ஆர்கிடெக்சர் துறை என்பது என்ன?‏...

நோக்கம் மற்றும்  ஒரு  இடத்தின் சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்துமுறையான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திதிட்டமிடல்வடிவமைத்தல் மற்றும் கட்டடம் கட்டுதல் ஆகிய செயல்களை மேற்கொள்ளல் ஆர்கிடெக்சர் எனப்படும்சிறப்பான வீடு மற்றும் பணியாற்றும் இடம் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் விரும்புவதால்இந்தத் துறையானது பெரியளவில் வளர்ந்து வருகிறது.
 
 ஆர்கிடெக்சர் என்பது இன்றைய நிலையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக இருக்கிறதுஇப்படிப்பில் சேரும்பல மாணவர்கள்இரண்டாம் செமஸ்டர் காலத்திற்குள்ளேயேஅப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டுவெளியேறி விடுகிறார்கள்இதற்கு முக்கிய காரணம் ஆர்கிடெக்சர் என்பதை வெறும் கட்டடத்தைவடிவமைக்கும் பணி என்று நினைத்து விடுகிறார்கள்மேலும்பல மாணவர்கள் நினைப்பது என்னவெனில்,ஆர்கிடெக்சர் என்பது அதிகம் அறிவியல் சம்பந்தப்பட்டதல்ல என்றும் அது பெருமளவில் கலைத்திறன்தொடர்பானது என்றும் நினைக்கின்றனர்.
 
 மாணவர்கள்இப்படிப்பில் சேர்ந்தவுடன்ஒவ்வொன்றையும் வடிவமைப்பு மற்றும் கருத்துடன் இணைக்கும்போது,தாங்கள் எதிர்பார்த்ததைவிடவித்தியாசமாக உணர்கிறார்கள்கணிதத்திறன் உள்ள ஒவ்வொருவரும்இப்படிப்பை தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்தவர்களேமுதல் சில வருடங்கள்புத்தாக்க முயற்சிக்கென்று அதிகநேரம் செலவழிக்க வேண்டாம்பொறியியல் படிப்புடன் ஒப்பிடுகையில்இப்படிப்பின் தேர்வு நேரமானதுஅந்தளவு நெருக்கடியானதல்ல. ஆனால்அதேநேரத்தில்இப்படிப்பில் பலவிதமான பணிகள் நிறைந்திருக்கும்.
 
 இப்படிப்பின் நான்காம் ஆண்டில்ஒரு மாணவர் ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கிறார்ஆர்கிடெக்சர்துறையைப் பொறுத்தவரை்பெஷலைசேஷன் என்பது பரவலானது.
 
 Sustainable development, Contemporary, Interior designing, Architectural photography உள்ளிட்ட பலவிதமான பிரிவுகளிலிருந்துஒருவர் தனது ஸ்பெஷலைசேஷனை தேர்ந்தெடுக்கலாம்அதேசமயம்தவறான ஸ்பெஷலைசேஷனைதேர்ந்தெடுத்தால்பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும்தற்போதைய நிலையில், Sustainable architecture எனப்படும்பசுமை கட்டடக்கலை பிரபலமாகி வருகிறது. இப்படிப்பில்5ம் ஆண்டான இறுதியாண்டில்ஆய்வறிக்கையின்வாயிலாகவடிவமைப்பு தொடர்பான முழு சுதந்திரம் மாணவர்களுக்கு கிடைக்கிறதுஇந்த நிலையில்ஒருமாணவர்நிபுணத்துவம் பெற்ற ஆர்கிடெக்ட் என்ற நிலையை அடைகிறார்.
 
 பி.ஆர்க் முடித்தவுடன் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும்இந்தப் படிப்பானதுஎம்.பி.பி.எஸ்.படிப்பைஒத்ததாகும்ஏனெனில்பி.ஆர்க்.நிறைவுசெய்த பிறகுஒருவர் ஏதேனும் ஒரு ஸ்பெஷலைசேஷனில்முதுநிலை படிப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும்முதுநிலைப் படிப்பென்பது மிகவும் தனித்த அம்சம்கொண்டதுபிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் முதுநிலைப் படிப்பை மேற்கொள்வதைவிடஇந்தியாவில்மேற்கொள்வது எளிது என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறுகிறார்கள்.
 
 பி.ஆர்க்.இளநிலைப் படிப்பை முடித்துவிட்டு பணிவாய்ப்பை தேடுவதைவிடமுதுநிலைப் படிப்பிற்கு பிறகானபணிவாய்ப்புகளைப் பெறுவது எளிதுஅதேசமயம்இந்தியாவிற்கு திரும்பிவர விரும்பினால்பி.ஆர்க்.மற்றும்எம்.ஆர்க்.படிப்புகளுக்கு இடையிலான சம்பளம் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும். சென்னையைஎடுத்துக்கொண்டால்இங்கே கிடைக்கும் ஊதியம்பெங்களூர்அகமதாபாத் உள்ளிட்ட பிற நகரங்களைவிடநன்றாக இருக்கிறது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 ஒருவர் ஆர்கிடெக்சர் முடித்துபணியில் சேர்ந்ததுமேநல்ல ஊதியம் பெறலாம் என்ற தவறான கருத்து ஒன்றுஉள்ளதுஆனால்குறைந்தது 10 முதல் 15 வருடங்கள் அனுபவம் பெற்றுஒரு நல்ல ஆர்கிடெக்டாக தன்னைநிலைநிறுத்திக்கொள்ளும் ஒருவரேசிறப்பான ஊதியம் பெறுகிறார். ஒரு சொந்தமாக தொழில் தொடங்கநினைப்பது நல்லதேஅதேசமயம்சிறிதுகாலம் பிற இடங்களில் பணியாற்றிவிட்டுஓரளவு அனுபவம் பெற்று,அதன்பிறகு சொந்த தொழிலில் இறங்குவதே புத்திசாலித்தனம்.
 
 ஆர்கிடெக்சர் துறையில் பயிற்சி செய்வதென்பதுமருத்துவ துறையில் பயிற்சி செய்வதைப் போன்றதாகும்.துறையில்நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்அதேசமயம்அதுவாழ்க்கை முழுவதற்குமான கற்றல் செயல்பாடாகும்ஆர்கிடெக்ட் பணி என்பதுவெறுமனே கட்டட வரைபடதிட்டங்களை வரைவது மட்டுமேயல்லமாறாகஉங்களின் படைப்புத்திறனையும்ஆர்வத்தையும்வெளிப்படுத்துவதாகும்அப்போதுதான்இத்துறையில் நீடிக்க முடியும்.
 
 இத்துறையானதுஅறிவியலும்வடிவமைப்பும் சேர்ந்த ஒன்றாகும்நீங்கள் உருவாக்கும் வடிவமைப்பின்மூலமாகஉங்களது வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது மிகவும் முக்கியம் மற்றும் நீங்கள் பல டிசைன்களைஉருவாக்க வேண்டியிருக்கும்மேலும்உங்களின் வடிவமைப்பு(design) முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை,சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மேற்பார்வையிடுவதும் முக்கியம்.
 
 எனவேஆர்கிடெக்ட் பணி என்பதுசாதாரணமாககாலையில் சென்று மாலையில் வீடு திரும்பும் அலுவலகபணி போன்றதோ அல்லது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு எளிய தொழிலோ அல்ல. இது ஒரு சந்தோஷமான,புத்தாக்கமானபடைப்புத்திறனுள்ள மற்றும் உயர் பணிபொறுப்புள்ள பணியாகும்.
இத்துறையில் வெற்றியடைய வேண்டுமெனில்தீவிர அர்ப்பண உணர்வுடனும்போட்டிகளை ஜெயிக்கும்வகையிலான திறன்களை வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்குடனும் விளங்க வேண்டும்அப்போதுதான்ஒருவெற்றிகரமான ஆர்கிடெக்டாக நீங்கள் பரிணமித்துஉங்களின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் B.Arch படிப்பிற்கான ராங்க் பட்டியல் வரும்28/06/2013 அன்று வெளியிடப்படும்.

திருத்துறைப்பூண்டி ராஜா முகம்மது
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger