ப்ளஸ் 1ல் எந்த க்ரூப் எடுக்கலாம்? - தொழில் கல்வி பயில விரும்புவோருக்கு..!‏

தொழில் கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியிலேவொகேஷனல் க்ரூப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்துப் பயன்பெற வாய்ப்பு உள்ளது.


''தற்போது தமிழகத்தில் 1,605 மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி பாடப்பிரிவுகள் நடைபெற்று வருகின்றனஒன்பது தொழில் கல்விப் பாடங்கள் 2010-11 கல்விஆண்டு முதல் 11-ம் வகுப்பில் இருந்தும், 2011-12 கல்வி ஆண்டில் இருந்து 12-ம்வகுப்புக்கும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறதுஅந்த ஒன்பது பாடப் பிரிவுகள்:

1. பொது இயந்திரவியல் (General Machinist)

2. மின் இயந்திரங்களும், சாதனங்களும்  (Electrical Machines and Appliances)

3. மின்னணு சாதனங்கள் (Electronic Equipments)

4. துணிகளும் ஆடை வடிவமைத்தலும் (Textiles and Dress Designing)

5. வேளாண் செயல்முறைகள் (Agricultural Practices)

6. உணவு மேலாண்மையும் குழந்தை நலனும் (Food Management and Child Care)

7. செவிலியர் துறை (Nursing)

8. கட்டடப் பட வரைவாளர் (Draughtsman Civil)

9. அலுவலக மேலாண்மை (Office Secretaryship)

இந்தப் பாடப் பிரிவுகளில் வேளாண் செயல்முறைகள் என்ற புதிய பாடப் பிரிவு  தமிழ்வழியிலும், இதரப் பாடப் பிரிவுகளைத் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் நடத்தப்படுகிறது. ஒன்பது பாடத் திட்டங்களுடன் பழைய பாட திட்டத்தின்படி உள்ள மூன்று பாடப் பிரிவுகள் தொடரும் என அரசு தெரிவித்துள்ளது. கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும், ஆட்டோ மெக்கானிக் மற்றும் டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகியவையே அந்தப் பாடத் திட்டங்கள்.

தொழில் கல்வி பயின்றால்...
* பத்தாம் வகுப்புக்குப் பிறகு, ப்ளஸ்-1ல் தொழில் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், அனைத்துப் பிரிவு மாணவர்களைப் போல் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து உயர் கல்வி பெற முடியும்.

* தமிழக அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் கல்வி பெற, 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

* தொழில் கல்விப் பிரிவில் பொது இயந்திரவியல், மின் இயந்திரங்களும் சாதனங்களும், மின்னணு சாதனங்கள், கட்டடப் பட  வரைவாளர், ஆட்டோ மெக்கானிக் படிக்கும் மாணவர்கள், பொறியியலில் லேட்ரல் என்ட்ரி (Lateral entry) எனப்படும் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்புள்ளது.

* பொறியியல் கல்வி எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தால் 10 சதவிகித இடங்கள் அளிக்கப்படுகின்றன. தொழில் கல்வி மாணவர்களுக்குத்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலில் நேர்காணல் நடத்தப்படுகிறது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

* இந்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சித் துறையின் மூலம் தொழில் பழகுநர் பயிற்சிச் சட்டப்படி, ஒரு வருடம் உதவித்தொகையுடன் பயிற்சி பெற வாய்ப்புள்ளது.

* தொழிற்கல்வி மாணவர்கள், இந்திய அரசால் தொழில் பழகுநர் பயிற்சியை ஓர் ஆண்டுக்கு 9000 மாத உதவித்தொகையுடன் பெற முடியும். அதன்பின், பெரிய நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

* சுய தொழில் செய்யவும், பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெறவும் தொழில் கல்வி மாணவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

* வேளாண் செயல்முறைகள் என்ற விவசாயப் பாடத்தினை எடுத்துப் படிக்கும் மாணவர்கள், கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப் படிப்புகள் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

* செவிலியர் துறை, உணவு மேலாண்மை, குழந்தை நலன், ஆடை வடிவமைத்தல் என்ற பாடப் பிரிவினை அதிக அளவில் பெண்கள் எடுத்துப் படிக்கின்றனர். அவர்கள் இதன்மூலம் மேல்படிப்புப் பெறவும், சுய தொழில் செய்யவும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அனைத்து மாணவர்களும் ஒரே விதமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்காமல், அவரவர் விருப்பப்படி பல்வேறு பாடப் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்''

- சுட்டி விகடன்
TNTJSW 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger