Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கல்வி தகவல்கள். Show all posts
Showing posts with label கல்வி தகவல்கள். Show all posts

ஆசிரியர் தகுதி தேர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு‏.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 23.8.2010க்கு முன் ஆசிரியர் தொடர்பான அறிவிப்பு வெளியாகி சான்றிதழ்சரி பார்க்கப்பட்டு அதன் பின்னர் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும்ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.

ஆனால் இந்த தேதிக்கு பின்னர் ஆசிரியர் தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகிபணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் இத்தேர்வை எழுத வேண்டும் என தேசியஆசிரியர் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆசிரியர் தேர்வுவாரிய பொது தகவல் அலுவலர் இவ்வாறு தெரிவித்துள்ளார்இதன்படி தமிழகத்தில்23.8.2010க்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம்செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர்தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ராஜா முகம்மது
0 comments

2011-12 கல்வியாண்டில்சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகள்‏..

கடந்த 2011-12 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகளின் விபரங்கள் அண்ணாபல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


சிறந்த கல்லூரி எது?
 
 
எந்த அடிப்படையில் கல்லூரியை தேர்வு செய்யலாம்?
 
 
உள்ளிட்ட பலவிதமான கேள்விகளுடன்மாணவர்கள் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கும் நேரம்இந்தகவுன்சிலிங் நேரம்இந்த நேரத்தில்தான்இந்த பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
 
 கடந்த 2011-2012ம் கல்வியாண்டில்அகடமிக் அளவில்எந்தெந்த கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பதைப்பற்றிஅண்ணா பல்கலை வெளியிட்ட பட்டியல்மாணவர்களுக்கு பெரியளவில் உதவியாக இருக்கும் என்றுகருதப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் முடிவெடுப்பது சற்று எளிதாக இருக்கும என்று நம்பப்படுகிறது.
 
 இக்கல்லூரிகள் பற்றிய விபரங்கள் அறிய http://www.annauniv.edu/acaper/acaper.html என்ற வலைதளம் செல்க.
0 comments

ஆர்கிடெக்சர் துறை என்பது என்ன?‏...

நோக்கம் மற்றும்  ஒரு  இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்துமுறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திதிட்டமிடல்வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும்சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால்இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.
 
 ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இருக்கிறதுஇப்படிப்பில் சேரும்பல மாணவர்கள்இரண்டாம் செமஸ்டர் காலத்திற்குள்ளேயேஅப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுவெளியேறி விடுகிறார்கள்இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும் கட்டடத்தைவடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள்மேலும்பல மாணவர்கள் நினைப்பது என்னவெனில்,ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன்தொடர்பானது என்றும் நினைக்கின்றனர்.
 
 மாணவர்கள்இப்படிப்பில் சேர்ந்தவுடன்ஒவ்வொன்றையும் வடிவமைப்பு மற்றும் கருத்துடன் இணைக்கும்போது,தாங்கள் எதிர்பார்த்ததைவிடவித்தியாசமாக உணர்கிறார்கள்கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும்இப்படிப்பை தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களேமுதல் சில வருடங்கள்புத்தாக்க முயற்சிக்கென்று அதிகநேரம் செலவழிக்க வேண்டாம்பொறியியல் படிப்புடன் ஒப்பிடுகையில்இப்படிப்பின் தேர்வு நேரமானதுஅந்தளவு நெருக்கடியானதல்ல. ஆனால்அதேநேரத்தில்இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும்.
 
 இப்படிப்பின் நான்காம் ஆண்டில்ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கிறார்ஆர்கிடெக்சர்துறையைப் பொறுத்தவரை்பெஷலைசேஷன் என்பது பரவலானது.
 
 Sustainable development, Contemporary, Interior designing, Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்துஒருவர் தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம்அதேசமயம்தவறான ஸ்பெஷலைசேஷனைதேர்ந்தெடுத்தால்பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும்தற்போதைய நிலையில், Sustainable architecture எனப்படும்பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது. இப்படிப்பில்5ம் ஆண்டான இறுதியாண்டில்ஆய்வறிக்கையின்வாயிலாகவடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறதுஇந்த நிலையில்ஒருமாணவர்நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை அடைகிறார்.
 
 பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும்இந்தப் படிப்பானதுஎம்.பி.பி.எஸ்.படிப்பைஒத்ததாகும்ஏனெனில்பி.ஆர்க்.நிறைவுசெய்த பிறகுஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில்முதுநிலை படிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்முதுநிலைப் படிப்பென்பது மிகவும் தனித்த அம்சம்கொண்டதுபிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதைவிடஇந்தியாவில்மேற்கொள்வது எளிது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
 
 பி.ஆர்க்.இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு பணிவாய்ப்பை தேடுவதைவிடமுதுநிலைப் படிப்பிற்கு பிறகானபணிவாய்ப்புகளைப் பெறுவது எளிதுஅதேசமயம்இந்தியாவிற்கு திரும்பிவர விரும்பினால்பி.ஆர்க்.மற்றும்எம்.ஆர்க்.படிப்புகளுக்கு இடையிலான சம்பளம் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும். சென்னையைஎடுத்துக்கொண்டால்இங்கே கிடைக்கும் ஊதியம்பெங்களூர்அகமதாபாத் உள்ளிட்ட பிற நகரங்களைவிடநன்றாக இருக்கிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 ஒருவர் ஆர்கிடெக்சர் முடித்துபணியில் சேர்ந்ததுமேநல்ல ஊதியம் பெறலாம் என்ற தவறான கருத்து ஒன்றுஉள்ளதுஆனால்குறைந்தது 10 முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்றுஒரு நல்ல ஆர்கிடெக்டாக தன்னைநிலைநிறுத்திக்கொள்ளும் ஒருவரேசிறப்பான ஊதியம் பெறுகிறார். ஒரு சொந்தமாக தொழில் தொடங்கநினைப்பது நல்லதேஅதேசமயம்சிறிதுகாலம் பிற இடங்களில் பணியாற்றிவிட்டுஓரளவு அனுபவம் பெற்று,அதன்பிறகு சொந்த தொழிலில் இறங்குவதே புத்திசாலித்தனம்.
 
 ஆர்கிடெக்சர் துறையில் பயிற்சி செய்வதென்பதுமருத்துவ துறையில் பயிற்சி செய்வதைப் போன்றதாகும்.துறையில்நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்அதேசமயம்அதுவாழ்க்கை முழுவதற்குமான கற்றல் செயல்பாடாகும்ஆர்கிடெக்ட் பணி என்பதுவெறுமனே கட்டட வரைபடதிட்டங்களை வரைவது மட்டுமேயல்லமாறாகஉங்களின் படைப்புத்திறனையும்ஆர்வத்தையும்வெளிப்படுத்துவதாகும்அப்போதுதான்இத்துறையில் நீடிக்க முடியும்.
 
 இத்துறையானதுஅறிவியலும்வடிவமைப்பும் சேர்ந்த ஒன்றாகும்நீங்கள் உருவாக்கும் வடிவமைப்பின்மூலமாகஉங்களது வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் நீங்கள் பல டிசைன்களைஉருவாக்க வேண்டியிருக்கும்மேலும்உங்களின் வடிவமைப்பு(design) முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை,சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மேற்பார்வையிடுவதும் முக்கியம்.
 
 எனவேஆர்கிடெக்ட் பணி என்பதுசாதாரணமாககாலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் அலுவலகபணி போன்றதோ அல்லது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய தொழிலோ அல்ல. இது ஒரு சந்தோஷமான,புத்தாக்கமானபடைப்புத்திறனுள்ள மற்றும் உயர் பணிபொறுப்புள்ள பணியாகும்.
இத்துறையில் வெற்றியடைய வேண்டுமெனில்தீவிர அர்ப்பண உணர்வுடனும்போட்டிகளை ஜெயிக்கும்வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்குடனும் விளங்க வேண்டும்அப்போதுதான்ஒருவெற்றிகரமான ஆர்கிடெக்டாக நீங்கள் பரிணமித்துஉங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் B.Arch படிப்பிற்கான ராங்க் பட்டியல் வரும்28/06/2013 அன்று வெளியிடப்படும்.

திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது
0 comments

கட்டிடக் கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு‏...

"இன்ஸ்ட்ரக்ட்எனும் நிறுவனத்தால் குறுகிய கால மாலை நேர படிப்பாக கட்டிடக்கட்டுமான மேற்பார்வை மற்றும் நிர்வாக படிப்பு வழங்கப்படுகிறது.
 
 
 
 
இந்த படிப்பில் கட்டிடக் கட்டுமானத்தை மேற்பார்வையிடுவதுசட்டங்கள்,அளவீடுகள்திட்டமிடுதல் போன்றவை பற்றி பாடங்கள் அளிக்கப்படும்.
 
 
தகுதி: பி.இ. சிவில் படித்திருக்க வேண்டும்.
 
 கட்டணம்: 10,900 ரூபாய்
 
காலம்: 11 வாரங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை)
 
விண்ணப்பிக்கும் முறைஆன்-லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
 
 மேலும் கூடுதல் விபரங்களுக்கு  www.instructindia.com என்ற இணையதளத்தைகாணவும்.
0 comments

பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்‏

 பொறியியல் கவுன்சிலிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு விட்ட நிலையில்,கவுன்சிலிங் தொடங்குவதற்கான இறுதி கட்டம் நெருங்கிவிட்டதுஇந்நிலையில்,கவுன்சிலிங் தொடர்பான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளனஜுன் 20 - அகடமிக்பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்.

நடைபெறும் இடம் :

நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.

தொழிற்பிரிவு படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள் :

இவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கிஜுலை 12ம் தேதி வரைநடைபெறுகிறது.

கட்-ஆப் மதிப்பெண் 195.00 என்பதில் தொடங்கி, 88.67 வரை நடைபெறுகிறது.

நடைபெறும் இடம்  :

ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையம்அண்ணா பல்கலைக்கழகம்.

அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்

ஜுன் 21ம்  தேதி தொடங்கிஜுலை 26ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் செயல்பாடுநடைபெறும்.

கட்-ஆப் மதிப்பெண் 199.25 என்பதில் தொடங்கிஜுலை 26ம் தேதி பிற்பகல் 2மணிவரை, கட்-ஆப் 80.00 என்பது வரை நடைபெறுவதோடுஅன்றைய தினம்பிற்பகல் 3.30 வரை, இறுதியாக காத்திருக்கும் மாணவவர்களுக்கும் நடைபெறும்.

நடைபெறும் இடம் :

நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.

விரிவான விபரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளhttp://www.annauniv.edu/tnea2013/schedule.htm
0 comments

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 19 முதல் கலந்தாய்வு‏...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன்19ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர்மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டசிறப்புப் பிரிவினருக்கு ஜூன் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமைகலந்தாய்வுநடத்தப்படுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கல்விஆண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 28,785மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை வெளியிட்டார்.

ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முதல் 7 இடங்களைப்பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199.75 பெற்றுள்ள 3மாணவர்கள் என சிறப்பிடம் பெற்ற 10 பேரின் பெயரை அமைச்சர் கே.சி. வீரமணிஅறிவித்தார்சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org ரேங்க் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ்.இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடத்தவும்இந்திய மருத்துவக் கவுன்சில்அனுமதித்துள்ள கூடுதல் 285 எம்.பி.பி.எஸ். இடங்களுக்குமத்திய அரசு அனுமதிவழங்கியவுடன் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தவும் மருத்துவக் கல்வித் தேர்வுக் குழுதிட்டமிட்டுள்ளது.
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger