|
நோக்கம் மற்றும் ஒரு இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, முறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, திட்டமிடல், வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும். சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால், இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.
ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இருக்கிறது. இப்படிப்பில் சேரும்பல மாணவர்கள், இரண்டாம் செமஸ்டர் காலத்திற்குள்ளேயே, அப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுவெளியேறி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும் கட்டடத்தைவடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள். மேலும், பல மாணவர்கள் நினைப்பது என்னவெனில்,ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன்தொடர்பானது என்றும் நினைக்கின்றனர்.
மாணவர்கள், இப்படிப்பில் சேர்ந்தவுடன், ஒவ்வொன்றையும் வடிவமைப்பு மற்றும் கருத்துடன் இணைக்கும்போது,தாங்கள் எதிர்பார்த்ததைவிட, வித்தியாசமாக உணர்கிறார்கள். கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும்இப்படிப்பை தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களே. முதல் சில வருடங்கள், புத்தாக்க முயற்சிக்கென்று அதிகநேரம் செலவழிக்க வேண்டாம். பொறியியல் படிப்புடன் ஒப்பிடுகையில், இப்படிப்பின் தேர்வு நேரமானதுஅந்தளவு நெருக்கடியானதல்ல. ஆனால், அதேநேரத்தில், இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும்.
இப்படிப்பின் நான்காம் ஆண்டில், ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கிறார். ஆர்கிடெக்சர்துறையைப் பொறுத்தவரை, ஸ்பெஷலைசேஷன் என்பது பரவலானது.
Sustainable development, Contemporary, Interior designing, Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்துஒருவர் தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம். அதேசமயம், தவறான ஸ்பெஷலைசேஷனைதேர்ந்தெடுத்தால், பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். தற்போதைய நிலையில், Sustainable architecture எனப்படும்பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது. இப்படிப்பில், 5ம் ஆண்டான இறுதியாண்டில், ஆய்வறிக்கையின்வாயிலாக, வடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலையில், ஒருமாணவர், நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை அடைகிறார்.
பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும். இந்தப் படிப்பானது, எம்.பி.பி.எஸ்., படிப்பைஒத்ததாகும். ஏனெனில், பி.ஆர்க்., நிறைவுசெய்த பிறகு, ஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில்முதுநிலை படிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். முதுநிலைப் படிப்பென்பது மிகவும் தனித்த அம்சம்கொண்டது. பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதைவிட, இந்தியாவில்மேற்கொள்வது எளிது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
பி.ஆர்க்., இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு பணிவாய்ப்பை தேடுவதைவிட, முதுநிலைப் படிப்பிற்கு பிறகானபணிவாய்ப்புகளைப் பெறுவது எளிது. அதேசமயம், இந்தியாவிற்கு திரும்பிவர விரும்பினால், பி.ஆர்க்., மற்றும்எம்.ஆர்க்., படிப்புகளுக்கு இடையிலான சம்பளம் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும். சென்னையைஎடுத்துக்கொண்டால், இங்கே கிடைக்கும் ஊதியம், பெங்களூர், அகமதாபாத் உள்ளிட்ட பிற நகரங்களைவிடநன்றாக இருக்கிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவர் ஆர்கிடெக்சர் முடித்து, பணியில் சேர்ந்ததுமே, நல்ல ஊதியம் பெறலாம் என்ற தவறான கருத்து ஒன்றுஉள்ளது. ஆனால், குறைந்தது 10 முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்று, ஒரு நல்ல ஆர்கிடெக்டாக தன்னைநிலைநிறுத்திக்கொள்ளும் ஒருவரே, சிறப்பான ஊதியம் பெறுகிறார். ஒரு சொந்தமாக தொழில் தொடங்கநினைப்பது நல்லதே. அதேசமயம், சிறிதுகாலம் பிற இடங்களில் பணியாற்றிவிட்டு, ஓரளவு அனுபவம் பெற்று,அதன்பிறகு சொந்த தொழிலில் இறங்குவதே புத்திசாலித்தனம்.
ஆர்கிடெக்சர் துறையில் பயிற்சி செய்வதென்பது, மருத்துவ துறையில் பயிற்சி செய்வதைப் போன்றதாகும்.துறையில், நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், அதுவாழ்க்கை முழுவதற்குமான கற்றல் செயல்பாடாகும். ஆர்கிடெக்ட் பணி என்பது, வெறுமனே கட்டட வரைபடதிட்டங்களை வரைவது மட்டுமேயல்ல, மாறாக, உங்களின் படைப்புத்திறனையும், ஆர்வத்தையும்வெளிப்படுத்துவதாகும். அப்போதுதான், இத்துறையில் நீடிக்க முடியும்.
இத்துறையானது, அறிவியலும், வடிவமைப்பும் சேர்ந்த ஒன்றாகும். நீங்கள் உருவாக்கும் வடிவமைப்பின்மூலமாக, உங்களது வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் நீங்கள் பல டிசைன்களைஉருவாக்க வேண்டியிருக்கும். மேலும், உங்களின் வடிவமைப்பு(design) முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை,சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மேற்பார்வையிடுவதும் முக்கியம்.
எனவே, ஆர்கிடெக்ட் பணி என்பது, சாதாரணமாக, காலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் அலுவலகபணி போன்றதோ அல்லது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய தொழிலோ அல்ல. இது ஒரு சந்தோஷமான,புத்தாக்கமான, படைப்புத்திறனுள்ள மற்றும் உயர் பணிபொறுப்புள்ள பணியாகும்.
இத்துறையில் வெற்றியடைய வேண்டுமெனில், தீவிர அர்ப்பண உணர்வுடனும், போட்டிகளை ஜெயிக்கும்வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்குடனும் விளங்க வேண்டும். அப்போதுதான், ஒருவெற்றிகரமான ஆர்கிடெக்டாக நீங்கள் பரிணமித்து, உங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் B.Arch படிப்பிற்கான ராங்க் பட்டியல் வரும்28/06/2013 அன்று வெளியிடப்படும். - திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது |
Latest Post
Showing posts with label படிப்பு. Show all posts
Showing posts with label படிப்பு. Show all posts
கல்வி தகவல்கள்,
படிப்பு
ஆர்கிடெக்சர் துறை என்பது என்ன?...
Labels:
கல்வி தகவல்கள்,
படிப்பு
பிரபலமானவை
-
நாம் வளர்த்த இயக்கம் சமுதாய, அரசியல் ரீதியான பிரச்சனைகளில் தலையிடாமல் தூரப் போனது. வெளிவந்தவுடன் சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகள...
-
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்...
-
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا مَرَّ بِالنُّطْفَةِ ثِنْتَانِ وَأَرْبَعُونَ لَيْلَةً بَعَث...
-
சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற 6 ராஜ்யசபா எம்.பி.களுக்கான தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் பிற்பகலில் வாக்...
-
கமல் ஹாஸன் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படம் உலகளாவிய முஸ்லிம் மக்களிடம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தமையை அடுத்து, இந்தியாவ...
-
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பான சகோதர,சகோதரிகளே இதோ ஒரு இஸ்லாமிய கேள்வி-பதில் .....இந்த நபித்தோழரை ப் பற்றி தெரிந்து கொள்வோம்.... ...
-
கண்ணியத்துக்குரிய வல்ல நாயன் தன் திருமறையில்: அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே! (அல்குர்ஆன் 3:19) மேலும்,இஸ்லாம் அல்லாத மார்க...
-
மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு கம்ப்யூட்டர் படிப்புகளை கோடை விடுமுறையில் படித்துப் பயன்பெறலாம் .... ...
-
உலகின் முதல் எட்டு பெரும் பொருளாதார நாடுகளுடைய குழுவான ஜி-8 மாநாட்டுக்காக அந்நாடுகளுடைய தலைவர்கள் வட அயர்லாந்தில் கூடியுள்ளனர். அவர்கள் வி...
-
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’– Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் ...


