Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label சவூதி. Show all posts
Showing posts with label சவூதி. Show all posts

தாய்க்கே தண்டனை விதித்த நீதிமான்!


தாய்க்கே தண்டனை விதித்த நீதிமான்!சவூதி அரேபியா: சுகாதாரமில்லாமல் உணவு விற்ற குற்றத்திற்காக தம்தாய்க்கே தண்டனை விதித்த சவூதி அதிகாரிக்கு ஆதரவாக பாராட்டுகள் குவிகின்றன.

வடக்கு சவூதி அரேபியாவில் உள்ள அவிக்கிலா நகரிலுள்ள உணவு விடுதி ஒன்றில் சாப்பிடச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், தமக்குப் பரிமாறப்பட்ட சாண்ட்விச்சில் செத்த ஈ கிடந்ததைக் கண்டு திகைப்படைந்து நகராட்சி அதிகாரிகளிடம் அந்த உணவு விடுதிக்கு எதிராக புகாரளித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த உணவு விடுதியில் சோதனை நடத்திய நகராட்சி தலைமை அதிகாரி ஜமால் அல் எனேசி, அங்குச் சுகாதாரமில்லாமல் உணவு தயாரிக்கப்படுவதை நேரில் கண்டதைத் தொடர்ந்து சவூதி சட்டப்படி அவ்வுணவகத்தின் உரிமையாளரான தம் தாய்க்கு மிகப்பெரிய தொகை ஒன்றை அபராதமாக விதித்தார்.

விடுதியின் உரிமையாளர் தம் தாய் என்றாலும் சட்டப்படி நடவடிக்கை எடுத்த ஜமால் அல் எனேசியின் செயல் கேள்விப்பட்ட அவிக்கிலா நகர மேயர், ஜமால் அல் எனேசியை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

இத்தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஃபேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு மட்டங்களிலும் ஜமால் அல் எனேசிக்கு ஆதரவாக பாராட்டுகள் குவிகின்றன.

நீதி வழங்குவது பற்றி இஸ்லாம் கூருவது :-

இதிலென்ன அதிசயம்? ஒரு உண்மையான முஸ்லிமாக இஸ்லாத்தின் சட்டத்தினை அவர் கடைபிடித்துள்ளார். அவர் மீது அல்லாஹ் அருள் புரியட்டும். இவரை போல் எத்தனையோ பேர் நமக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தன் தாய்க்கு எதிராக அல்ல - தனக்கே எதிராக இருந்தாலும் நீதியின் மீது நிலைத்திருக்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. இது தான் இஸ்லாம். இதன் சட்டங்கள் தான் இவ்வுலகிற்கு என்றென்றும் தேவை. இச்சட்டங்கள் மிகச் சரியாக இவ்வுலகில் நிலை நிறுத்தப்படும் போது எங்காவது அநீதி நடந்து விட முடியுமா? உலகம் எவ்வளவு சுபிட்சமாக இருக்கும்.

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு சக்தியுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். (அல் குர்ஆன் 4:135)

நன்றி - இந்நேரம் 
மற்றும் கருத்து தெரிவித்த இராஜகிரியார்


0 comments

ரியாத் மண்டல பொதுக்குழு , புதிய மண்டல நிர்வாகிகள் தேர்வு!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலப் பொதுக்குழு கடந்த 10.05.2013 வெள்ளிக்கிழமை அன்று மண்டலப் பொறுப்பாளர் சகோ. அமீர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தாயகத்திலிருந்து வருகை புரிந்திருந்த மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் தேர்தல் அதிகாரியாக மாநிலத்தலைமை மூலம் நியமிக்கப்பட்டிருந்தார்கள், ஜீம்ஆ முடிந்த உடன் மதிய உணவிற்கு பிறகு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் துவக்கவுரையாக மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள், “இக்லாஸ்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து, M.S. சுலைமான் அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடும், நிர்வாகிகளின் பண்புகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன் பிறகு, மண்டலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, மக்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கீழ்காணும் சகோதரர்களை ரியாத் மண்டல நிர்வாகிகளாக ஓட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுத்தனர்.
1. தலைவர்: அரசூர் ஃபாரூக் – அரசூர், நாகை மாவட்டம், அலைபேசி: 00966-565614030

2. செயலாளர்: அப்துர் ரஹ்மான் நவ்லக் – செங்கம், திருவண்ணாமலை மாவட்டம், அலைபேசி: 00966-509181890

3. பொருளாளர்: நூருல் அமீன் – ரெகுநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம், அலைபேசி: 00966-507292857

4. துணைத் தலைவர்: முஹம்மது மாஹின் – நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், அலைபேசி: 00966-542540860
5. துணைச் செயலாளர்: சோழபுரம் ஹாஜா -சோழபுரம் – தஞ்சை மாவட்டம், அலைபேசி: 00966-540237175

6. துணைச் செயலாளர் (1): T. நெய்னா முஹம்மது -முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம், அலைபேசி: 00966-552104970

7. துணைச் செயலாளர் (2): முஹம்மது ஷாகிர் – விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், அலைபேசி: 00966-507946557
நன்றி - tntj.net 
0 comments

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட திடீர் மழை, வெள்ளத்திற்கு 17 பேர் பலி


சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் இளவரசர் முஹம்மத் பின் நய்ஃப் இத்தகவலை சவூதி ஊடகக் குழுமத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சவூதி ஊடகக் குழுமம் (SPA)  குறிப்புப்படி, இதுவரை மழை வெள்ளத்திற்கு 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும்  மூவரைக் காணவில்லை. கடுமையான மழைப் பொழிவு கண்ட ரியாத், அல்பாஹா, ஹைல் வட்டாரங்களில் இந்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தளவு மழை வெள்ளப்பெருக்கு கடந்த 25 வருடங்களில் காணப்படாத ஒன்று என்று சவூதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

அல்லஹ்யான் பள்ளத்தாக்கில் 4 X 4 வாகனம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இறப்பைத் தழுவினர். கடந்த வார செவ்வாய் முதல் இவ்வார புதன் இரவு வரை பெய்த மழை காரணமாக, பொதுமக்களிடமிருந்து சுமார் 5,000 முறையீடுகள் வந்துள்ளனவென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிமைப் பாதுகாப்புப் படை வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றில் புகுந்த வெள்ளத்தினின்றும் சுமார் 937 பேரை காப்பாற்றியுள்ளனர் என்றும், சுமார் 695 குடும்பங்களுக்கு இருப்பிட வசதி செய்தளித்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது

நன்றி - இந்நேரம் 

0 comments

சவூதியில் பிஜே! (வீடியோ)



பிஜே அவர்கள் உம்ரா செய்ய தான் சவூதி சென்றார். எனவே, அவரது பயணம் பற்றி எந்த அறிவிப்பும் செய்யவில்லை. சவூதி அரேபியாவில் தவ்ஹீத் ஜமாஅத் எந்தவித தடையுமின்றி செயல்பட்டு வருகிறது. சகோதரர் பிஜே மற்றும் அல்தாஃபி, தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு சவூதி மண்டல நிர்வாகிகளை சந்தித்தனர். மேலும், அல்கஸீம் மண்டலத்தில் சொற்பொழிவு ஆற்றினார்கள்.





பிஜே சவூதிக்குள் நுழைய முடியாது என்று சொல்லித்திரிந்த அயோக்கர்களின் முகத்தில் தார் பூசப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

பிஜே அல்கஸீம் மண்டலத்தில் ஆற்றிய உரையின் வீடியோ:

தலைப்பு: இஸ்லாம் நமக்கு கிடைத்த பாக்கியம்

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger