Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 19 முதல் கலந்தாய்வு‏...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன்19ம் தேதி முதல்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.

விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குவோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டசிறப்புப் பிரிவினருக்கு ஜூன் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வுநடத்தப்படுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் இந்தக் கல்விஆண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 28,785மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை வெளியிட்டார்.

ரேங்க் பட்டியலில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முதல் 7 இடங்களைப்பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 199.75 பெற்றுள்ள 3மாணவர்கள் என சிறப்பிடம் பெற்ற 10 பேரின் பெயரை அமைச்சர் கே.சி. வீரமணிஅறிவித்தார். சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org ரேங்க் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ்.இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடத்தவும், இந்திய மருத்துவக் கவுன்சில்அனுமதித்துள்ள கூடுதல் 285 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, மத்திய அரசு அனுமதிவழங்கியவுடன் தொடர்ந்து கலந்தாய்வு நடத்தவும் மருத்துவக் கல்வித் தேர்வுக் குழுதிட்டமிட்டுள்ளது.
0 comments

ப்ளஸ் 1ல் Group IV க்ரூப்‏....

இலக்குகளை நிர்ணயித்துப் படித்தால், சமூகத்தில் உயரிய இடத்தைப் பிடிக்கவழிவகுப்பது க்ரூப்-IV.
 
வரலாறு, பொருளியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களைக்கொண்ட இந்தக்ரூப்பில் பொலிடிக்கல் சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ்ஃபார் கம்யூனிகேஷன்ஸ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், அட்வான்ஸ்டுலாங்வேஜ் தமிழ் ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
 

''பொதுவாக, மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இந்தக்ரூப் வழங்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் மிக உயர்ந்த நிலையைஅடைவதற்கான அடித்தளம் இதிலே கிடைக்கும் என்பதையும் மனதில்கொள்ளவேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களும் தாராளமாக இந்த க்ரூப்பைப்பரிசீலிக்கலாம். தங்களுக்கான சரியான இலக்கை நிர்ணயித்துக்கொண்டு,அதையட்டிப் படித்து பல பேர் சாதித்து இருக்கிறார்கள்.
 

 பொலிட்டிக்கல் சயின்ஸை விருப்பப் பாடமாகச் சேர்த்துப் படிப்பவர்கள், அரசியல்மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகளைப் படித்து, அந்தத் துறைகளில் சிறந்து விளங்கவாய்ப்புள்ளது. பொருளியல் சார்ந்த படிப்புகள் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்விநிறுவனங்களில் உள்ளன. அருங்காட்சியகம் சார்ந்த பணிகள், சுற்றுச்சூழல் மற்றும்புவியியல் சார்ந்த படிப்புகள் என இந்த க்ரூப் மாணவர்களுக்கு கல்வி மற்றும்வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் ஆசிரியர்படிப்புகளுக்கும் ஏற்றது இது.


மேலும், நம் பொது அறிவை வெகுவாக வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் இந்தப்பிரிவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கடுமையான முயற்சிகள் செய்தால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். தேர்வுகளில் வெற்றியாளராக வலம் வர முடியும்.இலக்கியம் மற்றும் இதழியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு நல்லமதிப்பெண்களுடன் அடுத்த கட்டத்துக்குச் செல்லவும் உதவும். எனவே, தங்களதுஎதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு, அதற்குப் பயன்படும் வகையில் இந்தப்பிரிவைப் பயன்படுத்துவது அவசியம்.

TNTJSW 

0 comments

ப்ளஸ் 1ல் Group III க்ரூப்‏.....

டாக்டர், இன்ஜினீயர் படிப்பு மட்டும்தானா மதிப்பு மிக்கது? இந்த இரண்டுக்கும்இணையாக பல துறைகள் இருக்கின்றன. அதற்கு அடித்தளமாக இருக்கிறதுமூன்றாவது க்ரூப் (Group III).
 

கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய கட்டாயப்பாடங்களையும், வணிக கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், இங்கிலீஷ்ஃபார் கம்யூனிகேஷன்ஸ், வரலாறு, பொலிட்டிகல் சயின்ஸ், எதிக்ஸ் அண்ட்இந்தியன் கல்ச்சர் மற்றும் அட்வான்ஸ்டு லாங்குவேஜ் (தமிழ்) ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாகவும் கொண்டதே இந்தப் பிரிவு.

 
 ''பொதுவாக, கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் ஆர்வம் இல்லாத மாணவர்கள்மூன்றாவது க்ரூப்பைப் பரிசீலிப்பார்கள். ஆனால், கணக்குப்பதிவியல் என்ற பாடம்இருப்பதால், அவர்களில் பலருக்கும் தயக்கம் இருக்கும். வழக்கமான கணிதத்துக்கும்,கணக்குப்பதிவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் பாடத்தில் கூட்டல்மற்றும் கழித்தல் கணக்குகள் மட்டுமே துணைபுரியும். மற்ற எந்தக் கணக்குகளுக்கும்இதில் தொடர்பு இல்லை. 

வியாபார அமைப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுத் துறை அமைப்புகள் எனஅனைத்து இடங்களிலும் வரவு - செலவு ஏடுகள் முறைப்படி பராமரித்து வரவேண்டும். இந்தக் கணக்குகளை முறைப்படி கணக்கேடுகளில் எழுதுவதற்கு சிறப்புத்தேர்ச்சியும், வியாபாரச் சட்டங்கள் சார்ந்த அறிவும் தேவை. அதைத்தான்கணக்குப்பதிவியல் மற்றும் வணிகவியல் பாடப் பிரிவுகள் சொல்லித்தருகின்றன.

இந்தப் பிரிவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பல முன்னணி நிறுவனங்களில்வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பி.காம், எம்.காம் போன்ற பட்டப்படிப்பில்பயின்று பட்டம் பெற்று, தொடர்புகொள்ளும் திறனை (Communication Skills)வளர்த்துக்கொள்பவர்களுக்கு, உள்ளூரில் தொடங்கி உலக நாடுகள் வரை உயர்பதவிகள் காத்திருக்கின்றன.

வணிகவியல் பிரிவில் கற்கும் திறமையுள்ள மாணவர்கள், சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஏ.சி.எஸ்.  போன்ற பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று உயர் பதவிகளை வகிக்கமுடியும். இந்தப் படிப்புகளுக்கு டாக்டர், இன்ஜினீயர் படிப்புகள்போல் அதிக செலவுகள்ஆகாது என்பது மற்றொரு சிறப்பு. பொருளியலும் முக்கியப் பாடமாக இருப்பதால்,பிற்காலத்தில் போட்டித் தேர்வுகளில் அசத்த முடியும். நிர்வாகம், வணிகவியல்சார்ந்த துறைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் நிகழ்வதால், நீங்கள் ப்ளஸ்-2முடிப்பதற்குள் இன்னும் புதுப்புது உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்படவும்வாய்ப்பு உண்டு.
 

எனவே, நீங்கள் க்ரூப்-1, க்ரூப்-2 பிரிவுகளில் சேர்வதற்குத் தேவையான அதிகமதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வணிகவியல், கணக்குப்பதிவியல் முதலானபாடங்களில் ஆர்வம் இருந்தால், தாராளமாக இந்தக் க்ரூப்பைத் தேர்வு செய்ய்யலாம்.

TNTJSW 
0 comments

ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்? - தொழில் கல்வி பயில விரும்புவோருக்கு..!‏

தொழில் கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியிலேவொகேஷனல் க்ரூப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பயன்பெற வாய்ப்பு உள்ளது.


''தற்போது தமிழகத்தில் 1,605 மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகின்றன. ஒன்பது தொழில் கல்விப் பாடங்கள் 2010-11 கல்விஆண்டு முதல் 11-ம் வகுப்பில் இருந்தும், 2011-12 கல்வி ஆண்டில் இருந்து 12-ம்வகுப்புக்கும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அந்த ஒன்பது பாடப் பிரிவுகள்:

1. பொது இயந்திரவியல் (General Machinist)

2. மின் இயந்திரங்களும், சாதனங்களும்  (Electrical Machines and Appliances)

3. மின்னணு சாதனங்கள் (Electronic Equipments)

4. துணிகளும் ஆடை வடிவமைத்தலும் (Textiles and Dress Designing)

5. வேளாண் செயல்முறைகள் (Agricultural Practices)

6. உணவு மேலாண்மையும் குழந்தை நலனும் (Food Management and Child Care)

7. செவிலியர் துறை (Nursing)

8. கட்டடப் பட வரைவாளர் (Draughtsman Civil)

9. அலுவலக மேலாண்மை (Office Secretaryship)

இந்தப் பாடப் பிரிவுகளில் வேளாண் செயல்முறைகள் என்ற புதிய பாடப் பிரிவு  தமிழ்வழியிலும், இதரப் பாடப் பிரிவுகளைத் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் நடத்தப்படுகிறது. ஒன்பது பாடத் திட்டங்களுடன் பழைய பாட திட்டத்தின்படி உள்ள மூன்று பாடப் பிரிவுகள் தொடரும் என அரசு தெரிவித்துள்ளது. கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகியவையே அந்தப் பாடத் திட்டங்கள்.

தொழில் கல்வி பயின்றால்...
* பத்தாம் வகுப்புக்குப் பிறகு, ப்ளஸ்-1ல் தொழில் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், அனைத்துப் பிரிவு மாணவர்களைப் போல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி பெற முடியும்.

* தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் கல்வி பெற, 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

* தொழில் கல்விப் பிரிவில் பொது இயந்திரவியல், மின் இயந்திரங்களும் சாதனங்களும், மின்னணு சாதனங்கள், கட்டடப் பட  வரைவாளர், ஆட்டோ மெக்கானிக் படிக்கும் மாணவர்கள், பொறியியலில் லேட்ரல் என்ட்ரி (Lateral entry) எனப்படும் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்புள்ளது.

* பொறியியல் கல்வி எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தால் 10 சதவிகித இடங்கள் அளிக்கப்படுகின்றன. தொழில் கல்வி மாணவர்களுக்குத்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலில் நேர்காணல் நடத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

* இந்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சித் துறையின் மூலம் தொழில் பழகுநர் பயிற்சிச் சட்டப்படி, ஒரு வருடம் உதவித்தொகையுடன் பயிற்சி பெற வாய்ப்புள்ளது.

* தொழிற்கல்வி மாணவர்கள், இந்திய அரசால் தொழில் பழகுநர் பயிற்சியை ஓர் ஆண்டுக்கு 9000 மாத உதவித்தொகையுடன் பெற முடியும். அதன்பின், பெரிய நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

* சுய தொழில் செய்யவும், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறவும் தொழில் கல்வி மாணவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

* வேளாண் செயல்முறைகள் என்ற விவசாயப் பாடத்தினை எடுத்துப் படிக்கும் மாணவர்கள், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப் படிப்புகள் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

* செவிலியர் துறை, உணவு மேலாண்மை, குழந்தை நலன், ஆடை வடிவமைத்தல் என்ற பாடப் பிரிவினை அதிக அளவில் பெண்கள் எடுத்துப் படிக்கின்றனர். அவர்கள் இதன்மூலம் மேல்படிப்புப் பெறவும், சுய தொழில் செய்யவும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அனைத்து மாணவர்களும் ஒரே விதமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்காமல், அவரவர் விருப்பப்படி பல்வேறு பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்''

- சுட்டி விகடன்
TNTJSW 
0 comments

ஒன்றரை லிட்டர் ‘அபூர்வ’ வாட்டர் பாட்டில் ஏலம்: லட்ச ரூபாயையும் தாண்டி சாதனை

துபாய்: 'துபாய் கேர்ஸ்' என்ற தொண்டு நிறுவனம், ஏழை நாடுகளில் வாடும் குழந்தைகளின் கல்விக்காக அதிக இயற்கை தாதுக்கள் நிறைந்த வாட்டர் பாட்டில் ஒன்றை ஏலத்தில் விட்டுள்ளது.
குபாயில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான ‘துபாய் கேர்ஸ்', குழந்தைகளின் கல்விக்காக அதிக நிதியுதவி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஏழை நாடுகளில் வாழும் குழந்தைகள் மீது அதிக அக்கறையுடன் நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. 
இந்நிலையில் சமீபத்த்ஹில், அதிக இயற்கைத் தாதுக்கள் நிரம்பிய ‘மாசாபி' என்ற 1.5 லிட்டர் வாட்டர் பாட்டிலை ஆன்லைனில் ஏலத்தில் விட்டுள்ளது துபாய் கேர்ஸ். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கல்வித் தொண்டிற்காக செலவிடப்போவதாக முன்கூட்டியே துபாய் கேர்ஸ் அறிவித்து விட்டதால் இந்த வாட்டர் பாட்டிலை வாங்க கடும் போட்டி நிலவுகிறது.
ரூ 24க்கு தொடங்கிய ஏலம், சில நாட்களுக்கு முன்னர் ஒரு லட்ச ரூபாயில் வந்து நின்றது.இம்மாதக் கடைசி வரை இந்த ஏலம் நடைபெறும் என்பதால் ஏலத்தொகை உயர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட இருக்கும் வாட்டர் பாட்டில் இதுவாகத்தானிருக்கும் என ஏல நிறுவனத்தினர் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.
0 comments

ஜூன் 17-ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள்

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்களுக்கானஆசிரியர் தகுதித் தேர்வு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 17-ஆம் தேதியிலிருந்துவழங்கப்படும்.

இரண்டு நாட்கள் தேர்வு
பணி நியமனத்தில் புதிய முறை
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பம்

மத்திய அரசின் கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுகட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான முதல் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் இரண்டாவது தேர்வு கடந்த அக்டோபர் மாதத்திலும் நடைபெற்றது. தற்போது, வருகிற ஆகஸ்ட் 17, 18தேதிகளில்மீண்டும் தேர்வு நடைபெறும் என்று இத்தேர்வை நடத்தும் ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 66 கல்வி மாவட்ட தலைமையிடங்களில் இத்தேர்வு நடைபெறும்.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள, கடந்த ஆண்டுக்கான காலிப் பணி இடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் உள்பட மொத்தம் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் பணி இடங்கள் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டு முதல், பணி நியமன முறையில் புதியமுறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில்  60 சதவீதமும் அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவர். அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதையடுத்து, தகுதியுடையவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள்வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, ஆசிரியர் காலிப் பணி இடங்களை நிரப்புதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிடும்.  தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது தகுதித் தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் டூ, பட்டப் படிப்பு, பிஎட் மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குட்பட்டு, மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தத் தகுதித் தேர்வை யார் எழுதலாம்?

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 23-8-2010 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத வேண்டும். 23-08-2010-க்கு, அதாவது தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) அறிவிக்கைக்கு முன்னதாக, நியமன நடவடிக்கை தொடங்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சுயநிதிப் பள்ளிகளில் குறைந்தபட்சத் தகுதி இல்லாமல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் உரிய தகுதி பெற வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் தங்களது தகுதி மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள விரும்பினால் இத்தேர்வை மீண்டும் எழுதலாம்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை  ஆசிரியராகப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளை எழுத வேண்டும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் தகுதித் தேர்வின் இரண்டாவது தாளை எழுத வேண்டும். இத்தேர்வு எழுத விரும்புபவர்கள், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இளநிலைப் பட்டம் அல்லது அதற்கு நிகரான இளநிலைப் பட்டமும் (அதாவது பத்தாம் வகுப்பு படித்து விட்டு பிளஸ் டூ படித்து மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டம்) பெற்றிருக்க வேண்டும்). அத்துடன் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும். நடப்புக் கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ மற்றும் பி.எட். இறுதித் தேர்வு எழுதும் மாணவர்களும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் இந்தத் தகுதித் தேர்வின் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.

இந்தத் தேர்வு எப்படியிருக்கும்?

அப்ஜெக்ட்டிவ் முறையிலான இந்தத் தேர்வில் மொழிப்பாடங்கள் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களின் வினாக்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக விரும்புபவர்களுக்கான தகுதித் தேர்வு அதாவது முதல் தாள், மூன்று மணி நேரம் நடைபெறும். குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (6-லிருந்து 11 வயது வரை), மொழி-1 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது), மொழி-2 (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்து தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் இருக்கும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்படாது. ஆறு வயதிலிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் தொடர்பான கல்வி உளவியலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை குறித்த கேள்விகள் இருக்கும். மொழி-1 பிரிவின் கீழ் எந்த மொழியில் மாணவர்களுக்காகக் கற்பிக்கிறோமோ அந்த மொழியில் ஆசிரியர்களின் திறன் சோதனை செய்யப்படும். மொழி-2 பிரிவில் ஆங்கில மொழி அடிப்படைகள், கம்யூனிக்கேஷன், காம்ப்ரிஹென்சன் எலிஜிபிலிட்டீஸ் போன்றவற்றை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய பாடங்களில் கோட்பாடுகள், தீர்வு காணும் திறன், பாடங்களைப் புரிந்து கொண்டு கற்பிக்கும் முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கப்படும். ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டப்படி உள்ள பாடங்களின் அடிப்படையில் கேள்விகள் இருக்கும். ஆனாலும் செகண்டரி நிலை வரை தொடர்புடைய விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படலாம்.

ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக விரும்புபவர்கள் இத்தேர்வின் இரண்டாம் தாளை எழுத வேண்டும். இதிலும் 150 கேள்விகள் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லை. இந்தத் தேர்வுக்கும் 3 மணி நேரம் வழங்கப்படும். குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை குறித்து 30 கேள்விகள் கேட்கப்படும். 11 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் வகையில் இந்தக் கேள்விகள் இருக்கும். இதுதவிர, மொழி-1 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது) மொழி-2 (ஆங்கிலம்) ஆகிய பாடங்களிலிருந்து தலா 30 கேள்விகள் கேட்கப்படும். மொழி-1 பிரிவில் எந்த மொழியில் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்களோ அந்த மொழியில் ஆசிரியர்களின் திறன் சோதனை செய்யப்படும். மொழி-2 பிரிவில் ஆங்கில மொழியின் அடிப்படைகள், கம்யூனிக்கேஷன், காம்ப்ரிஹென்சன் எலிஜிபிலிட்டீஸ் போன்றவற்றை சோதனை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கும். இந்த மூன்று பிரிவுகளும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயமானது. கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியராக விரும்பும் ஆசிரியர்களுக்கு கணிதம், அறிவியலில் 60 கேள்விகள் கேட்கப்படும். சமூக அறிவியல் ஆசிரியராக விரும்பும் ஆசிரியர்களுக்கு சமூக அறிவியலில் 60 கேள்விகள் கேட்கப்படும். மற்ற ஆசிரியர்கள் இந்த இரண்டில் ஒரு பிரிவில் உள்ள கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டியதிருக்கும். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேள்விகள் அமையும். மேல்நிலைக் கல்வி வரை இது தொடர்புள்ள விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்படலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 17-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து வழங்கப்படும். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து, விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். முதல் தாளை எழுதுவதற்கும் இரண்டாம் தாளை எழுதுவதற்கும் தனித்தனி விண்ணப்பங்களைப் பயன்படுத்த வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் கொடுக்கப்பட்டுள்ள செலானை பூர்த்தி செய்து, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒரு வங்கியில் இத்தேர்வுக்கான ரூ.500 கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250. கட்டணம் செலுத்திய செலானின் ஆசிரியர் தேர்வு வாரியப் பகுதியை விண்ணப்பத்துடன் இணைத்து மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கு அடையாளமாக ரசீது பெறுவதற்கு விண்ணப்பத்தின் நகலைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜூலை முதல் தேதியன்று மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர்கள் தேர்வு வாரியத்துக்கு நேரடியாக அனுப்பக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் பணி கிடைத்து விடுமா?

இந்தத் தகுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். மொழி-1 பிரிவின் கீழ் எந்த மொழியைத் தேர்வு செய்திருக்கிறார் என்பதும் அதில் குறிப்பிடப்படும். இந்தத் தேர்வுச் சான்றிதழ் 7 ஆண்டுகளுக்குச் செல்லும். இந்தத் தேர்வு, ஆசிரியர் தகுதிக்கான தேர்வு மட்டுமே. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை வைத்துக் கொண்டுதான் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

அரசின் விதிமுறைகளின்படி, தேவை ஏற்படும்போது ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்போது, இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNTJSW 
0 comments

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது‏

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான ரேண்டம் எண்ணை அண்ணாபல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள  553 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சம் பி.இ., பி.டெக்.இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இந்தாண்டு புதிதாக 11 பொறியியல்கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.)அங்கீகாரம் அளித்துள்ளதால் கூடுதலாக 3,300 இடங்கள் நிரப்பப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவர்கள்விண்ணப்பித்துள்ளனர். கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களின்மதிப்பெண் அடிப்படையில் கட் ஆஃப் மார்க் கணக்கிடப்படுகிறது. 200க்கு எடுத்தகணிதம் மதிப்பெண் 100க்கும் இதேபோல் இயற்பியல் மதிப்பெண் 50க்கும், வேதியியல்மார்க் 50க்கும் மாற்றப்படும்.

அதன் அடிப்படையில் 200க்கு எத்தனை மதிப்பெண் என்பது தெரிய வரும். ஒன்றுக்குமேற்பட்ட மாணவர்கள் ஒரே கட் ஆஃப் மார்க் பெறும்போது யாருக்கு முன்னுரிமைஎன்ற கேள்வி எழுகிறது. அந்த நேரத்தில் கணித மதிப்பெண்ணும் அதுவும் சமமாகஇருந்தால் இயற்பியல் பாட மதிப்பெண்ணும் ஒருவேளை அதுவும் இணையாகஇருக்கும் பட்சத்தில் (அப்போது வேதியியல் மதிப்பெண் சமமாகத்தான் இருக்கும்) பிளஸ் 2 நான்காவது பாடத்தில் உள்ள மதிப்பெண்ணை பார்ப்பார்கள்.

அந்த மதிப்பெண்ணும் சமமாக இருப்பின் பிறந்த தேதியை பார்ப்பார்கள். அதாவது யார்சீனியரோ அவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார்கள். பிறந்த தேதியும்ஒரே தேதியாக இருந்தால் ரேண்டம் நம்பர் பயன்படுத்தப்படும். ரேண்டம் என்பது,விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கீடுசெய்யப்படும் 10 இலக்க எண் ஆகும்.

ரேண்டம் எண் மதிப்பு அதிகமாக உள்ளவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவர்.அந்த வகையில், இந்தாண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவிகளுக்கு ரேண்டம் எண்                     வெளியிடப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறைஅமைச்சர் பி.பழனியப்பன் ரேண்டம் எண்ணை கணினியில் வெளியிட்டார்.


ரேண்டம் எண்ணை www.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்

நன்றி - TNTJSW  
0 comments

பிளஸ் 2 தவறியவர்களுக்கு சிறப்புத் துணைத்தேர்வு‏...

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு உரிய நேரத்துக்குள் விண்ணப்பிக்கத்தவறியவர்கள் "தத்கல்' திட்டத்தின் கீழ் ஜூன் 6, 7 தேதிகளில் ஆன்லைன் மூலம்விண்ணப்பிக்கலாம்.
 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ்www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட நாள்களில் விண்ணப்பங்களைப்பதிவு செய்யலாம்.
 

தேர்வுக் கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.85-ம், சிறப்பு அனுமதிக் கட்டணமாகரூ.1,000-ம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட சலான் மூலம் தேர்வுக்கட்டணத்தை ஜூன் 8-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
 

ஆன்லைனில் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன்Confirmation copy என்பதை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம்செய்யப்பட்ட விண்ணப்பத்தில் மீண்டும் ஒரு புகைப்படத்தை ஒட்டி, அதன்மீதுவிண்ணப்பதாரர்கள் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடம்சான்றொப்பம் பெற வேண்டும்.
 
 

அந்த விண்ணப்பதோடு, தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலான், மதிப்பெண்சான்றிதழ் நகல், ரூ.40-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட உறைஆகியவற்றை இணைக்க வேண்டும்.
 
 

இந்த ஆவணங்களோடு கூடிய விண்ணப்பத்தை ஜூன் 14, 15 ஆகிய இரண்டுநாள்களில் சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் நேரில்சமர்ப்பிக்க வேண்டும்.

- தொகுப்பு - அல் அமீன்
0 comments

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் ஆன்-லைன் மூலம் (மே 23)வியாழக்கிழமை முதல் (மே 27)  திங்கள்கிழமைவரை  விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7.04 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் பள்ளி மாணவராகவோ, தனித்தேர்வர்களாகவோ எழுதி தேர்ச்சிப் பெறாதவர்களும், வருகை தராதவர்களும் இந்த சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம். அனைத்துப் பாடங்களிலும் தோல்வியுற்றவர்கள்கூட இநதத் தேர்வை எழுதலாம்.

சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வியாழன் முதல் திங்கள் வரை அனைத்து நாள்களிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான எஸ்.பி.ஐ. சலானையும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தேர்வுக் கட்டணம்: தேர்ச்சி பெறாத ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலம் மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் கட்டணம் செலுத்த வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை மாணவர்கள் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணைப் பயன்படுத்தியே தங்களது சந்தேகங்களைத் தீர்க்கவோ, தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ, ஹால் டிக்கெட்டைப் பெறவோ முடியும். அதேபோல், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகலெடுத்தும் விண்ணப்பதாரர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்? பள்ளி மாணவர்கள் உடனடித் தேர்வுக்கான c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​  எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மே 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வை தனித்தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​ விண்ணப்பம் மற்றும் எஸ்.பி.ஐ. சலானை அவர்களின் மாவட்டத்துக்குரிய அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு அட்டவணை
ஜூன் 19 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
ஜூன் 20 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஜூன் 21 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 22 - சனிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 24 - திங்கள்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்
ஜூன் 25 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷின் அண்ட் டயட்டிக்ஸ்
ஜூன் 26 - புதன்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
ஜூன் 27 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்
ஜூன் 28 - வெள்ளிக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்
ஜூன் 29 - சனிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), தட்டச்சு
ஜூலை 1 - திங்கள்கிழமை - தொழில்பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல்.

Thanks
Dinamani
thanks to - tntj vk 
0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger