திருமறைக் குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை
அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் உணர
முடியும்.
இறை மறுப்பு போலி என்பதற்கு, இறைநம்பிக்கையே உறுதி
இறை மறுப்பு போலி என்பதற்கு, இறைநம்பிக்கையே உறுதி
என்பதற்கு, நேற்று வரை இறைமறுப்புக் கொள்கையில் பெரியார்தாசனாய் இருந்து இன்று
இறைநேசனாக (முஸ்லிமாக) மாறிக் கொண்ட சகோ: அப்துல்லாஹ் அவர்கள் ஒரு
எடுத்துக்காட்டாகும்.
இதற்கு முன்னர் பல மத வேத கிரங்தங்களை பார்வையிட்டவர் இறுதியாகவே திருக்குர்ஆனை
ஆய்வு செய்து இதையே கடவுள் வார்த்தையாக உணருகிறேன் என்றும் 14 நூற்றாண்டுகளாகியும்
இன்றுவரை அது மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன் இருப்பது
இது கடவுள் வார்த்தைகள் தான் எனும் எனது நம்;பிக்கையை இன்னும்
வலுப்படுத்துகிறது என்றுக் கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ரியாத்தின்
பிரபல அரப்டைம்ஸ் நாளேட்டிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அல்லாஹ் பெரியவன்,
அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். http://arabnews.com/saudiarabia/article29180.ece
இதுபோன்றே நீரோட்டம் அடியார் அவர்கள் அவருடைய சிறை வாழ்க்கையில் அனைத்து
மதவேத கிரந்தங்களையும் படித்து விட்டு இறுதியாகவே திருக்குர்ஆனையும், அதன்
மெஸேஞ்சர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றையும்
படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றதாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜியாவுல் ஹக்
அவர்களின் ஏற்பாட்டில் பாகிஸ்தானில் நடைபெற்ற அவர் எழுதிய இஸ்லாம் என் காதல்
எனும் நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்.
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தன் தந்தையாருடன் திவ்ய பிரபந்த பாசுரங்களை படித்து
ஆய்வு செய்து கொண்டிருக்கையில் திருக்குர்ஆனையும் படித்தால் என்ன ? என்ற சிந்தனை
மேலிட திருக்குர்ஆனைப் படித்து விட்டு சுஜாதா அவர்கள் கூறிய வாசகங்கள்
திருமறைக்குர்ஆன் மனித வார்த்தைகள் அல்ல என்பதை அதன் மொழியியல் முறைமையை
(Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் உணர முடியும் என்றுக் கூறினார். திணமனி
ரம்ஜான் மலர் 2003.
உலகின் 100 தலைவர்களின் சாதனைகளை எழுதிய மைக்கேல் ஹார்ட் அவர்கள்
திருமறைக் குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றையும், படித்து
ஆய்வு செய்தப் பின்னர் ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் வெற்றி அடைந்தவர்
முஹம்மதைத் தவிர உலகில்; வேறு எவருரையும் நான் கண்டதில்லை என்றும்,
14 நூற்றாண்டுகளாகியும் இன்றுவரை திருமறைக் குர்ஆனும், முஹம்மது நபி(ஸல்)
அவர்களின் தூய வாழ்க்கை வரலாறும் சிறுதும் மாற்றம் செய்யப்படாமல் அதேப் பொலிவுடன்
இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்ததாகக் கூறி அண்ணலார் அவர்களை
சாதனையாளர்களில் வரிசையில் முதலில் இடம் பெறச் செய்ததற்கு இதுவே காரணம்
என்றும் அவருடைய வாசகர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மைக்கேல் ஹார்ட் த ஹண்ட்ரட் நியூயார்க் ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி 1978 பக்கம் 33.
வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
திருமறைக குர்ஆனை கவனமாகப் படித்து ஆய்வு செய்தவர்கள் திருமறைக்குர்ஆனை இது
கடவுள் வார்த்தைகள் அல்லாமல் மனித வார்த்தைகள் அல்ல என்றே இதுவரைக் கூறி
வந்துள்ளனர். இன்று சிலர் திருமறைக்குர்ஆனைப் படிக்காமல், அதை ஆய்வு செய்யாமல்
அவர்களின் தலைவர்கள், மதபோதகர்கள் மேடையில் முழங்குகின்ற, அவர்களின்
பத்திரிகைகளில் எழுதுகின்றவைகளைப் படித்தும், கேட்டும் திருமறைக் குர்ஆனிpன் மீது
தவறான அபிப்பிராயம்; கொள்கின்றனர், விமர்சிக்கின்றனர் என்பதற்கு திராவிடர்
கழகத்தினருடன் ( டாக்டர் எழிலன் உட்பட ) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள்
நடத்திய விவாதம் ஒருப்பெரிய எடுத்துக்காட்டாகும். As received.
நன்றி - த்வ்ஹீத் முழக்கம்
Post a Comment