இஸ்ரேல் ஆர்ப்பாட்டம் வாபஸ் ஏன்

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. அப்படியானால் அங்கு இறந்த அப்பாவி குழந்தைகள், பொதுமக்களின் உயிர்களுக்கு என்ன பதில்?


மசூது, கடையநல்லூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதுபோன்ற விஷயத்தில் கொள்கை முடிவை எடுத்து வைத்து அதன்படி செயல்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களுக்காக போராட்டம் நடத்தும்போது பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப போராட்டம் நடத்துவது என்பதுதான் அந்தக் கொள்கை முடிவாகும்.

ஒரு ஊரில் தவ்ஹீத் சகோதரர்களை மாற்றுக் கருத்துடையவர்கள் தாக்கும்போது இதை மன்னித்துவிட்டதாக தாக்கப்பட்டவர்கள் கூறினால் தலைமை அவர்களுக்காக போராட்டம் நடத்தாது. நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள்தான் அதன் சாதகபாதகங்களை நன்கு அறிந்தவர்கள். நாங்கள் சமரசமாகிவிட்டோம் எந்தப் போராட்டமும் தேவையில்லை எனக் கூறினால் அதை ஏற்றுக் கொள்வதுதான் மாநில நிர்வாகத்தின் கொள்கையாக உள்ளது.

இது போல் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாத மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள் தலையிட்டு பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று கேட்டாலோ, நாங்கள் எங்களுக்குள் சமாதானமாகி விட்டோம் என்று கூறினாலோ களத்தில் இறங்குவதில்லை என்பதையும் கொள்கையாகக் கொண்டுள்ளோம்.

இப்படி நடந்து கொள்வதால் நம் மக்கள் தாக்கப்பட்டதை நியாயப்படுத்துகிறோம் என்று ஆகாது.

பாலஸ்தீனத்தில் கொல்லப்பட்ட குழந்தைகளும், பொதுமக்களும் அப்பாவிகள் என்பதாலும், முஸ்லிம்கள் என்பதாலும் அவர்கள் விஷயத்தில் நமக்கு உரிமை உள்ளது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் பாலஸ்தீன் மக்களைப் பொறுத்தவரை இரத்த சம்பந்தம் உள்ளவர்கள். நம்மை விட கூடுதல் உரிமை அவர்களுக்கு உள்ளது. நம்மைவிட கூடுதல் பாதிப்பு அவர்களுக்கு உண்டு.

நம்மை விட அதிக பாதிப்புக்கு உள்ளான மக்களே சமரச உடன்பாட்டுக்கு வருகிறார்கள் என்றால், அதுதான் தங்களுக்கு நல்லது என்று கருதித்தான் இந்த முடிவுக்கு வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அந்த மக்கள் ஒரு உடன்படிக்கைக்கு வந்தபின் மற்றவர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாற்றமாக களம் இறங்குவது நியாயமாகாது.

இப்படி களம் இறங்காததால் இஸ்ரேலின் அராஜகத்தை நாம் நியாயப்படுத்துவது என்று ஆகாது. அவர்களை ஆதரிக்கிறோம் என்றும் ஆகாது.

சமாதானம் ஏற்படும் போது இரு தரப்பும் சில விஷயங்களை விட்டுக் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். அதை மதித்து நடப்பதுதான் மற்றவர்களின் கடமை. அந்த அடிப்படையில்தான் அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ் பெறபட்டது.

அனைவர் விஷயத்திலும் நம் ஜமாஅத் கடைபிடித்துவரும் கொள்கையின் அடிப்படையில்தான் இம்முடிவு எடுக்கப்பட்டது.
04.12.2012. 22:59
நன்றி - onlinepj.com 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger