பாதம் வரை அணியப்படும் பானெக் என்கிற பாரம்பரிய உடையைத்தான் மாணவிகள் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு அணிந்து வர வேண்டும். முழங்கால் தெரியும்படி வடிவமைக்கப்பட்ட எந்தப் பள்ளி, கல்லூரி சீருடையையும் ஏற்க இயலாது என்று மாணவர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்திருந்தது. தங்களது உடலை முழுமையாக மறைக்கக்கூடிய ஆடைகளைத்தான் மாணவிகள் அணிய வேண்டும் என்று அங்குள்ள மாணவர் அமைப்புகள் மாணவிகளுக்கு உத்தரவிட்டன.
மத்திய பிரதேசத்தில்....
மாநில அமைச்சரின் கருத்து:
கடந்த ஜுலை மாதம் குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு சிறுமியை நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் உடைகள் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் வகையில் உள்ளன. இதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
உத்தர பிரதேசத்தில் ....
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சொன்ன உண்மை:
கொல்கத்தா புறநகரில் அமைந்துள்ள பரசாத் ரெயில் நிலையத்தில் 18 வயது மாணவி ஒருவர் மானபங்கம் செய்யப்பட்டார். 10 பேர் கொண்ட கும்பல் இந்த செயலைச் செய்தது.
இது குறித்து கருத்துச் சொன்ன திரிணாமுல் காங்கிரஸின் எம்.எல்.ஏ.சிரஞ்ஜித் அந்த சம்பவத்தைக் கண்டித்தார். அதே சமயத்தில் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது. இளம் பெண்களும், மாணவிகளும் நாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக ஆடை அணிகின்றனர். இதுதான் இளைஞர்களை தவறு செய்யத் தூண்டுகிறது. பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அவசியம். மினி ஸ்கர்ட், அங்கங்களை ஆபாசமாக வெளிப்படுத்தும் உடைகளை அணிவதை பெண்கள், மாணவிகள் தவிர்க்க வேண்டும். என்று அவர் கூறினார்.
ஸ்ரீலங்காவில்....
அரைகுறை ஆடைகளை அணியும் பெண்களே பாலியல் வன்முறைக்கு காரணம். எங்களது நாட்டு பெண்களைப் பாருங்கள். ஒன்று கைகள் இல்லாத அல்லது மிகவும் குட்டையான ஆடைகளை அணிகின்றனர். இதனால்தான் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன என ஸ்ரீலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்தார்” .
இங்கிலாந்தில்....
பிரிட்டனின் லண்டன் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளியில் மாணவியர் தொடை தெரியும் அளவுக்கு பாவாடைகளை அணிந்து வருவது அதிகப்படியான கவர்ச்சியாக உள்ளது. இதனால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகலாம் என்பதால் குட்டை பாவாடையை ரத்து செய்துள்ளோம் என்று அந்த பள்ளிக்கூட நிர்வாகம் அறிவித்தது.
மதுரை ஆதினம் முதற்கொண்டு பி.ஜே.பி வரை, ஸ்ரீலங்கா தொடங்கி லண்டன் வரை இஸ்லாம் கூறும் நிலைப்பாட்டை நோக்கி வருகின்றார்கள் என்றால் இந்த பிரச்சனைக்கு மட்டுமல்ல; உலகில் மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் கூறும் தீர்வுகள்தான் சரியானவை என்பதை இனி இந்த உலகத்தில் மறுக்க எவரும் உண்டோ!
இவர்கள் இப்பொழுது சொல்லும் இந்த செய்தியை 1400 ஆண்டுகளுக்கு முன்பாக வல்ல இறைவன் தனது திருமறையில் கூறிக்காட்டுகின்றான்:
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்-ஆன் 33 : 59
05.01.2013.
நன்றி - onlinepj.com
Post a Comment