பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் ஆன்-லைன் மூலம் (மே 23)வியாழக்கிழமை முதல் (மே 27)  திங்கள்கிழமைவரை  விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7.04 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் பள்ளி மாணவராகவோ, தனித்தேர்வர்களாகவோ எழுதி தேர்ச்சிப் பெறாதவர்களும், வருகை தராதவர்களும் இந்த சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம். அனைத்துப் பாடங்களிலும் தோல்வியுற்றவர்கள்கூட இநதத் தேர்வை எழுதலாம்.

சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வியாழன் முதல் திங்கள் வரை அனைத்து நாள்களிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான எஸ்.பி.ஐ. சலானையும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தேர்வுக் கட்டணம்: தேர்ச்சி பெறாத ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலம் மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் கட்டணம் செலுத்த வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை மாணவர்கள் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணைப் பயன்படுத்தியே தங்களது சந்தேகங்களைத் தீர்க்கவோ, தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ, ஹால் டிக்கெட்டைப் பெறவோ முடியும். அதேபோல், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகலெடுத்தும் விண்ணப்பதாரர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்? பள்ளி மாணவர்கள் உடனடித் தேர்வுக்கான c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​  எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மே 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வை தனித்தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​ விண்ணப்பம் மற்றும் எஸ்.பி.ஐ. சலானை அவர்களின் மாவட்டத்துக்குரிய அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு அட்டவணை
ஜூன் 19 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்
ஜூன் 20 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்
ஜூன் 21 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 22 - சனிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 24 - திங்கள்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்
ஜூன் 25 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷின் அண்ட் டயட்டிக்ஸ்
ஜூன் 26 - புதன்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
ஜூன் 27 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்
ஜூன் 28 - வெள்ளிக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்
ஜூன் 29 - சனிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,
பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), தட்டச்சு
ஜூலை 1 - திங்கள்கிழமை - தொழில்பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல்.

Thanks
Dinamani
thanks to - tntj vk 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger