Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

அதிமுகவிற்க அளித்த ஆதரவு வாபஸ் – தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!        

டிஎன்டிஜே யின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று (12.04.14) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாநிலத் தலைமையகத்தில் கூடியது.

1
இதில் அதிமுகவிற்க அளித்த ஆதரவை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்து என்ன நிலைபாடு எடுப்பது என்பது குறித்து வருகின்றது திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
20140412_142022 20140412_142016
பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத்தின் முடிவு பத்திரிக்கையாளர்களிடம் விளக்கப்பட்டது.
0 comments

மோடியை தனது கேள்விகளால் தவிடுபொடியாக்கிய கெஜ்ரிவால்!

மோடியை தனது கேள்விகளால் தவிடுபொடியாக்கிய கெஜ்ரிவால்!

மோடியை தனது கேள்விகளால் தவிடுபொடியாக்கிய கெஜ்ரிவால்!
புதுடெல்லி: குஜராத் உழலற்ற வளர்ச்சி அடைந்த மாநிலமா? என அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்விகளால் துளைத்துள்ளார்.
கெஜ்ரிவால் எழுப்பியுள்ள கேள்விகள் கீழே:
1) மத்திய அரசு கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப்படுகையின் இயற்கை எரிவாயு விலையை ஒரு யூனிட்டுக்கு ரூ.16 என்று உயர்த்த உள்ளதா? நீங்கள் பிரதமர் ஆனால் அதே அளவுக்கு விலை எற்றுவீர்களோ?
2) ஒப்பந்த புள்ளிகள் கோராமல் குஜராத் அரசு சூரிய சக்தி மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு 13 ரூபாய் கொடுத்து வாங்குகிறதா? மத்தியப் பிரதேசத்திலும், கர்நாடாகாவிலும் இதே சூரிய ஒளி மின்சாரம் ரூ.7.5 மற்றும் ரூ.5.5க்கு ஒப்பந்த புள்ளிகளின் மூலம் வாங்கும்போது, ஏன் உங்களுடைய அரசு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குகிறது?
3) குஜராத்தில் விவசாயத்தின் வளர்ச்சி 11 சதவிகிதம் என்று குறிப்பிட்டீர்கள். ஆனால், உங்களுடைய அரசாங்கத் துறைகள் தரும் குறிப்புகளின்படியே 2006-07ல் விவசாய உற்பத்தி 27,815 கோடிகள் என்றும், ஆறு ஆண்டுகள் இடைவெளியில் 2012-13ல் 25,908 கோடிகளாகவும் விவசாய உற்பத்தி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றன. அப்படி பார்த்தால் உங்களுடைய ஆட்சிக்காலத்தில் குஜராத்தின் விவசாய வளர்ச்சி -1.18 சதவிகிதம் குறைந்திருக்கிறது. பின்னர் எப்படி 11% வளர்ச்சி என்று சொல்கிறீர்கள்?
4) கடந்த பத்தாண்டுகளில் மூன்றில் இரு பங்கு சிறுதொழில்கள் குஜராத்தில் மூடப்பட்டிருக்கின்றன. மிகச்சிறிய ஊரான மெஹ்சனாவிலேயே 187 சிறுதொழில் நிறுவனங்களில் 140 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில், எதை நீங்கள் வளர்ச்சிக்கான மாதிரி என்று எதை முன்னிறுத்துகிறீர்கள்? இதுதான் உங்களின் மாதிரி என்றால், இந்தியாவின் சிறுதொழில்களை மூடி விட்டு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பெருநிறுவனங்களிடம் இந்தியாவின் தொழில்களை ஒப்படைத்து விடுவீர்களா?
5) குஜராத்தில் லஞ்சமோ ஊழலோ இல்லை என்பது நீங்கள் அடிக்கடி பெருமையோடு சொல்லிகொள்ளும் வாசகம். நாங்கள் நேரில் மக்களைப் பார்த்து பேசிய பொழுது பல்வேறு சிறுநகரங்களிலும், கிராமங்களிலும் இருக்கும் அரசு அலுவலங்களில் ஊழலும், லஞ்சமும் ஆறாய் ஒடுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழேயான ரேஷன் கார்டுகள், அரசு திட்டங்கள், லைசன்ஸ்கள் என்று எதை வாங்க வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்கிறார்கள். அப்புறம் எப்படி ஊழலற்ற மாநிலம் குஜராத் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறீர்கள்?
6) நிதி மோசடிகளில் உங்கள் அமைச்சரவையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றசாட்டப்பட்டு இருக்கிறது. ஆறு கோடி குஜராத மக்களில் அமைச்சரவையில் சேர்க்க நேர்மையான ஆட்களே கிடைக்கவில்லையா?
7) உங்களுக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குமான தொடர்பினைப் பற்றி விளக்க முடியுமா?
8) குஜராத் அரசின் 1,500 ஜூனியர் லெவல் வேலைகளுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டமே இல்லையென்று ஏன் கம்பீரமாக பறைசாற்றிக்கொள்கிறீர்கள்?
9) உங்கள் அரசின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ.5,300. ஒரளவிற்கு படித்த, தன்மானமிக்க ஒருவரால் ரூ.5,300ல் வாழ முடியுமா?
10) தரமான கல்வியை தருவது ஒரு அரசின் பொறுப்பு என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? கடந்த சில நாட்களில் குஜராத்தின் சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நாங்கள் பயணம் போனபோது, குஜராத் அரசு பள்ளிகள் மோசமான நிலையில் இருக்கின்றன என்பதை கண்கூடாக கண்டோம். சில பள்ளிகளில் 600 மாணவர்களுக்கு வெறும் மூன்று ஆசிரியர்கள்தான் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஒரு மோசமான கல்விச் சூழலை வைத்துக் கொண்டு, இந்தியாவை எப்படி முன்னேற்றுவீர்கள்?
11) நல்ல தரமான மருத்துவ வசதியை குடிமக்களுக்கு தருவது என்பதை ஒரு அரசின் கடமை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் இல்லையா? குஜராத் அரசின் மருத்துவ சேவைகள் முடமாகிக்கிடக்கிறது. எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்து போயிருக்கிறது. பல கிராமங்களில், முதன்மை சுகாதார மையங்கள் மூடப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கின்றன. தாலுகா, மாவட்ட அளவில் இருக்கும் மருத்துவமனைகளில், பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கிறது. பணியில் இருக்கும் ஆட்களும் ஒழுங்காக் சுகாதார நிலையத்துக்கு வருவதில்லை. மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லை. இந்த லட்சணத்தில் என் மாநில மருத்துவ சேவை பிரமாதம் என்று ஏன் பொய் சொல்லுகிறீர்கள்?
12) விவசாயிகள் குஜராத் முழுக்க உங்களுடைய ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் விவசாயத்துக்கு செய்யும் செலவைவிட குறைந்த விலையையே உங்களின் அரசின் அலட்சியத்தால் அவர்களின் உற்பத்தி பொருள்களுக்கு பெறுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த சில வருடங்களில் அப்படி 800 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள்?
13) நாடெங்கும் பேசுகிற இடங்களில் குஜராத்தில் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு சேர்த்தேன் என்று அறிவித்து கொள்கிறீர்கள். எங்களுடைய ஆய்வில், குஜராத்தில் நான்கு லட்சம் விவசாயிகள் மின்சார இணைப்புக்கு விண்ணப்பித்து இன்னமும் இணைப்பு கிடைக்காமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இணைப்பே தராமல் மின்சாரம் போய் சேர்ந்து விட்டதாக சொல்வது எந்த வகையான சாமர்த்தியமோ?
14) உங்களுடைய ஆட்சியில் விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்பட்டு மிகக்குறைவான விலையில் உங்களுக்கு சாதகமான பெரு நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தருவதில்லை. அப்படியே தந்தாலும் அது மார்க்கெட் விலையை விட குறைவாகவே இருக்கிறது. அடானி, அம்பானி நிறுவனங்களுக்கு ஒரு சதுர மீட்டர் நிலம் ஒரு ரூபாய்க்கு
கொடுப்பது ஏனோ? ஏன் விவசாயிகளிடம் உங்கள் அரசு இதயமே இல்லாமல் நடந்துகொள்கிறது?
15) கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களின் குடிநீர் மற்றும் விவசாயப்பாசன தேவைகளுக்காக 2005ல் நர்மதா அணையின் உயரத்தினை உயர்த்தினீர்கள். எட்டு வருடங்களாகியும், கட்ச் மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு சொட்டுத்தண்ணீர் கூட எட்டவே இல்லை. உங்களின் அரவணைப்பில் இருக்கும் தொழிலதிபர்களுக்கு அந்த நீர் திருப்பி விடப்பட்டுள்ளது. கட்ச் மக்களிடம் ஏன் இப்படி ஒரு பாரபட்சம்?
16) பஞ்சாபில் உரையாற்றுகிறபோது சீக்கியர்களின் நிலங்களை கட்ச் பகுதியில் பிடுங்கமாட்டோம் என்று சூளுரைத்தீர்கள். உண்மையில்சீக்கியர்களின் நிலங்களை பிடுங்க கோர்ட் வாசல்படி ஏறி இருக்கிறது உங்கள் அரசு. அந்த வழக்கை திரும்பப் பெறுவீர்களா?
17) நீங்கள் தனியார் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பயணிக்கிறீர்கள். இதைபோல எத்தனை ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உங்களிடத்தில் இருக்கின்றன? யாருக்கு சொந்தமானவை அவை? நீங்கள் தான் இவற்றுக்கு பணம் செலுத்துகிறீர்களா? அப்படி இல்லையென்றால் யார் இந்த செலவினை உங்களுக்காக ஏற்கிறார்கள்? ஏன் உங்களின் விமான போக்குவரத்து செலவுகளை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடாது? 
இவ்வாறு அதில் உள்ளன.
குஜராத் சென்ற கெஜ்ரிவால் மோடியை சந்திக்கச் சென்றபோது கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
நன்றி -இந்நேரம்

0 comments

தகவல் உரிமைச் சட்டமும், கட்சிகளின் எதிர்ப்பும் !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் கட்டுப்பட வேண்டும் என ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது, பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ள அந்தக் கட்சிகள் எதிர்ப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இடதுசாரிகளும் இந்த நடவடிக்கையை தவறென்று சொல்கிறார்கள்.

தகவலுரிமைச் சட்டம் தேவையே!
'தகவல் உரிமை’ ஒரு ஜனநாயக தேசத்தின் அடிப்படைத் தேவை. இதன் மூலமாக ஏராளமான ஊழல்களை, முறைகேடுகள் அம்பலப்பட்டிருக்கின்றன. பெரும் நிறுவனங்களும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் – கூட்டு சேர்ந்து செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த கூட்டணி, தன் தேவைக்காக சட்டங்களை வளைப்பதும், திட்டங்களை மாற்றுவதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. ஊழல் இன்று தேசத்தின் மையமான பிரச்சனையாக எழுந்திருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் இடதுசாரி முதல்வர்கள் 8 பேர் இருந்துள்ளார்கள். இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த  ஜோதிபாசு உள்ளிட்டு இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன்,  புத்ததேவ், நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக்சர்க்கார் என ஒருவரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. இதனால், ஊழலை எதிர்க்கும் பொதுமக்களுக்கு, இடதுசாரிகள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.

இதனால், ’தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளும் கொண்டுவரப்பட கூடாது’ என்று சொல்வது - விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்க இடதுசாரிகள் சொல்லும் காரணம் ’கட்சி என்பது ஒரு பொது ஸ்தாபனம் அல்ல’, ‘அனைவருக்கும், அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படையாக தெரிவிப்பது, கட்சிகளின் செயல்பாட்டை, ஜனநாயகத்தை பாதிக்கும்’ என்பதாகும்.

தகவல் உரிமைச் சட்டத்தில், அரசியல் கட்சிகளையும் சேர்க்க வேண்டும் என்ற கருத்து எப்படி வந்தது?

இந்தக் கருத்து தகவல் ஆணையத்தால் முன்வைக்கப்பட்டு, தகவல் உரிமைப் போராளிகளால் வழிமொழியப்படுகிறது. இந்தச் சட்டத்தை பயன்படுத்தியதன் மூலமும் , அரசு நிர்வாகத்தில் உள்ள நேர்மையானவர்களின் உதவியிலும் முறைகேடுகள் பல வெளிவந்தன. அந்தச் செய்திகள் மக்களிடையே அதிர்வை ஏற்படுத்தியதையடுத்து – ’அரசியல் கட்சிகளின் போராட்டங்களும்’ ‘சிவில் சொசைட்டி’ போராட்டங்களும் நடந்தன.

ஊழல் முற்றாக ஒழிக்கப்பட வெறும் தகவல் போராட்டங்கள் மட்டும் போராது, அரசியல் போராட்டமும், சமூக மாற்றமும் அவசியம் என்பது புரிபடத் தொடங்கிய நேரத்தில் – ஊடகங்கள் சிவில் சொசைட்டி போராட்டங்களையும், லோக்பால் மசோதாவுக்கான உண்ணாவிரதத்தையும் முன் நிறுத்தினார்கள். இப்படி, ஊழல் எதிர்ப்பு போராட்டம் ‘அரசியலை எதிர்த்தவர்களின், அரசியலற்ற போராட்டமாக’ குறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ‘தகவல் உரிமைச் சட்டத்தை’ அனைத்து பிணிகளுக்கும் ஒரே மருந்து என்ற ரீதியில் முன்வைக்கும் வாதங்கள் உருவாகின. 

இது சரியான வாதமா?:
           
இல்லை. மிகத் தவறான வாதம். அரசியலை எதிர்த்த போராட்டங்கள் அரசியலற்றவர்களால் மட்டும் நடத்தப்பட வேண்டும் என்பது - அதிகாரத்திற்கு அருகில் ஊழல்வாதிகளை நிறுத்திவிட்டு - எதிர்ப்பாளர்களை வெறும் ‘விமர்சகர்களாக’ சுறுக்கிவிடும். ’குளத்துக்குள் இறங்காமலே குளத்தை சுத்தப்படுத்தலாம்’ என்ற வியாக்கியானமாக அமைகிறது.

அரசியல் என்பது ஒரு போர்க்களம். இங்கே பல்வேறு கருத்துக்களும் மோதுகின்றன. உதாரணமாக ஊழலை எதிர்த்த கட்சிகள், ஊழல்வாதிகளுக்கு எதிராக மாற்றுக் கொள்கையை முன்வைத்து போராடுகிறார்கள். தகவல் உரிமையில் ‘அமைப்புகளின் உள் விவகாரங்களையும் கேட்கலாம்’ என்பதானது ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் பயன்படும். ஊழலை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படும். இது அரசியலை கேலிக்கூத்தாக மாற்றிவிடும்

அரசியல் கட்சிகளை கண்டுகொள்ளாமல் விட வேண்டுமா? 

தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளை உட்படுத்தாத போது - அவர்களை யாருமே கேள்வி கேட்கக் கூடாதா? என்ற கேள்வி வருகிறது. 
அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்த ஏற்கனவே உள்ள அமைப்புகளில், பல குறைகள் உள்ளன. அவற்றை சரியான முறையில் மாற்றியமைப்பதே - அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணமாக ‘நபர்களை முன் நிறுத்தும்’ தேர்தல்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆட்சிகள் மாறுகின்றன, கொள்கைகள் மக்கள் விரோதமாய்த் தொடர்கின்றன.
எனவே நம் நாட்டின் தேர்தல் தேர்தல் ஆணையத்தை இந்த அடிப்படையில் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் முறையை “கொள்கை அடிப்படையில் மாற்றுவது”, தேர்தல் பிரச்சாரத்துக்காக கார்பரேட்டுகளின் கையேந்துவதையும், தனி நபர்களை சார்ந்திருப்பதையும் மாற்றி - தேர்தல் ஆணையமே குறிப்பிட்ட அளவில் அனைவருக்குமான பிரச்சாரத்தை மேற்கொள்வது. லோக்பால் சட்டத்தை அமலாக்குவது என பல கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மக்கள் அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டிருப்பது மற்றொரு காரணமாகும். ஒவ்வொரு கட்சியின் உறுப்பினராகவும் உள்ள ‘பொதுமக்கள்’அரசியல் மயப்பட்டால் – கொள்கை விவாதங்கள் முன்னுக்கு வரும். அப்போது கட்சிகளின் தலைமைகள் கேள்விக்குள்ளாகும். சரியான கொள்கைகள் கவனத்தைப் பெறும்.

ஊழலை ஒழிக்க இதுவே போதுமா??

ஊழலை ஒழிப்பதற்கு இது போதாது. மாறாக ஊழலுக்கு போராட்டக் களத்தை அமைக்க இது உதவியாக இருக்கும். மிகப்பெரும் பண முதலைகளின் கையிலிருக்கும் அரசியல் அதிகாரத்தைக் கேள்வி கேட்பது மட்டுமல்ல, மாற்றியமைப்பதும் இன்றைய தேவை. சாமானியர்களின் நலன்கள் முன்னுக்கு வரச் செய்வது - சாமானியர்களின் பங்களிப்பில்லாத அரசியலால் நடக்காது. மாற்றத்தை தொடங்கி வைப்பபவர்களாகவும் – நாமே இருக்க வேண்டும்.

- சிந்தன் ரா
நன்றி - மாற்று
0 comments

ராஜ்ய சபா தேர்தல் - ஸ்டாலினுக்கு என்ன லாபம்?

ராஜ்யசபா தேர்தலில் கனிமொழியைப் போட்டியிட வைக்கும் திட்டத்துடன் திமுக தலைவர் கருணாநிதி பாமகவின் ஆதரவைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்த நிலையில்,
கூட்டம் ஒன்றில் பேசிய திமுக பொருளாளர் ஸ்டாலின் ''எந்த திராவிடக் கட்சி பாமகவுடன் கூட்டணி அமைக்க அலைந்தது?'' எனப் பேசி கனிமொழிக்குப் பாமக தரவிருந்த ஆதரவுக்குத் தடை போட்டார்.

கனிமொழி எம்.பி ஆவதை ஸ்டாலின் விரும்பாததன் காரணமாகவே பாமகவை வெறுப்பேற்றும் விதமாக ஸ்டாலின் பேசியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் திமுக செயற்குழுக் கூட்டத்தில் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமலே ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் அதிகாரப் பூர்வ வேட்பாளராக ஸ்டாலின் சகிதமாக தலைமைச் செயலகம் சென்று கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்.

கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தவுடன் எதிர்க் கட்சியான தேமுதிகவும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தது. தேமுதிக பொருளாளர் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப் பட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் 4 வேட்பாளர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரின் வெற்றி உறுதி செய்யப் பட்டு விட்ட நிலையில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு எதிர்க் கட்சியான தேமுதிகவும், திமுகவும் மோதுவது இரண்டு கட்சிகளுக்குமே ஒரு வித நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் தேமுதிகவின் பலம் 29. அதில் 7 அதிருப்தி எம்.எல்.ஏ க்களின் வாக்குகள் போக மீதமிருப்பது 22. தேமுதிகவுக்கு உள்ள ஒரே ஆறுதல் அதன் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க 6 மாத காலத் தடை விதிக்கப் பட்ட எம்.எல் ஏ க்களும் வாக்கு அளிக்கலாம் என்ற உத்தரவே. இருப்பினும் 22 வாக்குகள் பதிவாகுமா அல்லது அதிலும் ஒன்றிரண்டு வாக்குகள் குறையுமா என்பது தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியும்.

இந்தத் தேர்தலில் தேமுதிகவை ஓரம் கட்டி திமுக வெற்றி பெறுவதன் மூலம் கனிமொழிக்கு எம்.பி பதவி கிடைக்கும். அதே சமயத்தில் எதிர்க் கட்சியால் ஒரு எம் பி பதவியைக் கைப் பற்ற முடியாத நிலையில் தேமுதிக எதிர்க் கட்சிக்குத் தகுதியான கட்சியா என்ற வாதமும் எழக் கூடும்.

தேமுதிகவுக்கு 22 வாக்குகளோ அல்லது அதற்கும் குறைவான வாக்குகளோ கிடைக்கும் நிலையில் 23 உறுப்பினர்களை வைத்து இருக்கும் திமுக எதிர்க் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்யலாம். அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் சட்டமன்ற கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கக் கூடும்.

இனி காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று பேசிய ஸ்டாலின் தம் ஆதரவாளரான டி.ஆர் பாலுவை டெல்லிக்கு அனுப்பி காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து திமுகவுக்கு காங்கிரசின் ஆதரவைக் கோரியுள்ளார்.

மற்றொரு பக்கம் தாமே அன்புமணியைச் சந்தித்து பாமகவின் 3 உறுப்பினர்களின் ஆதரவைக் கேட்டுள்ளார். மனித நேய மக்கள் கட்சியின் ஆதரவையும் திமுகவுக்கு உறுதிப் படுத்தி விட்டார்.

ஒருவேளை தேமுதிக வேட்பாளர் தம் வேட்புமனுவை வாபஸ் பெற்று விட்டால் கனிமொழி போட்டியில்லாமல் வெற்றி பெறுவார். அவ்வாறில்லாமல் போட்டி இருந்து தேமுதிக தோற்கும் நிலை ஏற்பட்டால் கனிமொழிக்கு எம். பி பதவியும் ஸ்டாலினுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் கிடைக்கலாம்.
0 comments

ராஜ்யசபா தேர்தல்: திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் இருந்து இன்னும் முடிவு இல்லை

மாநிலங்களவைத் தேர்தல்களில் திமுக போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவேதும் எடுக்கப்படவில்லை என திமுக தலைவர் மு கருணாநிதி கூறியிருக்கிறார்.
வியாழனன்று சென்னையில் நடந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னமும் அவகாசம் இருக்கிறது, மற்ற கட்சிகளுடனும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார். வேறு எத்தகவலையும் அவர் அளிக்கவில்லை.
தற்போதைய சூழலில் ஒருவர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட அவருக்கு 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
ஆனால் திமுகவிற்கு சட்டமன்றத்தில் 23 இடங்களே உள்ளன.

தேமுதிக

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
அஇஅதிமுகவுடன் முரண்பட்டு நிற்கும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்திற்கு 29 உறுப்பினர்கள் இருந்தாலும், அவர்களில் ஏழு பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர்.
கட்சி தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், அஇஅதிமுக எதிர்ப்பைத் தீவிரப்படுத்தாமல் மாநிலங்களவைத் தேர்தல்களைப் புறக்கணிக்கலாமா என கட்சித்தலைவர் விஜயகாந்த் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதனால்தானோ என்னவோ தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கோரி திமுக செய்தி அனுப்பியும் அவர் எவ்வித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை என நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த தேர்தல்களில் அஇஅதிமுக கூட்டணியிலிருந்த இன்னொரு கட்சியான (சிபிஎம்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற திமுக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அக்கட்சிக்கு சட்டமன்றத்தில் 10 இடங்கள் உள்ளன. ஆனால் இன்னமும் சிபிஎம்மும் எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை.
சட்டமன்றத்தில் 8 உறுப்பினர்களைக் கொண்ட (சிபிஐ) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தன் நிலை குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

டி ராஜா

சி பி ஐ கட்சியின் டி ராஜா
சி பி ஐ கட்சியின் டி ராஜா
தற்போது பதவிக்காலம் முடிந்த ஆறு தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி ராஜாவும் ஒருவர் . அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட அஇஅதிமுக உதவும் என அக்கட்சி நம்பியது.
இன்றைய கட்டத்தில் ஆளும் அஇஅதிமுகவிற்கு மிக விசுவாசமாக இருக்கும் கட்சியாக அது பார்க்கப்படுகிறது.
ஆனால் அஇஅதிமுகவோ ஐந்து வேட்பாளர்களை நிறுத்திவிட்டது. அவர்களில் நால்வர் அ இஅதிமுக உறுப்பினர்கள் ஆதரவில் வென்றுவிடமுடியும்.
ஐந்தாவது வேட்பாளர் வெல்ல மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.

இந்நிலையில் டி ராஜா வெல்வது மிகக் கடினம். ஆனால் தேமுதிக தேர்தல்களைப் புறக்கணித்தால் வெல்வதற்குத் தேவையான வாக்கு எண்ணிக்கை குறையும். அத்தகைய சூழல் உருவானால் ராஜா போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
0 comments

கூண்டில் அடைபட்டது புலியா? பூனையா?

 ராமதாசை கைது செய்து ரவூடிச  அரசியலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.  

ராமதாஸ் கைது: மும்பை  பால்தாக்ரே போல் தான் கண் அசைத்தால் என்ன நடக்கும் தெரியமா? என்று வீர வசனம் பேசிய ராமதாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கலவரம்: ராமதாஸ் கைது செய்யப்பட்டதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வட தமிழகம் எங்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். 

பாலம் தகர்ப்பு: மரங்களை வெட்டி சாலைகளில் போட்டு பொது அமைதியை கெடுத்தனர். திண்டிவனத்தில் இருந்து புதுவை போகும் வழியில் உள்ள ஒரு பாலத்திற்கு வெடிவைத்து தகர்த்தனர். 

பஸ் உடைப்பு மற்றும் தீக்கிரை: ராமதாஸ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இதுவரை 3 பஸ்களை தீவைத்து கொளுத்தி உள்ளனர். இதுவரை 200 க்கும் அதிகமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் திருவண்ணாமலை அருகில் 50 புதிய டூ வீலர் வாகனங்களை ஏற்றி வந்த வெளிமாநிலத்து கன்டெய்னர் வாகனத்தை  பெட்ரோல் குண்டை வீசி தாக்கி உள்ளனர்.  இதில் வாகனம் தீக்கிரை ஆகி அதன் ஓட்டுனர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளார். 

கருணாநிதியின் கேடுகெட்ட அறிக்கை: பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.  சிங்கள பேரினவாதம் ஈழமக்களை கொல்லும் இப்படி பேசித்தான் அரசியல் நடத்தினார்.

கருணாநிதிக்கு கண்டனம்: ராமதாசுக்கு நாவடக்கும் இல்லாமல் பேசுவது இயல்புதானாம், ராமதாஸின் நாவடக்கம் இல்லாத அடாவாடி பேச்சு அவரோடு நின்றால் பராவயில்லை அது கலவரத்தை உண்டாக்கி உயிர் பழியையும், தீராத பகையையும், பொது சொத்துக்கும் கேடு விளைவித்து இருக்கிறது. மனிதாபிமான அடிப்படையில் விட இவர் விசயத்தில் என்ன இருக்கிறது? 

சரியான தண்டனை: வன்னிய மக்களின் அமைதியை கெடுத்து, அவர்களுக்கு நன்மை செய்யப் போகிறேன் பேர்வழி என்று சொல்லி கருணாநிதி மாதிரி தன் குடும்பத்தை வளர்க்கும் ராமதாசுக்கு இது சரியான தண்டனைதான். இவர் வன்னிய சமூதாய மக்களை மேம்படுத்துவதற்கு பதிலாக அந்த சமூகத்தின் பெயரை சொல்லி  தன் குடும்பத்தை மேம்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற தலைவர்களை மக்கள் புறம்தள்ள வேண்டும். 

மேடையில் வாய் சொல் வீரராக வீர வசனம் பேசினார் ராமதாஸ் இப்பொழுது உள்ளே அடைபட்டதும் அம்மாவை எதிர்த்து ஒரு கருத்து கூட சொல்ல துப்பில்லை.  போதாதற்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த தவறான தகவலால்தான் அம்மா இப்படி செய்திருக்கிறார் என்று புலம்பி இருக்கிறார். கூண்டில் அடைபட்டது  புலி இல்லை பூனை என்பதை நிரூபனமாகி இருக்கிறது. 
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

சத்தியப் பாதையும், சமூக மரியாதையும்


நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். ''நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.) 

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

''எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

''என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.

''என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி­ அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்''

என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?

''என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார். (அல்குர்ஆன் 11:25,31)

மேற்காணும் வசனங்கள் நம்மிடம் படம் பிடித்துக் காட்டுகின்ற செய்தி, சத்தியத்தை முதன்முத­ல் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் எந்த அந்தஸ்தும் இல்லாதவர்கள் தான். சத்தியத்தை ஏற்க மறுப்பவர்கள் சமூக அந்தஸ்தைக் கொண்ட செல்வாக்கு படைத்தவர்கள்.  இவர்கள் தான் சத்தியப் பாதைக்குக் குறுக்கே வந்து நிற்கின்றார்கள் என்பதை மேற்கண்ட வசனங்களில் நாம் காண முடிகின்றது.  நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இதை நாம் காண முடியும்.

பொதுவாக சமூகத்தில் மரியாதை பெற்றிருப்பவர்கள் இந்த மார்க்கத்தில் இணையும் போது அவர்களுக்கு அந்த சமூக அந்தஸ்து, மரியாதை பறி போய் விடும். இதன் காரணமாகவே இவர்கள் சத்தியப் பாதைக்கு வருவதில்லை. அதுமட்டுமின்றி சத்தியத்தையும், அதில் உள்ளவர்களையும் மிகக் கடுமையாக எதிர்க்கத் துவங்கி விடுகின்றார்கள்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் ''எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 34:34)

''இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 23:33)

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் ''எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்'' என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. (அல்குர்ஆன் 43:23)

எனவே சமூக மரியாதை என்பது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த சமூக மரியாதை என்பது செல்வத்தினால் மட்டுமல்லாது இன்னபிற பதவி, பொறுப்புகளின் மூலமாகவும் கிடைக்கும்.

அல்லாஹ் சத்தியப் பாதையில் உள்ளவர்களை பலவிதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கின்றான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் சோதனைகளின் பட்டிய­ல்'பலன்களைப் பறித்தல்' என்ற சோதனையையும் குறிப்பிடுகின்றான்.

இதன்படி ஓர் ஏகத்துவவாதிக்குக் கிடைத்திருக்கும் சமூக மரியாதை என்பது அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட ஒரு பலனாகும். அந்தப் பலனை அந்த ஏகத்துவவாதியிடமிருந்து பறிக்கும் சூழலை அல்லாஹ் உருவாக்குவான். ஏகத்துவமா? அல்லது சமூக மரியாதையா? மார்க்கமா? அல்லது மக்களிடம் கிடைக்கும் அந்தஸ்தா? என்ற ஒரு சோதனையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

இதுபோன்ற கட்டங்களில் ஓர் ஏகத்துவவாதி, தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு ஆபத்து வந்து விட்டால் இந்த சமூக மரியாதையைத் தூக்கி எறிந்துவிட முன் வருவான். இத்தகைய தியாகிகளுக்கு முன்னுதாரணம், அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.

பிறகு, ''1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி மு­தலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால்? அது தாயின் சதோதரர்களின் (சாயலை) ஒத்திருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சற்று முன்பு தான் இது குறித்து ஜிப்ரீல் எனக்குத் தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள், ''வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி நாளின் அடையாளங்களில் முதல் அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களை கிழக்கி­ருந்து மேற்கு திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகளின் முதல் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் சாயலுக்குக் காரணம், ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது, அவனது நீர் முந்தி விட்டால் குழந்தை அவனது சாய­ல் பிறக்கின்றது. பெண்ணின் நீர் முந்திக் கொண்டால் அவளது சாய­ல் பிறக்கின்றது'' என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி), ''தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்கள். பிறகு ''அல்லாஹ்வின் தூதரே, யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்.

அப்போது யூதர்கள் வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) வீட்டினுள் புகுந்து மறைந்து கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (யூதர்களிடம்) ''உங்களில் அப்துல்லாஹ் பின் ஸலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''அவர் எங்களில் ஞானம் மிக்கவரும், எங்களில் அறிவு மிக்கவரின் மகனும் ஆவார். எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், எங்களில் அனுபவமும் விபரமும் மிக்கவரின் மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''அப்துல்லாஹ் (பின் ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் அவரை அதி­லிருந்து காப்பானாக'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) வெளியே வந்து, ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்.

உடனே யூதர்கள், ''இவர் எங்களில் கெட்டவரும், கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்­லி விட்டு அவரைக் குறித்து அவதூறு பேசலானார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: புகாரி 3329

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ர­லி) அவர்களுக்கு யூத சமுதாயத்தில் எத்தகைய மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதை இந்த ஹதீஸி­ருந்து விளங்கலாம். ஆனால் சத்தியம் என்று வருகின்ற போது, அந்த சமூக அந்தஸ்தை, மரியாதையைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

அவ்வாறு சமூக மரியாதையைத் தூக்கி எறிந்து சத்தியப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது, அதுவரை மதிப்பு மரியாதை கொடுத்து வந்தவர்கள் கூட அவரைப் பற்றி அவதூறுகளைக் கூறி, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசத் துவங்கி விடுவதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இதுபோன்ற கட்டத்தில் அவர் இந்த இழப்பிற்காக பொறுமையை மேற்கொள்கின்றார். இத்தகையவர்களுக்கு அல்லாஹ் தன் திருமறை மூலம் ஆறுதல் அளிக்கின்றான்.

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ''நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (அல்குர்ஆன் 2:156,157)

எனவே ஓர் ஏகத்துவவாதி அவனது கொள்கைக்கு, ஏகத்துவத்திற்கு ஆபத்து வருகின்ற போது, அதற்காக அந்தஸ்து, மரியாதை உள்ளிட்ட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்கி விடக் கூடாது.

அப்படி ஒரு தயக்கம் நம்மிடம் வந்து விடுமானால், நம்முடைய அந்தஸ்துகள் நமது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுமானால் அல்லாஹ் வைத்த சோதனையில் தோற்று விட்டதாகத் தான் அர்த்தம். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

நன்றி - tntj துபாய் 
0 comments

சமூகப் பொறுப்புடன் செயல்படுவார்களா ஜாதிய தலைவர்கள்?

டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படும் பாட்டாளி மக்கள் கட்சி ரவுடிச அரசியலில் இறங்கி இருக்கிறது. 

டாக்டர் ஐயா மரம் விட்டு மரம் தாவுவது போல் கட்சி விட்டு கட்சி தாவி அரசியல் நடத்தி தனது மகன் அன்பு மணிக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தார். தமிழக அரசியலில் இரட்டை நாக்கு, பச்சோந்தி என்று செல்லமாக அழைக்கப்படும் அளவுக்கு  வரலாறு படைத்தார்.

இப்பொழுது இவரது ஜம்பிங் அரசியல் எடுபடவில்லை என்றதும் மீண்டும் பின்னோக்கி சென்று ஜாதி வெறி தூண்டி, மரம் வெட்டி கட்சி நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் போலும். இதை 25.04.13 அன்று  இரவு மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மூலம் நிரூபித்திருக்கிறார்.

வன்னிய சமூக மாநாடுகள், இளைஞசர் நிகழ்சிகள் நடத்துவதில் தவறில்லை. ஆனால் அதை நடத்த அவர் செய்த தயாரிப்புகள் ஹிந்துத்துவா பாசிஸ்ட்களின் செயல்பாடுகளோடு இவரை ஒப்பிட வைக்கிறது. தலித் மக்களோடு தங்களுக்குள்ள பிரச்னையை சந்திக்க தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 32 மாவட்டங்களுக்கு பயணம் சென்று பிராமண மற்றும் ஆதிக்க ஜாதி அமைப்புகளை, சங்கங்களை ஒன்று சேர்த்திருக்கிறார். 

அரசியலுக்காக கூட்டு சேரலாம் தவறில்லை ஆனால் தலித் மக்களை ஒடுக்க வேண்டும் என்கிற நோக்கில் அவர்களுக்கெதிராக ஒரு படையை தயாரிப்பது போல் ஆதிக்க ஜாதி அமைப்புகளை ஒன்று சேர்த்திருப்பது ஆபத்தானது. மீண்டும் தமிழகத்தில் ஜாதிய வன்முறைகளை தூபம் போட்டு வளர்க்கவே இது உதவும். ஜாதிய இயக்கங்களும், சங்கங்களும் தங்களது ஜாதி மக்களுக்கு சமூக சேவை செய்வதற்காகவே, அதைவிட்டு தங்களது ஜாதியில் உள்ள உழைக்கும், ஏழை எளிய மக்களை பயன்படுத்தி தங்களை வளர்த்து கொள்வதற்கு அல்ல. 

ராமதாஸ் நடத்திய வன்னிய இளைஞர் பெருவிழாவிற்கு வந்தவர்களில் சிலர்  மரக்காணத்தில் தலித் மக்கள் காலனிக்குள் சென்று வீட்டில் இருந்தவர்களை கண் மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன் சாப்பிட்டதற்கு பணம் கேட்டவர்களை அடித்து  உதைத்துள்ளனர். அப்பாவி தலித் மக்களின் குடிசைகளையும்,  இஸ்லாமியர்களின்   கடைகளையும் தாக்கித் தீ வைத்ததுடன், அரசுப் பேருந்துகளையும் தனியார் வண்டிகளையும் கொளுத்தியுள்ளனர்.  மாநாட்டிற்கு வந்தவர்கள் தாறுமாறாக வண்டி ஓட்டியதில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியாகி உள்ளனர். 

இந்த ஜாதிய தலைவர்கள் குறைந்தபட்சம் தங்களை நம்பி இருக்கும் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை கெடுதலாவது செய்யாமல் இருக்கலாம். ராமதாஸோ, அவரது மகனோ எந்த பிரச்சனைகளையும் சந்திக்க போவதில்லை. இவர்கள் உருவாக்கும் ஜாதிய வேள்வியில் கருகப்போவது என்னவோ உழைக்கும் ஏழை மக்களே. இது ராமதாசுக்கு மட்டுமல்ல ஜாதிய, மத தலைவர்கள் என்று சொல்லி செயல்படும் அனைவருக்கும் பொருந்தும். இதுபோன்ற தலைவர்களுக்கு சமூக பொறுப்புண்டு அதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
நன்றி - சிந்திக்கவும் 
0 comments

தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! (வீடியோ)


தமுமுக தேர்தலில் போட்டியிடாது! அதிரடி முடிவு!! 

தலைப்பை பார்த்து பயந்துவிட வேண்டாம். தமுமுக என்ற இயக்கம் தேர்தலில் போட்டியிடாது, வக்ப் வாரியம் போன்றவற்றில் கூட எந்த பதவியும் வாங்கக்கூடாது என்பது தமுமுகவின் கொள்கையாக இருந்தது. சென்னை வாழ்வுரிமை மாநாட்டிலும் தஞ்சை மாநாட்டிலும் வந்த கூட்டத்தை கண்டு ஆணவம் தலைக்கு ஏறி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்தது தமுமுக. தேர்தலில் நின்று சாதித்துவிடுவோம் என்று சொன்னவர்கள் அம்மாவிற்கும் அய்யாவிற்கும் ஜால்ரா தட்டி காலத்தை கடத்துகிறார்கள்.

கூட்டத்தை கண்டு தான் அரசியல் ஆசை வந்ததா? என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்கும் போது ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மென்று விழுங்குவதையும் அசடு வழிவதையும் கீழ்காணும் வீடியோவில் கண்டு மகிழுங்கள்.

பிஜே அவர்கள் ஆரம்பம் முதல் எந்த நிலைபாட்டில் இருந்தாரோ அதே நிலைபாட்டில் நிலைத்து இருப்பதையும் பாருங்கள்.

அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறோம் என்றவர்கள், அத்தோடு கலந்துவிட்டதை யாரும் மறுக்க மாட்டார்கள். பொய்யர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.

2 comments

அமைச்சர்களின் ஒரு மதிய சாப்பாடு பில் ரூ87,020..! அம்மாடியோவ்!

வறட்சியை பார்க்க போன தமிழக அமைச்சர்களின் ஒருநேர மதிய சாப்பாடு பில் ரூ87,020..! 

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியைப் பார்க்க சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவின் மதிய உணவு செலவு மட்டும் ரூ87ஆயிரத்து 20.. இதை உள்ளாட்சி அமைப்புகள் பகிர்ந்து கொண்டு டிடி அனுப்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவும் பிறப்பித்திருக்கிறார். 

போதுமான பருவமழை இல்லை.. இதனால் தமிழக மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துவிட்டது. வறட்சி பாதித்த பகுதிகளை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான வறட்சி நிவாரணக் குழு பார்வையிட்டு வருகிறது 
இக்குழுவினர் கடந்த 16-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதியில் மட்டும் ஆய்வு செய்துவிட்டு ராமநாதபுரத்துக்கு சென்றனர். 

சிவகங்கையில் இளையான்குடியில் மட்டும் வறட்சியை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினரின் மத்திய உணவு பில் தொகை ரூ87 ஆயிரத்து 20 என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

இந்தத் தொகையை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள், 12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் பகிர்ந்து அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜாராமன் உத்தரவிட்டுள்ளார். 

பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவை தலா ரூ2,417, நகராட்சிகள் தலா ரூ9,670 தொகையை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை என்ற பெயருக்கு டிடி எடுத்து உடனே அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வறட்சியைப் பார்க்க போன அமைச்சர்களின் ஒருநேர சாப்பாடு பில் சுமார் 1 லட்சமா? என்னத்த சொல்றது!! 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger