சவூதி அரேபியா: சுகாதாரமில்லாமல் உணவு விற்ற குற்றத்திற்காக தம்தாய்க்கே தண்டனை விதித்த சவூதி அதிகாரிக்கு ஆதரவாக பாராட்டுகள் குவிகின்றன.
வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரிலுள்ள உணவு விடுதி ஒன்றில் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், தமக்குப் பரிமாறப்பட்ட சாண்ட்விச்சில் செத்த ஈ கிடந்ததைக் கண்டு திகைப்படைந்து நகராட்சி அதிகாரிகளிடம் அந்த உணவு விடுதிக்கு எதிராக புகாரளித்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த உணவு விடுதியில் சோதனை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, அங்குச் சுகாதாரமில்லாமல் உணவு தயாரிக்கப்படுவதை நேரில் கண்டதைத் தொடர்ந்து சவூதி சட்டப்படி அவ்வுணவகத்தின் உரிமையாளரான தம் தாய்க்கு மிகப்பெரிய தொகை ஒன்றை அபராதமாக விதித்தார்.
விடுதியின் உரிமையாளர் தம் தாய் என்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்த ஜமால் அல் எனேசியின் செயல் கேள்விப்பட்ட அவிக்கிலா நகர மேயர், ஜமால் அல் எனேசியை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
விடுதியின் உரிமையாளர் தம் தாய் என்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்த ஜமால் அல் எனேசியின் செயல் கேள்விப்பட்ட அவிக்கிலா நகர மேயர், ஜமால் அல் எனேசியை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் ஜமால் அல் எனேசிக்கு ஆதரவாக பாராட்டுகள் குவிகின்றன.
நீதி வழங்குவது பற்றி இஸ்லாம் கூருவது :-
இதிலென்ன அதிசயம்? ஒரு உண்மையான முஸ்லிமாக இஸ்லாத்தின் சட்டத்தினை அவர் கடைபிடித்துள்ளார். அவர் மீது அல்லாஹ் அருள் புரியட்டும். இவரை போல் எத்தனையோ பேர் நமக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தன் தாய்க்கு எதிராக அல்ல - தனக்கே எதிராக இருந்தாலும் நீதியின் மீது நிலைத்திருக்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. இது தான் இஸ்லாம். இதன் சட்டங்கள் தான் இவ்வுலகிற்கு என்றென்றும் தேவை. இச்சட்டங்கள் மிகச் சரியாக இவ்வுலகில் நிலை நிறுத்தப்படும் போது எங்காவது அநீதி நடந்து விட முடியுமா? உலகம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும்.
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு சக்தியுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:135)

நன்றி - இந்நேரம்
மற்றும் கருத்து தெரிவித்த இராஜகிரியார்
Post a Comment