சவூதி அரேபிய உள்துறை அமைச்சர் இளவரசர் முஹம்மத் பின் நய்ஃப் இத்தகவலை சவூதி ஊடகக் குழுமத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சவூதி ஊடகக் குழுமம் (SPA) குறிப்புப்படி, இதுவரை மழை வெள்ளத்திற்கு 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மூவரைக் காணவில்லை. கடுமையான மழைப் பொழிவு கண்ட ரியாத், அல்பாஹா, ஹைல் வட்டாரங்களில் இந்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தளவு மழை வெள்ளப்பெருக்கு கடந்த 25 வருடங்களில் காணப்படாத ஒன்று என்று சவூதிமக்கள் தெரிவித்துள்ளனர்.
அல்லஹ்யான் பள்ளத்தாக்கில் 4 X 4 வாகனம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதில் அதில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இறப்பைத் தழுவினர். கடந்த வார செவ்வாய் முதல் இவ்வார புதன் இரவு வரை பெய்த மழை காரணமாக, பொதுமக்களிடமிருந்து சுமார் 5,000 முறையீடுகள் வந்துள்ளனவென்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குடிமைப் பாதுகாப்புப் படை வீடுகள், வாகனங்கள் ஆகியவற்றில் புகுந்த வெள்ளத்தினின்றும் சுமார் 937 பேரை காப்பாற்றியுள்ளனர் என்றும், சுமார் 695 குடும்பங்களுக்கு இருப்பிட வசதி செய்தளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நன்றி - இந்நேரம்
Post a Comment