Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label TNTJ. Show all posts
Showing posts with label TNTJ. Show all posts

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!        

டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.

1
இதில் அதிமுகவிற்க அளித்த ஆதரவை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்றது திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
20140412_142022 20140412_142016
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கப்பட்டது.
0 comments

தனித்து விளங்கும் இஸ்லாம்” மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் – புதுக்கோட்டை!


புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளையில் கடந்த 19-5-2013 அன்று மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் மாநில துணைப் பொதுச் செயலாளர் யுசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். அதை தொடர்ந்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தனித்து விளங்கும் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். மாநாட்டை போல் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.
0 comments

ரியாத் மண்டல பொதுக்குழு , புதிய மண்டல நிர்வாகிகள் தேர்வு!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலப் பொதுக்குழு கடந்த 10.05.2013 வெள்ளிக்கிழமை அன்று மண்டலப் பொறுப்பாளர் சகோ. அமீர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தாயகத்திலிருந்து வருகை புரிந்திருந்த மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. M.S. சுலைமான் அவர்கள் தேர்தல் அதிகாரியாக மாநிலத்தலைமை மூலம் நியமிக்கப்பட்டிருந்தார்கள், ஜீம்ஆ முடிந்த உடன் மதிய உணவிற்கு பிறகு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் துவக்கவுரையாக மண்டலப் பேச்சாளர் சகோ. செய்யது அலி ஃபைஜி அவர்கள், “இக்லாஸ்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து, M.S. சுலைமான் அவர்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடும், நிர்வாகிகளின் பண்புகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதன் பிறகு, மண்டலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது, மக்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப கீழ்காணும் சகோதரர்களை ரியாத் மண்டல நிர்வாகிகளாக ஓட்டெடுப்பு முறையில் தேர்ந்தெடுத்தனர்.
1. தலைவர்: அரசூர் ஃபாரூக் – அரசூர், நாகை மாவட்டம், அலைபேசி: 00966-565614030

2. செயலாளர்: அப்துர் ரஹ்மான் நவ்லக் – செங்கம், திருவண்ணாமலை மாவட்டம், அலைபேசி: 00966-509181890

3. பொருளாளர்: நூருல் அமீன் – ரெகுநாதபுரம், இராமநாதபுரம் மாவட்டம், அலைபேசி: 00966-507292857

4. துணைத் தலைவர்: முஹம்மது மாஹின் – நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம், அலைபேசி: 00966-542540860
5. துணைச் செயலாளர்: சோழபுரம் ஹாஜா -சோழபுரம் – தஞ்சை மாவட்டம், அலைபேசி: 00966-540237175

6. துணைச் செயலாளர் (1): T. நெய்னா முஹம்மது -முத்துப்பேட்டை, திருவாரூர் மாவட்டம், அலைபேசி: 00966-552104970

7. துணைச் செயலாளர் (2): முஹம்மது ஷாகிர் – விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், அலைபேசி: 00966-507946557
நன்றி - tntj.net 
0 comments

மர்கஸ் அமைவதைக் காரணம் காட்டி ஒன்றிணைந்த வன்முறையாளர்கள்: கடையநல்லூரில் காவல்துறையினரின் பாரபட்சம்!

IMG_0165IMG_0262பத்திரிக்கைகளில் வெளியான செய்திகாயமுற்ற ஏகத்துவ சகோதரர்கள்கொலை வெறித்தாக்குதல் நடத்ய்திய ரவுடிகள்டிஎன்டிஜே அலுவலகம்கொலை வெறித்தாக்குதல் நடத்ய்திய ரவுடிகள் 2தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீரியமாக வளர்ச்சியடைந்து வருவதும், அதன் மார்க்க – சமுதாயப் பணிகளால் ஈர்க்கப்பட்டு ஏராளமானோர் அதன் கொள்கைச் சகோதரர்களாக மாறி வருவதும் அறிந்ததே. டிஎன்டிஜேயின் சமுதாயப்பணிகளை சிறப்புடன் செய்வதற்கு ஆங்காங்கே மர்கஸ்களும் பெருமளவில் அமைந்து வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறான மர்கஸ் ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது. தங்களது கிளையின் சொந்தப்பணத்தில் 40 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்றை வாங்கி அதில் மர்கஸ் கட்ட ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளும்போது, எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் தவ்ஹீத் ஜமாஅத்தை அழிக்கு நினைக்கும் உள்ளூர் எதிரிகள் ஒன்று சேர்ந்து வன்முறைக்கு வித்திட்டுள்ளனர்.
உள்ளூர் ஹனபி பிரிவினர், SDPI, TMMK, மற்றும் நமது அமைப்பினால் நீக்கப்பட்டவர்கள் ஆகியோர் கொண்ட இக்குழுவினர் முதற்கட்டமாக பின் வரும் பிரிவினர்களுக்கு மனுக்களை அனுப்பியுள்ளனர்.
வருவாய்த்துறை, காவல்துறை, மற்றும் நகராட்சி ஆகியவைகளுக்கு அனுப்பப்டட அம்மனுவில் சம்பந்தபப்ட்ட இடம் புறம்போக்கு நிலம் என்றும் எனவே இங்கு கட்டிடப் பணிகள் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் கதையளந்திருந்தனர். ஆயினும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இடத்தையும் நமது தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்துவிட்டு, தங்களது சொந்த இடத்தில் மர்கஸ் அலுவலகம் அமைப்பதில் தலையிட முடியாது என்று கூறி அவர்கள் முகத்தில் கரி பூசினர்.
இதன்பின்னரும் இந்தப் போலிகளின் செயல்பாடுகள் நிற்கவில்லை. அடுத்தகட்டமாக கட்டிடப்பணிகள் செய்து வந்த உள்ளூர்க்காரர்களை மிரட்டித் தடுத்துள்ளனர். இதையும் செங்கோட்டை மற்றும் அச்சன்புதூர் பகுதிகளைச் சேர்ந்த கட்டிடப்பணியாளர்களை வைத்து பணிகளை முடுக்கிவிட்டு நமது சகோதரர்கள் எதிர் கொண்டனர்.
ஒரு வழியாக கட்டிடப்பணிகள் நிறைவு அடைந்துவிட்டதால், கடந்த 18.04.2013 அன்று தங்களது பழைய அலுவலகத்திலிருந்து இந்தப் புதிய இடத்திற்கு இடமாற்றும் பணிகளைத் துவக்கினார்கள். இப்போது போலிகள் உச்சகட்டமாக அடுத்த “மூவ்’ வை நகர்த்தினார்கள்.
பாங்கிற்காகப் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கியில், “ நஜாத்துக்காரர்கள் நமக்கு எதிராக போட்டி பள்ளியைத் துவக்கிவிட்டார்கள். ஒன்றிணைந்து ஆயுதங்களுடன் வாருங்கள் – நாரே தக்பீர்” என்று பீதியைக் கிளப்பி காட்டுக் கூச்சலிட்டனர். இதைக் கேட்ட கொள்கைச் சகோதரர்கள் காவல்துறையின் உதவியை நாட, அவர்களோ வெறும் இருவரை மட்டும் ஒப்புக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவ்வாறு வந்த துணை ஆய்வாளரையும் போலிகளில் ஒருவன் கல்வீசித் தாக்க நிலைமை விபரீதமானது.
அதனைத் தொடர்ந்து உருட்டுக்கட்டை சகிதமாக தவ்ஹீத் சகோரர்கள் தாக்கப்பட்டனர். இவ்வாறு தாக்குதலுக்கு ஆளான ஆறுபேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க்பபட்டுள்ளனர். இதன்பின்னரே மாவட்ட காவல்துறையினரின் சார்பாக காவலர்கள் குவிக்கப்பட்டனர். வழக்கம்போல் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டன. இதில் காவலரை கல்வீசித் தாக்கியதாகவும் நம்மீது (பொய்) வழக்கு உள்ளது.
மேலும் டிஎன்டிஜே நிர்வாகிகளை நள்ளிரவில் வீடுபுகுந்தும் காவல் துறை வேட்டையாடியது. எதிர் தரப்பினருக்கு சாதகமாகவும் டிஎன்டிஜேக்கு எதிராகவும் காவல்துறை செயல்பட்டதை நடுநிலையாளர்கள் சொல்லிக் காட்டினர். காவல்துறையின் இந்த அநியாயப் போக்கைக் கண்டித்து கடந்த 19.04.2013 அன்று காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டு, ஏராளமானோர் களமிறங்கினர். இவர்கள் அனைவரும் கைதாகி அன்று இரவு விடுதலை ஆயினர். ஏராளமான பெண்களும் கைக் குழந்தைகளுடன் களம் கண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நன்றி - tntjnet 
0 comments

TNTJ மாநில புதிய நிர்வாகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின்  2013 இல் ,14 வது மாநிலப் பொதுக்குழுவில் புதியதாக தேர்ந்து தெடுக்கப்பட்ட  மாநில நிர்வாகிகள் விபரம் 

மாநிலத் தலைமையக முகவரி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
போன்- 91 044 25215226
மின்னஞ்சல்- tntjho@gmail.com
தலைவர்
பி.ஜைனுல் ஆபிதீன்
+91 99520 35111 (மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை)
பொதுச் செயலாளர்ரஹ்மதுல்லாஹ்
+91 9952035444
பொருளாளர்
எம்.ஐ.முஹம்மத் சுலைமான்
+91 9791553330
து. தலைவர்
செய்யித் இப்ராஹீம்
+91 9952035333
து. பொதுச் செயலாளர்முஹம்மத் யூசுஃப்
+91 99520 56333
செயலாளர்கள்
சாதிக்
+91 99520 56555
அப்துல் ஜப்பார்
+91 99520 56111
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
+91 9940659299
கோவை அப்துர் ரஹீம்
நெல்லை யூசுஃப்
திருவாரூர் அப்துர்ரஹ்மான்
ஆலம்
ஆவடி இப்ராஹிம்
மதுரவாயல் இ.முஹம்மத்
தொண்டி சிராஜ்
மேலாண்மைக் குழு:
தலைவர்:
ஷம்சுல்லுஹா ரஹ்மானி
+91 9443150035
உறுப்பினர்கள்
அல்தாஃபி
+91 7358834427
எம். எஸ் சுலைமான்
+91 9965855004
அப்பாஸ் அலி
+91 8122452616
காஜா நூஹ்
தனிக்கை குழு
தலைவர்: கலீல் ரசுல் +91 9884659555
அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி 044 25215226
முஹம்மது ஷர்ஃபுத்தீன் 0097506595842
தவ்ஃபீக் (சென்னை)  9940319555
கானத்தூர் பஷீர்
மாணவர் அணி
மாணவர் அணிச் செயலாளர் – அல் அமீன் 9884810993
0 comments

நிர்மூலமான இஜ்மா நீர்த்துப் போன ஸைபுத்தீன்- தொடர்: 2


கால் நூற்றாண்டு கடத்திய ஸைபுத்தீன் களமும் காரணமும்
கால் நூற்றாண்டுகளாக எந்த வலையிலும் சிக்காமல் நழுவிக் கொண்டிருந்த ஸைபுத்தீன் ரஷாதியைவிவாதக் களத்திற்குக் கொண்டு வர நாம் செய்த முயற்சிகளைக் கடந்த இதழில் கண்டோம். தொடர்ந்துகடிதப் போக்குவரத்திலேயே காலம் கழித்த ஸைபுத்தீன் ரஷாதிஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின்னர்கடிதத் தொடர்பையும் நிறுத்தி விட்டார். சுமார் ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் நாம் மீண்டும்கடிதம் அனுப்பினோம்.
முனாழரா பற்றிய பி.ஜே.யின் 30.01.89 தேதியிட்ட கடிதத்திற்கும் 01.02.89 அன்று சென்னையிலிருந்துஎழுதிய கடிதத்திற்கும், 04.02.89 அன்று தங்கள் ஊரான பெரியகுளத்திலிருந்து போஸ்ட் செய்தகடிதத்திற்கும் தங்களிடமிருந்து பதிலே வரவில்லை.
எதிர்பாராதவிதமாக 29.01.89 அன்று நாகர்கோவிலில் பி.ஜே. அவர்களைச் சந்தித்துச் சென்ற தாங்கள்08.02.89 அன்று பெங்களூரிலிருந்து பி.ஜே.க்கு எழுதிய கடிதத்தில், "நாகர்கோவிலில் தற்செயலாகஉங்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் உபசரிப்பு மனதைக் கவர்ந்தது.ஜஸாக்குமுல்லாஹ். ஓரிரு நாட்களில் விவாதம் பற்றிய முடிவை எழுதுகிறேன்'' என்றுஎழுதியிருந்தீர்கள். ஆனால் ஐந்து மாதங்கள் கழிந்தும் மேற்படி கடிதத்திற்குப் பிறகு தங்களிடமிருந்துஎந்தத் தகவலும் வரவில்லை.
14.01.89ல் தாங்கள் எழுதிய கடிதப்படி முனாழரா ஏற்பாட்டில் கலந்து கொள்ளுமாறு மேலப்பாளையம்மஜ்லிசுல் உலமா சபைக்கு அழைப்புக் கடிதம் பதிவுத் தபால் மூலம் அனுப்பினோம்.அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்பதையும் தங்களுக்குத் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
இவ்வாறு விவாத ஏற்பாட்டுக் குழுவினரால் 27.07.89 அன்று எழுதப்பட்ட கடிதத்திற்கு 18.08.89 அன்றுஸைபுத்தீன் ரஷாதியிடமிருந்து பதில் வந்தது. அதில் விவாத்திலிருந்து பின்வாங்குவதை சூசகமாகக்குறிப்பிட்டார். இதற்கிடையே பெங்களூருக்கு நேரடியாகச் சென்று ஸைபுத்தீன் ரஷாதியை நமதுசகோதரர்கள் சந்தித்து விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். 18.08.89 தேதியிட்ட கடிதத்தில்அதையும் அவர் குறிப்பிடுகின்றார்.
உங்களின் 27.07.89 தேதியிட்ட அஞ்சல் கிடைத்தது. அதற்கு முன்னால் எழுதப்பட்ட அனைத்துத்தபால்களும் கிடைக்கப் பெற்றேன். நான் அவைகளுக்குப் பதில் எழுதாமல் இருந்ததற்குக் காரணங்கள்உண்டு.
ஜமாஅத்துல் உலமா நண்பர்களின் ஆலோசனை. அதாவது இப்புதிய முஜ்தஹித்களை ஒருபொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதிலும் பொய்யையும் புரட்டையும்மூலதனமாகக் கொண்டிருக்கும் இவர்களுடன் விவாதம் என்ன வேண்டிக் கிடக்கின்றது? (இதுவும்ஒருவகையில் முழுக்க முழுக்க உண்மையே)....
.....குறிப்பு: இதுபற்றி இரண்டு பேர் விசாரிக்க வந்தார்கள். அவர்களும் டேப் செய்து வந்து உங்களிடம்விஷயத்தை விளக்கியிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
பிரசுரம் கொடுத்த பீதியும் பிரச்சனையும்
இதன் பிறகு நீண்ட திரை விழுந்தது. அவ்வளவு தான். அடுத்து மூன்றாண்டுகள் கழித்து சென்னைமக்கா மஸ்ஜிதில் இந்தப் பிரச்சனை மீண்டும் வெடிக்கின்றது.
இவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற பிரசுரம் அல்ஜன்னத் மாத இதழில் வெளியாகியிருந்தது.அந்தப் பிரசுரத்தைப் பிரதி எடுத்து மக்கா மஸ்ஜிதில் கூடிய உலமாக்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட15 பேரிடம் கைருல்லாஹ் பாக்கவி என்ற சகோதரர் கொடுத்தார்.
அதன் விளைவு எப்படியிருந்தது என்பதை கைருல்லாஹ் பாக்கவி 07.03.92 அன்று எழுதியகடிதத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
அல்ஜன்னத் பிப்ரவரி இதழில் இலவச இணைப்பாகஇவரைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றதலைப்பில் ஒரு பிரசுரம் கண்டேன்.
கடந்த 29.02.92 மற்றும் 01.03.92 ஆகிய நாட்களில் சென்னையில் வரலாறு காணாத விதத்தில்ஆலிம்களின் பொதுக்குழுவும் அதையொட்டி உளறுவாயர்கள் பங்கேற்ற ஷரீஅத் மாநாடும்நடந்தேறியது.
அம்மாநாட்டில் பங்கேற்க கதாநாயகன் ஸைபுத்தீன் ரஷாதி வந்திருந்தார். அவ்வமயம் நான்அல்ஜன்னத்தில் வந்திருந்த அந்தப் பிரசுரத்தை அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுத்து மிக முக்கியமான15 ஆலிம்களின் கையில் கொடுத்துஇதில் உள்ள செய்திகளில் எந்த அளவுக்கு உண்மை என்றுகேட்டுச் சொல்லுமாறு கூறியிருந்தேன்.
மேற்படி பிரசுரத்தின் ஜெராக்ஸ் காப்பியை கையில் வைத்துக் கொண்டு அம்மாநாட்டில் பேசியஸைபுத்தீன் பெரிதும் ஆத்திரப்பட்டார். ஆவேசப்பட்டார். ஆனால் உளறல்களை மட்டும்நிறுத்தவில்லை. மேலும் அதனை அவர் அல்ஜன்னத்தின் ஜெராக்ஸ் காப்பி என்பது கூடப் புரியாமல், "என்னைப் பற்றி அவதூறு செய்வதற்கென்றே நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள்என்று அதில்குறிப்பிடாத செய்திகளையெல்லாம் பொய்யாக அவிழ்த்து விட்டார்.
பிறகு மக்ரிப் தொழுதவுடன் அந்தக் காப்பியை வெளியிட்ட என்னுடன் பேச வேண்டும் என்றுஅழைத்தார். தன்னந்தனியாகச் சென்ற என் மீது பெரிதும் ஆவேசப்பட்டு சில நிமிஷ வாக்குவாதத்தில்தோற்றுவாய்க்கு வந்தபடி ஏசிப் பேசிஅவரது கூட்டாளிகள் 30 பேர் உட்பட என் மீது கொலைவெறியுடன் நெருங்கினர். அவர்களது பிடியிலிருந்து நான் தப்பிச் சென்று கூட்டம் நடந்த மேடை மீதுஅவ்வமயம் மைக்கில் உரையாற்றிக் கொண்டிருந்த மக்கா மஸ்ஜித் செக்ரட்டரி அப்துல் கரீம்என்பவரிடம் விபரத்தைக் கூறினேன். உடனே அவர்மஸ்ஜிதின் கண்ணியத்தைக் காப்பாற்றுமாறும்அதனைப் பாழ்படுத்திவிட வேண்டாம் என்றும்நபியுல்லாஹ்வின் வாரிசுகளை (?) மீண்டும் மீண்டும்மைக்கில் வேண்டுகோள் விடுத்து பெரும் கலவரமாக உருவாகி கொலை விழும் சூழலைத் தடுத்துநிறுத்தினார். நான் பிழைத்துக் கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்.
தயவு செய்து அவர் பற்றி மற்ற ஜெராக்ஸ் காப்பிகளை உடனே எனக்கு அனுப்புங்கள். அதனைநோட்டீஸாகவும் வெளியிட முயற்சிக்கிறேன்.
. கைருல்லாஹ்சென்னை
இதன் பின்னர் மீண்டும் ஒரு நீண்ட திரை விழுகின்றது. அதன் பின்னர் 1996ல் விவாதம் தொடர்பாகஷம்சுல்லுஹா மீண்டும் பி.ஜே.யிடம் தொடர்பு கொள்கின்றார். அதற்கு பி.ஜே. 07.10.1996 அன்றுஎழுதிய பதில் கடிதம் இதோ:
ஸைபுத்தீனுடன் விவாதம் நடத்துவது சம்பந்தமாக தாங்கள் வெளியிட்டுள்ள பிரசுரமும் கடிதமும்கண்டேன். ஸைபுத்தீனுடன் விவாதம் நடத்த நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்.
மத்ஹபுகள்தர்கா வழிபாடுகள் பற்றியோ வேறு மஸாயில்கள் பற்றியோ அவருடன் விவாதிக்கத்தயார். அவற்றுடன் அவர் விரும்புவது போல் பி.ஜே. பொய்யனா என்ற தலைப்பையும்ஸைபுத்தீன்பொய்யனா என்ற தலைப்பையும் விவாதிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.
நான் எழுத்து மூலமாக ஒப்புதல் அளித்திருப்பது போல் அவரிடமும் எழுத்து மூலமாக ஒப்புதல் பெற்றுஅதன் நகலை எனக்கு அனுப்புங்கள். பின்னர் நானும் ஸைபுத்தீனும் மேலப்பாளையத்தில் சந்தித்துஎங்கேஎப்போது விவாதத்தை அமைத்துக் கொள்ளலாம் என்று பேசி ஒப்பந்தம் செய்வோம்.
மத்ஹபுகள்தரீக்காக்கள்தர்கா வழிபாடுகள் பற்றி அவர் விவாதிக்க முன் வராமல் பி.ஜே. பொய்யனாஎன்பது பற்றி மட்டும் விவாதிக்கலாம் என்று திசை திருப்ப முயன்றால் அதற்கு இடம் கொடுக்கவேண்டாம். அதைப் பற்றியும் விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதற்கு முன்னதாக நான்குறிப்பிடும் தலைப்புகள் விவாதிக்கப்பட வேண்டும். இதை முடித்து விட்டுநான் பொய்யனாஅவர்பொய்யனா என்பதையும் விவாதிக்கலாம்.
பி.ஜே.யின் இக்கடிதத்தை ஷம்சுல்லுஹா 26.10.96 அன்று கூரியர் மூலம் ஸைபுத்தீனுக்கு அனுப்பிவைக்கின்றார். இதற்கு எந்தப் பதிலும் இல்லை.
அதன் பின்னர் 1997ல் பி.ஜே. மேலப்பாளையத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க, "நான்கு மத்ஹபுகளும்நவீன பிரச்சனைகளும்'' என்ற தலைப்பில் உரையாற்றி மத்ஹபு மாயைக்கு மரண அடி கொடுத்தார்.இதற்குப் பதிலளிக்கும் விதமாக கலீல் அஹ்மத் கீரனூரிஸைபுத்தீன் ரஷாதி ஆகியோர் இணைந்துமேலப்பாளையத்தில் பேசினார்கள்.
அந்தக் கூட்டத்தின் போது நமது ஜமாஅத் சார்பில், "விவாதத்திற்குத் தயாரா?'' என்ற தலைப்பில்"ஸைபுத்தீன் ராஷாதியை விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்குப் பரிசு வழங்கப்படும்என்றுசுவரொட்டிகள் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டன.
கலீல் அஹ்மத் கீரனூரிஸைபுத்தீன் ரஷாதி கூட்டத்திற்கு நமது ஜமாஅத் சார்பில் பதில் கூட்டம்ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அவர்களது கூட்டம் முடிந்த ஓரிரு நாட்களில் மேலப்பாளையத்தில்மூன்று கொலைகள் நடக்கின்றன. அதன் பின்னர் இரு வாரங்களில் நான்காவது கொலையும் நடந்து,ஊரில் கலவர சூழல் ஏற்பட்டது.
ஷம்சுல்லுஹாஸய்யது இப்ராஹீம் உள்ளிட்டவர்கள் பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில்மேற்படி கொலை வழக்கில் கைது செய்யப்படுகின்றனர். மேலப்பாளையத்தில் ஒரு குட்டி அவசர நிலைபிரகடனப்பட்டிருந்தது. இக்கால கட்டத்திற்குப் பிறகுஇந்தக் கொலையுதிர் காலத்திற்குப் பிறகுஸைபுத்தீன் மேலப்பாளையத்திற்கு எட்டியே பார்க்கவில்லை.
இதன் பின்னர்மேலப்பாளையத்தில் 2012ஆம் ஆண்டு பி.ஜே. அவர்கள், "இறுதி நபித்துவம்'' என்றதலைப்பில் ஆற்றிய உரைக்குப் பதில் தெரிவிக்கும் நோக்கில் மஜ்லிசுல் உலமா ஏற்பாடு செய்தகூட்டத்திற்குத் தான் ஸைபுத்தீன் ரஷாதி வந்தார். அதாவதுகிட்டத்தட்ட 15 ஆண்டு வனவாசத்திற்குப்பிறகு மேலப்பாளையத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - ஏகத்துவம் 2014 ஏப்ரல் 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger