சாதிவெறியின் காரணமாக, தாழ்த்தப்பட்ட மாணவன் ஒருவனை தலை மீது செருப்பு சுமந்து செல்லவைத்தக் கொடுமை
மதுரை மாவட்டம் வடுகப்பட்டியில் சம்பவித்துள்ளது. இந்த கிராமத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் அருண் என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவன் தேர்வு முடிவுகள் குறித்து அறிய நண்பர்களுடன் நேற்று பள்ளிக்கு சென்ற போது, காலில் செருப்பு அணிந்து சென்றதாக கூறப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட மாணவன் காலில் செருப்பணிந்து வருவதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த நிலமாலை என்பவர், அருண்குமாரை அழைத்து செருப்பு அணிந்து வந்ததற்காகத் திட்டி, ஊர் எல்லைவரை காலில் போட்ட செருப்பை தலை மேல் சுமந்து செல்லும்படி கூறியுள்ளார்.
இக்கொடும் தண்டனையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவன், தன் தாயார் நாகம்மாளிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நாகம்மாள், நிலமாலையிடம் சென்று நியாயம் கோரிய போது, நாகம்மாளை கொலை செய்து விடுவதாகவும் நிலமாலை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உசிலம்பட்டி காவல்நிலையத்தில் நாகம்மாள் அளித்த முறையீட்டை அடுத்து, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிலமாலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நேரம்
Post a Comment